ஹைட்ரோகார்பன் எடுக்கலாமா...? எடுக்க கூடாதா... | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil ஹைட்ரோகார்பன் எடுக்கலாமா...? எடுக்க கூடாதா... ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 6 ஜூன், 2019

ஹைட்ரோகார்பன் எடுக்கலாமா...? எடுக்க கூடாதா...

#Im_Supporting_Hydrocarbon.......
          👉ஹைட்ரோகார்பன் எடுக்கலாமா...? எடுக்க கூடாதா...
   கண்டிப்பா ஹட்ரோகார்பன் எடுக்கணும்
           👉ஹைட்ரோகார்பன் ஏன் எடுக்கணும்...?
    உலகமுழுவதும் 40%கும் மேல மின்சாரம் எடுக்க ஹைட்ரோகார்பன் தேவைப்படுகிறது...
           👉எரிவாயு LPG கேஸ்ஸுக்கும் தேவையான மீத்தேன் வாயும் இதுல இருந்துதான் எடுக்கப்படுகிறது..மின்சாரத்திற்கு தேவையான
பூமில இருக்கிற நிலக்கரியும் ,ஆயிலும் எடுத்த பிறகு வேறு வழியில்லாமல் நம்முடைய மின்சார தேவைக்கு ஹைட்ரோகார்பன் எடுக்க வேண்டிய நிலை வரும்
            👉ஹைட்ரோகார்பன் எடுக்காமல் விட்டால் மின்சாரம் இருக்காது.. பல மருத்துவம், தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள், உட்பட அனைத்து நிறுவனங்களும் முடங்கிவிடும்
Facebook, Whatsapp Tiktok... போன்ற முக்கிய சமூக வலைதளங்கள் முடங்கிவிடும்
             👉இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஹைட்ரோகார்பன் கண்டிப்பா எடுத்தே ஆகணும்

             👉சரி ஹைட்ரோகார்பன் என்றால் என்ன?
  ஹைட்ரஜனும் கார்பனும் சேர்ந்தது தான் ஹைட்ரோகார்பன் ஆகும்
இதில்
மீத்தேன்---CH4(ஒரு கார்பனும் நான்கு ஹைட்ரஜனும் இருக்கும்)
ஈத்தேன்---C2H6(இரண்டு கார்பனும் ஆறு ஹைட்ரஜனும் இருக்கும்)
ப்ரோப்பேன்---C3H8(மூன்று கார்பனும் எட்டு கார்பனும் இருக்கும்
இதில் 95% க்கு மீத்தேன் உள்ளது.
              👉இது எரிக்கப்படும்போது உண்டாகும் வெப்பத்தில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது...
ஹட்ரோகார்பன் எப்படி எடுக்கணும்?
விவசாய நிலங்களுக்கு அடியில் தான் இந்த ஹைட்ரோகார்பன் அதிகளவில் உள்ளது இதில் ஹைட்ராலிக் முறையில் பல கோடி ரூபாய் செலவு செய்து நம்ப மத்திய, மாநில அரசு இந்த வாயு எடுக்கிறது...
இதனால் ஏற்படும் விளைவுகள்
               👉விவசாய நிலங்கள் பாதிக்கும், வாழ்வாதாரம் அழிந்து போகும் உணவு பற்றாக்குறை ஏற்படும் இறுதியில் சோமாலியாக மாறும்...
               👉யாரு செத்தா எங்களுக்கு  என்ன... விவசாய நிலம் நாசமா போனா எங்களுக்கு என்ன....நாங்க செய்யுறத செஞ்சிகிட்டே இருப்போம்னு  மத்திய,மாநில அரசு ஒரு நிலைப்பாட்டில் இருக்கு
              👉இந்த திட்டம் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது இதையெல்லாம் எதிர்த்து நம்மக்களும் போராடி போராடி அலுத்துவிட்டனர் மேலும் போராட்டம் செய்து அந்த எண்ணெய் நிறுவனங்களை நம் மாநிலத்தை விட்டு அனுப்பினாலும்... சில காலத்திற்கு பின்பு நம் மின்சார பற்றாக்குறையை காரணமாக வைத்து மீண்டும் நம் மண்ணில் காலடி வைப்பார்கள்

