Java | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Java

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Java லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Java லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 மே, 2014

Java-ஜாவா 10 ம் பாடம்.(Selection statements.)

ஜாவா 10 ம் பாடம்.

Selection statements.


ஜாவாவானது இரண்டு வகையான selection statements யை ஆதரிக்கின்றது.
அவையாவானது
1.       If
2.       Switch
 
If:
If ஆனது ஒரு பூலியன் expression ன் அடிப்படையில் இயங்குகிறது.
பூலியன் expression  மதிப்பு true எனில் ஒரு set of statementsம் ,false எனில் இன்னொரு set of statements ம் இயக்கப்படும்.
 
உதாரணம்:
Int a,b;
--
--
If(a>b)
return a;
Else
return b;
இப்படியல்லாது பூலியன் மாறியின்(variable) அடிப்படையிலும் இயக்கலாம் .
அதாவது மாறியின் மதிப்பு true எனில் ஒரு statements  தொகுப்பும், false  எனில் மற்றொரு statements தொகுப்பும் இயக்கப்படும்.
 
If(available)
System.out.println(“call me”);
else
System.out.println(“don’t call me”);


ஒரு conditionன் கீழ் இயங்கும் statements ஒன்றுக்கு மேல்பட்டது எனில் அவை { மற்றும் } க்குள் கொடுக்கப்பட வேண்டும்.
 
உதாரணம்:
If(marks>=40)
{
System.out.println(“good”)
 System.out.println(“passed”);
}
else
{
System.out.println(“bad”);
System.out.println(“failed”);
}
 
Example flow chart:
undefined

மேலே உள்ள flowchart ல் ஸ்கோர் 60ற்கு மேல் எனில் ஒரு ஸ்டேட்மெண்டும் 60ற்கு கீழ் எனில் இன்னொரு ஸ்டேட்மெண்டும் இயக்கப்படும்.
 
-----தொடரும்

Java-ஜாவா 9ம் பாடம்.(Class & object -2)

 ஜாவா 9ம் பாடம்.

 
Class & object -2

Class-ன் பொது வடிவம்.
 
Class  classname
{
Type instance-variable -1;
Type instance –variable-2;
___
-------
Type instance-variable-n;
Type method-name1(){
}
--
--
Type method-name-n()
{
}
}
 
Class குள் அறிவிக்கப்படும் variable, instance variable என அழைக்கப்படுகின்றது..மெத்தட்களுக்கு உள்ளே coding உள்ளது. ஒரு க்ளாஸிற்குள் அறிவிக்கப்படும் variables மற்றும் மெத்தட்கள்  க்ளாஸின்
மெம்பர்கள் எனப்படுகின்றன.
ஒரு க்ளாஸிற்குள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு object ம் தனித்தனி  instance variable மதிப்புகளை கொண்டுள்ளன.ஒரு objectன் variables மற்ற object ந் மதிப்புகளிருந்து வேறுபட்டவையாகும்.
 
எளிய க்ளாஸின் உதாரணம்.
class rectangle
{
double length;
double breadth;
}
மேலே உள்ள க்ளாஸின் பெயர் Rectangle. இதில் length,breadth  என்று இரு instance variables  உள்ளன. மேலே உள்ள க்ளாஸிற்கு இது வரை எந்த methodம் அறிவிக்கப்பட வில்லை.
Rectangle என்றா பெயர் உபபோகித்து தான் இக்க்ளாஸிற்கான object அறிவிக்கப்பட வேண்டும்.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் class declaration என்பது வெறும் template தான். இதற்கான object  உருவாக்கப்படும் போது தான் க்ளாஸிற்கு உயிரூட்டப்படுகின்றது.
Rectangle r1=new Rectangle();
மேலே உள்ள வரியானது Rectangle classற்கு r1 என்ற objectஐ உருவாக்குகின்றது.
 
objectன் மாறிகளுக்கு(variables)பின் வருமாறு மதிப்பிருத்தலாம்.
  r1.width=15;
 
உதாரண நிரல்.
Class Rectangle
{
double length;
double breadth;
}
Class RectangleDemo()
{
Public static void main(String[] args)
{
Rectangle r1=new Rectangle();
Double area;
r1.langth=20;
r1.breadth=15;
area=r1.length* r1.breadth;
System.out.println(“area is”+area);
}
 
மேலே உள்ள நிரலின் பெயர் RectangleDemo.java என பெயரிட்டிருக்கப் பட வேண்டும். அதாவது main function எந்த க்ளாஸிற்குள் உள்ளதோ அதன் க்ளாஸின் பெயர் தான் நிரலின் பெயராக இருக்க வேண்டும். பெயருடன் .java என்ற நீட்டிப்பு இருக்க வேண்டும்
 
------தொடரும்.

