ஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள்... | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil ஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள்... ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 17 ஜூலை, 2014

ஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள்...


மொபைல் பேசுவதற்கு என்று போய் இன்று அனைத்து தொலைதொடர்பு சாதனங்களையும் உள்ளடக்கு ஸ்மார்ட் ஃபோன் என்று நம் கைகளில் தவழுகிறது. பேஸிக் ஃபோன்களில் ஒரு வாரம் வரை நிற்கும் பேட்டரி சார்ஜிங், ஸ்மார்ட் ஃபோன்களில் ஒரு நாள் முழுவதும் வருவது பல பேருக்கு பெரும்பாடாக இருக்கிறது. அத்தகையவர்களுக்கு இப்பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
1/ வைபரேஷன்ஸ்  (Vibrations) ஆஃப் செய்து விடுங்கள்:
வைபரேஷன்ஸ் (Vibrations) மோடை  தேவையான (மீட்டிங்க், கான்ஃப்ரன்ஸ், வழிபாட்டுத்தளங்கள் போன்ற ) இடங்களில் தவிர மற்ற இடங்களில் ஆஃப் செய்துவிடுவது நல்லது. ரிங்டோன்களை விட அதிர்வுகள் அதாவது வைபரேஷன்ஸ்  (Vibrations) இயக்க அதிக மின்சக்தி தேவைப்படுகிறது எனவே ரிங் டோனுடன் வைப்ரேஷனையும் சேர்த்து இயக்குவது பேட்டரியை அதிகம் உபயோகப்படுத்தும்.
2/டிஸ்ப்ளே ஸ்க்ரீனை டிம்மாக (DIM) வையுங்கள்:
 ஸ்மார்ட் ஃபோன்களில் ஏறக்குறைய 90 சதவீத பேட்டரி ஸ்க்ரீன் ட்ஸ்ப்ளேவுக்கே செலவாகிறது. எனவே முடிந்த அள்வு டிம்மாக வைக்கவும். ஆட்டோ ப்ரைட்னஸ் மோடில் வைப்பது சூழ்நிலைக்கேற்ப உங்கள்  ஃபோனே வெளிச்சத்தின் அளவை நிர்ணயித்துக்கொள்ளும். அல்லது உங்கள் சூழ்நிலை குறைந்த வெளிச்சத்திலேயே உபயோகிக்கும் வகையில் இருந்தால் டிம் மோடிலேயே நிறந்தரமாக வைத்து விட்டால் நீங்கள் ஆச்சரியப்படும் அளவுக்கும் பேட்டரியில் வாழ்நாள் நிலைத்திருக்கும்.
3. ஸ்க்ரீன் ஆஃப்: 
 அதே போல் ஃபோனை உபயோக்கித்து முடித்தவுடன் உடனே ஸ்க்ரீன் ஆஃப் ஆகும் வகையில் ஸ்லீப் மோடை குறைந்த நொடிகளில் ஆஃப் ஆகுமாறு வைய்யுங்கள்.ஏனெனில் நம்மில் பலர் ஃபோனை உபயோகித்த பின்னர் அப்படியே பாக்கெட்டிலோ மேஜை மேலோ வைத்துவிடுவோம். ஸ்லீப் மோட் அதிக நேரம் கழித்து ஆஃப் ஆகும் மோடில் இருந்தால் அத்தனை நேரமும் பேட்டரி வீணாகும். எனவே உடனே ஸ்லீப் மோடில் 15 அல்லது 30 வினாடிகளில் ஆஃப் ஆகும் படி வையுங்கள்.
4.தேவையில்லாத நேரங்களில் போனை ஆஃப் செய்து வைத்தல்:
நீண்ட நேரம் உபயோகிக்காத நிலையில் போனை ஸ்விச் ஆஃப் செய்து வைப்பதும் பேட்டரியை சேமிக்கும் வழிமுறையில் ஒன்றாகும். ஃபோனை ஆஃப் பண்ணி ஆன் பண்ணுவதால் அதிக பேட்டரி செலவாகும் என்பது உண்மைதான் என்றாலும், நீண்ட நேர இடைவெளி இருந்தால் இந்த முறையை உபயோகப்படுத்துவது நல்ல பலனை தரும் என்பதில் ஐயமில்லை.
