பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 20 மார்ச், 2014

Desktop-இல் Right Click செய்தால் Safely Remove Hardware வசதி


இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் உபயோகபடுத்தாதவர்கள் இருப்பது கடினம் என்றாகிவிட்டது, கல்லூரியிலோ ,  கம்ப்யூட்டர் சென்டரிலோ , அலுவலகத்திலோ நாம் கணினியை பயன்படுத்துகிறோம் , அதே சமயம் நம்மில் பலர் பென்டிரைவ் உபயோகித்துதான் கோப்புகளை எடுத்து செல்கிறோம் , ஆனால் பென்டிரைவை கணினியை விட்டு நீக்கும் போது "Safely Remove Hardware" என்பதை கிளிக் செய்து விட்டு தான் நீக்க வேண்டும் , ஆனால் நாம் சில முறை இதை மறந்து விடுவோம் இதனால் பென்டிரைவ் பழுதடைவதற்கான வாய்ப்பு அதிகம். அதுமட்டுமில்லாமல் முக்கியமான சில கோப்புகளை இழக்கவும் வாய்ப்பு உள்ளது .

இதற்கான காரணம் என்று பார்த்தால் , அந்த "Safely Remove Hardware" Option ஆனது டாஸ்க் பாரின் வலது மூலையில் ஒளிந்திருக்கும் எனவே நாம் அதை கவனிப்பதில்லை .

அது உங்கள் Desktop-இல் நீங்கள் ரைட் கிளிக் செய்யும் போது வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா, நீங்களும் பாதுகாப்பாக உங்களது  பென் டிரைவை கணினியை விட்டு நீக்கலாம். இது அதாவது கீழே உள்ளது போல. 



விண்டோஸ் 7  க்கானது என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் . 

எப்படி இதை செய்வது? 

Win Button +R கொடுத்து வரும் Run விண்டோவில் "regedit" என்பதை கொடுத்து ok கொடுக்கவும். 


பின்பு அதில் உள்ள HKEY_CLASSES_ROOT என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்து பின் அதில் வரும் DesktopBackground Option - இல் Shell என்பதை கிளிக் செய்யவும், (அதாவது   HKEY_CLASSES_ROOT\DesktopBackground\Shell\ ) 

உங்களுக்கு இப்போது கீழ்கண்ட திரை கிடைக்கும் 


இப்பொழுது Shell ஐ ரைட் கிளிக் செய்யுங்கள் , அதில் New--> Key என்பதை கொடுத்து Safely Remove Hardware என்ற தலைப்பில் ஒரு புதிய கீ உருவாக்கி கொள்ளுங்கள் .



தற்பொழுது Safely Remove Hardware -இல் Right Click செய்தால் புதிதாக ஒரு string value உருவாக்கி கொள்ள Option வரும். அதற்கு தலைப்பு icon என கொடுங்கள் .


icon ஐ டபிள் கிளிக் செய்யுங்கள் அதற்கு Value Data: hotplug.dll,-100 என்று கொடுங்கள் .



தற்பொழுது Safely Remove Hardware -இல் மறுபடி Right Click செய்து புதிதாக ஒரு Key உருவாக்கி கொள்ளுங்கள் . அதற்கு தலைப்பு command என கொடுங்கள் . 



அதன் உள்ளே வால்யு டாட்டா ஒன்று default என்ற பெயரில் இருக்கும், இதை டபுள் கிளிக் செய்து நீங்கள் அதற்கு இந்த Value கொடுக்கவேண்டும்C:\\Windows\\System32\\control.exe hotplug.dll


அட போங்கப்பா ரொம்ப நேரமா எவ்ளோ செட்டிங்க்ஸ் Change பண்ண சொல்றனு நினைக்கிறீங்களா ? டோன்ட் வொர்ரி இப்ப டெஸ்க்டாப் ல போயிடு ஒரு வாட்டி செக் பண்ணி பாருங்க 



இப்படி வந்துருச்சா! வாழ்த்துக்கள் 

நீங்கள் வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள்!!

--     
                 
   S.PARTHIBAN

உங்கள் கணினியில் உள்ள ஒவ்வொரு வன்பொருளையும் சோதித்தறிய!!!!!.........



