Java-ஜாவா 11ம் பாடம்.(setMethod மற்றும் getMethod). | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil Java-ஜாவா 11ம் பாடம்.(setMethod மற்றும் getMethod). ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 28 மே, 2014

Java-ஜாவா 11ம் பாடம்.(setMethod மற்றும் getMethod).

java 11. setMethod மற்றும் getMethod.


Local variables மற்றும் instance variables:

ஒரு மெத்தெடின் உட்புறம் அறிவிக்கப்படும் variables ,local variable என அறியப்படுகின்றது..மேலும் இவற்றை அந்த மெத்தெடின் உட்புறம் மட்டுமே அவற்றை உபயோகிக்க முடியும்.ஒரு கிளாஸின் உட்புறம் method க்கு வெளிப்புறம் அறிவிக்கப்படும் variable ஆனது instance variable எனப்படுகின்றது.. ஒவ்வொரு objectம் ஒவ்வொரு இன்ஸ்டண்ட் வேரியபிள் மதிப்பினை கொண்டிருக்கும்.உதாரணத்துக்கு rectangle  என class அறிவிக்கப் படுகின்றது என ஏடுத்துக் கொள்வோம் . அவற்றுக்கு length, breadth என instance variables அவற்றிற்கு அறிவிக்கப் படலாம். Rectangle கிளாஸிற்கு r1,r2 என ஆப்ஜெக்ட்கள் உருவாக்கப்பட்டால் ஒவ்வொரு ஆப்ஜெக்ட்டும் ஒவ்வொரு length,breadth மதிப்புகளைக் கொண்டிருக்கும்.


SetMethod:

  ஒரு கிளாஸின் உட்புறம் ஒன்றுக்கும் மேற்பட்ட மெத்தெடுகள் அறிவிக்கப்படுகின்றது. இவை கிளாஸின் instance  variables manipulate செய்யப் பயன்படுகின்றது.
இவற்றில் setMethod ஆனது கிளாஸின் ஆப்ஜெக்ட் வேரியபிள்களை மதிப்பிருத்தப் பயன்படுகின்றது.கிளாசின் வேரியபிள்களில் மாற்றம் செய்யும் மெத்தெடுகள் mutator method என அறியப்படுகின்றது.

getMethod:

getMethod ஆனது கிளாஸின் instance variable களின் மதிப்பை return செய்கின்றது. இவை கிளாசின் instance  variable களில் எந்த மாற்றமும் செய்வதில்லை. எனவே இவை Accessor method என அறியப்படுகின்றது.

குறிப்பு:

இவை set ,மற்றும் get எனத்தான் இவற்றின் பெயர்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதில்லை. எனினும் ஜாவா மொழியின் convention படி இவற்றின் பெயர்கள் இவ்வாறு அரம்ம்பிக்கப்படுகின்றது.


உதாரணம்:


package gradebooktest;

import java.util.Scanner;

class GradeBook
{
    private String courseName;
    public void setCourseName(String name)
    {
        courseName=name;
    }
    public String getCourseName()
    {
        return courseName;
    }
    public void displayMessage()
    {
        System.out.printf("welcome to the grade book for \n%s!\n",getCourseName());
    }
}
public class GradeBookTest {

  
    public static void main(String[] args) {
        Scanner input=new Scanner(System.in);
        GradeBook myGradeBook=new GradeBook();
        System.out.printf("Initioal course name is :%s\n\n",myGradeBook.getCourseName());
        System.out.println("please enter the course name:");
        String theName=input.nextLine();
        myGradeBook.setCourseName(theName);
        System.out.println();
        myGradeBook.displayMessage();
    
    }
}

output:


Initioal course name is :null

please enter the course name:
java

welcome to the grade book for
java!

 மேலே உள்ள நிரலில் getCourseName ஆனது courseName என்ற instance variable ஐ மதிப்பினை return செய்கின்றது.
setCourseName ஆனது courseNameஐ மதிபிருத்தப்பட பயன்படுகின்றது.
displayMessage மெத்தெட் ஆனது getCourseName மதிப்பினை பெற பயன்படுகின்றது. 

Popular Posts

Facebook

Blog Archive