பண்ணை மாடுகளின்( ஜெர்சி) உண்மை நிலை | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பண்ணை மாடுகளின்( ஜெர்சி) உண்மை நிலை ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

திங்கள், 2 ஜனவரி, 2017

பண்ணை மாடுகளின்( ஜெர்சி) உண்மை நிலை

பண்ணை மாடுகளின் உண்மை

பால்  பால்.


அன்றாடம் நம் வாயில் நுழையும் அத்தியாவசியப் பொருளாகமாறிவிட்டது.
காலை எழுந்தவுடன் காபி; பின்பு வாயில் உருகும் நெய் தோசை
என்று பாரதியார் பாட்டு எழுதும் அளவிற்கு பால் மற்றும் பால் பொருட்கள் நம் அன்றாட வாழ்வில் கலந்துவிட்டன. தொலைக்காட்சி விளம்பரங்களும்,நகைச்சுவையாய் சித்தரிக்கப்படும் கார்டூன் படங்களும் நம்மை தினம் தினம் முட்டாளாக்கிசம்பாதிக்கின்றன.

செண்பகமே செண்பகமே என்று பாட்டுப் பாடி பால் கறந்து சினிமாவும் நம்மை முட்டாளாக்கிவிட்டது. உண்மையில் பால் எனும் வெண்மையான திரவத்திற்குப் பின்னால் உள்ள இருண்ட உண்மை தெரியுமா உங்களுக்கு?

 நாம் தெய்வமாக நினைக்கும் பசுக்கள் படும் துயரம் பற்றி அறிவீர்களா? பால் பொருட்களை தவிர்த்து வாழ்தல் உண்மையில் ஆரோக்கியம் என்பதை  அறிவீர்களா? அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்.
இந்தக் கட்டுரையை எழுதும் முன் நான் பாலைப் பற்றி என்ன நினைத்திருந்தேன் என்று கூறி விடுகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் முட்டை மற்றும் பால் பொருட்களை விரும்பி சாப்பிட்டிருக்கிறேன்.

முட்டையில் உயிர் இல்லை என்றும் பால் கறக்காமல் விட்டால் பசு வேதனைப்படும் என்றும் எனக்கு கற்பிக்கப்பட்ட முட்டாள் தனமான கொள்கைகளைப் பேசி விதண்டாவாதம் செய்து என் தவறுகளை நியாயப்படுத்தியிருக்கிறேன். ஒரு  அன்பர் என்னிடம் பால் சாப்பிடுவதைப் பற்றி வாதாடினார். நான் வழக்கம் போல விதண்டாவாதம் செய்து என் தவறை நியாயப்படுத்தினேன். இப்பொழுது நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. ஆனால் அவர் என்னிடம் கேட்ட கேள்விகள் என்னை சிந்திக்கச்செய்தன.

பால் உண்மையில் கொடூரமானதா?பால் இல்லாமல் வாழ முடியுமா?என்ன நடக்கிறது பால் பண்ணைகளில்? பசுக்கள் துன்புறுத்தப்படுகின்றனவா?இத்தகைய கேள்விகள் என்னுள் எழுந்தன. கேள்விகளுக்கு பதில் காண முற்பட்டேன். அந்த பதில்களும், என்னை ஒரு நனிசைவனாய் மாறச் செய்த காரணங்களும் இங்கே...

அமைதியாக மென்று கொண்டிருக்கும் வாயும் நிசப்தமான கண்களும் பசுக்களை இவ்வுலகில் எந்த விதப் பற்றும் இல்லாமல் திருப்தியாய் வாழ்வது போல் காட்டிவிடும். ஆனால் அவற்றின் ஆழமான கரிய நிறக் கண்களுக்கு பின்னால் இருக்கும் சங்கதிகள் பல.
வாயில்லா ஜீவன் என்று முத்திரை குத்தப்பட்டிருக்கும் அந்தப் பசுக்கள் உண்மையில் வாயை கண்களில் கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதன் தான் அதை கவனித்துக் கேட்கத் தவறிகாதில்லா ஜீவனாக வலம் வருகிறான் என்பது மிகவும் கசப்பான உண்மை.
நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகள் போன்றே மாடுகளும் கூட ஒரு அலாதியான உயிரினம் தான். அவைகளும் தனித்தன்மை பல கொண்டு தமக்குள்ளே வெவ்வேறு விதமான குணநலன்களைப் பெற்றிருக்கின்றன. சில முரண்டு பிடிக்கும், சில கூச்சம் கொண்டு ஒதுங்கி நிற்கும். சில நட்பு பாராட்டும், சில ஆதிக்கம் செலுத்தும். சமீப காலங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் பலவும் பசுக்கள் புத்திக்கூர்மை நிறைந்தவை என்று நிரூபிக்கின்றன.