             👉இனிமேல் இந்த விஷயத்தில் உணர்வுபூர்வமாக பார்ப்பதை விட அறிவு பூர்வமாக பார்க்கலாம்.....ஒரு லேட்டஸ்ட் ரிப்போர்ட் என்ன  சொல்லுதுன்னா  ஒரு வருசத்துக்கு 14முதல்25 மில்லியன்டன் மீத்தேன் பூமியின் மேற்பரப்பில் இருந்து வளிமண்டலத்தை நோக்கி போகிறது..   இதுக்கு முக்கியமான சோர்ஸ் என்னன்னா குப்பை மட்டும் தான்...
          👉இந்தியாவை பற்றி வெளிநாட்டில் 10பேரிடம் கேட்டால்... தாஜ்மஹால்,நல்ல கலாச்சாரம்,நல்ல பண்பாடு இருக்குனு 4 பேரு சொல்லுவாங்க...மீதம் உள்ள 6 பேரு அது குப்பை சுத்தம் இல்லாத நாடு,,, ஜாதி, மதம் வேற்றுமை உள்ள நாடு என்று சொல்லுகிறார்கள்
            👉இந்தியாவில் இருக்குற மாநகராட்சிகளோட மொத்த பட்ஜெட் 27000 கோடி... இதுல 2300கோடி ரூபாய்...அதாவதுநம்ப கட்டுர வரியில் 10% தொகையை. Solid Weast Management க்கு ஒதுக்குறாங்கா...
            👉இந்த தொகையை  அரசு கண்ட்ராக்டர்ஸ் கிட்ட கொடுக்குது.. இந்த கண்ட்ராக்டர்ஸ் இந்த பணத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரிச்சி சரியான முறையில் டிஸ்போஸ் பண்ணனும்... ஆனால் இதையெல்லாம் இவுங்க பண்ணாம... எல்லா குப்பைகளையும் குப்பைக்கிடங்கில் கொண்டு போய் கொட்டிவிட்டுறாங்க
            👉 மேலும் 80 முதல்100 அடி வரை குப்பைகளை மலைபோல் குவித்து விடுகின்றனர்... இதே நிலைமை தான் நம் சென்னையிலும்

1டன் குப்பைகளை வைத்து 40 கிலோ மீத்தேன் வாயு பெறப்படும் அதாவது 2 சிலிண்டர் கேஸ் நிரப்ப முடியும்

             👉ஒரு நாளைக்கு சென்னையில் சராசரியாக 4500டன்

குப்பை சேருகிறது ...இந்தியாவில் சென்னை போன்று மொத்தம் 200 மாநகராட்சிகள் உள்ளது...இந்த 200 மாநகராட்சிகளில் ஒருநாளைக்கு ஒரு லட்சம் டன் குப்பைகள் சேருகிறது.இந்த குப்பைகள் மூலம்  40லட்சம் மீத்தேன் கேஸ்  நம்மால பெறமுடியும்...
மீதமுள்ள 90லட்சத்துக்கும் மேலான குப்பைகளை கெமிகள்ஸ் இல்லாத இயற்கை உரமாக மாற்றி வறண்ட நிலங்களை விவசாய நிலங்களாகவும் மாற்ற முடியும்

             👉இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் மொத்தம் 44 இடங்களில் இந்த திட்டம் செயல்படுகிறது... இந்த திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 1பில்லியன் கிலோகிராம் அளவு மீத்தேன் எடுக்க முடியும்... அதேசமயம் நம்மகிட்ட இருக்குற குப்பையை,மனித மற்றும் தாவர, விலங்கு கழிவுகளை வைத்து 1.5பில்லியன் கிலோகிராம் அளவுக்கு அதிகமான அளவு மீத்தேன் எடுக்க முடியும்.... அதுமட்டுமில்லாமல் மீதமுள்ள குப்பைகளை வைத்து 90லட்சம் முதல் 1 டன் வரையிலான இயற்கை உரம் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் விவசாய நிலம் காப்பாற்றபடுவது மட்டுமில்லாமல்.... தரிசு நிலங்களும் விவசாய நிலங்களாக மாற்ற முடியும்...

                👉இந்த விஷயம் தெரிஞ்சிகிட்ட சுவீடன், அமெரிக்க போன்ற நாடுகளில் பக்கத்து நாட்டில் இருந்து குப்பைகளை வாங்கி மீத்தேனாகவும்..உரமாகவும் மாற்றி வருகின்றனர்

               👉நம்ப அரசு நல்ல அரசாக இருந்தால் தூய்மை இந்தியா என்ற திட்டத்தில். இந்தியாவில் உள்ள குப்பைகளை வைத்து மீத்தேன் எடுத்துருக்கணும் அதையெல்லாம் விட்டுட்டு.... விவசாய நிலங்களை அழித்து ஏன் மீத்தேன் எடுக்க வேண்டும்

               👉மக்களுக்கான திட்டம் என்றால் ஒரு பகுதி மக்களை அழித்து.. இன்னொரு பகுதி மக்களை வாழவைப்பது இல்லை.. எல்ல பகுதி மக்களையும் வாழவைக்க வேண்டும்..

               👉இந்த மாதிரி நம்ம நாட்டில் உள்ள குப்பைகளை வைத்து மீத்தேன் எடுப்பதால்....
👉விவசாயம் நிலம் பாதிக்காமல் இருக்கும்
👉குப்பைகள் இல்லாமல் இருக்கும்
👉குப்பைகளில் இருந்து வெளிவரும் வாயுக்கள் குறைவதன் மூலம்
குளோபல் வார்மிங்..அதாவது. புவி வெப்பமயமாதல் குறையும்
👉ஓசோனில் ஓட்டை விழாது
👉அரசுக்கும் நிதி பற்றாக்குறை வந்திருக்காது
👉இன்ஜினியரிங் படிச்ச எங்களுக்கும் வேலை கிடைச்சிருக்கும்
👉அதனால் சரியான வழியில் மீத்தேன் எடுங்க.... தப்பான வழியில மீத்தேன் எடுத்து எங்களையும் எங்க விவசாயிகளையும் அழிச்சிடாதீங்க...
#Im_Supporting_Hydrocarbon_But_right_way_of_Field🙏

சோதிகாதிங்கடா எங்களை😏🙏
By #Anti_indian😎

Popular Posts

Facebook

Blog Archive