பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

வைரஸ்கள் எப்படி கணணிக்குள் நுழைகிறது என்பதனை அறிந்திருக்க வேண்டும் ?

கணணிக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில் பிரச்சனை எத்தகையது
என்பதை வரையறை செய்வது தான் கடினமான ஒரு சிக்கலாகும்.
பாதிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பல வேறுபாடான கருத்துக்களும் செயல்முறைகளும் இருந்து வருகின்றன.

ஒரு சிலருடைய கணணிகளில் வைரஸ் மற்றும் மால்வேர் தடுப்பு வழி முறைகள் மிகவும் பழமையானவையாகவே இருக்கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர். அப்படியானால் கணணிகளிலும், மேக் கணணிகளிலும் கெடுதல் விளைவிக்கும் மென்பொருள் தொகுப்புகளை எப்படிக் கையாளலாம்?
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன் மால்வேர் புரோகிராம் ஒன்று எப்படி கணணிக்குள் நுழைகிறது என்பதனை அறிந்திருக்க வேண்டும். ஆனால் அங்குதான் வேறுபட்ட கருத்துக்களும் முடிவுகளும் உருவாகின்றன.
மேக் கணணி பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் சிஸ்டத்தின் கட்டமைப்பே பாதுகாப்பற்றது என்று தவறாக கூறுகின்றனர். ஒரு சில இணையதளங்களுக்குச் செல்வதன் மூலமும், சில மின்னஞ்சல்களை திறப்பதன் மூலமும், விண்டோஸ் பயன்படுத்துபவர்கள் மால்வேர் தொகுப்புகளைத் தங்கள் கணணியில் நுழைய விட்டுவிடுவதாகச் சொல்கின்றனர். இது முற்றிலும் உண்மையானது இல்லை.
இரண்டு வகைக் கணணிகளை பொறுத்தவரை சில விடயங்களை ஒத்துக் கொண்டாக வேண்டும். 1. வைரஸ், வோர்ம், ட்ரோஜன் மற்றும் பல பெயர்களில் நாம் பத்து ஆண்டுகளுக்கு முன் தந்த விளக்க வரையறைகள் இப்போது உள்ள கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்குப் பொருந்தாது.
நீங்கள் அவ்வப்போது வெளியிடப்படும் செக்யூரிட்டி அப்டேட் பேட்ச் கோப்புக்களை தரவிறக்கம் செய்து இணைத்து இயக்கிவிட்டால் வைரஸ்கள் வருவதற்கு இடமே இல்லை. கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைப் பொறுத்த வரை அவை பரவும் விதம், கெடுதல் விளைவிக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சில குழுக்களாகப் பிரித்துவிடலாம்.
சமுதாய அடிப்படையில் வரும் செய்திகளின் அடிப்படையிலேயே பெரும்பாலானவர்கள் தங்களின் கணணிகளில் வைரஸ் புரோகிராம்களை அனுமதித்து விடுகின்றனர். ஒரு சிலர் மேக் கணணிகளில் மால்வேர் மட்டுமே நுழையும். வைரஸ்கள் நுழைவதில்லை என்று தவறாக முடிவு செய்கின்றனர்.
இன்றைய கால கட்டத்தில் வைரஸ்கள் என்று நாம் முன்பு பெயரிட்டது போல கெடுதல் விளைவிக்கும் நாசகார புரோகிராம்கள் வருவதில்லை. 1990 ஆம் ஆண்டு வாக்கில் வந்த மெலிஸ்ஸா என்றழைக்கப்பட்ட வைரஸ் தான் உண்மையிலேயே வைரஸ் ஒன்றின் அனைத்து கெடுதல் முகங்களையும் கொண்டிருந்தது. அதன்பின் வைரஸ் என்று சொல்லப்பட்ட புரோகிராம்களின் கெடுதல் தன்மை அவ்வளவு தீவிரமாக இல்லை.
பின் வந்த காலங்களில் மால்வேர் எனப்படும் கெடுதல் புரோகிராம்களே அதிகமான எண்ணிக்கையில் இருந்தன. சில இணைய தளங்களுக்குச் செல்கையில் அதில் உள்ள சில குறியீடுகள் இயங்கி கணணியின் பபர் நினைவகத்தினைக் காலி செய்து நேராக கணணியை இந்த மால்வேர் புரோகிராம்கள் சென்றடைந்தன.
இந்த தளங்கள் பெரும்பாலும் சமுதாய இணைய தளங்களாகவோ அல்லது அது போன்ற போர்வையில் தகவல்களைத் தந்து மக்களை ஈர்ப்பனவாகவோ உள்ளன என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
மிக அதிகமான சேதத்தை விளைவித்தது கான்பிக்கர் வோர்ம் தான். 2010 ல் இதன் விளைவு மிக அதிகமாக இருந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால் 2008 ஆம் ஆண்டிலேயே இந்த வோர்ம் வந்த வழியில் இருந்த பிரச்னைகளுக்கான தீர்வு ஒரு பேட்ச் கோப்பாக தரப்பட்டது. ஆனால் பலர் அதனைக் கொண்டு தங்கள் ஓபரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திடாமல் விட்டுவிட்டனர். இதனால் ஏற்பட்ட விளைவு மிக மோசமாகப் பின்னாளில் இருந்தது.
யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்களின் ஆட்டோ ரன் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பல ட்ரோஜன் வைரஸ்கள் உலவி வருகின்றன. AutoRun, Rimecud Hamweq ஆகிய மூன்றும் இந்த தன்மை உடையவையே.
ஆட்டோ ரன் தன்மையின் மூலம் மால்வேர் நிறுவப்படுவதில்லை. இதன் மூலம் டயலாக் பொக்ஸ் ஒன்றைக் காட்டி அதன் மூலம் வைரஸ் புரோகிராமினை நிறுவச் செய்வதே இதன் வழிமுறையாகும்.
தற்போது கணணி, மேக் என்ற பாகுபாடு இன்றி வைரஸ்கள் அனைத்து சிஸ்டங்களிலும் பரவும் வகையிலேயே உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இருப்பினும் அனைத்து வைரஸ் பரவும் வழிகளுக்கும் உடனுடக்குடன் தீர்வுக்கான பேட்ச் கோப்புக்கள் உருவாக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
இவற்றைக் கொண்டு நம் சிஸ்டத்தினை அப்டேட் செய்வது ஒன்றே நாம் நம் கணணியை பாதுகாத்திடும் வழியாகும்.

