பாஸ்போர்ட், விசா பற்றிய தகவல்களை அறிய ஆன்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேஷன்..!
இலவச மென்பொருள்

வெளிநாட்டுக்குச் செல்ல விரும்பி பாஸ்போர்ட், விசாவிற்கு அப்ளை செய்ய இருக்கிறவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் பயனுள்ளதாக இருக்கும்.
All so Read in English: http://masinfom.blogspot.in/
அப்ளிகேஷனின் பயன்கள்:
உங்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களின் முகவரியை தெரிந்துகொள்ளலாம். பாஸ்போர்ட்டிற்கு அப்ளை செய்வதற்கான அப்ளிகேஷன் பார்ம் டவுன்லோட் செய்யலாம்.
நீங்கள் அப்ளை செய்த பாஸ்போர்ட் அப்ளிகேஷனின் நிலை பற்றி அறியலாம்.
இந்த அப்ளிகேஷனில் ஹஜ் சேவைகள் உள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்குத் தேவையான தங்குமிடம், விமான சேவை போன்ற தகவல்களை அறியலாம்.
Ask Your Minister வசதி
Ask Your Minister என்ற வசதியின் மூலம் வெளியுறவுத் துறை மந்திரியிடம் கேள்விகளைக் கேட்டு பதில் பெறலாம்.
மற்றுமொரு முக்கியமான அம்சம் பாராளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்வி பதில்களை இந்த அப்ளிகேஷன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
பிரதமர், வெளியுறவுத்துறை மந்திரிகளின் சுற்றுப் பயணங்கள் குறித்த தகவல்களையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
பயன்மக்க பாஸ்போர்ட், விசா பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய சுட்டி:
Download MEA Government of India android apps