பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 9 ஆகஸ்ட், 2014

iOS 8 பற்றிய சில தகவல்களை இப்போது பார்ப்போம்...


The New ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்ஸ்  and with fun's photo.
iOS 8 வெளியீடானது, ஆப்பிள் Mobile OS பிரிவின் ஒரு பெரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது...

இந்த பதிப்பு iOS 7 இன் Holo Design ஐ பின்பற்றி வருகிறது...

இந்தப் பதிப்பில் பல பதிய வசதிகளும்,"Innovation"களும்!! உள்ளதாக ஆப்பிள் நிருவன CEO வான Tim Cook(டிம் குக்) தெரிவித்துள்ளார்..

>>> ஆண்ட்ராய்டின் கற்கால அம்சமான Widgets வசதி வரலாற்றில் முதன்முறையாக iOS 8 இல் அறிமுகம் செய்ய்படுகிறது....
App இன் Icon ஐ அழுத்திப் பிடிப்பதின் வழியாக அதன் Widgets ஐ இயக்கலாம்...

>>> இந்த iOS 8 ஆனது, iPhone 4 இற்கு பிறகு வந்த iPhoneகளிலும்(4s)Ipod(5th Gen),iPad 2,(Mini,Mini With Retina Screen,Air)களில் இயங்கும்...

>>> Keyboard
iOS8 இன் Keyboard ஆனது,இருப்பதிலேயே Smartest Keyboard என அந்நிருவனத்தால் கூறப்படுகிறது...
அதில் புதிதாக Quick Type என்ற வசதி தரப்படுகிறது...
மேலும் 3rd Party Keyboard Softwareகள் இப்போது Support செய்யப்படுகிறது..
Swiftkey,Sellinam etc.,

இந்த வசதி ஆண்ட்ராய்டில் ஆதி காலத்திலிருந்தே இருப்பது குறிப்பிடத்கக்கது....

>>> iOS 8 ஆனது அதிக OpenSource தன்மையை பின்பற்ற தொடங்கியுள்ளது...
இதன் முலம் அதிக 3rd Party Appsகள் சப்போர்ட் செய்யப்படும்
SDK(Software Develop Kit) இல் பல பதிய வசதிகள் தரப்பட்டுள்ளது...

இதன் மூலம் வேறு Photo Editing Tools
பயன்படுத்தும் வசதி,புதிய Sharing Options இற்கு வழி வகுக்கும்...

>>> icloud Drive, DropBox இற்கு போட்டியாக அதிக வசதிகளை அளிக்கிறது....

>>> iMessage(Messaging) Whatsapp இற்கு போட்டியாக அதிக வசதிகளைத் தருகிறது...
Voice Messaging,Video Message போன்ற வசதிகளை அளிக்கிறது....

>>> HealthKit,Homekit போன்ற நவீன,உபயோக வசதிகள் தரப்பட்டுள்ளது...

>>> பிரபல வசதியான Siri(Voice Commands)அதிக ேமம்பாட்டுடன் தரப்படுகிறது....
22 மொழிகள் Support செய்யப்படுகிறது..
மேலும் Siri ஐ பயன்படுத்த இயலாத வேளையில் SpotLight வசதி பயன்படுகிறது....

>>> Apple iPhone 5S இல் தரப்பட்ட Finger Print(கை ரேகை) Scanner ,அனைத்து Apps இற்கும் Touch ID scan Security வசதியை அளிக்கிறது....

>>> புது வித Notifications Display வசதி பயன்படுத்த அருமையாக உள்ளது...
(Interactive Notifications)

>>> Group Voice மற்றும் Group Video Messages வசதி தரப்பட்டுள்ளது...

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Split Screen வசதி தரப்படவில்லை.... iOS 9 இல் அது சேர்க்கப்படலாம்...

அறிவிக்கப்பட்டிருக்கும் iOS 8 நிச்சயம் ஆண்ட்ராய்டிற்கு கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....

உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்.....


The New ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்ஸ்  and with fun's photo.

AndroidL இன் புதிய அம்சங்கள்.....


புதிய OS பதிப்பு வெளியாகும் சமயம் நாம் பல வசதிகளை பார்க்கிறோம்... ஆனால் பாட்டரி பயன்பாட்டை நாம் அலசுவதில்லை....

அதனால்....