Autorun.inf வைரசை எதுவித toolம் பாவிக்காமல் அழித்தல்

முதல் பதிவில் Autorun.inf வைரஸ் கணனிக்குள் உடபுகாமல் தடுப்பது என்பதை பார்த்தோம், நான் அப்பதிவில் குறிப்பட்டது போன்று இன்று பார்க்கபோவது Autorun.inf வைரஸ் தாக்கப்பட்ட பென் ட்ரைவ் அல்லது ஹாட் டிஸ்க் கிலிருந்து Autorun.inf வைரஸை நீக்குவது எப்படி என்பதாகும்.
நீங்கள் Autorun.inf வைரஸை அழிக்க (Delete) செய்தாழும் மீண்டும் மீண்டும் அவை வந்துக்கொண்டே இருக்கும். இது நம் வேலைகளை செய்வதற்கு தடையாக இருப்பதால் பல நெருக்கடிகளை நமக்கு தரலாம், எனவே இதை அழிக்க பின்வரும் படிமுறைகளை பின்பற்றுங்கள்.

01. Start சென்று Run கிலிக் செய்யுங்கள்.
02. அங்கு cmd என டைப் ok செய்து பட்டனை அழுத்துங்கள்.



03. பின் வரும் command prompt வின்டோவில் பென்டரைவ் அல்லது ஹாட் டிஸ்க்கின் எழுத்தை டைப் செய்யுங்கள் . example d:


04. பின்னர் attrib என டைப் செய்து Enter பட்டனை அழுத்துங்கள். பென்ட்ரைவில் உள்ள பைல்களை (File) காட்டும்.
05. அதில் autorun.inf காட்டுகின்றதா என பாருங்கள்.


06. பின் attrib -s -h -r autorun.inf என டைப் செய்து Enter பட்டனை அழுத்துங்கள்.
07. -s அதன் முறைமையின் பண்பை (system attribute) நீக்க -h ஒழிந்திருக்கும் பண்பை(hidden attribute) நீக்க -r வாசிப்பு மட்டும் பண்பை (read only attribute) நீக்க.


08. பிறகு command prompt வின்டோவில் del autorun.inf என டைப்செய்து Enter பட்டனை அழுத்துங்கள்.


09. பென்ட்ரைவரை remove செய்து மீண்டும் plug செய்யுங்கள் அல்லது கணனியைrestart செய்யுங்கள்.
அவ்வளவே தான் Autorun.inf வைரஸ் நீக்கப்பட்டுவிட்டது.


பின் கீழுள்ள USB Vaccine மென்பொருளை நிறுவுவீராயின் சிறந்த பலனை தரும், இது கட்டாயம் நிறுவ வேண்டுமென்பதில்லை.
மென்பொருள் தரவிறக்க இங்கே Click செய்யுங்கள்

Nokia செல்போன் உபயோகிப்பவர்கள் தெரிந்திருக்க வேண்டிய 4 முக்கிய குறிப்புகள்


செல்போன் உபயோகிக்காதவர்கள் உலகில் எவருமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. . செல் போன் உபயோகப்படுத்தும் போது  அவசரத்திற்கு உதவக்கூடிய  4 தொழில் நுட்ப துணுக்குகளை உங்களுக்கு தருகிறேன். தேவைப்பட்டால் மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.


112    - Network signal  இல்லாத போது இந்த எண்ணை டயல்  
               செய்தால் வேறொரு நெட்வொர்க் சிக்னலை பயன்படுத்தி
               எமர்ஜென்சி அழைப்புகளை நாம் கொடுக்க முடியும்.            
               செல்போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் இந்த  
               எண்ணுக்கு   அழைப்பு கொடுக்க முடியும் 
      .


