Tamilnadu BJP | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Tamilnadu BJP

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Tamilnadu BJP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamilnadu BJP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 செப்டம்பர், 2023

BJP government Failed - பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்.!.


🎈பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும்,  இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்.!.

 சு.வெங்கடேசன் M.P.

மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீற்றிக் கொள்பவர்கள்யாரிடமாவது கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா?

1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?

2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?

3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?

3. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட. அல்லது பத்தாயிரம் கோடிகளை ஒரு கட்சிக்கு வாரி வழங்கி டொனேஷன்கள் தருமளவு பணக்காரர்கள் ஏன் முன்வந்தார்கள் ?

4. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?

5. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன், பாஜக மீது குற்றம் கூறியவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் பாய்ந்து பாய்ந்து நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகளும் அமைதியாவது எப்படி?

6. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பாஜக அரசிலேயே பதவி வழங்கியதேன்?

7. வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட பல லட்சம் கோடி கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட இன்று வரை மீட்கப்படவில்லையே? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லையே... ஏன் ஏன்? இந்தியாவில்  பாதையோரம் கடை வைத்து சுருக்குப்பையில் சில ஆயிரங்களிலிருந்து, சில லட்சங்கள் என்று சேர்த்து வைத்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புப் பணங்களை டீமானடைசேஷன் செய்து கள்ளப்பணமாக ஆக்கி வேட்டையாடியது தான் கறுப்புப் பண ஒழிப்பின் லட்சணமா ?

8. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறும் மர்மம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?

10. ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன? ராணுவம் என்பது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இல்லையா ?

11. கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?

12. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால், ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை? வந்தது  எனில் விபரமென்ன  ?  எவ்வவளவு ?

13. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?

14. மோடியின் வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் மட்டும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா? அவரது நண்பர்கள் உள்நாட்டு இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் வாங்கி வெளிநாடுகளில் முதல் செய்து, கடனை அடைக்காமல் கைவிட்டு, அதை மோடி அரசு தள்ளுபடி செய்தது எப்படி ? இதே வேலையை முந்தைய காங்கிரஸ் அரசும் செய்ததாலா ? காங்கிரஸ் அரசு செய்ததால் மோடி அரசு செய்வதும் நியாயமாகிவிடுமா ?

15. இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் நல்ல லாபத்தில் இயங்கிய ரயில்வே, தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்து எப்படி? இன்று ரிலையன்ஸூக்கும், அதானிக்கும் விற்கப்படுவது எப்படி ? அரசு ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களும் இன்று அதானி ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களுமாக மாறியது எப்படி ?

16. பெட்ரோல் மீதான 300 சதவீத இலாபம் அரசுக்கு மட்டுமே என்றால், இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்? அந்த லாபங்கள் மக்களுக்கு என்னவாக செலவிடப்பட்டிருக்கின்றன ?

17. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்? இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தவும் செய்திருக்கிறார்கள். பாஸ்டேக் என்று ஆன்லைன் கொள்ளையடிப்பதை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். யாரிடம் அனுமதி கேட்டார்கள் ?

18. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?

19. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள், பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?

20. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது? இதேபோல பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்கள் சில நூறு கோடி ரூபாய்களுக்கு தனியாரிடம் விற்கப்படும் மர்மம் என்ன ? இதன் பின்னுள்ள பொருளாதார அறிவு என்ன ?

21. மாநிலங்களின் GST பங்குகள் எங்கே மாயமானது?

22. கொள்ளையர்கள், ரவுடிகள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகிறார்களே ஏன் ?ரவுடிகளின், கற்பழிப்பு காவாளிகளின் கடைசி புகலிடம் பாஜகதானா?
23  PM. Care  collection
எவ்வளவ ?  என்ன் கணக்கு?

இன்னும் பல புதிரான கேள்விகளுக்கு விடையே இல்லை.
ஆனால் நம்புங்கள்..
 
மோடி புனிதர்,  வலுவானவர்.

பாஜக உத்தமர்களின் கட்சி!
பா.ஜ.க 8 வருட ஆட்சி.
கீழே உள்ள தகவல்களில் எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலம்.......


1-பெட்ரோல் / டீசல் வரி 300% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு
10- மோடி வெளிநாட்டு பயணங்கள்
11- வெளியுறவு கொள்கை
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
19- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
20- பலுசிஸ்தான் தலையீடு
21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி குளறுபடி
25-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம்
28-மேக் இன் இந்தியா
29-டிஜிட்டல் இந்திய திட்டம்
30-அணு உலை
31-புல்லட் ரயில்
31-நில கையகப்படுத்தும் மசோதா
33-ஸ்மார்ட் சிட்டி
34-ஹிந்தி திணிப்பு
35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37-ஜி.எஸ்.டி
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம்
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
45-ரகுராம் ராஜன் மாற்றம்
46-ஜல்லிக்கட்டு
47-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி
51-வியாபம்
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 8000 கோடி
55-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
56-15 லட்சம் ஆடை
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
58-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
59-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
67-தேச பக்தி நாடகங்கள்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
70-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்வி கொள்கை
73-பொது சிவில் சட்டம்
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
75-மாட்டு கறி தடை
76-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில்
79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000
85- சிறுபான்மையினர் விரோத போக்கு
86-மாட்டு அரசியல்
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .

90 ஆதார் அட்டை குழா்படிகள்-
91 காவிரி நதி நீர் ஆணையத்தின் அதிகாரத்தை குறைத்தது
92 கொரோனா சொதப்பல்கள் பலரை கொலைசெய்தது
93 CAA  NRC ,CAB ,????
94 68000 மார்வாடிகளுக்கு தள்ளுபடி மற்றவர்களுக்கு பட்டை
95 HB
96 உன்னா ரேப். உபியில் எம்எல்ஏ பாலியல் கொடுமை செய்த பெண்ணின் மொத்த குடும்பத்தையும் கொன்று அந்த பெண்னை உயிருடன் கொளித்தி கொன்றது.  
97 பின்வாசல் வழியாக பலமாநிலங்களில் ஆட்சியை மிரட்டி பறித்தது
98 மாநிலங்களின் ஜிஎஸ்டி யை ஆட்டையபோட்டது.
99 பழங்குடி மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த 84 வயது முதியவர் ஸ்டேன் சாமி என்பவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைத்தது  ஜாமீன் கூட கொடுக்காமல் சிறையிலேயே மரணிக்க வைத்தது.
100 பிரான்ஸ்லிருந்து வாங்கிய ரஃபேல் போர் விமான ஊழலை விசாரிக்க பிரான்ஸ் அரசு உத்தரவிட்ட பின்னும் இன்னும் இங்கே வாய்மூடி மௌனம் காப்பது.
101 ஒட்டு கேட்க,மென் பொருள்  வாங்கிய விபரம் ?

இதற்கெல்லாம் பதில் 2024 ல் கூறப்படும்!

______________________________________
(அதிக நண்பர்களைக்
கொண்டவர்கள் பகிர்ந்தால்
தகவல் பலரை சென்றடைய உதவும்)

------++++++++++++++++++++++++++-------

Popular Posts

Facebook

Blog Archive