இன்று AndroidL இன் Battery பயன்பாடு.... பற்றி பார்போம்....
.
.
தற்போது வெளியாகியுள்ள AndroidL ஆனது.... மின் சக்தியை மிகவும் திறம்பட கையளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.....
.
.
இந்த புதிய பதிப்பில் Battery திறனை மேம்படுத்த Project Volta என்ற முயற்சி கையாளப்பட்டுள்ளது.....
.
.
OS உடனே ஒரு இன்-பில்ட்(In-Built) Battery Saver தரப்படுகிறது....
.
.
இது Battery விழுக்காடு மிகக் குறைவாக இருக்கும் வேளையில் தானாக அனைத்து Battery உறிஞ்சும் Apps,Processகளையும்
நிறுத்திவிடும்...
.
.
இதன் விளைவாக அதிக நேரம் தாக்குப்பிடிக்கும் வகையில் நமது போன் இருக்கும்....
.
.
இனி மூன்றாம் நபர் Apps கள் தேவைப்படாது....(3rd Party Apps)
.
.
மேலும் Sony இன் Stamina Mode, Htc இன் Extreme Mode, மற்றும் Samsung இன் Ultra Mode போன்றவை இதே வகையில் இயங்குவது இங்கு குறிப்பிடத்தக்கது.....

நீங்க என்ன நினைக்கிறீங்க மக்களே....

இந்த Project Volta Workout ஆகுமா, ஆகாதா??

நன்றி
 
 #AndroidL

#Sriram
#NSAWF

The New ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்ஸ்  and with fun's photo.
The New ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்ஸ்  and with fun's photo.

எச்சரிக்கை - " பேஸ்புக் கலரை மாற்றுங்கள் " என்பதை கிளிக் செய்யாதீர்கள் !! அது உங்கள் பாஸ்வேர்டை ஹேக் செய்திடும் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் , பேஸ்புக் கலரை மாற்றுங்கள் என்று இரு லிங் அனைத்து கமெண்ட்டிலும் பரவலாக காணப்பட்டது . இது பயனாளர்களின் பாஸ்வேர்டை திருட பயன்படுத்தப் படும் வைரஸ் என்று பிரபல இணையதளம் அறிவித்துள்ளது. இந்த் வைரஸ் இதுவரை 10,000 த்துக்கும் மேற்பட்ட பயனாளர்களை தாக்கி உள்ளது .

இந்த வைரஸ் முதலில் பேஸ்புக் தளத்தால் நீக்கப்பட்டது . ஆனால் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது . நீங்கள் கணினியில் இந்த லிங்கை அழுத்தினால் , கலரை மாற்ற வீடியோ ஒன்று ஓடத் தொடங்கும் . அந்த வீடியோ பார்க்கும் நேரத்தில் உங்கள் பாஸ்வேர்ட் செய்யப்பட்டு விடும் . உங்களின் நண்பர்கள் பட்டியலும் அவர்களுக்கு கிடைத்து விடும் . நீங்கள் வீடியோவை பார்க்காமல் சென்றால் உங்களை ஒரு அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோட் செய்திட வலியுறுத்தும் . அதன் மூலம் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும் .

நீங்கள் அண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தினால் , " உங்கள் மொபைலில் வைரஸ் இருக்கிறது , அதை கிளின் செய்ய இந்த அப்ளிகேஷன் டவுன்லோட் செய்யுங்கள் " என்று வந்தால் அதுவும் வைரஸ் தான் .

தப்பிக்க என்ன வழி ??

இது போன்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து இருந்தால் உடனடியாக அன்-இன்ஸ்டால் செய்து விடுங்கள் . மேலும் உங்கள் பேஸ்புக் பாஸ்வேர்டை மாற்றி விடுங்கள் .
Tnx too  satrumun.net

இன்று ஃபேஸ்புக்கில் கவனித்தீர்களா? உங்கள் டைம் லைன் வீடியோ தானாக ப்ளே ஆகிறதா? அதை நிறுத்தும் வழிகள்..

ஃபேஸ்புக் டைம் லைனில் உள்ள வீடியோக்கள் நீங்கள் செட்டிங்கஸ் எதுவும் மாற்றாமல் இருந்தால் தானாக ப்ளே ஆகாது, ஆனால் தனது கடந்த ஏப்ரல் மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வீடியோக்களை தானாக ப்ளே ஆக வைப்போம் என்று கூறியிருந்தது, இது ஃபேஸ்புக் தனது வீடியோ விளம்பரங்களில் சம்பாதிக்க‌ இவ்வாறு நடைமுறை படுத்துகிறது என்று பலரும் கருதினர்.