பசுக்கள் தமக்குள் இனம் கண்டு பழகுவதையும், நட்பு பாராட்டுவதையும், நிகழ்ச்சிகளை நீண்ட காலம் நினைவு பாராட்டுவதையும், எதிர்காலம் பற்றி வருத்தம் கொள்வதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து நிரூபித்துள்ளார்கள். மேலும் மனிதர்களைப் போலவே வெற்றியைக் கொண்டாடும் தன்மையும், பாவனைகள் செய்து சந்தோஷங்களைப் பறிமாறிக் கொள்கின்றன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிக்கல் என்னவென்றால், அவை தோலுக்காகவும்,மாமிசத்துக்காகவும் இனப்பெருக்கம் செய்யப்பட்டு கொல்லப்படுகின்றன.

பிற ஜீவராசிகளைப் போன்றே அவைகளும், குடும்பத்தில் இருந்து பிரிக்கப்படுவதையும் கொல்லப்படுவதையும் விரும்புவதில்லை. அவை பிரிவின் சோகத்தை ஆழமாக உணர்கின்றன.
பசுக்கள் 7 அடி உயரம் கொண்ட சுவற்றை தாண்டியும், நீந்தியும், பல மைல்கள் நடந்து சென்று தன்னிடம் இருந்து பிரிக்கப்பட்ட கன்றை சேர போராட்டங்கள் பல செய்கின்றன. ஆனால் ஆதிக்கம் செலுத்தும் மனிதன் மனிதனாக இல்லாமல் போவதால் அவை கொல்லப்படுகின்றன. பெற்ற தாய் முன்னே பிள்ளை கொல்லப்பட்டு தோலுரிக்கப்படும் அவலம் தோல் பட்டறைகளில் நடக்கிறது. மனிதத்தை உலகுக்கே எடுத்துக் கூறும் வேதங்களும் இதிகாசங்களும் நிறைந்த நம் நாடு பணத்தை நோக்கி சுழல்வதால் ஏற்பட்ட மாய வலையில் மனிதம் மறைந்து போய்விட்டது. :

1.பசுக்கள் பால் கொடுக்கும் இயந்திரங்களா?:

இல்லை. இல்லவே இல்லை. அவை அவ்வாறு சித்தரிக்கப் பட்டன. ஆனால் உண்மையில் ஒரு பெண் எதற்காக மார்பகத்தில் பால் சுரக்கிறாளோ அதே காரணத்திற்காகத்தான் பசுக்களும் பிற பாலூட்டிகளும் பால் சுரக்கின்றன. ஒரு பெண் தன் குழந்தைக்கு ஊட்டமளிக்கவே பால் சுரக்கிறாள். அது போலவே பசுக்களும் அவற்றின் குழந்தைகளின் பசி நீக்கவும் ஊட்டச்சத்து அளிக்கவும் மட்டுமே பால் சுரக்கின்றன. கரு தரித்து பிள்ளை பிறந்தால் தான் ஒரு பாலூட்டியால் பால் தர முடியும். எனவே பாலுக்காக பண்ணையில் வளர்க்கப்படும் பசுக்கள் ஒவ்வொரு வருடமும் பிரசவிக்கப் படுகின்றன. ஒரு பிள்ளையைப் பெற்று எடுக்கும் வலியை உணர்வது தாய் மட்டும் தான். வருடா வருடம் வன்முறையாகக் கற்பழிக்கப்பட்டு பிள்ளை பெறச்செய்தால் ஒரு பெண்ணின் வலி எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும் ஒரு பசுவின் வாழ்க்கை.
இன்று பசுக்களும் எருதுகளும் இராட்சத இயந்திரங்கள் ஓடும் தொழிற்சாலைகளில் கட்டிவைக்கப்பட்டு இயந்திரங்கள் மூலமாக பால் கறக்கப்படுகின்றன. இயந்திங்கள் அதிகப் பாலை உறிஞ்சி எடுப்பதற்கே முற்படுகின்றன. இயல்பாக சுரக்கும் பாலை விட பல மடங்கு அதிகம் பாலை கறப்பதற்கு அவை அதிக அழுத்தம் கொடுக்கின்றன. இந்த அழுத்தமானது பசுவிற்கு உயிர் போகும் வலியை உண்டு செய்கின்றன. ஆனால் நமக்கென்ன கவலை? என்று நாம் பாலை உறிஞ்சுகிறோம். மேலும் வேலை செய்யும் ஆட்கள் பெரும்பாலும் இயந்திரங்களை சரியாக கவனிப்பதில்லை.