மேலும் இரவில் தானாக ஆஃப் ஆகி காலையில்  ஆன் ஆகும் ஆட்டோ ஸ்விச் ஆஃப் ஸ்விச் ஆன் மோடையும் பயன்படுத்திகொள்ளலாம். இதில் இரவில் அவசர அழைப்புக்கு எப்படி பதிலளிப்பது என்ற கேள்வி எழும் ! வீட்டில் லேண்ட் லைன் வைத்திருப்பவர்கள் மேலும் இரண்டு போன்கள் வைத்திருப்பவர்கள் சாதாரணமாக இரண்டாவது ஃபோன் பேசிக் ஃபோனே வைத்திருப்பதால் இம்முறை மிகவும் உபயோகமாக இருக்கும்.
வீட்டில்தானே இருக்கிறோம், சார்ஜ் போட்டுக்கொள்ளலாமே என்று நினைக்கலாம் ! நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் உபயோகிக்கும் காலம் மற்றும் சார்ஜ் செய்யும் எண்ணிக்கையை பொறுத்து பேட்டரியின் ஆயுட்காலமும் அதன் செயல்படும் தரமும் அமைகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
5. சரியான முறையில் பேட்டரியை சார்ஜ் செய்தல்:
 தற்கால ஸ்மார்ட் ஃபோன்களி இருவகையான் பேட்டரிகள் பயன்படுத்த்ப்படுகிறன. ஒன்று  Lithium-ion (Li-Ion), மற்றொன்று Nickel Cadmium (NiCd) பேட்டரிகள்.
NiCd பேட்டரிகளை பேட்டரி சார்ஜ் மொத்தம் தீர்ந்தவுடன் மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டும் அதற்கு மாறாக பேட்டரி சிறிது குறைந்தவுடன் சார்ஜ் செய்தால் பேட்டரி டேமேஜ் ஆவது மட்டுமின்றி வெடிக்கக் கூடிய வாய்ப்பும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
Li-Ion பேட்டரிகளை பொறுத்தவரை பேட்டரி குறைய குறைய ரீசார்ஜ் செய்து வைப்பது பேட்டரியின் தரத்தையும் ஆயுட்காலத்தையும் அதிகரிக்கிறது. எனவே உங்கள் ஃபோனில் எந்த வகையான பேட்டரி போடப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அத்ற்கு தகுந்தவாறு சார்ஜிங் செய்து கொள்வது நன்மையை தரும்.
6. தேவையில்லாத ஆப்ஸ்களை ஆஃப் செய்து வையுங்கள்: 
அடுத்ததாக பேட்டரியை கபளிகரம் செய்வது Apps என்படும் அப்ளிகேஷன்களாகும். தேவைக்கதிகமான அல்லது தேவையே இல்லாத பல அப்ளிகேஷன்கள் பலருடைய மொபைல்களில் நிறைந்திருக்கும். முதலில் தேவையில்லாத அப்ளிகேஷன்களை அளித்துவிடுவது சி்றந்தது. அடுத்தாக  ஒரு அப்ளிகேஷனை உபயோகித்த பின் அதை மூடிவிடுவது. கவனத்தில் கொள்க நீங்கள் ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களை திறந்து விட்டு ஏதோ ஒன்றை மட்டும் உபயோகிக்கும்போது நீங்கள் மூடாதவரை  மற்றவை திறந்த நிலையிலேயே இருக்கும். அவை பேட்டரியையும், இன்டெர் நெட்டையும் உபயோகப்படுத்திக்கொண்டே இருக்கும் என்பதையும் மறந்து விடாதீர்கள். இதைவிட விந்தையான விஷயம் என்னவெனில் ஒருசில ஆப்ஸ்கள் மூடிய நிலையிலேயே பேட்டரியையும், இண்டெர்நெட் டேட்டா உபயோகத்தையும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும். அவற்றை சரியான டாஸ்க் கில்லர் எனப்படும் ஆப்ஸைக் கொண்டு செயழிலக்கச்செய்யலாம். ஆண்ட்ராய்டில் Advanced Task Killer எனப்படும் ஆப்ஸ் மிகவும் பிரபலமானதாகும் இதை கூகுல் ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் இதை அவ்வப்போது உபயோகித்து இது போன்ற ஆப்ஸ்களை கட்டுக்குள் கொண்டு வரலாம்