இந்நிலையில் இன்று காலையில் இருந்து பலரது டைம்லைன்களில் ஃபேஸ்புக் வீடியோ தானாக ப்ளே ஆகிறது, இது பலருக்கும் தொந்தரவாக உள்ளது, இப்படி தானாக வீடியோக்கள் ப்ளே ஆவதை நிறுத்தும் வழிகள் கீழே காண்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஃபேஸ்புக் வெப்பில் தனியாகவும், ஃபேஸ்புக் மொபைல் அப்ளிகேஷனில் தனியாகவும் இந்த செட்டிங்கு களை செய்ய வேண்டும், வெப்பில் மட்டும் மாற்றிவிட்டு மொபைலில் மாற்றவில்லை என்றால் வீடியோ மொபைலில் ஆட்டோ ப்ளே ஆகும்

மொபைல் டேட்டா மூலம் இண்டெர்நெட் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் பேக் ஆட்டோ ப்ளே வீடியோவால் தீர்ந்துவிடும், எனவே வை-ஃபை இருந்தால் மட்டுமே வீடியோ ப்ளே ஆகுமாறு ஆப்பிள் ஐஓஎஸ் செட்டிங்க்ஸை மாற்றும் வழிகள் கீழே தரப்பட்டுள்ளன‌

இதை ஷேர் செய்து அனைவருக்கும் தெரிவியுங்கள்





ஆப்பிள் ஐஓஎஸ் களில் மாற்ற‌

அதிலும் மொபைல் டேட்டா மூலம் இண்டெர்நெட் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் பேக் ஆட்டோ ப்ளே வீடியோவால் தீர்ந்துவிடும், எனவே வை-ஃபை இருந்தால் மட்டுமே வீடியோ ப்ளே ஆகுமாறு ஆப்பிள் ஐஓஎஸ் செட்டிங்க்ஸை மாற்றும் வழிகள் கீழே தரப்பட்டுள்ளன‌



Tnx too satrumun.net

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

[New Accounts] Vodafone Prepaid Mobile Recharge worth Rs. 500 for Rs. 300 - Ebay

Ebay sells Vodafone Prepaid Mobile Recharge at discounted price. Actual price : Rs. 500. Discounted Price : Rs. 300.

Its not valid for old accounts. Valid on new accounts first purchase. Create a new account @ ebay, and use promotion code WELCOME749 to get discount.
Buy : Vodafone Prepaid Mobile Recharge ----- Ebay Bank Coupons ----- Promotion code : WELCOME749
 
 
Tanx  to =====>>      www.thuttu.com 

நேரத்தை மிச்சப்படுத்த பயனுள்ள 10 குறிப்புகள்:

முதலில்  அன்றாடம் பயன்படுத்தும் கணினியிலிருந்தே ஆரம்பிப்போம். கடந்த முறை விரைவாக பிரௌசிங் செய்வது எப்படி என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அதில் விடுபட்ட விஷயங்களை ஓரிண்டை எடுத்துக்கொள்வோம். 
1. ஒரு வலைப்பக்கத்தை படித்துக்கொண்டிருக்கிறீர்கள் அல்லது பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த பக்கத்தில் மேலும் கீழும் செல்ல தயவு செய்து Mouse -ஐ பயன்படுத்தாதீர்கள்.. Space Bar-ஐப் பயன்படுத்துங்கள். 
2. ஸ்பேஸ்பாரைத் தட்டும்பொழுது அந்த பக்கத்தின் கீழுள்ள பகுதியைக் காட்டும். 
3. அதே பக்கத்தில் மேலுள்ள பகுதியைப் பார்வையிட வேண்டுமெனில் Shift+SpaceBar தட்டிப்பாருங்கள்.
quick brwosing tips
4. இதனால் மௌஸ், ஸ்குவாரல் வீல் பயன்படுத்துவதால் ஏற்படும் நேரய விரயம் தவிர்க்க முடியும். 
5. இணையப் பக்கத்தில் உள்ள படிவத்தை நிரப்ப “Tab” விசையைப் பயன்படுத்துங்கள்.. 
6. படிவத்தில் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டதிற்கு தாவ டேப் விசை எளிதாக இருக்கும். 
7. பாப்அப் பாக்சில் இருக்கும் பொதுவான தகவல்களை நிரப்ப எழுத்துக்களை தட்ட பழகிக்கொள்ளுங்கள். 
8. உதாரணமாக country என இருக்கும் படிவக் கட்டத்தில் I என தட்டினால் India என்பது உங்களுக்கு கிடைத்துவிடும். 
அதற்காக கீழ்விரிப் பட்டியை திறந்து அதிலுள்ள நாடுகளின் பெயர்களை ஒவ்வொன்றாக நீங்கள் கடக்க வேண்டியதில்லை.. 
அதேபோல State: என இருப்பதிலும் இதே முறையை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் Tamil Nadu எனில் T எழுத்தை அழுத்தினால் போதுமானது. பட்டியிலுள்ள Tamil Nadu என்பது உங்களுக்கு கிடைத்துவிடும். 
9. நீங்கள் பார்வையிடும் இணையப் பக்கத்தின் எழுத்தில் படிக்க முடியாத அளிவிற்கு சிறியதாக இருக்கிறதா? Ctrl விசையை அழுத்திக்கொண்டு + குறியை அழுத்துங்கள்.  உங்களுக்குத் தேவையான அளவு எழுத்தின் அளவு பெரிதாகும் வரைக்கும் நீங்கள் அழுத்தி, பிறகு அந்தப் பக்கத்தை பார்வையிடலாம். 
10. அதே போல் பெரியதாக இருப்பதாக நீங்கள் உணரும் இணையப்பக்கத்தின் எழுத்துருரவை குறைப்பதற்கு Ctrl விசையை அழுத்திக்கொண்டு – குறியைத் தட்டலாம். 
11. அதேபோல் கூகில் தேடல் என்பது வெறும் தேடலுக்கு  மட்டுமல்ல.. அதில் பல பயனுள்ள விடயங்களும் உண்டு. குறிப்பாக ஒன்றை கூற வேண்டுமென்றால் அது ஒரு அகராதியாக பயன்படுகிறது. உங்களுக்குத் தேவையான வார்த்தையை Deifne
இதைப்போன்று எத்தனையோ பயனுள்ள விடயங்கள் உள்ளன. விரைவாக செய்து முடித்தல் என்பது சாதாரண விடயம்… அதையே சாமர்த்தியமாக செய்து முடித்தல் என்பதுதான் திறமை. இதுபோன்ற இன்னும் நிறைய விரைவாக செய்யக்கூடியன இருக்கின்றன. 
நன்றி.

கம்ப்யூட்டரில் ஃபங்சன் கீ பயன்பாடு

கம்ப்யூட்டரில் எண் வரிசை விசைகளுக்கு மேலே இருப்பது ஃபங்சன் கீ வரிசை. இதில் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் இரண்டு விசைகள் F1 மற்றும் F5.
இணையத்தைப் பயன்படுத்தும்போது மட்டும் பெரும்பாலும் F5 விசையை மட்டும் பயன்படுத்துவோம். இது வலைப்பக்கத்தை மீள் தொடக்கம் (Refresh) செய்வதற்குப் பயன்படும்.
மற்ற விசைகளும் இதைப்போன்று பயன்மிக்க பயன்பாடுகளைக் கொண்டதுதான்.
functions-of-all-function-keys-in-computer-keyboard
ஒவ்வொரு விசையும் எதற்கு எதற்கு பயன்படுகிறது என்பதை தெரிந்துகொண்டால் மிகவும் பயன்மிக்கதாக இருக்கும். எதையும் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தால் அதுவே பழக்கமாகிவிடும்.
பிறகு உங்களுக்கும் விரைவாக பிரௌசிங் செய்வது, விரைவாக கணினியைக் கையாள்வது எளிமையாகிவிடும்.

F1 விசை பயன்பாடு:

  • அனைத்து புரோகிராம்களிலும் இது உதவிகுறிப்பு பக்கத்தைத் திறக்கப் பயன்படுகிறது. அதாவது நீங்கள் எந்த புரோகிராமை பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்களோ அந்த புரோகிராம் பற்றிய உதவிக்குறிப்புகளைப் பெறலாம்.  (உதாரணமாக போட்டோஷாப் மென்பொருளைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும்பொழுது, அதைப்பற்றி உதவிக்குறிப்புகளைப் பெற F1 விசையை அழுத்திப் பெறலாம். போட்டோஷாப் மட்டும் அல்ல.. கணினியில் உள்ள அனைத்து புரோகிராம்களுக்கும் உதவிக்குறிப்புகளைப் பெற இந்த F1 விசைப் பயன்படுகிறது.)
  • CMOS செட்டப்பில் பயன்படுகிறது.