*3370௦# - செல்போனில் பேட்டரி சார்ஜ் மிக குறைவாக உள்ள
                     போது இந்த எண்ணை அழுத்தினால் பேட்டரி தனக்குத்    
                     தானே தன்னுடைய சேமிப்பில் இருந்து சார்ஜ் செய்து
                     கொள்ளும். பின் நாம் பேட்டரி சார்ஜ் செய்யும் போது
                     தன் சேமிப்பையும் நிரப்பி கொள்ளும். இந்த வசதி
                    நோக்கியா செல்போனில் மட்டுமே உண்டு.


*#06#  -   இந்த எண்ணை அழுத்தி நம் செல்போனின் IMEI     
                    எண்ணை தெரிந்து கொள்ளலாம். செல்போன்
                    தொலைந்து போனால் காவல் துறையில் புகார்
                    அளிக்கும்போது இந்த எண் மிகவும் அவசியம். போனை
                    எடுத்தவர்கள் எந்த நெட்வொர்க் சிம் கார்டை
                    பயன்படுத்தினாலும் காவல் துறையினர் எளிதில் கண்டு
                    பிடித்து விடுவார்கள். மேலும் நெட்வொர்க் அளிக்கும்
                    நிறுவனத்திற்கு தொலைந்து போன  செல்போனின் IMEI   
                    எண்ணை அளித்தால் நம் செல்போனை பிறர் 
                     பயன்படுத்த முடியாத வகையில் லாக் செய்து
                     விடுவார்கள்.

*#92702689# -   இந்த எண்ணை அழுத்தி நம் செல்போனின் IMEI  
                                    எண்ணையும் ,  செல்போன் தயாரிக்கப்பட்ட
                                    நாளினையும் தெரிந்து கொள்ளலாம்

Nokia மொபைல்போனின் security lock எண்ணை மறந்து விட்டீர்களா?

நம் மொபைல் போனை personal ஆக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக settings ல் உள்ளsecurity என்பதை enable செய்து பயன்படுத்துவோம் .enable செய்வதற்கு password ஐ கொடுக்க வேண்டும் .பெரும்பாலான மொபைல் போன் களில் password ஆனது 12345 default ஆக இருக்கும் .இதனை கொடுத்து enable செய்த பிறகு change security code என்பதை யில் சென்று நம் விருப்பத்திற்கு ஏற்ப password ஐ கொடுத்து lock செய்வோம் .அப்படி lock செய்யும் போது சில சமயங்களில் password ஐ மறந்து விடுகின்றோம்.



அப்படி மறந்து விட்டால் மொபைல் ஐ unlock செய்வதற்கான மென்பொருள் ஐ இங்கே சென்று  DOWNLOAD  செய்து கொள்ளவும் .




மேலும் குறிப்பிட்ட model களை மட்டுமே unlock செய்யும்முடியும் என்பது குறிப்பிட தக்கது .இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிகொள்ளவும்.


கீழே உள்ள படத்தை பாருங்கள்அதில் உங்கள் மாடலை select பண்ணவேண்டும் பின் உங்கள் மொபைல் கான IME நம்பர் ஐ கொடுக்க வேண்டும் 


அதன் பின்பு calculate என்பதை க்ளிக் செய்ததும் உங்களுக்கான unlock நம்பர் ஆனது வலது புறமாக தெரியும் .அதை உங்கள் மொபைல் லில் enter செய்து ok செய்ததும் உங்கள் மொபைல் ஆனது unlock ஆயிவிடும்

forget your mobile security lock code
(குறிப்பு :மொபைல் switch off செய்து sim card ஐ எடுத்துவிட்டு பின்பு  முயற்சி செய்யவும்)

நம் கணணியில் எதாவது குறையிருப்பின் அறிந்து கொள்ள ?


கணணியில் இருக்கும் வன்பொருள்களை பொறுத்தே கணணியினுடைய வேகமும் அமையும்.
ஒரு சிலர் தனது கணணி ஆமை வேகத்தில் உள்ளது என்று கூறுவார்கள். ஒரு சிலரோ எனது கணணி என்னை விட வேகமாக உள்ளது என்று கூறுவார்கள்.

இதற்கு காரணம் கணணியில் இருக்கும் வன்பொருள்கள் ஆகும். மேலும் அதற்கேற்றார் போல் மென்பொருளும் சரியாக அமைய வேண்டும். சரி கணணி ஆமையோ, முயலோ எதுவாக இருந்தாலும் இதை எப்படி நாம் சரியாக கணக்கிடுவது என்றால் இதற்கும் மென்பொருள்கள் உண்டு. அதில் ஒன்றுதான் NovaBench.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Start Benchmark Tests என்னும் பொத்தானை அழுத்தவும்.
சிறிது நேரம் உங்கள் கணணினுடைய RAM மற்றும் வன்பொருள்கள் சோதிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். மேலும் டிஸ்பிளே எந்த அளவு உள்ளது என துல்லியமாக பார்க்க முடியும்.
அதற்கான காட்சி படத்தையும் காண முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மூலமாக நம் கணணியில் எதாவது குறையிருப்பின் அதையும் அறிந்து கொள்ள முடியும்.

பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்..

இணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம்.நிங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத ஆனால்  அறிந்து இருக்கவேண்டிய ஒன்பது  தளங்களை கீழே பார்ப்போம்.


1 . http://www.printwhatyoulike.com 


நீங்கள் சில வலைப்பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான விஷயங்கள்  மட்டு மன்றி உங்களுக்கு தேவையற்ற அப்பக்கத்தில் உள்ள விளம்பரங்கள், வெற்று இடம் என்பனவும் பிரிண்ட் ஆகும்.ஆனால் சில செக்கன்களில்(SECTION) உங்களுக்கு வேண்டியதை மட்டும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொள்ள ஏற்றவாறு அந்த பக்கத்தை மாற்றி உங்களுக்கு இந்த தளம் உதவி செய்யும்.


2 . http://www.alertful.com 


உங்களுக்கு வேண்டிய ஒன்றை நினைவூட்ட வேண்டுமா?உதாரணமாக ஒருவரின் பிறந்த நாள்.நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இந்த தளத்துக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய விபரத்தையும் வழங்கினீர்கள் என்றால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எப்போது உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டுமோ அந்த நேரம் நினைவூட்டலை வழங்கும்


3 . http://www.pdfunlock.com


சில PDF files களை நீங்கள் பார்த்தால் சில கட்டுப்பாடுகள் கொண்டதாக இருக்கும்.உதாரணமாக கொப்பி, பிரிண்ட், எடிட் பண்ண முடியாதிருக்கும் .கவலையை விடுங்கள் இந்த தளத்துக்கு சென்று குறித்த PDF file ஐ கொடுத்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்து உங்களுக்கு விரும் பியவாறு அதாவது உங்கள் கோப்பு போன்று எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.


4 . http://www.daileez.com 


இது ஒரு நினைவுக்குறிப்பு போன்றது.அதாவது இன்றைய நாள் முடிவில் நீங்கள் செய்ததை டயரி இல் எழுதுவீர்கள். அதை ஒரு ஒரு சின்னமாக அதாவது Icon ஆக காட்டினால் எப்படி இருக்கும். இத்தளம் மூலம் அதை நீங்கள் செய்து கொள்ள முடியும்.உங்கள் செயலை நீங்கள் எழுத நினைப் பதை காட்டக்கூடிய அந்த Icon இக்கு விரும்பினால் ஒரு சிறிய விளக் கத்தையும் சேர்த்துக்கொள்ள முடியும்


5 . http://isitraining.in 


இந்த கணம் ஒரு குறிப்பிட்ட நகரம்(பெரிய) ஒன்றில் மழை பெய்கிறதா என நீங்கள் கண்டு பிடிக்க வேண்டுமா.இந்த தளத்துக்கு சென்று அந்நகரத்தின் பெயரை வழங்கினால் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல நீங்கள் வழங்கிய நகரத்தின் இக்கண weather conditions களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த தளம் உலக வானிலை அறிக்கையே உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும்.


6 . http://www.typingweb.com


இது ஒரு ஆன்லைன் தட்டச்சு பயிற்சி வழங்கும் இலவச தளமாகும். பலவகை திறன் மட்டங்களை கொண்டவர்களுக்கும் வெவ்வேறு மட்டங் களில் பயற்சி வழங்கக்கூடிய தளமாக இது அமைந்தது உள்ளது.இன்றைய யுகத்தில் விரைவான டைப்பிங் திறமையும் பல வேலைவாய்ப்புகளை தீர்மானிக்கும் ஒரு தகுதியாக இருப்பதால் இத்தளம் நிச்சயம் அப்படிபட்ட வர்களுக்கு ஒரு நல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.


7 . http://www.gedoo.com 


இந்த தளம் ஒரு தேடல் தளமாக அதாவது கூகுல் போன்று உங்களுக்கு விரும்பிய ஒன்றை பற்றி தேடு தளமாக உள்ளது.நீங்கள் ஒன்றை பற்றி தேடினால் அது தானாக கூகுல் இல்ருந்து தேடி தரும். ஆனால் நிங்கள் 4300 தேடு தளங்களில் ஒன்றை தெரிவு செய்து அதிலிருந்து தேடி தருமாறு செய்யலாம்.இந்த தளம் 4300 தேடு தளங்களில் உங்களுக்கு பிடித்ததில் தேடி தரும். அதவாது புரோக்கர் போல.ஹிஹிஹி


8 . http://www.cvmaker.in 

வேலை ஒன்றுக்கு அப்ளை பண்ணும் பொது தரமான Cv ஒன்றை ரெடி பண்ணுவது மிக முக்கியம்.எல்லா தகவல்கள் தகமைகள் இருந்தும் அதை எப்படி வடிவமைப்பது என மூளையை கசக்கி பிழிந்து கொண்டு இருப் பீர்கள்.இக்கவலை போக்க இத்தளம் உதவி செய்கிறது.சில நிமிடங்களில் ஒரு அழகான professional ஆன Cv ஐ ரெடி பண்ணி கையில் தரும்.


