PDF என்பது என்ன? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil PDF என்பது என்ன? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 27 மார்ச், 2014

PDF என்பது என்ன?

இப்போது வரும் பெரும்பாலான மென்நூல்கள்,மென்ப்பொருள் கையேடுகள் PDF கோப்புகளாக வருகிறது.PDF என்பது Portable Document Format என்பதன் சுருக்கம் ஆகும்.இதன் சிறப்பு என்னவென்றால் இந்த கோப்பில் உள்ள வாக்கியங்களை எந்த கணினியிலிருந்து படிக்கமுடியும்.அதற்கு தேவை PDF reader என்ற மென்பொருள் இருந்தால் போதும்.இது இலவசமாகவே கிடைக்கிறது.

PDF -ன் அவசியம் என்ன?நமது கணினியில் தமிழில் ஒரு எழுத்துருவை பயன்படுத்தி ஒரு ஃபைலை உருவாக்குவோம்.அதே ஃபைலை மற்றொரு கணினியில் படிப்பதற்காக திறந்தால் சதுர வடிவமாக எழுத்துக்கள் படிக்க முடியாதவாறு இருக்கும்.
இந்த கணினியில் தகுந்த தமிழ் எழுத்துருவை நிறுவினால் மட்டுமே நம்மால் அந்த கோப்பில் உள்ள வார்த்தைகளை படிக்க முடியும்.இந்த சிக்கலை களைவதற்க்கு தான் PDF பயன்படுகிறது.
உங்கள் ஃபைலை PDF கோப்பாக மாற்றிவிட்டால் எந்த கணினியிலும் திறந்து படிக்கமுடியும்.அது மட்டும்மல்லாமல் எளிதாக ப்ரிண்ட் செய்ய்வும் முடியும்.

அடோப் நிறுவனத்தின் acrobat distiller மென்பொருளை கொண்டு PDF கோப்புகளை உருவாக்க/மாற்ற முடியும்.ஆனால் இந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்க வேண்டும்.இதுதவிர இலவசமாக கிடைக்க கூடிய PDF மென்பொருள்கள் இணையத்தில் நிறைய உள்ளன.
http://get.adobe.com/uk/reader/
ஓப்பன் ஆபிஸ் PDF கோப்புகளை ஆதரிக்கும்.இதனால் ஓப்பன் ஆபிசில் நாம் உருவாக்கும் கோப்புகளை எளிதாக PDF ஆக மாற்றலாம்.

PDF லிருந்து Wordக்கு மாற்ற கீழ்கண்ட இணையதளத்திலிருந்து இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Popular Posts

Facebook

Blog Archive