ஆண்ட்ராய்ட் மொபைலில் Offline Google Translate வசதி… | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil ஆண்ட்ராய்ட் மொபைலில் Offline Google Translate வசதி… ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

ஆண்ட்ராய்ட் மொபைலில் Offline Google Translate வசதி…

Google Translate வசதி ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு நேரடியாக மாற்ற உதவும் ஒரு வசதியாகும். இந்த வசதியை இலவசமாக Google நமக்கு வழங்குகிறது. இந்த வசதியை தற்பொழுது ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் பயன்படுத்த முடியும்.
Offline Google translate apps for android mobile
தற்பொழுது ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பயன்படுத்தும் விதமாக புதிய வெர்சன் ஆண்ட்ராய்ட் டிரான்ஸ்லேட் அப்ளிகேஷனை (New Version Android Offline Translate apps) வெளியிட்டுள்ளது கூகிள். அதாவது நாம் ஆன்லைனில் இருக்கும்பொழுது உலக மொழிகளிலிருக்கும் வார்த்தைகளை ஒரு மொழியிலிலிருந்து மற்றொரு உலக மொழிக்கு மாற்றம் செய்யமுடியும். இது நமக்குத் தெரியும்.

தற்பொழுது இந்த Android Translate Apps – ன் புதிய வெர்சனில், ஆன்லைனில் மட்டும் அல்லாமல் ஆப்லைனிலும் இருமொழிகளுக்கிடையே மொழிமாற்றம் செய்துகொள்ள முடியும்.
இந்த வசதியை இணைய இணைப்பு இல்லாமலே (without internet connection) பயன்படுத்த முடியும் என்பதுதான் இந்த புதிய ஆன்ட்ராய்ட் டிரான்லேட் அப்ளிகேஷனின் சிறப்பு.
ஐம்பது உலக மொழிகளில் இவ்வசதியைப் பயன்படுத்த முடியும் என கூகிள் அறிவித்திருக்கிறது.
இனி இணைய இணைப்பே இல்லாமல் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எளிதாக Google Translate -ஐப் பயன்படுத்தி உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலிலேயே மொழிமாற்றம் செய்துகொள்ள முடியும்.
இந்த New Version Android Offline Translate apps தரவிறக்கும் செய்ய இங்கு கிளிக் செய்யவும். : Download  Android Offline Translate apps

முக்கிய குறிப்புகள்:
இந்த வசதியை நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஆப்லைனில் பயன்படுத்துவதற்கு, மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிய மொழிகளை Offline Languages க்கு மாற்றி, மொழிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.
Voice Speech translate மூலமும் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்ற இவ்வசதியைப் பயன்படுத்த முடியும்.
இவ்வசதியை நீங்கள் பயன்படுத்த உங்களுடைய ஆண்ட்ராய்போனில் Android 2.3 அல்லது அதற்குப் பிறகு வெளிவந்த புதிய ஆண்ட்ராய்ட் வர்சன் மென்பொருள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
நன்றி.
- தங்கம்பழனி. 

Popular Posts

Facebook

Blog Archive