அவை சரியான நேரத்தில் நிறுத்தப்படுவதில்லை. அதனால் பால் வற்றிய பிறகும் கூட அவை மடியை விடாமல் உறிஞ்சுகின்றன. இது மிகவும் கொடிய வேதனையாகும். பெருபாலும் பாலுக்காக பண்ணையில் வளர்க்கப்படும் பசுக்கள் அத்தியாவசிய தேவைகள் கூட பூர்த்தியாகாத வகையில் மிகவும் குறுகிய இடங்களில் கட்டி வைக்கப்படுகின்றன. அவை பால் கொடுக்கும் இயந்திரங்கள் போல நடத்தப்படுவது வேதனை. அநேக பசுக்கள் தினந்தோறும் ஹார்மோன் (மரபணு) ஊசி மூலம் அதிகப் பால் கறக்க உந்தப்படுகின்றன. (இதன் காரணமாகவே பசுக்கள் பால் கறக்காமல் விட்டால் அவற்றின் மடி வீங்கிப் போகிறது இயல்பு நிலையில் கன்றுக்கு பால் ஊட்டிய பிறகு எந்த பாலூட்டிக்கும் மடியில் பால் தங்கி வீக்கம் ஏற்படாது.)  ஆக்ஸிடாக்ஸின் (OXYTOXIN-SCHEDULE H DRUG)எனப்படும் வேதிப்பொருள் பரவலாக அனைத்து பால் பண்ணைகளிலும் உபயோகிக்கப்படுகிறது.

இது சட்டவிரோதமானதும் கூட. இந்த வேதிப்பொருள் அதிகப் பால் சுரப்பதற்காக உபயோகிகப்படுகிறது. ஆனால் இது பசுக்களின் அடிவயிற்றில் பிரசவ காலத்தில் ஏற்படும் வலிக்கு சமமான வேதனையை உருவாக்குகிறது. D.A.V.Health Research foundation-ன் பிரதமரான டாக்டர். R.P.பர்ஷார் என்பவரின் ஆய்வுக்கட்டுரையில் அவர் கூறுகிறார், "உத்தரப் பிரதேசம்,ஹரியானா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களைச் சேர்ந்த68-83% பால் பண்ணைகள் ஆக்ஸிடாக்ஸின் ஊசியை பயன்படுத்துகின்றன. கன்று ஈன்ற பின் 6 மாதங்கள் வரை ஒரு பசு பால் சுரக்கும். ஆனால் கூடுதலாக பல மாதங்கள் செயற்கை கருத்தறிப்பு செய்யாமலே ஆக்ஸிடாக்சின் ஊசியை செலுத்துவதன் மூலம் பால் கறக்கப் படுகின்றது. இந்த ஆக்ஸிடோக்சின் என்பது கறக்கப் படும் பாலில் கலந்து வருவதால் பால் என்பது ஒரு ஆட்கொல்லி விஷமாக மாறுகிறது. தினந்தோறும் இத்தகைய பாலை உட்கொள்வதால் 55க்கும் அதிகமான வியாதிகளை நாம் உட்கொள்கிறோம் என்பது நிதர்சனமாகிறது"

Popular Posts

Facebook

Blog Archive