கணினியில் உள்ள முக்கியமான சாதனங்களையும் அதனுடன் தொடர்புடைய துணைச் சாதனங்களையும் சோத்தறிய உதவும் ஒரு மென்பொருளைப்பற்றி பார்க்க இருக்கிறோம். உங்கள் கணினியில் உள்ள வன்பொருள்களை ஒரளவேனும் நீங்கள் தெரிந்துவைத்திருப்பீர்கள். முக்கியமாக மதர்போர்டு(Mother Board) அதன் தொடர்புடைய துணை சாதனங்கள்(Sub-Device) சுட்டெலி(Mouse), கீபோர்ட்(Keyboard) ஆகியவைகளை நாம் அறிந்து வைத்திருப்போம்.
ஆனால் இவைகளின் தன்மைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது ஒவ்வொரு சாதனைத்தின் தன்மையை நாம் அறிந்துவைத்திருக்க வேண்டும். இவைகள் சரியாக இயங்குகின்றனவா? அல்லது இவற்றின் இயக்கத்தில் ஏதாவது மாறுபாடு இருக்கிறதா?. இதனுடைய தன்மையில் சரியாக இருக்கிறதா? என நிச்சயம் நாம் அறிந்துவைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இவற்றின் செயல்படும் திறனில் ஏதாவது பிரச்னை எனில் உடனே கண்டறிந்து உரிய தீர்வை எடுக்க முடியும்.

இல்லையெனில் கணினியில் அடிக்கடி ஏதாவது பிரச்னை ஏற்பட்டு , அது பெருந்தலைவலியாக உருவெடுத்துவிடும். உங்களுடைய பணத்தையும் விரையமாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இத்தகைய பிரச்னையை அறிய , முக்கிய சாதனங்கள் மற்றும் துணைச்சாதனங்களின் தன்மையை அறிய இந்த மென்பொருள் (Program)உங்களுக்கு உதவும்.


உங்களுடைய computer -ன் பாகங்கள் மற்றும் அவற்றின் செயல் திறனை ஆழமாகத் தெரிந்துகொள்ள இந்த program பயன்படுகிறது. அவற்றின் செயல்திறன் பொதுவான இவற்றின் செயல்திறனுடன் ஒப்பிடுகையில் சரியாக உள்ளதா? என்பதனையும் அறியலாம். இதனை Install செய்து இயக்கியவுடன் இந்த புரோகிராம் உங்கள் கணினியை முழுமையாக ஸ்கேன்(Full Scan) செய்திடும்.

பிறகு ஒவ்வொரு சாதனமும்(Device) எந்நிலையில் இயங்குகின்றன என்று தொழில்நுட்ப ரீதியில் தகவலைக் கொடுக்கும். எந்தெந்த சாதனங்கள் சரியில்லை என கண்டறிந்து, இந்த சாதனங்களை அனைத்தையும் மாற்றிவிடுங்கள் என்று ஆலோசனை வழங்கும்.

இதற்கு பிறகு அங்கு கீழே இடதுபுறம் கொடுக்கப்பட்டுள்ள Benchmarks என்பதை அழுத்துங்கள்.  இது சாதனங்களுக்கான(Device performance) செயல்திறன் சோதனையை மேற்கொண்டு அதன் பொதுவான தன்மையுடன்(The general nature) ஒப்பிட்டு காட்டும். இவை மட்டுமல்லாது உங்கள் கணினி குறித்த இன்னும் பல தகவல்களையும் சோதனைகளையும் இம்மென்பொருள் மூலம் மேற்கொள்ளலாம். நன்றி.


மென்பொருளை தரவிறக்க: http://www.cpuid.com/downloads/pc-wizard/2012.2.0-setup.exe
                                                           http://www.cpuid.com/downloads/pc-wizard/2012.2.0.zip
--

பயனுள்ள மென்பொருட்களை இலவசமாக பெறுங்கள்....



Ultimate Web Editor
இந்த தளம் சென்று பாருங்கள் எத்தனை மென்பொருட்களை இச்சேவையில் இலவசமாக நாம் பெறலாமென பட்டியலிடப்பட்டுள்ளது.3920$ பெறுமதியுள்ள மென்பொருட்களை வெறும் 30 செக்கன்களில் நாம் பெற்றுவிடமுடியும்.

நீங்களும் இவ்வாறு இலவசமாக இந்த மென்பொருட்களை பெறவேண்டுமா?

இதோ அதற்கான வழி!

