தொழிநுட்ப வளர்ச்சியில் பெண்களின் பங்கு - மார்ச் 8 உலக மகளிர் தின சிறப்பு பதிவு.
இன்று மார்ச் 8 ஆம் திகதி. அதாவது இன்றைய தினம் சர்வதேச பெண்கள் தினமாக அங்கீகரிக்கப்பட்ட தினம். ஆகவே இன்று எமது தளத்தின் சார்பில் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக இன்றைய நவீன உலகில் நாம் உபயோகிக்கும் தொழிநுட்ப பயன்பாடுகளில் பெண்களின் பங்கு எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்துகிறது என்று பார்ப்போம்.
அந்த வகையில் பெண்களால் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது பெண்களால் முதல் வித்திடப்பட்ட தொழிநுட்ப கண்டுபிடிப்புக்களை கீழே பட்டியலிடுகிறேன்.
உலகின் முதல் DNA தொழிநுட்பம்
மருத்துவத்துறையில் இன்று பெரிய அளவில் செல்வாக்கு செலுத்தி கொண்டு இருக்கும் DNA எனப்படும் மரபணு தொழினுட்பத்தை முதலில் கண்டுபிடித்தவர் Rosalind Franklin என்று அழைக்கப்படும் ஒரு பெண். இவர் இதை 1950 ஆம் ஆண்டுகளில் உலகிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
சோலார் வீடுகள்
இன்று உலகில் காணப்படும் அனைத்து விதமான சோலார் வீடுகளுக்கும் முதல் வித்திட்டவர் Maria Telke எனப்படும் ஒரு பெண் ஆவார்.
பெக்ஸ், காலர் ID மற்றும் கால் வைடிங் தொழினுட்பத்தின் பின் ஒரு பெண்
Shirley Jackson என்று அழைக்கப்படும் பெண் ஒருவரே இன்று நாம் பயன்படுத்தும் பெக்ஸ், காலர் ID மற்றும் கால் வைடிங் போன்ற தொளினுட்பங்களுக்கு முதல் வித்திட்டவர். தொலைதொடர்பு துறையில் தனது ஆராய்ச்சிகளை ஆரம்பித்த இவர் குறிப்பிட்ட ஒரு ஆராய்ச்சின் மூலம் மேற்குறிப்பிட்ட தொழினுட்பங்கள் உலகிற்கு அறிமுகமாக காரனமாகினார்.
உலகின் முதாலவது கணணி மொழியை (Coding) அறிமுகப்படுத்தியவர் ஒரு பெண்.
1950 ஆம் ஆண்டுகளில் Admiral Grace Hopper என்று அழைக்கப்படும் பெண் ஒருவராலேயே உலகின் முதலாவது கணணி மொழி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆங்கில கமான்ட்-களை கணணி மொழியாக மாற்றும் இவரது முயற்சி, உலகின் முதலாவது கணணி மொழியாக ஏற்றுக்கொள்ள பட்டது.
கணணிமயமாக்கப்பட்ட தொலைபேசி முறை
Erna Schneider Hoover எனப்படும் அமெரிக்க பெண் ஒருவராலேயே உலகின் முதலாவது கணணி மயமாக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
CCTV தொழிநுட்பத்திற்கு முதல் வித்திட்டவர் ஒரு பெண்.
1969 ஆம் ஆண்டுகளின் Marie Van Brittan Brown என்ற அமெரிக்க பெண் ஒருவர் தனது கணவருடன் இணைந்து தனது வீட்டு நடவடிக்கைளை கண்காணிக்க உருவாக்கிய கேமரா சிஸ்டம் தான் பின்நாட்களில் CCTV தொழிநுட்பம் உருவாக காரணமாக அமைந்தது.
பரிந்துரைக்கப்படும் பதிவு
பெண்களின் ஸ்மார்ட் போனில் கட்டாயமாக இருக்க வேண்டிய பாதுகாப்பு செயலிகள்.
வைபை ப்ளூடூத் தொழினுட்பங்களுக்கு முதல் வித்திட்டவர் ஒரு பெண்
Hedy Lamarr எனப்படும் பிரபல சினிமா நடிகை கண்டுபிடித்த “spread spectrum” மற்றும் “frequency hopping” எனப்படும் இரண்டு தொழினுட்பங்கலுமே இன்று நாம் உபயோகிக்கும் வைபை மற்றும் ப்ளூடூத் தொழினுட்பங்களுக்கு முதல் வித்திட்டது.
SHARE THIS