Java Interview Tips | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil Java Interview Tips ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 28 மே, 2014

Java Interview Tips

Java interview tips

 
 
ஜாவாவில் main method ஆனது public static void ஆக இருப்பதேன்?
 

 

 மேற்கண்ட வினாவானது ஜாவா நேர்முகத்தேர்வில்  அடிக்கடி கேட்ப்படும் வினா.

 முதலில் main method ஆனது ஒரு நிரலில்  ivm(java virtual machine) முதலில் அழைக்கப்படும் method  ஆகும்.ஜாவாவின் main method, c மொழியின் main method போல் int value return செய்யும் வாய்ப்புகள் இல்லை . எப்போதும் இது எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாது.

எனவே தான் இது void ஆக இருக்கின்றது.

Core java ஆனது இயக்கப்படும் போது ivm முதலில் main மெத்தடைத் தான் தேடும் இதில் syntax பிழையிருப்பின் No such method found :main என்ற பிழை சுட்ட்ப்படும்.

Static:

 ஜாவாவில் static அல்லாத methods  ஆனது  instance method ஆகும் . ஜாவாவில் பொதுவாக instance method ஆனது ஆப்ஜெக்ட் உருவாக்கப்பட்டு அதன் மூலமாகவே அழைக்கப்படும். Static method எனில் ஆப்ஜெக்ட் உருவாக்க தேவையில்லை.(static methods are class methods and these methods can be called directly with out creating object for the class).

எனவே தான் ivm இதை ஆப்ஜெக்ட் உருவாகாமல் அழைக்க முடிகின்றது.

Public:

Java ஆனது public, private, protected என சில மாடிஃப்யர்களை கொண்டுள்ளது. பொதுவாக பிரைவேட் என அறிவிக்கப்படும் மெத்தட்களை அந்த classன் வெளியே  அழைக்க முடியாது. Main method  ஆனது public என அறிவிக்கப்படுவதால் தான் jvm ஆனது

main மெத்தடை நேரடியாக அழைக்க முடிகின்றது.

 

சில குறிப்புகள்:

1.         ஒரு நிரலானது main methodல் இருந்து தான் இயங்க ஆரம்பிக்கின்றது.

2.         main method ஆனது public, static, void என்ற modifiers உடன் அழைக்கப்படவில்லை எனில் ஜாவா நிரல் இயங்காது.(this apply to only core java).

3.         main method ஆனது பிற மெத்தட்கள் மாதிரியே overload செய்ய முடியும்.எனினும் முதலில் அழைக்கப்படுவது கீழ்க்கண்ட signature கொண்ட மெத்தட் தான்.

      public static void main(String.. args)

 

     மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.

Popular Posts

Facebook

Blog Archive