யாரும் நகைகடை அடைப்புக்கு ஆதரவு தரவேண்டாம் ஆதங்கமும் படவேண்டாம | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil யாரும் நகைகடை அடைப்புக்கு ஆதரவு தரவேண்டாம் ஆதங்கமும் படவேண்டாம ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 19 மார்ச், 2016

யாரும் நகைகடை அடைப்புக்கு ஆதரவு தரவேண்டாம் ஆதங்கமும் படவேண்டாம

யாரும் நகைகடை அடைப்புக்கு ஆதரவு தரவேண்டாம் ஆதங்கமும் படவேண்டாம் விஷேசம் வைச்சிருக்கோமேன்னு பதறவேண்டாம்
விஷேசம் வைத்திருப்பவர்கள் தயவு செய்து பொருத்து கொள்ளுங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக
இதில் என்ன நாட்டு வளர்ச்சி இருக்கு இது எப்பிடி நாட்டை வளர்க்கும் என்று எண்ணினால் மேலும் படியுங்கள் விவரம் புரியும்

2லட்சதுக்கு மேல் வாங்கினால் பான் கார்டு அவசியம்
அது போக இந்த அரசு போட்ட கலால் வரி அவர்களை கலங்கடித்து உள்ளது
அது எப்பிடி எல்லாதிலும் தான் வரி இருக்கு என்று நினைக்கலாம்
இதுல அவங்களுக்கு என்ன கலக்கம் என்று நினைக்கலாம் நம்மகிட்ட தானே வாங்கி கொடுக்க போறான் என்று நினைக்கிலாம்

நம்மகிட்ட வாங்கி அரசுக்கு வரி கட்டுவதற்க்கு எவனாச்சும் போறாடுவானா யோச்சிபாருங்கள்
விலை கிராம் 3000 வித்தப்பையும் மக்கள் நகை வாங்க தானே செய்தார்கள் இந்த 1% விதத்தால் மக்கள் நகை வாங்குவதை விட்டா விடுவார்கள்

கண்டிப்பாக கிடையாது உண்மையான நோக்கம் வேற

மக்களுக்காகவா இவர்கள் இவ்வளோ ஆதங்கம் அடைகிறார்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் கிடையவே கிடையாது

அப்பறம் எங்கே இருக்கு ஆப்பு எங்கே இவங்களுக்கு வலிக்குது

அதான் கலால் வரி அது என்ன பண்ணும் என்று நினைக்கிறேர்கள்

இதற்க்கு முன் தங்கம் இறக்குமதிக்கு தான் வரி அப்பிடி என்றால் ஓரு கடை காரான் எவ்வாறு இறக்குமதி செய்கிறானோ அதற்க்கு மட்டும் வரி அந்த நகை கடை காரன் எவ்வளோ விற்பனை செய்கிறான் என்று மத்திய அரசுக்கு தெரியாது அது மாநில அரசுக்கு தான் விற்பனை வரி (vat) அவன் எவ்வளோ விற்கிறான் என்று.அந்த விற்பனைக்கு மட்டும் வரி கட்டிருவான் ஆனால் எவ்வாளோ இறக்குமதி செஞ்சான் என்று மாநில அரசுக்கு தெரியாது

இங்கே தான் இப்போது ஆப்பு

ஓரு நகை கடை காரன் 10 கிலோ நகை வாங்கினால் விற்பனையும் 10 கிலோவாக தானே இருக்கனும்
ஆனால் அந்த கடையின் விற்பனை 12 கிலோவாகவோ 15 கிலோவாக இருந்தால் கலால் வரி மூலம் மத்திய அரசுக்கு தெரிந்து விடும் எப்பிடி இறக்குமதி செய்தது 10 கிலோ விற்பனை செய்வது எப்பிடி 15 கிலோவாக வரும் என்று ஆராய்ந்தால் இவனுகளோட புட்டு வெளி வந்திரும்கிற பதற்றம் தான் இவனுங்களுக்கு

என்னது அது முதலாவதாக தேரத்தின் பின்னனி அடிப்படும் நீங்கள் நகைவாங்கும் போது பில்லில் அவன் உங்கள் நகைக்கு உட்டான சேதாரத்தை தனியாக காட்டமாட்டான் உங்கள் நகையின் கிராம்மோடு கூட்டி தான் பில்போடுவான்
எ.டு 10கிராம் சேதாரம் 10% அதாவது 1 கிராம் இதையும் சேர்த்து 10+1=11கிராம் விற்பனை செய்தாக பில் போட்டு அதுக்கு vat போட்டு வாங்கிருவான் மாநில அரசின் தேவையோ என்னா விற்பனை ஆகுதோ அதற்க்கு தான் வரி அவன்களுக்கு அதுநாலே இப்ப வரைக்கும் பிரச்சனை இல்லை