மேலே நான் சொன்ன தளத்திற்கு சென்று மென்பொருட்களின் பட்டியலுக்கு கீழாக செல்லுங்கள்.ஒரு newsletter box வரும்.


அதில் உங்களுக்கு தேவையான மென்பொருள் பட்டியலை தெரிவு செய்து கேட்கப்பட்ட ஏனைய தகவல்களை வழங்கி கீழுள்ள ஓரேன்ஸ் நிற பொத்தானை சொடுக்கி விடுங்கள்.

சற்று பொறுத்து நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சென்று பாருங்கள்.

உங்களுக்கு இது போன்றதொரு மின்னஞ்சல் வந்திருக்கும்.

RE: Manju, here's your $3,920 in software gifts!

அந்த மின்னஞ்கலில் உங்களுக்கான தரவிறக்க லிங்கும் பின்வருமாறு தரப்பட்டிருக்கும்.
அந்த லிங்கில் சொடுக்கி உங்களுக்கான தரவிறக்க இணைப்புடன் கூடிய பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பிய மென்பொருட்களை தரவிறக்கலாம்.
AN

அறிந்திருக்க வேண்டிய Basic Keyboard Shortcuts...


Keyboard Short-cuts என்பவை எப்போதும் நம் வேலையை எளிதாக்க உதவுபவை, நாம் நமது mouse ஐ பயன்படுத்தி தேடிக் கொண்டிருக்காமல், மிக விரைவில் ஒரு வேலையை முடித்து விடும். இவற்றில் சில எப்போதும் பயன்படும். அந்த வகையில் கணினியை பயன்படுத்தும் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பத்து Basic Keyboard Shortcut-களை இங்கே தருகிறேன். 

இதில் ஒரு விஷயம், ஒரு குறிப்பிட்ட செயலை செய்ய ஒன்றுக்கும் மேற்ப்பட்ட Keyboard Shorcut - கள் உள்ளன. அவற்றைப் பற்றி காண்போம்.

Ctrl + C or Ctrl + Insert


ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை நாம் Copy செய்ய பயன்படுகிறது. 

Ctrl + V or Shift + Insert


Select அல்லது Highlight செய்த டெக்ஸ்ட்டை நமக்கு வேண்டிய இடத்தில் paste செய்ய உதவுகிறது. 

Ctrl + Z and Ctrl + Y


இதில் CTRL+ Z undo என்ற இந்த வசதி, நீங்கள் தற்போது இருக்கும் நிலைக்கு முந்திய நிலைக்கு செல்ல உதவுகிறது. அதாவது ஒரு கோப்பில் தவறுதலாக ஒரு வார்த்தையை நீங்கள் எடுத்து விட்டால், அதை மீண்டும் கொண்டு வர உடனடியாக இதை நீங்கள் செய்யலாம். அடுத்த CTRL+Y ஆனது Redo வசதியை தருகிறது. இது நீங்கள் தவறுதலாக Undo செய்தவற்றை Redo செய்து விடும். 

Ctrl + F


குறிப்பிட்ட கோப்பு, போல்டர், இணைய உலவியில் உங்களுக்கு தேவையான வார்த்தை போன்று தேட உதவுகிறது. 

Alt + Tab or Alt + Esc


நீங்கள் இயங்கி கொண்டுள்ள ப்ரோக்ராம்களுக்கு வேகமாக செல்ல உதவுகிறது. இதில் Alt+Tab மூலம் குறிப்பிட்ட ஒன்றுக்கு செல்லலாம்.Alt + Esc மூலம் ஒவ்வொன்றுக்கும் வரிசையாக செல்ல முடியும். 

இதில் சில இன்னும் சுவாரசியமான டிப்ஸ் உள்ளன. 

CTRL+ Tab - குறிப்பிட்ட Program-இல உள்ள வெவ்வேறு Tab-களுக்குள் மாறிக் கொள்ளலாம். உதாரணம் Firefox, Chrome. 

Alt+ Tab Forward ஆக ப்ரோக்ராம்களை காட்டினால், Alt+Shift+Tab இதை பின்னால் இருந்து காட்டும். நிறைய வேலைகளை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு இது பொருந்தும். 

Windows 7 , Vista பயனர்கள் Alt+Tab வேலையை Windows Key+Tab மூலம் செய்யலாம். இது முழு ஸ்க்ரீனில் திரைகளை காட்டும். இது அழகாக இருக்கும். 

