சப்பாத்தி சாப்பிட்டா வெய்ட் குறையுமாமே டாக்டர் ? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil சப்பாத்தி சாப்பிட்டா வெய்ட் குறையுமாமே டாக்டர் ? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 3 டிசம்பர், 2019

சப்பாத்தி சாப்பிட்டா வெய்ட் குறையுமாமே டாக்டர் ?

~சப்பாத்தி சாப்பிட்டா வெய்ட் குறையுமாமே டாக்டர் ?
நெஜமாவா?

எங்க அப்பாவுக்கு சுகர் இருக்கு. 10 வருஷமா டெய்லி ராத்திரி 4 சப்பாத்தி சாப்புடுறார்... ஆனாலும் சுகர் குறையல.

சரி...சப்பாத்தி பத்தி இன்னைக்கு பாப்போம்.

சப்பாத்தி ல என்ன இருக்கு??

கோதுமை.

இன்னும் தெளிவா சொல்லப்போனா குட்டை கோதுமை (Atta)

சப்பாத்தி சாப்பிட்டா எப்டி சார் எடை குறையும்-ன்னு நெனைக்குறீங்க !!

~அதுல கலோரி கம்மி டாக்டர்.

இல்லைங்க.

~அதுல கார்போஹைட்ரேட் கம்மி டாக்டர்

அதுவும் இல்லைங்க.

சரி...இப்போ நாம எப்பவும் சாப்பிடுற அரிசி சாதத்தையும்,சப்பாத்தியையும் எடுத்துப்போம்.

*ஒரு Bowl அரிசி சாதத்துல இருக்க கலோரி - 281
*4 சப்பாத்தியில் உள்ள கலோரி - 360

*ஒரு Bowl அரிசி சாதத்துல இருக்க
கார்போஹைட்ரேட்-62 கிராம்
*4 சப்பாத்தியில் உள்ள கலோரி - 69 கிராம்.

ஆக மொத்தம் அரிசியை விட சப்பாத்தியில கலோரியும் அதிகம்,கார்போஹைட்ரேட் உம் அதிகம்.

அப்புறம் எப்டி இந்த சப்பாத்தி சாப்பிடுற கலாச்சாரம் உருவாச்சு ??

1980கள் ல உடல் பருமனும்,நீரிழிவு நோயும் தலை தூக்க ஆரம்பிச்சதும்,மக்கள் மேற்கொண்ட உணவு முறை தான் இந்த சப்பாத்தி.

அதாவது நம்ம வீடு இருக்கு...அதுல பாயோ,வெறும்தரையிலோ படுத்து தூங்குறப்ப ஜம்முன்னு தூங்குவோம்..ஏன்னா நமக்கு பழக்கப்பட்ட இடம்.

இதுவே வேற யார் வீட்டுலயோ நமக்கு நம்ம பஞ்சு மெத்தையே குடுத்தாலும் தூக்கம் வராது.

அதே கான்செப்ட் தான் இங்கேயும்.

ரொம்ப நாளா அரிசி சோறே சாப்பிட மக்களுக்கு,சப்பாத்தி ன்னு ஒன்னு குடுத்தா கம்மியா அளவோட சாப்பிடுவாங்க ன்னு அறிமுகம் செய்யப்பட்டது தான் இந்த சப்பாத்தி கலாச்சாரம்...ஆனா நம்ம ஆளுங்க வட இந்தியர்களை காட்டிலும் 10-12 சப்பாத்தி ன்னு வெளுத்து வாங்குராங்க.

சப்பாத்தி ன்னு சொன்னதும் நமக்கு யார் நியாபகம் வர்றது.

அதே தான்.."பஞ்சாபி சிங் ஹே".

பஞ்சாபி ல இருக்க சிங் எல்லாருக்கும் சப்பாத்தி தான் நமக்கு அரிசி மாதிரி.

ஆனா விஷயம் தெரியுமா பாஸ்....இந்தியாவிலேயே அதிக உடல் பருமனால் அவதிப்படும் மாநிலம் நம்ம சிங் சகோஸ் இருக்க பஞ்சாப் தான்.

அப்புறம்,இந்த சப்பாத்தி ல GLUTEN ன்னு ஒரு பொருள் இருக்கு...ரொம்ப கெடுதல் உடலுக்கு...வயிறு சம்மந்தப்பட்ட கெடுதல்கள்,Celiac Disease,Leaky Gut Syndrome,மூட்டு சம்மந்தப்பட்ட Reactive Arthritis ன்னு சகலத்தையும் வர வெச்சிடும் இந்த Gluten.

சொல்லப்போனா இட்லி சாப்பிடுறவன விட 4 சப்பாத்தி சாப்பிடுறவனுக்கு தான் உடல் நிலை பாதிக்கும்...சுகர் ஏறும்.மூட்டு வலி,வயிற்றுப்போக்கு ன்னு எல்லாம் வரும்.

குறைவான மாவுச்சத்து மட்டும் தான் ஆரோக்கியமான வாழ்வியலுக்கு திறவுகோல்.
சப்பாத்தி ல அது இல்லவே இல்லை.

அதனால சப்பாத்தி வெறும் சப்பை தான்.

நன்றி❣️

Dr.Aravindha Raj.

#BETTER_HEALTH_FOR_BETTER_LIFE

Popular Posts

Facebook

Blog Archive