ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய.. | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய.. ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 12 மே, 2019

ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய..

ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்....ஆனால்..ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது...

மண்டல அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என கடைக்காரர் கூறுவார்...ஆனால் அது தேவையில்லை...1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு ...தமிழுக்கு ஒன்றை அழுத்தவும் அடுத்து குடும்ப அட்டை வைத்திருப்பவரா என்பதற்கு 2ஐ அழுத்தினால்....சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார்..

அவர் உங்கள் ரேஷன் கார்டில் மேலே உள்ள எண்ணை கேட்பார்...எ.கா. 005/w/ 33657778 என்ற எண்ணை சொல்லவும்..

பின்னர் குடும்ப அட்டையில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கேட்பார் ..அதையும் தெரிவிக்க வேண்டும்... நீங்கள் போன் செய்வதற்கு முன் ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கையில் வைத்திருக்க வேண்டும்...

இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொன்னவுடன் நீங்கள் விரும்பிய மொபைல் நம்பரை பதிவு செய்யலாம்..அல்லது நம்பரை மாற்றலாம் ...அடுத்த 2 நிமிடங்களில் உங்கள் மொபைல் எண் ஆக்டிவேட் ஆகிவிடும்..

இதற்காக வேகாத வெயிலில் மண்டல அலுவலகம் சென்று நிற்க வேண்டாம்....இதை தெரிந்தவர்களுக்கு பகிருங்கள்..

இதேபோல, ரேஷன் கடையில் நீங்கள் ஆதார் அட்டை மட்டும்தான் பதிவு செய்திருப்பீர்கள்.....ஆனால் போட்டோ கொடுத்திருக்க மாட்டீர்கள்....அதனால் உங்களுக்கு ஸ்மார் கார்டு வராது..
போட்டோவை மொபைல் ஆப் மூலமாகவோ....அல்லது TNEPDS என்ற இணைதளம் மூலமாகவோ மட்டுமே அப்லோடு செய்ய முடியும்...அதன் பிறகுதான் ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் செய்வார்கள்...
தெரியாதவர்களுக்கு இந்த மெசேஜை பகிரவும்...

புதிதாகவும் ஸ்மார்ட் கார்டு ஆன் லைனில் அப்ளை செய்ய முடியும்...நன்றி
சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்..
(K. பாபு
கூட்டுறவுசார் பதிவாளர் / பொது
விநியோகத் திட்ட அலுவலர் )

Popular Posts

Facebook

Blog Archive