Thanks to Discovery - தமிழால் இணைவோம் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil Thanks to Discovery - தமிழால் இணைவோம் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 4 ஜூன், 2016

Thanks to Discovery - தமிழால் இணைவோம்

இன்று தமிழ் மொழியை வளர்க்காமல் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் பல தமிழக தொலைகாட்சிகளில் நடுவிலே ஒரு அயல் நாட்டு தொலைக்காட்சி தமிழ் மொழியைஅதன் அடிநுனியில் இருந்து மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது . இந்த தொலைக் காட்சியை பார்த்து மற்ற அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளும் வெட்கி தலை குனிய வேண்டும் .ஆம் இந்த டிஸ்கவெரி தமிழ் தொலைக்காட்சி நாம் இழந்த, பழக்கத்தில் இல்லாத பல அரிய சொற்களை அறிவியல் தமிழில் மிக நேர்த்தியாக நம் மக்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
இவர்களின் தமிழ் சொல்லாடல் நம்மை வியக்க வைக்கிறது .
ஒளிக் கோபுரம்,
சதுப்பு நிலங்கள்,
தாழ் நிலங்கள் ,
அகழ்வு உந்து ,
சம ஈர்ப்பு விசைகள்,
மின் ஆற்றல்கள், என பல அருமையான தமிழ் மொழி பெயர்ப்புகள்.ஆங்கிலமும் தமிழும் கலந்துகலந்து நம்மை எரிச்சல் உண்டாக்கும் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு நடுவில் இந்த அலைவரிசை நமக்கு தேனமுது .இவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துவதோடு நம் குழந்தைகள் , குடும்பத்தினர் அனைவரையும் இந்த தொலைக்காட்சியை பார்க்கச் செய்து அறிவியலையும் தமிழையும் ஒருங்கே கற்போம், கற்பிப்போம். இதை உங்கள் நண்பர்களிடமும் பகிருங்கள் தோழர்களே!!!

-Esakki Muthu

-► தமிழால் இணைவோம்

Popular Posts

Facebook

Blog Archive