செவ்வாய், 27 மே, 2014

Java-ஜாவா 8ம் பாடம்.

ஜாவா 8ம் பாடம்.

Class, objects, methods and instance variables:

ஒரு வண்டியை வேகமாக pedal press செய்து இயக்குகிறோம். ஆனால் அதற்கு முன் அந்த வண்டியை உருவாக்கியிருக்க வேண்டும். அதற்கும் முன் யாராவது அதைப் பற்றி டிசைன் செய்திருக்க வேண்டும்.
 
அந்த அந்த ட்ராயிங்க் ஆனது பெடல்,ப்ரேக் ,ஸ்டியரிங்க் வீல் அகியவற்றின் implementation  கொண்டிருக்கும்.ஆனால் கடை நிலைப் பயனாளிக்கு இவற்றின் வெளிப்புறம் மட்டுமே காட்டப் பட்டிருக்கும்.பெடலை மிதித்தால் வண்டி இயங்கத் தொடங்கும். .ப்ரேக் வண்டியை நிறுத்துவதற்கும் மற்றும் ஸ்டியரிங்க் வீல் வண்டியை திருப்புவற்கும் பயன்படுகின்றது.ஆனால் இவற்றை இயக்கும் போது வண்டியின் உட்புறம் என்ன நிகழ்கின்றது என்பது கடை நிலைப் பயனாளிக்கு மறைக்கப்படிருக்கும்.
 
இப்படித் தான் ஒரு classன் வழிமுறையானது வெளியே காட்டப் பட்டிருந்தாலும் அவை எப்படி இயங்குகின்றது என்பது யூசரிடமிருந்து மறைக்கப் பட்டிருக்கும்..
 
Class என்பது ஒரு டெசைன் தான். எப்படி நீங்கள் ஒரு வண்டியின் design வத்து அதை இயக்க முடியாதோ அதே போல் வெறும் class ஐ வைத்து  னீங்கள் ஒன்றும் செய்ய இயலாது.class க்கு object உருவாக்க வேண்டும். அதை வைத்து வழிமுறைகளை கையாள வேண்டும்.
 
மற்றுமொரு உதாரணமாக BankAccount class ஐ எடுத்துக் கொள்வோம். அவை bank balance என்ற பண்பு கொண்டிருக்கும்.அதே நேரத்தில் findBalance என்ற மெத்தடைக் கொடிருக்கும்.இதில் bank balance என்பது instance variable ஆக கொடுக்கப் பட்டிருக்கும்..balance அறிய வேண்டுமென்றால் findBalance என்ற மெத்தடைஅழைக்க  வேண்டும்.
GradeBook என்ற உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.
Public class GradeBook
{
Public void displayMessage ()
{
System.out.println(“welcome to the grade book”);
}
}
மேலே உள்ள நிரலில் உள்ளது வெறும் Class design மட்டும் தான். GradeBook
Class ஆனது displayMessage ()என்ற மெத்தடைக் கொண்டிருக்கிறது. அது அழைக்கப்படும் போது
 
welcome to the grade book
என்று வெளியிடும்.ஆனால் இந்த மெத்தடை அழைப்பதற்கு முன் GradeBook
Class க்கு object create செய்யப்பட வேண்டும். அதன் மூலமாக  displayMessage மெத்தடை அழைக்க வேண்டும்.
Public class GradeBookTest
{
Public static void main(String[] args)
{GradeBook book1=new GradeBook(0;
book1.displayMessage();
}
}
மேலே உல்ல நிரலில் GradeBook classக்கு book1 என்ற object create செய்யப்பட்டுள்ளது அதற்கு பின் displayMessage() மெத்தட் ஆனது அழைக்கப்பட்டுள்ளது. பொதுவாக classன்  வழிமுறையானது(method) பின் வருமாறு அழைக்கப் படுகின்றது.
 
Syntax:
Objectname.methodname();
 
 
 
 
--தொடரும்.
 (reference: java how to program ,Deitel publications)

Java-ஜாவா 7ம் பாடம்.(Operators)

 
 Operators:
Artithmetic operators:
 
=,-,*,/,%
 
%  operator ஆனது ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுக்கும் போது வ்ரும் மீதியை கணக்கிட பயன்படுகின்றது.
இது பெரும்பாலும் முழு எண்களுடன் பயன்படுத்தப் படுகின்றது.
 
