விசைப்பலகையின் தொழில்நுட்பம்: (Keyboard Technologies) | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil விசைப்பலகையின் தொழில்நுட்பம்: (Keyboard Technologies) ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

விசைப்பலகையின் தொழில்நுட்பம்: (Keyboard Technologies)

கணினியில் இன்று பல்வேறுவிதமான விசைப்பலகைகளைப் பயன்படுத்துகிறோம். சிறியது பெரியது, நீள்வட்ட வடிவம், நீள் சதுரம், செவ்வகம் என பல்வேறு வடிவங்களில் பல்வேறு அளவுகளில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
 
இப்படி வேறுபட்ட விசைப் பலகைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் பொதுவானவையே. இப்பொழுது நடைமுறையில் உள்ள தொழில்நுட்பம் அனைத்து விசைப்பலகைகளிலும் பயன்படுத்தபடுகின்றன. ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் ஒருசில வேறுபட்ட தொழில்நுட்பங்கள் விசைப் பலகையில் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு தொழில்நுட்ப முறைகளையும்  பார்ப்போம்.

விசைப்பலகையின் தொழில்நுட்பம்: (Keyboard Technologies)

இன்று விசைப்பலகை பல்வேறு சுவிட்ச் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த ஸ்விட்ச் தொழில்நுட்பங்களில் வெவ்வேறு வகைகளில் உள்ளன. 
1. Rubber dome mechanical
2. Capacitive non-mechanical
3. Metal contact mechanical
4. membrane mechanical
5. Foam element mechanical
Rubber Dome Mechanical Switch பயன்படுத்தும் விசைப் பலகை கீழ் உள்ள படத்தில் இருப்பது போல இருக்கும்.
Keyboard Technologies
இன்றைய காலத்தில் பெரும்பாலும் Rubber Dome தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விசைப் பலகையில் ஒவ்வொரு விசையும் சிறிய ரப்பர் மேல் கடின கார்பன் உடன் பொருத்தப்பட்டு இருக்கும். 
Membrane சுவிட்ச்சுக்கள் Rubber dome விசைப் பலகைகள் செயல்படுவதைப் போலவே செயல்படும்.  Membrane விசைப் பலகை தனியான விசைகள் இல்லை. ஒரு ரப்பர் காகிதத்தில் அனைத்தும் பயன்படுத்தப்படும். இவ்விசைப் பலகைகள் பொதுவாக நாம் பயன்படுத்தும் கணினிகளில் உபயோகத்தில் இல்லை. 
 
Capacitive சுவிட்சுகள் மற்ற விசைப் பலகை தொழில்நுட்பத்தைப் போன்று சுற்றுப் பலகையில் வடிவமைக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக மின்னணு தொடர்ச்சியாக செலுத்தி Key Matrix ஐ பணிபுரியச் செய்யும். ஒவ்வொரு விசைகளிலும் வில் (Spring) இருக்கும். இவ்விசைப் பலகைகள் பொதுவாக விலை அதிகமாக இருக்கும். 
 
Metal contact மற்றும் Foam Element விசைப்பலகைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் மற்ற விசைப் பலகைகளைவிட மெதுவாகச் செயல்படும். மேலும் இதனைத் தயாரிப்பதற்கு தேவையான செலவு அதிகம் ஆகும். எனவேதான் இதுபோன்ற கீபோர்டுகளை நிறுவனங்கள் தயாரிப்பது இல்லை. 
 
தற்பொழுது கம்பி வழி இணைப்பு இல்லாமல் வயர்லஸ் தொழில்நுட்ப முறையில் செயல்படும் கீபோர்ட்களும் வந்துவிட்டன. திரையில் தோன்றும் விர்சுவல் கீபோர்ட் தொழில்நுட்பமும் வந்துவிட்டது. 
நன்றி.

Popular Posts

Facebook

Blog Archive