Ctrl + Back space and Ctrl + Left or Right arrow


Ctrl + Back space ஆனது ஒரு முழு வார்த்தையை நீக்க பயன்படுகிறது. 

Ctrl + Left or Right arrow ஆனது ஒரு கோப்பில் ஒவ்வொரு எழுத்தாக நகராமல், வார்த்தையாக நகர்த்த பயன்படும். இதனுடன் சேர்த்து Shift Key ஐ அழுத்தினால் குறிப்பிட்ட வார்த்தையை தெரிவு செய்யலாம். 

Ctrl + S


குறிப்பிட்ட ஒரு கோப்பை சேமிக்க பயன்படுகிறது. 

Ctrl + Home or Ctrl + End


ஒரு கோப்பில் உங்கள் Mouse Cursor - ஐ கோப்பின் cursor இருக்கும் வரியின் ஆரம்பம் மற்றும் முடிவுக்கு செல்ல உதவுகிறது. 

Ctrl + P


பிரிண்ட் செய்யும் வசதிக்கு இது. 

Page Up, Space bar, and Page Down


Page Up மற்றும் Page Down நீங்கள் இருக்கும் பக்கத்தில் மேலே அல்லது கீழே செல்ல பயன்படுகிறது. 

Space Bar இணையத்தில் உலவும் போது ஒரு பக்கத்தில் இருக்கும் போது கீழே செல்ல உதவுகிறது, Shift+Space Bar மேலே செல்ல உதவுகிறது. 

கணினியை பற்றி cmd மூலம் நீங்களும் தெரிந்து கொள்ளலாம்

Command prompt என்பது கணனியில் மிகவும் பயனுள்ள ஒரு பகுதியாகும். இந்த Command prompt ஊடாக நமது கணணியை செயற்படுத்தமுடியும். இந்த Command prompt என்பது  நமக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை தரவல்லது. Command prompt இன் உதவியுடன் நமது கணணி குறித்த பல தகவல்களை பெற்றுகொள்ள முடியும். நாம் சில கட்டளைகளை வழங்கினால் போதும் அவை குறித்த பல தகவல்களை நாம் பெற்றுக்கொள்ளமுடியும். அத்தகைய Command prompt இல் பயன்படுத்தி நமது கணனி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளவென சில கட்டளைகளை இங்கு தருகிறேன். 

முதலில் Command prompt ஐ திறந்து கொள்ளுங்கள். 

Command prompt ஐ திறந்துகொள்வதற்கான வழிமுறைகள் இதோ.

 Start-->>Accesories-->>Command prompt

அல்லது

Start-->>Run  இல் cmd என தட்டச்சு செய்து திறந்துகொள்ளுங்கள்.

கீழ்வரும் கட்டளைகளை தோன்றும் Command prompt இல் தட்டச்சு செய்து கணணி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

1.கட்டளைsysteminfo 

கணனியின் Host Name மற்றும் இயங்குதளம் குறித்த தகவல்கள் போன்ற இன்னும் பல தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

2. கட்டளை: driverquery
  
கணனியின் இயக்கிகள்(Drivers) குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.


3. கட்டளை: tasklist  

கணனியில் இயங்கிக்கொண்டிருக்கும் Programs குறித்த தகவல்களை பெறுக்கொள்ளமுடியும்.

4.கட்டளை: ipconfig /all 

உங்கள் கணனியின் IP முகவரியினையும் மற்றும் வலையமைப்பு குறித்த தகவல்களையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

5. கட்டளை: net user

கணணி பயனாளர்கள்(User names) குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்


புதன், 19 மார்ச், 2014

Delete செய்ய முடியாத Files & Folder-களை Delete செய்வது எப்படி


சில சமயங்களில் கணினியில் குறிப்பிட்ட Folder/File போன்றவற்றை டெலீட் செய்யும் போது Access Denied என்று வரும். என்ன தான் பிரச்சினை என்று நமக்கு தெரியாது. ஆனால் டெலீட் செய்யவும் இயலாது.அதன் காரணத்தையும்  அவற்றை உடனடியாக டெலீட் செய்ய என்ன வழி என்று பார்ப்போம். 

இதற்கு காரணம் உங்கள் Folder/ File கணினியில் இயங்கி கொண்டிருப்பதே ஆகும். நாம் அவற்றை க்ளோஸ் செய்து இருந்த போதிலும், இந்த பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. பின்னணியில் அவை இயங்குவது காரணமாய் இருக்கலாம். 