9 . http://www.zoom.it 


இணையதளங்களில் உள்ள சில படங்கள் குறிப்பாக google search படங்களின் URL இனை இந்த தளத்துக்கு வழங்கினால் நீங்கள் வழங்கிய படத்தை மிக மிக தரமான ஒரு படமாக மாற்றி தரும்.அது மட்டுமல்ல மாற்றப்பட்ட படத்துக்குரிய ஒரு url முகவரியையும் தரும் . நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே ஒரு சாதாரணமான படத்தை மாறுப்பட்ட ஒரு அனுபவத்தை தரும் படமாக மாற்றும்.

How to increase Internet Speed?

Hi friends if you are internet very slow,can u increase internet speed please follow the simple step

follow the step:-
go to desktop->My computer-(right click on)->properties->then go HARDWARE tab->Device manager-> now u see a window of Device manager
then go to Ports->Communication Port(double click on it and Open).
after open u can see a Communication Port properties.
go the Port Setting:----
and now increase ur "Bits per second" to 128000.
and "Flow control" change 2 Hardware.
apply and see the result
 
by

அணைத்து Browserகளிலும் உள்ள Historyயை ஒரே கிளிக்கில் அழிக்க

வணக்கம் நண்பர்களே,இந்த ஒரு மென்பொருள் உங்களது கணினியின் அணைத்து ப்ரௌசெர்களிலும் உள்ள browsing historyயை அழித்து இனைய வேகத்தை அதிகபடுத்துகிறது.இது Mozilla Firefox, Microsoft Internet Explorer, Google Chrome என அணைத்து ப்ரௌசெர் களிலும் சிறப்பாக செயல்படுகிறது,



                                           


இது மோஸில்லா, எக்ஸ்புளோரர், குரோம் என எல்லா ப்ரௌசர்களிலும் வேலை செய்கிறது. இந்த புரோகிராமை ரன் செய்யமுன் எல்ல ப்ரௌசர்களையும் மூடவேண்டும்.

இது அல்பா வேர்ஷனில் இருக்கிறது.



undefined
IEclean, Privacy Cleaner , Internet Privacy Cleanerபோன்ற புறோகிறாம்களையும் நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.


undefined


Downl:
                                     http://sourceforge.net/projects/browser-clear/

Browser Cookies என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன ?

Browser Cookies




Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாமல் உள்ள இந்த வார்த்தை நாம் பயன்படுத்தும் ப்ரௌசெர்களில் முக்கிய இடம் வகிக்கிறது. நம் பெர்சனல் கணினிகளில் Cookies இல்லாமல் நம்மால் வேலையே செய்ய முடியாது என்ற அளவுக்கு அது நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதை பற்றிய விரிவான அலசல் தான் இந்தப் பதிவு. 

Cookies என்றால் என்ன? 

பொதுவாக Cookies என்பது குறிப்பிட்ட தளத்தில் இருந்து நீங்கள் பயன்படுத்தும் ப்ரௌசெர்க்கு ஒரு சிறிய டெக்ஸ்ட் பைலை அனுப்பும். அது தான் Cookie.  

என்ன இருக்கும் அதில்? 




தினமும் இணையத்தில் இயங்கும் நாம் நிறைய தளங்களை பார்ப்போம், படிப்போம். அதில் நம் தகவல்களை தருவோம்.  சில செட்டிங்க்ஸ் மாற்றுவோம், குறிப்பாக மொழி, ஒரு வீடியோ எப்படி தெரிய வேண்டும்? என்பது போன்றவை. ஒரு தளத்தில் நமக்கு விருப்பமான ஒன்றை தேடி இருப்போம், அடுத்த முறை மீண்டும் அந்த தளத்துக்கு செல்லும் போது நம்முடைய முந்தைய வருகையை நினைவில் வைத்து அது தொடர்பான செய்திகளை அடுத்த முறை நமக்கு காட்டும். இதன் மூலம் நம் வேலை எளிதாகும்.

எப்படி செயல்படுகிறது? 

இதற்கு உதாரணம் Youtube. தொடர்ந்து நீங்கள் குறிப்பிட்ட வகையான வீடியோவை பார்த்தால் அது தொடர்பான வீடியோக்களை தான் அடுத்த முறை நீங்கள் செல்லும் போதும் காட்டும். 

ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் போதும் இதே நினைவூட்டல்களை நீங்கள் பார்த்திருக்கலாம். 

எந்த வெப்சைட்க்கு நீங்கள் சென்றாலும் அதில் வைரஸ் போன்ற உங்கள் கணினிக்கு பாதிப்பு தரும் எந்த ஒரு விசயத்தையும் இது சேமிக்காது, நினைவூட்டாது. இது தான் இதன் மிகப்பெரிய நன்மை.