Decision making: Relational operators:

Decision
ஆனது ஒரு condition ஆனது true அல்லது false என நிர்ணயித்து அதற்கேற்றாற் போல் statements இயக்கப்படும்..
ஒரு true அல்லது false என நிர்ணயிக்க relational operators பயன்படுகின்றது.
>  Greater than
<  less than
>= greater than or equal to
<= less than or equal to
==equal to
!= not equal to
 
உதாரண நிரல்.
Public class RelationalTest
{
Public static void main(String  args[])
{
Scanner input=new Scanner(System.in);
Int num1,num2;
System.out.println(“enter first number’);
num1= input.nextInt();
System.out.println(“enter second number’);
Num2= input.nextInt();
If(num1<num2)
System.out.println(“num1 is less than num2”);
If(num1>num2)
System.out.println(“num1 is greater than num2”);
If(num1<=num2)
System.out.println(“num1 is less than  or equal to num2”);
If(num1>=num2)
System.out.println(“num1 is greater  than  or equal num2”);
If(num1==num2)
System.out.println(“num1 is equal to num2”);
If(num1!=num2)
System.out.println(“num1 not equal to num2”);
}
Output:
enter first number1:1000
Enter second number 500
Num1 is greater than num2
Num1 is greater than or equal to num2
Num1 is not equal to num2.
 
மேலே உள்ள நிரலில் ஒரு if condition true அல்லது false என நிர்ணயித்து true எனில் அதற்கு கீழ்  உள்ள statements இயக்கப்படும்.
 
 
 
------தொடரும்

Java-ஜாவா 6ம் பாடம்.(Variable:)


Variable:
மாறி என்று தமிழில் அழைக்கப்படும் variable ஆனது நிணைவக இடங்களுக்கு நாம் இடும் பெயர் ஆகும்.இதில் பல்வேறு விதமான மதிப்புகளை சேமிக்கலாம். சேமித்து வைத்துள்ள மதிப்புகளை manipulate செய்யலாம்.

Import java.util.Scanner;
Public class Addition
{
Public static void main(String[] args)
{
Scanner input=new Scanner(System.in);
Int no1;
Int no2;
Int total;
Total=no1+no2;
System.out.println(“enter first integer”);
No1=input.nextInt();
System.out.println(“enter second integer”);
No2=input.nextInt();
Total=no1+no2;
System.out.printf(“sum is %d\n”,total);
}
}
 
Output:
enter first integer:10
enter second integer 15
sum is 25.
 
ஜாவாவானது வளமான library class களை கொண்டுள்ளது. அதில் ஒரு library class தான் Scanner ஆகும்.
Import ஆனது இந்த நிரலில் Scanner classlocate செய்யப் பயன்படுத்த்ப்படுகின்றது.scanner class ஆனது java.util என்ற packageல் உள்ளது.
Scanner input=new Scanner(System.in);
Scanner class க்கு input என்னும் object
ருவாக்கப்படுகின்றது.இதில் new எனும் keyword ஆனது Scanner object ஐ உருவாக்கி அதன் மூலம் keyboard வழியாக உள்ளீடு செய்யப்படுவன வற்றை ரீட் செய்ய பயன்படுகின்றது.
Int no1;
Int no2;
Int total ;
Integer தரவினத்தில் மூன்று மாறிகள்(variables) அறிவிக்கப் பட்டுள்ளது.
இன்ட் என்பது no1,no2,total மாறிகளில்முழு எண்கள் மட்டும் பெறும் படி ஆஎற்பாடு செய்ய பயன் படுகின்றது.
 
மற்ற முக்கியமான தரவினங்கள்
      1.       Float-தசம எண்கள்
      2.     Char-single character input
      3.    Sstring-எழுத்துக்களின் தொகுப்பு.
      4.    Double-துல்லிதமான தசம எண்கள்.
No1=input.nextInt();
Scanner classன் input object ஆனது keyboard  வழியாக நாம் உள்ளிடும் எண்களை பெற்றுக் கொண்டு no1ல் மதிப்பிருத்துகின்றது.
அதே போல்
No2=input.nextInt();
No2ல் மதிப்பிருத்தப் பயன்படுகின்றது.
No1+ nop2 கூட்டப்பட்டு total என்ற மாறியில் மதிப்பிருத்தும்.
பின் total வெள்யீடு செய்யப் படுகின்றது.
 
 
-தொடரும்



Popular Posts

Facebook

Blog Archive