ஆனா கலால் வரி யால் என்னாகும் 11கிராம் விற்பனை என்று பில் அதற்க்கு 1% விதம் கலால் வரி கட்டினாலும் அவன் நமக்கு கொடுத்தது 10 கிராம் மீதி 1 கிராம் அவன்யிடம் தான் இருக்கு இப்பிடியே சேதாரத்தின் தங்கம் அவனிடம் சேர சேர அவன் வாங்கியதிற்க்கு விற்றதிற்க்கும் கடையில் இருக்கும் இருப்புக்கும் சேர்த்தா அவன் வாங்கியதை விட அதிகமாக இருக்கும் அப்போ அரசு அந்த கடையின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க அரசுக்கு உரிமை உண்டு

அடுத்து தங்க கடத்தல் இது தான் இப்ப இவைங்களுக்கு பேர்யிடி
கருப்புபணம் உருவாக்குவதே இவைங்க தான் அதுக்கு உடைந்தயாக போவதும் இவைங்க தான் அதான் இப்ப இவைங்களுக்கு புலியை கரைக்கிறது

தங்கத்தை யாரும் கரைத்து குடித்து விட முடியாது அப்ப கடத்தி வர தங்கம் பிடிபட்டது போக பிடிபாடமல் வருது யார் கைக்கு வரும் இந்த மொடமுழூங்கி நகை கடைகாரர்யிடம் தான் வரும்
இவன் அதற்க்கு 10% இறக்குமதி வரி இல்லாமல் இந்த நகையை கொள்ளை லாபத்திற்க்கு விற்பான்

இப்போ மேற்கூறிய அதே பிரச்சனை தான் இந்த கலால் வரியால் ஓரு நகை கடை காரன் வாங்கியது எவ்வளோ விற்றது எவ்வளோன்னு இப்ப மத்திய அரசின் நேரடி கண் பார்வைக்கு வந்துவிடும் போது இவனால் கடத்தல் தங்கத்தையும் விற்க முடியாது சேதாரத்தில் மிஞ்சிய தங்கத்தையும் விற்க முடியாது

சேதார தங்கத்தை கூட அவன் வாடிக்கையாளர்களுக்கு தரும் நிலை வந்துவிடும் இப்போது நகை கடை காரண்களுக்கு சேதார நகையை விட கடத்தல் தங்கம் வாங்கினால் பிரச்சினை என்பதே அவனுக்கு மிகப்பெரிய அடி

இப்ப தெரியுதா ஏன் இவ்வளோ பெரிய போராட்டம் என்று. please pass as much as you can..............

ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுதாம்- இது போலதான் இருக்கு நகை வியாபாரிகளின் கடை மூடல்...

கலால் வரி ஒரு சதவீதம் விதித்ததால் தங்கம் விலை ஏறிடும் மக்கள் கஷ்டப் படுவாங்க என்பது நகைகடை அதிபர்கள் சொல்லும் காரணம் .

ஒரு லட்சம் ரூபாய்க்கு நகை வாங்கினால் ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும். அதனால் மக்கள் பில் கேட்பார்கள்.துண்டு சீட்டு போட்டு காசு வாங்க முடியாது.

அப்படியானால் கலால் வரியினை கணக்கிட்டு அவர்களுக்கு வருமான வரி கட்ட வேண்டி வரும். அதனால்தான் இவர்கள் கூப்பாடு போடுகின்றனர். மத்தபடி மக்கள் கஷ்டம் காரணமில்லை.

மக்களை கஷ்ட படுத்தகூடாதுன்னா செய்கூலி,சேதாரம் 10%-14%போடுவதை விடுங்க..அப்படி சேதாரம் போட்டாலும் அந்த சேதாரமான தங்க துகள்களை பொட்டலம் போட்டு எங்க கிட்ட தந்துடுங்க..சேதாரமான தங்கத்தையும் வைத்து கொள்வார்களாம்.உங்க கிட்ட நாங்க ஏமாந்து தரும் சேதாரமான தங்கத்துக்கு பணமும் வாங்கிப்பீங்களாம்..
என்னங்கப்பா இது ?.

பத்து பவுன் வாங்கினா ஒன்றரை பவுனை சேதாரமா வாங்குற உங்களை விட மத்திய அரசு ஒன்றும் எங்களை வதைக்கவில்லை.

எங்க மேல அவ்வளவு அக்கறையின்னா நீங்களே அந்த ஒரு சதவீதத்தினை செலுத்துகிறோம்னு சொல்லுங்களேன்.

தங்க நகை ஆசாரியை முதலில் கஷ்டம் இல்லாம நல்லா வாழ வையுங்க.

மக்களே கலால் வரி செலுத்திய சீட்டை கேட்டு வாங்குங்கள்..

இவர்கள் தரும் சிறு தள்ளுபடிக்காக துண்டு சீட்டுக்கு பணம் கொடுக்காதீர்கள்.இவர்களுக்கு கிடுக்கி பிடி போடும் இந்த கலால் வரி ...அதனால் தான் இத்தனை நாள் கடையடைப்பை நடத்துகின்றனர்.

திரும்ப முதல் வரியை படிங்க...

Popular Posts

Facebook

Blog Archive