அத்தோடு இணையத்தில் காட்டப்படும் விளம்பரங்கள் கூட இதன் அடிப்படையில் தான் இயங்குகின்றன. முக்கியமாக Google Adsense. நீங்கள் இணையத்தில் எதை தேடுகிறீர்கள் என்பதை பொறுத்தே இந்த விளம்பரங்கள் அமையும். இது ஒரு வகையில் உங்களுக்கு நன்மைதான். 

இப்போது இதன் அவசியம் தெரிந்து இருக்கும் உங்களுக்கு. இதை Allow செய்யாமல் விட்டால் ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிய கணினியில் இணையத்தை பயன்படுத்துவது போல இருக்கும். இதனால் முக்கியமாக உங்கள் நேரம் விரயம் ஆகும். 

பல வகையான Cookies கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று Third-party cookie. இதை மிக எளிதாக சொல்லி விடுகிறேன். நீங்கள் இப்போது கற்போம் தளத்தை படிக்கிறீர்கள் பதிவின் மேலே ஒரு விளம்பரம் தெரிகிறது அது ad.123ad.com என்று சேமிக்கப்படும். அடுத்து பிளாக்கர் நண்பன் தளத்துக்கு செல்லும் போது ஒரு விளம்பரம் வரலாம். இப்போது அதுவும்  ad.123ad.com என்று சேமிக்கப்படும். இது தொடர் சங்கிலி போல தொடரும். இதை தான் நாம் Third-party cookie என்று நாம் சொல்கிறோம். 

மற்ற சில Cookies 

  • Session cookie - குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும். 
  • Persistent cookie - பல நாட்களுக்கு. கிட்டத்தட்ட எப்போதும். 
  • Secure cookie - பாதுகாப்பானது என்று சொல்லலாம்.[https என்று உள்ள URL களில் இது Save ஆகும்]  
  • HttpOnly cookie - இப்போதைய ப்ரௌசெர்களில் இருப்பது.
  • Supercookie -  Suffix டொமைன்கள் உடைய Cookie உதாரணம் - .co.uk, co.in
  • Zombie cookie - விடாக்கண்டன். Delete செய்தாலும் அழியாது. ஆனால் இதனால் தீமை எதுவும் இல்லை. 
இதன் நன்மைகள் மேலே சொன்னதிலேயே உங்களுக்கு தெரிந்து இருக்கும். இதனால் சில தீமைகளும் உள்ளன. 

  • குறிப்பிட்ட தளங்களுக்குள் நுழைய நீங்கள் ஜிமெயில், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தும் போது செக்யூரிட்டி ரிஸ்க் அதிகம். 
  • சொந்தக் கணினி அல்லாத இடங்களில் பயன்படுத்தும் போது Cookies save ஆனால், உங்கள் தரவுகள் சேமிக்கப்படுகிறது என்று அர்த்தம். இதிலும்  செக்யூரிட்டி ரிஸ்க் அதிகம். 
  • நீங்கள் அல்லாது வேறு யாரேனும் உங்கள் கணினியை பயன்படுத்தினால் உங்கள் தரவுகளை அவரும் அறிவார். 
  • அவசியமற்ற தளங்களில் Cookies Save ஆனால் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். 
இது போன்ற தீமைகளை நீங்கள் தவிர்க்கும் வாய்ப்பு உங்கள் கைகளில் தான் உள்ளது. Cookies என்பது உங்கள் ப்ரௌசெரில் நீங்கள் தரும் தகவல்கள் தான். நீங்கள் கொடுக்காமல் குறிப்பிட்ட தளத்தால் எதையும் செய்ய இயலாது. எனவே இவற்றில் பாதுகாப்பாக இருப்பது நம் கைகளில் தான் உள்ளது. 

Cookies களை கையாளுவது எப்படி? 

நாம் பயன்படுத்தும் ப்ரௌசெர்களில் தான் Cookies உள்ளது என்றேன். அதை கட்டுப்படுத்தும், கையாளும் செயல்கள் நமக்கு எட்டும்படி தான் உள்ளன.  கையாளுவது என்றால் குறிப்பிட்ட தளத்தின் Cookies Save ஆவதை தடுக்கலாம், Third Party Cookies களை தடுக்கலாம். இதை செய்ய Opt-out என்ற ஒரு முறையும் உள்ளது. 

Chrome - Settings >> Show advanced settings... >> Content Settings >> Cookies 

Firefox - Tools >> Options >> Privacy >> Remove Individual Cookies 

Internet Explorer - Tools >> Internet Option >> Privacy 

Opera - Settings > Preferences > Advanced > Cookies

இவைகளில் சென்று Cookies-களை நீக்குவது, சேர்ப்பது, மாற்றம் செய்வது போன்றவற்றை செய்யலாம். இது குறித்து இன்னொரு பதிவில் விரிவாக காண்போம்.

Cookies நம் வேலையை எப்படி எளிதாக்குகிறது என வீடியோ ஆக காண :


கூகிள் குரோமில் ஏற்படும் SHOCKWAVE FLASH பிரச்சனையை சரிசெய்வது எப்படி?

