நம் முன்னோர் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள். | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil நம் முன்னோர் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள். ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

நம் முன்னோர் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள்.

நம் முன்னோர் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று  சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.

என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....

ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...

அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!
சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?

சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1".
தமிழ் புத்தாண்டு. 

In science it is called Equinox
(spring equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".
ஆடி பிறப்பு.
(summer solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1".
தீபாவளி.
(fall equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1".
பொங்கள்.
(winter solstice)

இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும்  நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், 
இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

சித்திரை (spring equinox) - புத்தாண்டு.
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு.
ஐப்பசி (fall equinox) - தீபாவளி.
தை (winter solstice) - பொங்கல்.
இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...

நமது முன்னோர்கள்  "தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள்.
மிகவும் மகத்தானவர்கள்.

https://youtu.be/adIW8CwLPy4

Popular Posts

Facebook

Blog Archive