HTML Tutorial 2-HTML ஓர் அறிமுகம்
![]() |
HTML Tutorial 2 |
HTML கற்றுக்கொள்வதற்கு முன்பு அதைப்பற்றியதொரு அடிப்படையான விளக்கங்களை முதலில் தெரிந்துகொள்வோம்.
HTML
-ஐ கற்றுக்கொள்ள வேண்டுமெனில், முதலில் உங்கள் கணிப்பொறி இணையத்துடன்
எவ்வாறு ஊடாடுகிறது(Interacts) என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
"Internet"
என்னும் சொல் Interconnection மற்றும் Networks என்பதிலிருந்து உருவானது.
இதைச் சுருக்கமாக நாம் 'net' என்று அழைக்கிறோம். நம்மில் பெரும்பாலானவர்கள்
முழுவார்த்தையும் உபயோகிப்பது கிடையாது. இன்டர்நெட் என்று சொல்வதைக்
காட்டிலும் நெட் என்று சொல்வதையே வழமையாக்கிக்கொண்டுள்ளோம் அல்லவா?
இணையம் என்பது என்ன?
இணையம் என்பது வலையமைப்புகளின் வலையமைப்பாகும். இணையத்தில் நீங்கள் கணிப்பொறிகளைக் காணலாம்.
Web
என்று அழைக்கப்படும் உலக விரி வலையில் (World wide web - www) ஏராளமான
ஆவணங்கள் நிறைந்திருப்பதைக் காணலாம். உலக விரி வலை (WWW)என்பதே ஆவணங்களின்
தொகுப்பாகும்.
WWW
என்பது விரிந்திருக்கும் உலகை சிலந்தி வலையைப்போன்று தொடர்ந்து இணைப்பில்
இருக்குமாறு பின்னி வைத்திருப்பதைப் போன்றது. சிலந்தி தன் வலையில் எந்தவொரு
இடத்திலிருந்தும் மற்றொரு பாதைக்கு, இடத்திற்கு எளிதாக செல்வதைப்போல..
இணையத்திலும் ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களில் இருக்கும் தகவல்களை காண
முடியும் என்பதால்தான் இதற்கு வலை எனப் பெயர் வந்தது.
இணையத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் இந்த ஆவணங்கள் வலைப்பக்கங்கள் (Web Pages) என்றும் அழைக்கபடுகிறது.
இந்த
வலைப்பக்கங்கள்தான் நாம் பயிலப்போகும் HTML (Hyper Text Markup Language)
எனப்படும் கணிப்பொறி மொழியில் எழுதப்பட்ட மின்னணு ஆவணங்களாகும்(Electronic
Documents).
இந்த
வலைப்பக்கங்கள், வலைச் சேவையகங்கள் (Web servers) எனப்படும்
கணிப்பொறிகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. நமக்குத் தேவையான பக்கங்களை,
இந்த வலைச் சேவையங்கள் வழங்குகின்றன. ஒவ்வொரு வலைப்பக்கத்திற்கும் URL
(Uniform Resource Locate) எனப்படும் ஒரு தனித்த அமைவிட முகவரி
உள்ளது(அமைந்து இருக்கும் இடத்திற்கான முகவரி.).
இந்த
அமைவிட முகவரியைப் பயன்படுத்தித்தான் இணைய உலவிகள் (Web Browser) வலைச்
சேவையகங்களிலிருந்து உரிய பக்கத்தைப் பெற்று பயனர் பார்வையிட உதவுகின்றன.
ஒரு
வலையகத்தைப்(Website) பார்வையிட வேண்டுமெனில் முதலில் வலை உலவி, வலைச்
சேவையகத்திற்கு ஒரு வேண்டுகோளை அனுப்புகிறது. அவ்வேண்டுகோளைப் பெற்ற
சேவையகமானது, உரிய வலைப்பக்கத்தை அக்கணிப்பொறிக்கு அனுப்பி வைக்கிறது.
அக்கணிப்பொறி அத்தகவலை HTML வடிவில் பெற்றுக் கொள்கிறது. வலை உலவியானது,
இந்தத் தகவலை மொழிமாற்றம் செய்து நாம் படிக்கும் வகையில் திரையில்
காட்டுகிறது.
வலைஉலவி என்பது Browser என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது.
வலை உலவிகள்(Internet Browser): Internet Explorer, Firefox, Google Chrome, Opera, Epic போன்றவை பிரபலமான உலவிகளாகும்.
இப்பதிவின் கருத்தை உள்ளடக்கிய ஓர் எளிமையான பதிவை எளிய தமிழில்
HTML கற்றுக்கொள்ள எனும் பதிவில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
அருண் நன்றி நண்பர்களே..!!