Search Duplicate File ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள டூப்ளிகேட் பைல்களை கண்டறிந்து நீக்க வேண்டுமா? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil Search Duplicate File ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள டூப்ளிகேட் பைல்களை கண்டறிந்து நீக்க வேண்டுமா? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 21 மே, 2016

Search Duplicate File ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள டூப்ளிகேட் பைல்களை கண்டறிந்து நீக்க வேண்டுமா?

எமக்கு பிடித்த பாடல்கள், திரைப்படங்கள், புகைப்படங்கள் என ஏராளமானவற்றை நாம் எமது ஸ்மார்ட்போனில் சேமித்திருப்போம் அல்லவா?

ஆண்ட்ராய்டு டூப்ளிகேட் பைல்

சில வேளைகளில் நாம் எமது ஸ்மார்ட்போனுக்கு தரவிறக்கிய பாடல்கள், வீடியோ கோப்புக்கள் புகைப்படங்கள் போன்றவற்றை நண்பர்களிடம் இருந்தும் பெற்றிருப்போம், அல்லது பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் வந்தவைகள் தானாகவே எமது ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டிருக்கும், அல்லது நாமே அவற்றை ஒன்றுக்கு பல தடவை எமது ஸ்மார்ட்போனில் வெவ்வேறு இடங்களில் சேமித்திருப்போம்.




இதனால் எமது ஸ்மார்ட்போனில் உள்ள நினைவகம் எம்மை அறியாமலேயே நிரப்பப்பட்டுவிடுகிறது.

எனவே இவ்வாறு ஒன்றுக்கு பல தடவை சேமிக்கப்பட்டுள்ள கோப்புக்களை கண்டறிந்து அவற்றை நீக்கிக் கொள்ள உதவுகிறது Search Duplicate File எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி நாம் கீழே வழங்கியுள்ள இணைப்பு மூலம் இதனை தரவிறக்கிக் கொள்ளலாம்.


இதன் மூலம் ஒன்றுக்கு மேலதிகமாக சேமிக்கப்பட்டுள்ள MP3 பாடல்கள், வீடியோ கோப்புக்கள், புகைப்படங்கள், ஆவணங்கள், APK கோப்புக்கள் (செயலிகள்) என எந்த ஒன்றையும் குறுகிய நேரத்திலேயே கண்டறிந்து நீக்கிக்கொள்ள முடியும்.

இந்த செயலியின் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் முழுவதுமாகவோ அல்லது நீங்கள் விரும்பும் கோப்புறைகளை மாத்திரமோ தெரிவு செய்து சோதிக்க (Scan) முடியும்.



பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஒரே தன்மையை கொண்ட ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்கள் (Files) இருந்தால் அவைகள் அனைத்தும் பட்டியலிடப்படும். 


இனி அவற்றில் ஒன்றை வைத்துவிட்டு ஒரே தன்மையை கொண்ட ஏனைய கோப்புக்களை (டூப்ளிகேட் பைல்களை) குறிப்பிட்ட செயலியின் மூலமே மிக இலகுவாக நீக்கிக் கொள்ளலாம்.

மேலும் தேடல் முடிவில் நூற்றுக்கணக்கான கோப்புக்கள் பட்டியலிடப்பட்டால் அவற்றில் உள்ள புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோ கோப்புக்கள், இசைகள்/பாடல்கள் போன்றவற்றை தனித்தனியாக பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிட்ட செயலியில் Filter எனும் வசதியும் தரப்பட்டுள்ளது.

இது தவிர மேலும் பல வசதிகளை தரும் இந்த செயலியை நீங்களும் ஒருமுறை பயன்படுத்திதான் பாருங்களேன்.

Popular Posts

Facebook

Blog Archive