How to find Silent Mode Phone தொலைந்து போன ஆன்ராயிடு போன் சைலண்ட் மோட்டில் இருக்கிறதா? மெசேஜ் அனுப்பி ரிங் செய்ய வைப்போம். | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil How to find Silent Mode Phone தொலைந்து போன ஆன்ராயிடு போன் சைலண்ட் மோட்டில் இருக்கிறதா? மெசேஜ் அனுப்பி ரிங் செய்ய வைப்போம். ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

திங்கள், 30 மே, 2016

How to find Silent Mode Phone தொலைந்து போன ஆன்ராயிடு போன் சைலண்ட் மோட்டில் இருக்கிறதா? மெசேஜ் அனுப்பி ரிங் செய்ய வைப்போம்.

பயனர்களின் நலம் கருதி, ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பல்வேறு அம்சங்களுடன் அறிமுகமாகிறது. உலகில் அதிகளவோரால் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்படுவதட்கான காரணம். அதன் இலகுத்தன்மை தான். இவை தவிர ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் எமது வேலைகளை மிக இலகுவாக செய்து கொள்ள ஆன்ராயிடு கூகுள் ப்லே ஸ்டோரில் காணப்படும் மிகச்சிறந்த செயலிகளும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பலராலும் விரும்பப்படுவதட்கு ஒரு முக்கிய காரணம்.

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் அல்லது திருட்டு போனால் மிக இலகுவாக ட்ரேக் செய்து திருடியது யார் என்று போடோவுடன் தெரிந்து கொள்வது எப்படி என்பது பற்றிய பதிவு எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

போனை யாரவது திருடினால், திருடியது யார் என்று போட்டோவுடன் தெரிந்து கொள்ள வேண்டுமா?


திருட்டை விடுங்கள்..! நமது போனை நாமே எங்கேயாவது வைத்து விட்டு தேடும் போது சில​ வேலையில் போன் சைலன்ட் மோட்-இல் இருக்கும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் போன் ரிங் ஆகினாலும் கூட, போன் இருக்கும் இடத்தை தேடிக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வோம். ஆகவே இன்றைய பதிவில் உங்கள் ஸ்மார்ட் போன் சைலன்ட் மொட்-இல் இருந்தாலும் கூட எப்படி ரிங் செய்ய​ வைத்து மிக இலகுவாக போன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

இதில் இருக்கும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், நாம் குறித்த ஒரு குறும் செய்தியை எமது போனுக்கு அனுப்பியே, போன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள போகிறோம்.

போன் சைலண்ட்-இல் இருக்கும் போது குறும்செய்தி அனுப்பி ரிங் செய்ய வைப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் சைலண்ட்-இல் இருக்கும் போனை ரிங் செய்யவைக்க கூடிய ஆன்ராயிடு செயலியை பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, உங்களுக்கு தேவையான வாசகம் ஒன்றை டைப் செய்து Set என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது இன்னுமொரு போனில் இருந்து நீங்கள் ஏற்கனவே உங்களது போனில் சேமித்து வைத்த குறித்த வாசகத்தை மெசேஜ்-இல் டைப் செய்து உங்களது இலக்கத்திற்கு அனுப்புங்கள்.
அவ்வளவு தான்..! சைலண்ட்-இல் இருந்த உங்களது போன் இப்போது ரிங் ஆக ஆரம்பித்து இருக்கும்.

உங்களது போன் இருக்கும் இடம் தெரிந்ததும், போனில் காட்டப்படும் Phone Found என்பதை கிளிக் செய்து ரிங் ஆக்குவதை நிறுத்தி கொள்ள முடியும்.

ஆகவே மிக இலகுவாக சைலண்ட்-இல் இருக்கும் ஆன்ராயிடு போனை ரிங் செய்ய வைக்கும் இந்த சைலண்ட் ரிங்கர் செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.



Share this

 www.masinfom.blogspot.com

Popular Posts

Facebook

Blog Archive