IBMனு ஒரு கம்பெனி இருந்துச்சாம்… | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil IBMனு ஒரு கம்பெனி இருந்துச்சாம்… ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 28 மார்ச், 2015

IBMனு ஒரு கம்பெனி இருந்துச்சாம்…


IBM Logo
IBM Logo
நம்மில் பலருக்கும் இப்பிடி ஒரு கம்பெனி இருந்ததே மறந்திருக்கும். ஒரு காலத்தில் IBM Computer னு சொன்ன உடனே “அவளுகென்ன என் தங்கத்துக்கு” என கொஞ்சினர் மக்கள்.
கால ஓட்டத்தில் IBM என்றாலே அது பெரிய பெரிய நிறுவனங்களுக்கு மென்பொருள் & வன்பொருள் தயாரிக்கும் ஒரு நிறுவனம் என அடையாளப்படுத்தப்பட்டது.   கடைநிலை பயணர்களாகிய நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் ஆராய்ச்சிகளை IBM செய்து வருகிறது.
அந்த ஆராய்ச்சிகள், நமது மொபைல், கணினி, லேப்டோப் போன்றவற்றில் பல புதிய நோக்கிகளை (Sensors)  பொருத்தி, நமது கணினி / மொபைல் பயன்பாட்டை அதன் உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் ஆராய்ச்சிகள்.

1.  மொபைலில் உள்ள Vibrator இன் செயலாக்கத்தை மேம்படுத்துவதன் மூலம், நம் திரையைத் தடவிப் பார்த்தால், ஒரு துணி / சேலை போன்றவற்றின் மேற்பரப்பை தொடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துவது.  (இது பல Online  துணி விற்பனை தளங்களுக்கு பெரியும் பயனாக இருக்கும்).

2.  வாசனையை நுகர்ந்து பார்க்கக் கூடிய புதிய Sensor களைப் பொருத்துவது.

3.  அறு சுவைகளை அறிந்து அதன் விகிததாச் சாரங்களை தெரிவிப்பது.

4. சுற்றுப் புறத்தில் உள்ள அதிர்வு, சப்தங்களை உணர்ந்து … எச்சரிகைகளை தெரிவிப்பது…

5. வெவ்வேறு கலாசார மக்கள் Call Center ஐ தொடர்பு கொண்டு பேசும் போது அவர்களின் ஒலியை  மற்ற கலாச்சார மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றுவது.

(மதுரை தமிழ் to சென்னைத் தமிழ் , Indian English to  American accent)

இது போல் பல ஆராய்ச்சிகளை IBM  மேற்க் கொண்டு வருவதாகவும். சிறு சிறு மனித மூளையின் செயல்பாடுகளை ஒவ்வொரு Sensorராக மாற்றும் முயற்சிகள் இவை, என IBM India/South Asia இயக்குநர் மற்றும் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் (Cheif Technology Officer)  திரு. ரமேஷ் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
  கார்த்திக்

Popular Posts

Facebook

Blog Archive