Carina | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Carina

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Carina லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Carina லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 மார்ச், 2020

கொரோனா வைரசும் தமிழன் மறந்த தமிழர் நோய்த்தடுப்பு_மரபுகளும்

கொரோனா வைரசும் தமிழன் மறந்த தமிழர் நோய்த்தடுப்பு_மரபுகளும்  

1. இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது.

2. வாசல் முற்றத்தில்  நீரில் கால் கழுவி பிறகு வீடுநுழைந்தது.

3. மாவிலை தோரணங்கள் கட்டியது.

4. மஞ்சள் பூசி குளித்தது தெளித்து விளையாடியது.

5. உணவில் மிளகு சுக்கு மஞ்சள் சேர்ந்தது.

6. வாழை இலையில் உணவு பரிமாறியது .

7. வேப்பங்குச்சி உப்பு கரி கொண்டு பல் துலக்கியது.

8. வேப்பம் இலையில் புகை போட்டது.

9. மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது.

10. வருடம் ஒரு முறை வீட்டிற்கு வெள்ளை அடித்தது.
     
11.எலுமிச்சம் பழம் காய்ந்த மிளகாய் படிகாரம் உத்திரசங்கு இவைகளை தலை வாசலில் தொங்க விட்டது.

12. நெரிசல் மிக்க இடங்களில் இருந்து திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டிற்கு வெளியே வைத்தது. பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தது.

13. வெற்றிலை பாக்கு போடுவதும்.

14. கசாயம் ஊறல் குடிப்பதும்.

15. வெள்ளாவியில் உடை வெளுத்தது.

16.மரண வீட்டிற்கு சென்றுவந்தால் மஞ்சள் நீர் தெளித்து நீராடி வீட்டிற்குள் செல்லுதல்.

17.இறந்த பிரேதத்தை எரித்தது.

18. அம்மை வந்தால் வெப்பம்  பத்திரம் போடுதல்.

19. வீட்டு முற்றத்தில் துளசிச் செடியை நாட்டி வைத்தல்.

20. மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி ஏற்றி புகை போட்டது. 

இவை அனைத்துமே கிருமியை தடுப்பதும் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் சுத்தமாக வாழ்வதுக்கு மட்டுமே தமிழனால் உருவாக்கப்பட்ட மரபு  என்பது புரியாமல் இன்று நடக்கும் பெரு அழிவில் பங்காளர்களாக இருக்கிறோம்

"நீ புதைத்ததை நீயே எடுத்துவிடு இல்லாவிட்டால் நீயே புதைக்கப்படுவாய்"

இணையத்தளத்தில் இருந்து ...

Popular Posts

Facebook

Blog Archive