Object Oriented என்றால் என்ன? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil Object Oriented என்றால் என்ன? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

Object Oriented என்றால் என்ன?

Object Oriented என்பது தமிழில் ‘பொருள் சார்ந்த’ அல்லது ‘பொருள் நிமித்த’என்ற பொருளில் வரும். கணிப்பொறி இயலில் 
லேட்டஸ்ட் இதுதான். இதில் ஆப்ஜெக்ட் ஓரியண்டட் டிசைன் (Object Oriented Design), ஆப்ஜெக்ட் ஓரியண்டட் லாங்குவேஜ் (Object Oriented Language) என்பதெல்லாம் இப்போது பரவலாக பேசபடுகிறது.
 
கணிப்பொறியில் முன்பெல்லாம் புரோகிராம் (Program) எழுதும்பொழுது ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டே போனார்கள். ஆனால் அதில் ஒழுங்கு முறை ஏதும் இல்லாது இருக்கும். இதனால் பெரிய பெரிய புரோகிராம்கள் எழுதும்போதும், அதை திருத்தும்போதும், குறிப்பிட்ட இடத்தில் உள்ள பிழைகளைக கண்டறியவும்(find errors), மாற்றியமைக்கவும் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். 
 
விளக்கமாக கூறுவதெனில் ஒரு பெரிய புரோகிராம் ஒன்றில் ஒரு இடத்தில் ஏற்படுத்தப்படும் தவறானது அந்த முழு புரோகிராமையும் (ஆணைத்தொடர்)பாதிக்கும். அதனால் பெரிய புரோகிராம் ஒன்றில் திருத்தம் செய்வது என்பது மிகவும் கடினமானதாக இருந்தது. 
இதனைத் தவிர்க்கும் பொருட்டு, கணிப்பொறிக்கு உண்டான ஆணைகளை சிறிய சிறிய பகுதிகளாக மாட்யுல்களாப் (Module) பிரித்து எழுதுகிறார்கள். இந்த மாட்யுல்கள் அனைத்தையும் முழுமையானவை, 
 சுயாட்சிபெற்றவை. அதாவது இவை தன்னிச்சையாக இயங்க கூடியவை. 
 
இந்த மாட்யுல்களில் மாற்றம் ஏற்படுத்தினால் அது ஆணைத்தொடரின் மற்ற மாட்யுல்களைப் பாதிக்காது. இவ்வாறு அமைத்த மாட்யுல்கள்களையே ஆப்ஜெக்ட் (Object) என்று கூறுவார்கள். 
இவை மற்ற மாட்யுல்களோடு தொடர்பு கொள்ளும். ஒரு ஆணைத் தொடர் தனிப்பட்டு இயங்காமல் அதற்குண்டான தகவல்களையும் சேர்த்துத்தான் இயங்க வைப்பார்கள். இந்த இணைப்புக்கு ஆப்ஜெக்ட் என்று பெயர். ஒரு மாணவனிடம் ஒரு வேதியியல் செய்முறையைச் செய்யச் சொல்லி அதற்கான குறிப்புகள் அனைத்தையும் வரிசைப்படுத்தி எழுதிக் கொடுப்பதைப் போன்று, ஆணைத் தொடர்களின் செய்முறையையும் ப்ரோஷீஜர் (procedure) அதற்கேற்ற தகவல்களையும் ஒன்றாக ஒரு பொருளாகப் பார்ப்பது ஆப்ஜெக்ட் ஓரியண்டட் டிசைனின் முக்கியமான சித்தாந்தம்
 
இதற்கேற்ற பொருத்தமான மொழிகளும் இருக்கின்றன. அவை ஸ்மால் டாக் (small talk), சி ப்ளஸ் ப்ளஸ் (c++) மொழிகள். 
கணிப்பொறியின் மூலம் எதிர்காலத்தில் சாதிக்க நினைப்பவர்கள் கட்டாயம் இவைகளை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். 
நன்றி நண்பர்களே..!
- தங்கம்பழனி

Popular Posts

Facebook

Blog Archive