மொபைல்-ல் உள்ள‌ ஃப்ளைட் மோட் – நீங்கள் அறியாத பயனுள்ள‌ அரிய தகவல்கள் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil மொபைல்-ல் உள்ள‌ ஃப்ளைட் மோட் – நீங்கள் அறியாத பயனுள்ள‌ அரிய தகவல்கள் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 18 நவம்பர், 2014

மொபைல்-ல் உள்ள‌ ஃப்ளைட் மோட் – நீங்கள் அறியாத பயனுள்ள‌ அரிய தகவல்கள்


 
ஸ்மார்ட் போன்கள் அனைத்தி லும், ஃப்ளைட்மோட் என்று ஒரு ஆப்ஷன் தரப்படுகிறது. பலர் இதனைப் பயன்படுத்துவது இல்லை. எனவே இது குறித்து கவலைப்படுவதில்லை. ஆனால், சில வேளைகளில், இந்த ஆப்ஷ னை இயக்கிவிட்டு, பேசமுடியாதநிலை உருவாகும்போது, மற்றவர் சொல்லி, இதனை இயங்கா நிலையில் வைக்கின்றனர். இந்நிலை இயக்கப்படு கையில் என்ன நடக்கிறது என் று இங்கு பார்க்கலாம்.
ஸ்மார்ட் போனை ஃப்ளைட் மோடில் வைக்கையில்,

அதன் செல்லுலர் ரேடியோ, வை பி, புளுடூத் ஆகியவை செயல்படுவதில்லை. செல்டவர்களுடன் போனால் தொடர்புகொள்ள முடியாது. பேச அழைப்பு விடுக்க முடியாது. எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாது. அதாவது செல்டவர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது.
போன் வை பி நெட்வொர்க்கில் இணைய முடியாது. இதனால், அந்த நெட்வொர்க் வழியே எந்த சாதனத்தையும் தொடர்புகொள்ள இயலாது. ஏற்கனவே, வை பி செயல்பாட்டை இயக்க நிலையில் வைத்திருந்தால், ஃப்ளைட் மோடில், அது தானாகவே செயல் இழக்கும்.

ஃப்ளைட் மோடில், புளுடூத் இயங்காது. பெரும்பாலானவர்கள், புளுடூத் இயக்கி தங்களுடைய ஹெட் செட்டினை இயக்குவார்கள். இது செயல்படாது. ஆனால், மவுஸ் மற்றும் கீ போர்ட் ஆகியவற்றை இயக்க முடியும்.
இந்நிலையில் ஜி.பி.எஸ். எனப்படும் நம்போன் இயங்கும் இடத்தை அறியும் தொழில் நுட்பம் இயங்காது. பொதுவாக விமான நிறுவனங்கள் இதனை இயக்குவதைத் தடை செய்துள்ளன. இந்தநிலை இயக்கப்படுகையில், ஸ்மார்ட் போனில், உள்ள ஃப்ளைட்மோட்ஐ கான் இயக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒளி விட்டபடி இருக்கும். ஐபோன், ஐபேட் மற்று ம் ஸ்மார்ட் போன்களில் இது மேலாகக் காட்டப்படும்.

பொதுவாக மொபைல் போன்கள் செல்டவர்களை தங்கள் சிக்னல்களுக்காக சிரமத்துடன் தேடுவதால், விமானப் பயணங்களில், அதன் சாதனங்கள் இயக்கம் பாதிக்கப்படும். எனவே, ஃப்ளைட்மோடில், போன்களை அமைக்க வேண்டியதிருக்கும். பொதுவாகவே, செல்டவர்களிலிருந்து சிக்னல்கள் கிடைக்காததால், நாம் போனைப் பயன்படுத்துவது இல்லை. மேலே செல்லாமல், விமான நிலையத்தினுள் உள்ள விமானங்களில் அமர்ந்திருக்கையில், போன்கள் செல்டவர்களைத் தொடர்பு கொள்ள முடியும். இது போன்ற சூழ்நிலைகளில், நாம் நம் செல் போன்களை இயக்கக் கூடாது என விமான ஊழியர்கள் தடுத்துவிடுவார்கள்.

நீங்கள் விமானத்தில் இல்லாத போதும், இந்த நிலை உங்களுக்கு உதவிடும். உங்கள் போனில் உள்ள பேட்டரி சக்தியைக் காப்பாற்ற இதனை இயக்கலாம். ஏரோ பிளேன் மோட் இயக்கப்படுவதால், பல வயர் லெஸ் நெட்வொர்க் பணி கள் மேற்கொள்ளப்படாது.

எனவே, பேட்டரியின் மின் சக்தி மிச்சமாகிறது. ஆனால், இதனை இயக்கினால், நமக்கு அழைப்புகளும் கிடைக்காது என்பதனை நினைவில்கொள்ளவேண்டு ம்.
சில பயணியர் விமான நிறுவனங்கள், தங்கள் விமானங்களில் பயணம்செய்வோரிடம், கட்டணம் பெற்றுக்கொண்டு, வை பி இயக்க அனுமதிக்கின்றனர். அப்போது அழைப்புகளை இயக்க முடியாது. ஆனால், வை பி இயக்க முடியும். அதன் மூலம் சில சாதனங்களைத் தொடர்பு கொள்ள முடியும். குறிப்பாக இன்டர்நெட் சேவையினைப் பயன்படுத்த முடியும்.

விரைவில், பயணிகள் கட்டணம் செலுத்தி, மொபைல் போன்களுக்கான அழைப்புகளையும் மேற்கொள்ளக் கூடிய வசதியினை விமான நிறுவனங்கள் தரும் காலம் வரு ம் என அனைவரும் எதிர்பா ர்க்கின்றனர்.
- அழகன் மா. தேவி

Popular Posts

Facebook

Blog Archive