வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 17 மே, 2016

வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம்

பலகோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம், தனது பயனர்களின் நன்மை கருதி கருதி அடிக்கடி சிறந்த பல வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. பல்வேறு பயனுள்ள வசதிகள் காணப்பட்ட போதிலும் வாட்ஸ்அப் மூலம் வீடியோ அழைப்புக்களை எடுக்கும் வசதி வாட்ஸ்அப்-இல் இல்லாதது பெரும் குறையாகவே காணப்பட்டது.
ஆனால் தற்போது வாட்ஸ்அப் நிறுவனமேஅதிகாரபூர்வமாக வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை எடுப்பதற்கான வசதியை அறிமுகப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது.எப்படி இதை உறுதிப்படுத்துவது என்று கேட்கிறீர்களா? அதாவது வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்து உள்ள பயனர்கள் வாட்ஸ்அப்-இல் எதிகாலத்தில் அறிமுகமாக இருக்கும் வசதிகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள முடியும்.
www.whatsapp.com
அந்த வகையில் வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம் பயனர்கள், ஏற்கனவே வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வசதியை பெற்று விட்டனர்.ஆகவே நீங்களும் வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைய வேண்டும் என்றால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில்சென்று வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்து கொள்ளுங்கள். வாட்ஸ் அப் பேட்டா ப்ரோக்ராம் வசதி ஆன்ராயிடு பாவனையாளர்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைவது எப்படி?வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்த பின்னர், உங்களது வாட்ஸ்அப் பதிப்பை அப்டேட் செய்தால் உங்களது வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை எடுக்கும் வசதி காணப்படும்.ஆனால் வாட்ஸ்அப் வீடியோ அழைப்புக்களை எடுக்க முற்பட்டால் சர்வர் எரர் என்ற வாசகம் ஒன்று தோன்றும். அதாவது வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு இன்னும் டிவலப் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றனது என்பதே இதற்கு அர்த்தம் ஆகும்.ஆகவே பெரும்பாலும் எதிர்வரும் ஒருசில தினங்களில் வெளியாகும் புதிய வாட்ஸ்அப் பதிப்பில், வாட்ஸ்அப் வீடியோ அழைப்புக்களை அதிகாரபூர்வமாக பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கபடுகிறது. ஆனால் வாட்ஸ்அப்-இன் அதிகாரபூர்வ பதிப்பிற்கு இந்த வீடியோ அழைப்பு வசதி வர முன்னர், வாட்ஸ்அப் பேட்டாபதிப்பில் வைத்தே அனைத்து (பிழைகளுக்கான) பரிசீலனைகளும் நடைபெறும்.ஆகவே நீங்களும் வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்து இருந்தால்இந்த (வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு) வசதியை மற்றைய சாதாரண வாட்ஸ்அப் பயனர்கள் பெற முன்னரே உங்களால் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Posts

Facebook

Blog Archive