7. GPS ஆஃப் செய்து விடுங்கள்: 
GPS  மற்றும் அதுசார்ந்த ஆப்ஸ்கள் பேட்டரியை அதிகமாக சாப்பிடும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை அறிய GPS  ஆனது செயற்கை கோளை தொடர்பு கொள்ளும் எனவே நீங்கள் நடமாடிக்கொண்டு இருக்கும்போது சாட்டிலைட்டுக்கு சிக்னல் அனுப்பிக்கொண்டே இருக்கும் இதற்கு செலவாகும் பேட்டரி உங்கள் கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. கூகுள் மேப்ஸ், ஃபேஸ்புக்க்கில் இடத்தை அறிதல்  போன்றவை இவ்வகையை சேர்ந்தவை ஆகும். எனவே GPS மற்றும் அதை உபயோகிக்கும் ஆப்ஸ்களை தேவையில்லாத போது அணைத்து வைப்பது  பேட்டரிக்கு நல்லது.
8. வை ஃபை, ப்ளூடூத், 3 ஜீ போன்றவற்றை தேவையில்லாத போது அனைத்து வையுங்கள்:
 எப்பொழுதெல்லாம் சிக்னலுக்காக உங்கள் போன் தேட ஆரம்பிக்கறதோ அப்பொழுதெல்லம் பேட்டரியின் சக்தி அதிக அளவு உபயோகிக்கப்படுகிறது.வை ஃபை, ப்ளூடூத், 3 ஜீ போன்றவை ஆனில் இருந்தால் அவை சிக்னலுக்காக தேடிக்கொண்டு இருக்கும் எனவே இவற்றை தேவையில்லாத போது ஆஃப் செய்து வைக்கவேண்டும்இது மட்டுமின்றி நெட் ஒர்க்  சிக்னல் வீக்காக இருக்கும்போது உங்கள் அதிக சக்தியை செலவழித்து சிக்னலை தேட ஆரம்பிக்கும் அப்போது பேட்டரி மிக விரைவாக காலியாகிவிடும். எனவே அது போன்ற சூழ்நிலைகளில் ஸ்விச் ஆஃப் செய்வதோ அல்லது ஏரோப்ளேன் மோடில் வைப்பது மிக சிறந்ததும் எளியதும் ஆகும்.
ஒருசில வீடு அல்லது அலுவலகங்களில் ஒரிரு இடங்களி சிக்னல் வீக்காகவும் ஒரு சில இடங்களில் சிக்னல் முழுமையாகவும் கிடைக்கும். அதுபோன்ற இடங்களில் சிகனல் ஸ்ட்ராங்காக இருக்கும் இடங்களில் ஃபோனை வைப்பது இக்குறையை நிவர்த்தி செய்யும்.
9. அறிவிப்புக்கள் அப்டேட்டுக்களை குறைத்துக்கொள்ளல்:
இண்டெர்நெட் இணைப்பு கொடுக்கும் போதெல்லாம் ஸ்மார்ட் போன்கள் அறிவிப்புகள், மேம்படுத்தல்கள் எனப்படும் அப்டேட்கள்  ஆகிக்கொண்டே இருக்கும். இவற்றை அந்தந்த ப்ரோக்ராம்களில் உள்ள ஆப்சனில் தடை செய்யலாம். மென்பொருள் அப்டேட்டை பொருத்த வரை செய்தி வந்தவுடன் அப்டேட் செய்துவிடுவது நல்லது இல்லையெனில் ஒவ்வொரு முறையும் நோட்டிஃபிகேஷன் வந்துகொண்டே இருக்கும். இது எரிச்சலை உண்டு பண்ணுவது மட்டுமின்றி இண்டெர்நெட் உபயோகத்தையும், பேட்டரியையும் சாப்பிட்டு விடும்.
10. கூலாக வைத்திருங்கள்: 
கடைசியாக குளிரான ஆனால் ஈரமற்ற நிலையில் பேட்டரியின் தரமும், வாழ்நாளும் அதிகரிக்கும்எனவே அதிக வெப்பமான நிலையில் ஃபோனை வைப்பதை தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக மூடிய காருக்குள் ஃபோனை விட்டுச்செல்வது பேட்டரியை மிக எளிதாக காலியாக்கி விடும்.

Popular Posts

Facebook

Blog Archive