தமிழ்மொழியின் சிறப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் !! | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil தமிழ்மொழியின் சிறப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் !! ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 13 ஜூலை, 2018

தமிழ்மொழியின் சிறப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் !!

தமிழ்மொழியின் சிறப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் !!

ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) - தமிழின் தனிப்பெருந்தன்மை 🌿 இயல்பாகத் தோன்றிய தமிழ்மொழியின் உயரிய பண்புகள், தன்மைகள் பற்றி ஒவ்வொரு தமிழனும் அறிந்துகொள்ளுதல் வேண்டும். தொன்மை 🌿 உலகின் மிகப்பழைமையான நிலப்பகுதி குமரிக்கண்டம். அந்நிலப்பகுதி கடல்கோளால் மூழ்கிவிட்டது. 🌿 அத்தொன்னிலத்தில்தான் தமிழ் தோன்றியதெனத் தண்டியலங்கார மேற்கோள் செய்யுள் கூறுகிறது. ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ். மென்மை 🌿 தமிழ் மெல்லோசை மொழியாயிருப்பதனாலேயே, அஃது உலக முதன் மொழியாய்த் தோன்றியும் வழக்கொழியாமல் இன்றும் இளமை மாறாமல் கன்னித்தமிழாய் இருந்து வருகின்றது. 🌿 தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவரும் முயற்சி வருத்தமின்றி எளிதாக அதனைக் கற்கவும் பேசவும் இயலுகின்றது. 🌿 எக்காலத்தும் உள்ளத்தில் எழக்கூடிய கருத்துகளை எல்லாம் தெரிவிக்கத்தக்க சொற்களைக் கொண்டதாகத் தமிழ்மொழி விளங்குகிறது. தாய்மை 🌿 பெற்றோரைக் குறிக்கும் அம்மை, அப்பன் என்னும் நாஞ்சில்நாட்டுத் தமிழ்ச் சொற்கள், வடமொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன. தமிழ்ச்சொல் இல்லாத உலகப் பெருமொழி யாதொன்றும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. தூய்மை 🌿 தமிழில் வழங்கிய ஆயிரக்கணக்கான பேச்சு வழக்குச் சொற்களும், நு}ல்வழக்குச் சொற்களும் காலவெள்ளத்தில் மறைந்து போயின. எஞ்சியுள்ள பழஞ்சொற்களைக் கொண்டும் தேவைக்கேற்பப் புதுச் சொற்களைப் புனைந்தும் பிறமொழித் துணையின்றித் தமிழால் தனித்து இயங்க இயலும். 🌿 தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறினார் கால்டுவெல். செம்மை 🌿 மக்களுக்கு ஒழுக்க வரம்பு தேவையானது போலவே மொழிக்கு இலக்கண வரம்பும் சொற்களுக்குத் திருந்திய வடிவும் இன்றியமையாதன. இவற்றைத் தமிழில் உள்ளதுபோல், வேறு எம்மொழியிலும் காண இயலாது. அதனாலேயே தமிழ், செந்தமிழ் எனப்பட்டது. மும்மை 🌿 முதற்சங்கத்திலிருந்தே இசையும் நாடகமும் இயற்றமிNழாடு இணைந்து முத்தமிழென வழங்கி வரலாயிற்று. முதலிரு சங்கத்திலும் வழங்கிய இலக்கண நு}ல்கள் முத்தமிழ் பற்றியனவாகவே இருந்தன. இலக்கண நிறைவு 🌿 எல்லா மொழிகளும் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும். ஆனால், தமிழ் அவற்றுடன் சேர்த்து வாழ்வியலுக்கான பொருளிலக்கணத்தையும் கூறுகிறது. அதனையும் அகம், புறம் என இருவகையாகப் பகுத்துள்ளது. நு}ல் சிறப்பு 🌿 ஆயிரக்கணக்கான தமிழ் நு}ல்கள் இயற்கைச் சீற்றங்களால் அழிந்துபோயின. கிடைத்தனவற்றுள் சங்ககால நு}ல்கள் தமிழர்தம் மொழியையும் பண்பாட்டையும் விளக்குவனவாகத் திகழ்கின்றன. 🌿 இத்தகைய விழுமிய வியத்தகு பண்பாடுகளையும் நு}ல்களையும் கொண்டது தமிழ்மொழி. அத்தகைய உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியை உணர்ந்து கற்றுப் போற்றிக் காப்போம். ஆசிரியர் தகுதி தேர்வுக்கான(TET Exam) வினா - விடைகள், பாடத்திட்டங்கள், பள்ளி புத்தகங்கள், வருடாந்திர வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நித்ராவின் TET செயலியை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். http://bit.ly/2IZoRml

Popular Posts

Facebook

Blog Archive