Download Prisma App For Android ப்ரிஸ்மா ஆப்: இனி ஆண்ட்ராய்டு போன்களிலும் பயன்படுத்தலாம்....
எமது புகைப்படங்களை அலங்கரிக்க என ஏராளமான செயலிகள் உள்ளன. என்றாலும்
"ப்ரிஸ்மா" எனும் செயலியானது அதிகமானவர்களால் கவரப்பட்ட ஒரு அருமையான
செயலியாகும்.

மிக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இது வெகுவாக பிரபலமாகி விட்டது.
இந்த செயலியை பயன்படுத்தி அதிகமானவர்கள் தமது புகைப்படங்களை புதுப்பிக்கின்றமையையும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
எது எப்படியோ இது ஆரம்ப கட்டமாக ஐபோன் பயனர்களுக்கே
அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஆண்ட்ராய்டு போன்களுக்கான பதிப்பு
இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் வழங்கப்படவில்லை.
இருப்பினும் இதனை இரண்டு வழிகளில் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு தரவிறக்கிக்கொள்ளலாம்
முறை 1:
படி 1: ப்ரிஸ்மா இணையதளத்துக்கு சென்று Sign up என்பதை சுட்டுவதன் ஊடாக உங்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் வழங்க வேண்டும்.
படி 2: இனி உங்களுக்கான அழைப்பிதல் மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்படும். இனி அதில் வழங்கப்படும் இணைப்பு மூலம் ப்ரிஸ்மா செயலியை தரவிறக்கலாம்.
முறை 2:
படி 1: முறை 1 இல் இருக்கும் வழிமுறை சிரமம் என நீங்கள் கருதினால்
பின்வரும் இணைப்பு மூலம் ப்ரிஸ்மா செயலியின் APK கோப்பை தரவிறக்கி
நிறுவிக்கொள்ளலாம்.
தரவிறக்க இங்கே சுட்டுக
படி 2: நிறுவும் போது Security > Unkown sources என்பதை டிக் செய்து கொள்க.
நீங்கள் ஐபோன் பயன்படுத்துபவர் எனின் தரவிறக்க இங்கே சுட்டுக.
அவ்வளவுதான்! உங்கள் ப்ரிஸ்மா அனுபவம் எப்படி இருந்தது என்பதற்கான கருத்தை எழுதிவிட்டுச் செல்லுங்கள்!