படத்தில் உள்ளது போலத் தான் பெரும்பாலும் வரும். இது மாதிரி வரும் போது அவற்றை எப்படி டெலீட் செய்வது? 

இதற்கு உதவும் மென்பொருள் தான் "Unlocker". இது டெலீட் மட்டும் இன்றி இன்னும் Rename, Move போன்ற வசதிகளை செய்யும். இதன் மூலம் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும் File/Folder - இன் இயக்கத்தை நிறுத்தி அவற்றை Delete செய்ய இயலும். 


இதை இப்போது உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 

எதை Delete செய்ய முடியவில்லையோ, அந்த File/Folder மீது Right Click செய்து "Unlocker" என்பதை கிளிக் செய்யவும். 



இப்போது மேலே உள்ளது போல வரும் புதிய விண்டோ ஒன்றில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கும், அதில் "Kill Process" என்று கொடுத்தால் இயங்கி கொண்டிருக்கும் அதன் செயல் நின்று விடும், இதன் மூலம் நீங்கள் Delete செய்து விட முடியும். இல்லை என்றால் "Unlock All" என்பதை தெரிவு செய்து கூட பின்னர் Delete செய்ய முடியும். 


இதே, அந்த File/Folder எங்கேயும் இயங்கவில்லை என்றால் கீழே உள்ளது போல ஒரு சின்ன விண்டோ வரும், அதில் Delete என்பதை தெரிவு செய்தால் போதும். 

undefined

இப்போது சில வினாடிகளில் அந்த File/Folder Delete ஆகி விடும். பிரச்சினை முடிந்தது. 

Function Key-கள்


undefined
நாம் கணினியை  பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்ப்போம். 

F1

  • இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது.
  • CMOS Setup இலும் பயன்படுகிறது.
  • Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.

F2

  • இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது.
  • CMOS Setup இலும் பயன்படுகிறது.
  • Boot மெனுவுக்கு செல்ல
Microsoft Word இல் இதன் பயன்கள்:
  • Alt + Ctrl + F2 --> open a new document in Microsoft Word.
  • Ctrl + F2--> display the print preview window in Microsoft Word.

F3

  • இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது.
  • MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது.
  • MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது.

F4

  • Find window ஓபன் செய்ய(check in the My Computer )
  • கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)
  • Alt+F4 will Close all Programs.
  • Ctrl+ F4 will close current Program.

F5

  • Reload or Refresh
  • Open the find, replace, and go to window in Microsoft Word
  • PowerPoint இல் Slide Show ஸ்டார்ட் செய்ய.

F6

  • cursor ஐ address bar க்கு மாற்றும். (IE, Mozilla)
  • Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.

F7

  • MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc )
  • Mozilla வில் Caret Browsing ஐ ON செய்ய பயன்படும்.

F8

  • விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்

F9

  • Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது. அதுபற்றி தெரிந்தவர்கள் கமெண்ட் பாக்ஸில் சொல்லவும்.

F10

  • இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)
  • Shift+F10 - Right Click ஆக செயல்படும்.

F11

  • இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும்.
  • கணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும். 

F12

  • MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும்.
  • Shift+F12 will Save MS Word
  • Ctrl+Shift+F12--MS Word print செய்ய பயன்படும்.

உங்கள் கணினியைப் பற்றி துல்லியமாக அறிய இலவச மென்பொருள் !


 

ccleaner,defraggler போன்ற கணினிக்கு மிகவும் பயனுள்ள மென்பொருட்களை இலவசமாகக் கொடுத்த Piriform  நிறுவனம் தற்போது கணினியின் செயல்பாடுகள்  மற்றும் கணினியில் நிறுவப் பட்டுள்ள ஹார்டுவேர் மற்றும் ஆப்பரேடிங் சிஸ்டம் பற்றி தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் Speccy  எனும் மென்பொருளை தற்போது இலவசமாக வழங்குகிறது.



கணினியின் வன்பொருட்களின் விபரங்களைத் தருவதோடு மட்டுமல்லாது அவற்றின் தற்போதைய வெப்பநிலை குறித்த தகவல்களையும் துல்லியமாகத் தருகிறது.

தேவைப் படுவோர் இங்கு கிளிக் செய்து மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள்.

Popular Posts

Facebook

Blog Archive