பப்பாளி – அற்புத மருத்துவ குணங்கள்..!! | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பப்பாளி – அற்புத மருத்துவ குணங்கள்..!! ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 2 அக்டோபர், 2014

பப்பாளி – அற்புத மருத்துவ குணங்கள்..!!

மக்கள், தேவையில்லாமல் இப்பழத்தின் மீது வெறுப்பைக் காட்டுகின்றனர். வேறு சிலரோ பப்பாளிப் பழம் உஷ்ணமானது ( Heat ) என்று வதந்தியைப் பரப்பி வருகின்றனர். மிக எளிமையாக விளையக் கூடிய இதன் விலையும் மிகமிகக் குறைவாக இருப்பதால் இப்பழத்தை பலர் விரும்புவதில்லை போலும்.
ஆனால், இயற்கை மருத்துவர்களும், இயற்கை உணவாளர்களும் இப்பழத்தின் அருமையா எண்ணி வியக்கின்றனர். பப்பாறிக் காயிலிருந்து எடுக்கப்படும் பால் ( Latex ) பல்வேறு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுவதால் இது வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இப்பழத்தின் சிறப்பை உணர்ந்து கொள்ள இதைவிட வேறு செய்தியும் வேண்டுமா?
சாப்பிடும் முறைகள்
பப்பாளிக்காயை பொறியல் செய்து உண்ணலாம். அல்லது சாறு போல் அரைத்தும் அருந்தலாம்.
இப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து அதன் மீது சீரகத்தூள், தேன், சிறதளவு எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
இப்பழத்துண்டுகிளின் மீது பனங்கற்கண்டுத் தூள் தூவியும் சாப்பிடலாம்.
சப்பாத்தி, தோசை போன்றவற்றிற்குத் தொட்டுக் கொள்வதற்கு ஜாம் போல பயன் படுத்தலாம்.
இரவு உணவில் பப்பாளிப் பழத்தினைக் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அசைவப்பிரியர்களுக்கு ஓர் செய்தி
ஆட்டு இறைச்சி சமைக்கும்போது பப்பாளிக்காயை துண்டுகளாக நறுக்கி சிறிதளவு சேர்த்து வேகவைத்தால் இறைச்சி மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
பலன்கள்
* பப்பாளிப்பழம் செரிமான நோய்களை குணப்படுத்துவதோடு மலச்சிக்கல்களைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது.
 
* இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை அகற்றும், இரத்த சோகை என்னும் நோயை குணப்படுத்தும்.
 
* நமது உடலில் காயம்பட்டு வெளியேறுகின்ற இரத்தமானது உடனடியாக உறைவதற்குத் தேவையான என்ஸைம்கள் இப்பழத்தில் அடங்கியுள்ளன.
 
* கல்லீரல், மண்ணீரல் நோய்க்கு பப்பாளிப் பழமே சிறந்த உணவாகும்.
 
* பப்பாளிப் பழத்தின் விட்டமின் ‘ ஏ ‘ மிகுதியாக அடங்கியுள்ளது.
 
* பப்பாளிக்காயை சாறு அரைத்துக்குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெறியேறும்.
 
* தினசரி பப்பாளியை உண்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு இளமைப்பொலிவோடு வாழாலாம்.
 
பப்பாளிப்பழத்தின் நன்மைகளை அளவிடமுடியாது.
இக்கட்டுரையைப் படிக்கும் வாசகர்களே! 
 
இன்றே உங்களது வீட்டின் கொல்லைபுறத்தில் சில பப்பாளி மரக்கன்றுகளை நட்டு வையுங்கள். அரிய நன்மைகளைத் தந்திடும் சுவையான பப்பாளிகளை உங்கள் இல்லங்களிலேயே உற்பத்தி செய்யுங்கள். ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றுங்கள்.

Popular Posts

Facebook

Blog Archive