கூகிள் குரோமில் நாம் சில இணையதளங்களை பார்வை இடும் பொது சில நேரங்களில் THE FOLLOWING PLUGIN  HAS CRASHED  SHOCHWAVE FLASH என்று ஒரு ERROR செய்தி வரும்.இது அதிகமாக VOICE CHATING இல் ஈடுபடும் பொது ஏற்படும். இந்த பிரச்சனனையை எப்படி சரி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



                         undefined

வழிமுறைகள்


  1. கூகுள் குரோமில் NEW TAB திறந்து கொள்ளவும்
  2. அட்ரஸ் பாரில் about:plugins என்று TYPE செய்யவும் 
  3. அடுத்து ENTER பட்டனை அழுத்தவும்  
  4. அங்கு என்று ஒரு FLASH என்று ஒரு பகுதி இருப்பதை காணலாம்
  5. அதன் வலது கோடியில் (+)உள்ள குறியை அழுத்தவும் 
  6. அங்கு கணினியில் FLASH எந்த இடத்தில் SAVE ஆகி உள்ளது என்பதை பார்த்து கொள்ளவும்
  7. அடுத்து கணினியின் RUN ஓபன் செய்து அதில் C:\Windows\system32\Macromed\Flash\  இதை PASTE இதை செய்யவும் 
  8. கிடைக்கும் விண்டோவில் அனைத்தையும் DELETE செய்யவும் 
  9. அடுத்து இந்த லிங்கில்  http://www.filehippo.com/download_flashplayer_firefox/  உள்ள மென்பொருளை DOWNLOAD செய்து உங்கள் கணினியில் நிறுவி  கொள்ளவும் 
  10. கூகுள் குரோமை மூடி மறுமுறை திறக்கவும் அவ்வளவுதான்.

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

நம்மிடம் உள்ள புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்ற ?

சில நேரங்களில் நம்மிடம் உள்ள புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றும் தேவை ஏற்படலாம்.

அந்த சமயங்களில் நம்மிடம் உள்ள புகைப்படங்களை எளிதாக பிடிஎப் கோப்புகளாக மாற்றி மற்றவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
236 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதனை நிறுவியதும் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
இதில் உள்ள Add Files உங்கள் புகைப்படங்களை தேர்வு செய்யவும். அடுத்து மேலே உள்ள Unit Measure --ல் உங்கள் புகைப்படத்திற்கான அலகை தேர்வு செய்யவும்.இதனை நீங்கள் எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை Output Path -ல் குறிப்பிடவும்.
புகைப்படங்கள் உங்களுக்கு தனிதனி பிடிஎப் கோப்புகளாக வேண்டுமா அல்லது ஓரே பிடிஎப் கோப்பாக வேண்டுமா என தேர்வு செய்யுங்கள்.
மார்ஜின் பார்டர் முதல்கொண்டு பேப்பர் அளவு வரை நாம் அமைத்துக்கொள்ளலாம். மேலும் பிடிஎப் கோப்பில் நமது புகைப்படம் நடுவில் வரவேண்டுமா அல்லது ஓரத்தில் வரவேண்டுமா என்பதனையும் தேர்வு செய்து இறுதியில் Save PDF கிளிக் செய்யவும். நொடியில் உங்கள் புகைப்படம் ரெடியாகி விடும்.

சுமத்ரா PDF போர்ட்டபிள் மென்பொருள்



சுமத்ரா PDF ஒரு கையடக்க போர்ட்டபிள் பயன்பாட்டு PDF வியூவராக உள்ளது, எனவே நீங்கள் செல்லும் இடமெல்லாம் PDF களை பார்க்க முடியும். சுமத்ரா PDF விண்டோஸ் க்கான ஸ்லிம், கட்டற்ற, திறந்த மூல PDF வியூவராக உள்ளது. சுமத்ரா ஒரு சிறிய வடிவமைப்பை கொண்டிருக்கிறது. எளிமையான அம்சங்களுக்கு அதிக முன்னுரிமை கொண்டிருக்கிறது. இது சிறியதாக இருக்கிறது மற்றும் மிக வேகமாக செயல் படுகிறது.



சிறப்பம்சம்

  • CHM ஆவணங்களுக்கு ஆதரவு
  • விண்டோஸ் 7 தொடு திரைக்கு ஆதரவளிக்கிறது
  • ஒரு வெளிப்புற மீடியா பிளேயர் திறந்த இணைக்கப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகள்
  • PDF வெளிப்படைத்தன்மை குழுக்களுக்கு மேம்பட்ட ஆதரவளிக்கிறது
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7

திறக்காமல் இருக்கும் பைல்களின் பிரச்சினையை சரி செய்து திறப்பதற்கு ?

பைல்களின் அளவை குறைக்கவும், பலதரப்பட்ட பைல்களை ஒன்றாக சேர்த்து அனுப்பவும் Zip என்ற Compression method-ஐ தான் நாம் பயன்படுத்துகிறோம்.

