DiskDigger ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் அழிந்த புகைப்படங்களை திரும்பப் பெறுவது எப்படி? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil DiskDigger ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் அழிந்த புகைப்படங்களை திரும்பப் பெறுவது எப்படி? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 21 மே, 2016

DiskDigger ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் அழிந்த புகைப்படங்களை திரும்பப் பெறுவது எப்படி?

எமக்குத் தேவையான எந்த ஒரு புகைப்படத்தையும் நாம் நினைத்த மாத்திரத்தில் இணையத்தில் இருந்து உடனுக்குடன் தரவிறக்கிக் முடியும்.

Android Photo recovery

என்றாலும் சுற்றுலா பயணங்களின் போதோ, திருமண வைபவங்களின் போதோ அல்லது இது போன்ற மேலும் பல இனிமையான தருணங்களில் நாம் எமது உறவினர்கள் நண்பர்களுடன் பிடிக்கும் புகைப்படங்கள் தவறுதலாகவோ அல்லது மறதியாலோ அழிக்கப்பட்டுவிட்டால் அது எமக்கு பாரிய வருத்தத்தை தருவதாக அமைந்து விடும்.


இருப்பினும் அவ்வாறு எம்மை அறியாமலேயே அழிக்கப்பட்ட புகைப்படங்களை மீட்டுக்கொள்ள உதவுகிறது டிஸ்க்டிக்கர் (DiskDigger) எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி. கீழுள்ள இணையச் சுட்டி மூலம் இதனை தரவிறக்கிக் கொள்ளலாம்.


இதனை பயன்படுத்துவதற்கு உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் ரூட் (Root) செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இதனை நிறுவிய பின்னர் குறிப்பிட்ட செயலியின் பிரதான இடைமுகத்தில் தோன்றும் START BASIC PHOTO SCAN என்பதை சுட்டுவதன் மூலம் நீக்கிய புகைப்படங்களை தேடிப் பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறு பெறப்பட்ட புகைப்படங்களில் உங்களுக்கு தேவையானவற்றை மாத்திரம் தெரிவு செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் சேமித்துக்கொள்ள முடியும் 

இவ்வாறு சேமித்துக் கொள்வதற்கு குறிப்பிட்ட புகைப்படத்தின் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று சிறிய புள்ளிகளை கொண்ட குறியீட்டை சுட்ட வேண்டும். பின்னர் தோன்றும் Save this file locally என்பதை சுட்டுவதன் மூலம் அவற்றை உங்கள் ஸ்மார்ட்போனில் சேமித்துக்கொள்ள முடியும்.


DiskDigger android application 



மேலும் Recover this file என்பதை சுட்டுவதன் மூலம் அவற்றை கூகுள் டிரைவ், ட்ராப்பாக்ஸ் போன்ற இணைய சேமிப்பகங்களில் சேமித்துக்கொள்ளவும் முடியும்.

முயற்சித்துப்பாருங்கள் நீங்கள் இழந்த ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் மீட்கப்படுவதை அவதானிப்பீர்கள். இருப்பினும்  அது  மேலோட்டமானது தான் ரூட் செய்யப்பட்டிருந்தால் ஆழமான தேடல் முடிவுகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

Popular Posts

Facebook

Blog Archive