கணினியை பற்றி cmd மூலம் நீங்களும் தெரிந்து கொள்ளலாம் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil கணினியை பற்றி cmd மூலம் நீங்களும் தெரிந்து கொள்ளலாம் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 20 மார்ச், 2014

கணினியை பற்றி cmd மூலம் நீங்களும் தெரிந்து கொள்ளலாம்

Command prompt என்பது கணனியில் மிகவும் பயனுள்ள ஒரு பகுதியாகும். இந்த Command prompt ஊடாக நமது கணணியை செயற்படுத்தமுடியும். இந்த Command prompt என்பது  நமக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை தரவல்லது. Command prompt இன் உதவியுடன் நமது கணணி குறித்த பல தகவல்களை பெற்றுகொள்ள முடியும். நாம் சில கட்டளைகளை வழங்கினால் போதும் அவை குறித்த பல தகவல்களை நாம் பெற்றுக்கொள்ளமுடியும். அத்தகைய Command prompt இல் பயன்படுத்தி நமது கணனி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளவென சில கட்டளைகளை இங்கு தருகிறேன். 

முதலில் Command prompt ஐ திறந்து கொள்ளுங்கள். 

Command prompt ஐ திறந்துகொள்வதற்கான வழிமுறைகள் இதோ.

 Start-->>Accesories-->>Command prompt

அல்லது

Start-->>Run  இல் cmd என தட்டச்சு செய்து திறந்துகொள்ளுங்கள்.

கீழ்வரும் கட்டளைகளை தோன்றும் Command prompt இல் தட்டச்சு செய்து கணணி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

1.கட்டளைsysteminfo 

கணனியின் Host Name மற்றும் இயங்குதளம் குறித்த தகவல்கள் போன்ற இன்னும் பல தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

2. கட்டளை: driverquery
  
கணனியின் இயக்கிகள்(Drivers) குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.


3. கட்டளை: tasklist  

கணனியில் இயங்கிக்கொண்டிருக்கும் Programs குறித்த தகவல்களை பெறுக்கொள்ளமுடியும்.

4.கட்டளை: ipconfig /all 

உங்கள் கணனியின் IP முகவரியினையும் மற்றும் வலையமைப்பு குறித்த தகவல்களையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

5. கட்டளை: net user

கணணி பயனாளர்கள்(User names) குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்


Popular Posts

Facebook

Blog Archive