பென்டிரைவில் File Transfer Speed அதிகரித்திட | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பென்டிரைவில் File Transfer Speed அதிகரித்திட ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 9 அக்டோபர், 2014

பென்டிரைவில் File Transfer Speed அதிகரித்திட

சில நேரங்களில் பென்டிரைவில் கோப்பு பரிமாற்றம் (File Transfer to Pendrive)செய்திடும்பொழுது, அதன் வேகம் மிக குறைவானதாக இருக்கும்.

உதாரணமாக ஒரு பெரிய கோப்பொன்றை கம்ப்யூட்டரிலிருந்து பென்டிரைவிற்கு மாற்றிடும்பொழுது, பறிமாற்றம் செய்துகொள்ளும் வேகம் மிக குறைவாகவும், பறிமாற்றத்திற்கான நேரம் அதிகமாகவும் இருக்கும்.

இதுபோன்ற சூழல்களில் பயனர்களுக்கு அதிக டென்சன் ஏற்படும்.

இவ்வாறான மெதுவான டேட்டா பரிமாற்றம் ஏற்படாமல் தவிர்த்து, விரைவான தகவல்கள் பறிமாற்றம் செய்திட வழியுண்டு.
To-increase-pen-drive-data-transfer-speed

பென்டிரைவில் தகவல் பரிமாற்ற வேகத்தை அதிரிக்கும் வழிமுறைகள்:

1. கீபோர்டில் Start Button + E அழுத்தி My Computer செல்லவும்.
2. பென்டிரைவிற்கான Drive-ல் ரைட் கிளிக் செய்து Properties செல்லவும்.
3. தோன்றும் விண்டோவில் Hardware எனும் டேபை கிளிக் செய்யவும்.
4. காட்டப்படும் விண்டோவில் பென்டிரைவிற்கான டிரைவை தேர்ந்தெடுத்துக்கொண்டு, கீழுள்ள Properties என்பதை கிளிக் OK கொடுக்கவும்.
5.  தற்பொழுது திறக்கும் விண்டோவில் Change Settings என்பதை சொடுக்கவும்.
6. உடன் தோன்றும் விண்டோவில் Policies என்ற டேபை  கிளிக் செய்து, கீழிருக்கும் Better Performance என்பதை தேர்ந்தெடுத்து, OK கிளிக் செய்யவும்.

முடிந்தது. இனி உங்களுடைய பென்டிரைவின் தகவல் பரிமாற்ற வேகம் முன்பு இருந்ததை விட அதிக வேகமாக இருக்கும்.

Popular Posts

Facebook

Blog Archive