தலைமுடியை பராமரிக்க ஆண்களுக்கான சூப்பர் டிப்ஸ் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil தலைமுடியை பராமரிக்க ஆண்களுக்கான சூப்பர் டிப்ஸ் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 7 பிப்ரவரி, 2015

தலைமுடியை பராமரிக்க ஆண்களுக்கான சூப்பர் டிப்ஸ்

சுகாதார செய்தி

ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி தலைமுடியை பராமரிப்பது மிகவும் முக்கியம்.ஏனெனில் இப்போதெல்லாம் இளவயதில் வழுக்கை, வெள்ளை முடி என பல பிரச்னைகள் வருகின்றது.
தலைமுடி சீராக வளர எண்ணெய் தேய்ப்பது மிக அவசியமான ஒன்றாகும், மேலும் மசாஜ் செய்வதும் தலையின் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
தலைமுடியை பொதுவாக இவ்வாறு பிரிக்கலாம்

- வறண்ட
- எண்ணெய் பதமுள்ள
- இயல்பான

உங்கள் தலைமுடிக்கு ஏற்றவாறு ஷாம்பு, கண்டிஷனர் மற்றும் பராமரிப்பு பொருட்களை தெரிவு செய்வது அவசியம்.
இதனை தெரிவு செய்வதில் குழப்பம் இருந்தால் சரும மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும்.
வாரத்திற்கு இருமுறையாவது ஷாம்பு போட்டு குளிப்பது அவசியம், ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன்படுத்திய பிறகு அடிக்கடி மாற்றுவது தேவையில்லாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
கற்றாழை
தலைமுடிக்கு வலிமையையும், பளபளப்பையும் தருவதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது.
கற்றாழையின் ஜெல் போன்ற பசையை ஸ்கால்ப்பில் அழுத்து தேய்க்க வேண்டும்.
இவ்வாறு கற்றாழையின் ஜெல்லை வாரம் இருமுறை தேய்த்து வந்தால் முடி உதிர்வது படிப்படியாக குறையும்.
வெந்தயம்
2 அல்லது 3 மேசைக்கரண்டி வெந்தயத்தைத் தண்ணீரில், 8- 10 மணி நேரம் ஊற வைத்து, அதனை பசை போல அரைத்து தலையில் தடவ வேண்டும்.
இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறைவதுடன், பொடுகுத் தொல்லையிலிருந்தும் பாதுகாக்கும்.
ஆரஞ்சு பழத் தோல்
ஆரஞ்சு பழத் தோல்களை மிக்ஸியில் போட்டு அரைத்து, தலைமுடியில் வாரமொருமுறை தடவிக் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.
வேப்பிலை
வேப்பிலையை அரைத்து பசை போலாக்கி, அதனைத் தலையில் தடவி குளித்தால், முடி உதிர்வது குறையும்.
மேலும் வேப்பிலைப் பசையுடன் சிறிது தேனும், ஆலிவ் எண்ணெயும் சேர்த்துக் கொண்டால் சிறந்த பலனை பெறலாம்.
செம்பருத்தி
தேங்காய் எண்ணெய், செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
இதனை இரவு தூங்கும் போது தலையில் தடவி, காலையில் நீரில் நன்கு அலசினால், வலிமையான தலைமுடியை பெறலாம்.
எண்ணெய் மசாஜ்
ஆரோக்கியமான மற்றும் சீரான தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியம். குறிப்பாக மசாஜ் செய்வதால் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை கொண்டு மசாஜ் செய்வது நல்ல பலனை அளிக்கும்.
அதிலும் தேங்காய் பால் கொண்டு மசாஜ் செய்தால் வறட்சியை தடுத்து மென்மையாக்குகிறது.
undefined

Popular Posts

Facebook

Blog Archive