ஆனால் பல நேரங்களில் இப்படி Compress செய்யப்பட்ட பைல்கள் பிழை செய்தி கூறி திறக்காமல் இருக்கும். இப்படி திறக்காமல் இருக்கும் பைல்களின் பிரச்சினையை சரி செய்து திறப்பதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது.
சாதாரணமாக நேற்று வரை சரியாக திறக்கும் Zip கோப்புகள் கூட சில நேரங்களில் ஏதோ பிழை என்று செய்தி காட்டி திறக்காமல் இருக்கும், இப்படி வரும் பிரச்சினைகளை சரி செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Download now என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தரவிறக்கி நம் கணணியில் நிறுவிக்கொள்ளவும், அடுத்து பிழை செய்தி காட்டி திறக்காமல் இருக்கும் zip பைல்களை திறந்து பிரச்சினைகளை எளிதாக சரி செய்யலாம்.
இந்த மென்பொருள் துணையுடன் பாதிக்கப்பட்ட Zip, SFX பைல்களை எளிதாக சரி செய்யலாம்.

1000 வகையான இலவச antivirus மென்பொருட்கள் ஒரே இடத்தில் !!!



scan_with_virus_software_shopsஉங்கள் கணினிப் பாதுகாப்பிற்கான தேவையான மென்பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டிக் கிடக்கிறது..!!

உண்மைதாங்க. நமது software shops வலைப்பூவில் கிட்டதட்ட அனைத்து வகை இலவச மென்பொருட்களைப்பற்றியும் எழுதி வருகிறோம்..

இன்னும் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் வந்துக்கொண்டே இருக்கும்.


இதில் இருக்கும் ஒவ்வொரு anti virus software-ம் பயனுள்ளதாக இருக்கிறது.

anti virus software  மட்டுமல்ல.. கணினிக்குத் தேவையான அனைத்து மென்பொருட்களும் இங்கு கிடைக்கிறது.

எனவேதான் இத்தளத்தைப் பற்றிய உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஒவ்வொரு சாப்ட்வேரைப் பற்றியும், தலைப்பின் கீழே எளிய முறையில் விளக்கியிருக்கிறார்கள்.

இப்போது பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைத்தாலும், தரத்திற்கேற்றவாறு, தரவரிசைப்படுத்தி, வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இம் மென்பொருட்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.  .. தளத்திற்கு சென்று பாருங்கள் உங்களுக்குத் தேவாயனதை (free software) அள்ளிக்கொள்ளுங்கள்... அதுவும் இலவசமாக..!!

தளத்திற்கான சுட்டி. http://www.scanwith.com/

திங்கள், 31 மார்ச், 2014

ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கணினியில் பதிவிறக்கம் செய்ய


கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அப்ளிகேஷன்களை நேரடியாக கணினியில் பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என்று ஏற்கனவே எழுதியிருந்தேன் . அது ஒரு மென்பொருள் உதவியுடன் பதிவிறம் செய்வது ஆகும். ஆனால் இந்த முறைமையானது ஆன்லைன் உதவியுடன் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என பார்ப்போம். ஆன்ட்ராய்ட் பற்றியோ கூகுள் பிளே ஸ்டோர் பற்றியோ பெரிய முன்னுரை தேவையில்லை என்று நினைக்கிறேன்.
ஆன்ட்ராய்ட் என்பது கூகுள் நிறுவனத்தின் மொபைல்/டேப் களுக்கான இயங்குதளம் ஆகும். இந்த இயங்குதளத்தில் இயங்கும் அப்ளிகேஷன்களுக்கென ஒரு சந்தையினை உருவாக்கியது அதற்கு பெயர் தான் பிளேஸ்டோர் ஆகும். இச்சந்தையில் தற்போது கூகுள் நிறுவனத்தின் சோதனைக்குட்பட்ட மென்பொருள்கள் மட்டுமே உள்ளன.
கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களை நாம் நேரிடையாக கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆன்ட்ராய்ட் இயங்குதளம் நிறுவப்பட்ட மொபைல் சாதனம் மற்றும் டேப்  லிருந்து மட்டுமே ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.
கூகுள்பிளேஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களை கணினியில் பதிவிறக்கம் செய்ய ஒரு தளம்  உதவி செய்கிறது.
Skip Ad தளத்திற்கான சுட்டி

எந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டுமோ அதற்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனின் URL முகவரி கண்டிப்பாக வேண்டும். URL முகவரியினை பெற பிளேஸ்டோர் சென்று குறிப்பிட்ட அப்ளிகேஷனின் முகவரியினை பெற்றுவிட முடியும்.


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, குறிப்பிட்ட அப்ளிகேஷனின் முகவரியை (url) குறிப்பிட்டு பின் Generate Download Link என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி கிடைக்கும் அதை பயன்படுத்தி கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


கணினியில் தரவிறக்கம் செய்யும் ஆன்ட்ராய்ட் மென்பொருள்களை வழக்கம்போல் ஆன்ட்ராய்ட் சாதனங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
                             

Popular Posts

Facebook

Blog Archive