F2 விசை பயன்பாடு:

  • ஒரு கோப்பு அல்லது ஒரு கோப்புறைக்கு “மாற்றுப்பெயர்” (Rename) கொடுக்கப் பயன்படுகிறது. Boot menu செல்ல பயன்படுகிறது.
  • மைக்ரோசாப்ட் வேர்டில்..
  • புதிய டாகுமெண்ட் ஒன்றை திறக்கப்  (Alt+Ctrl+F2)பயன்படுகிறது
  • Print Preview பார்க்க (Ctrl+F2) பயன்படுகிறது.

F3 விசை பயன்பாடு:

  • பெரும்பாலான புரோகிராமில் தேடுதல் வசதியை (Search) கொண்டு வர பயன்படுகிறது.
  • மைக்ரோசாப்ட் வேர்ட் டாகுமெண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தையை பெரிய எழுத்திலிருந்து சிறிய எழுத்தாக (Upper case to Lower case) மாற்ற பயன்படுகிறது.
  • MS-DOS லும் இறுதிய வரியை ரிப்பீட் (Repeat)செய்ய பயன்படுகிறது.

F4 விசையின் பயன்பாடு:

  • புரோகிராமில் உள்ளதை Find செய்யப் பயன்படும் திரையை கொண்டுவர பயன்படுகிறது.
  • மைக்ரோசாப்ட் எம்எஸ் வேர்ட் டாகுமெண்டில் முந்தைய வரி ஒன்றை பேஸ்ட் செய்ய பயன்படுகிறது.
  • ஒரு புரோகிராமை மூட பயன்படுகிறது. (Alt+F4)
  • தற்பொழுது காட்சித்திரையில் தோற்றமளிக்கும் புரோகிராமை (Current Window) மூட (Ctrl+F4)பயன்படுகிறது.

F5 விசையின் பயன்பாடு:

  • கணினியை அல்லது இணையப்பக்கத்தை மீள்தொடக்கம் (Reload அல்லது Refresh)செய்ய பயன்படுகிறது.
  • மைக்ரோசாப்ட் வேர்டில் Find and Replace விண்டோவைத் திறக்கப் பயன்படுகிறது.
  • பவர்பாய்ண்ட் பிரசன்ட்டேசனை இயக்கப் பயன்படுகிறது.

F6 விசையின் பயன்பாடு:

  • கூகிள் குரோம்,இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் போன்ற உலவிகளில் கர்சரை அட்ரஸ்பாருக்கு கொண்டுசெல்ல பயன்படுகிறது.
  • மைக்ரோசாப்ட் வேர்டில் புதிய டாகுமெண்ட்டைத் திறக்க பயன்படுகிறது. (Ctrl+Shift+F6)

F7 விசையின் பயன்பாடு:

  • மைக்ரோசாப்ட் வேர்ட் டாகுமெண்டில் Spelling check மற்றும் Grammer Check செய்யப் பயன்படுகிறது.
  • மொசில்லா பயர்பாக்சில் Caret Brwosing பயன்பாட்டைத் திறக்கப் பயன்படுகிறது.

F8 விசை பயன்பாடு:

  • விண்டோஸ் கணினி தொடக்கம் செய்யும்போது Safe Mode ல் திறக்கப் பயன்படுகிறது.

F9 விசை பயன்பாடு:

  • Quark 5.0 வில் மெசர்மெண்ட் டூல்பார் திறக்கப் பயன்படுகிறது.

F10 விசையின் பயன்பாடு:

  • மைக்ரோசாப்ட் வேர்டில் “MenuBar” திறக்கப் பயன்படுகிறது.
  • மௌசில் ரைட் கிளிக் பயன்பாட்டைக் கொண்டுவர பயன்படுகிறது (Shift+F10)

F11 விசையின் பயன்பாடு:

  • கணனியில் முழுதிரையை (Full Screen)கொண்டுவர பயன்படுகிறது.

F12 விசையின் பயன்பாடு:

  • மைக்ரோசாப்ட் வேர்டில் Save As Menu  கொண்டுவர பயன்படுகிறது.
  • மைக்ரோசாப்ட் வேர்ட் டாகுமெண்ட்டை சேமிக்க பயன்படுகிறது (Shift+F12)
  • மைக்ரோசாப்ட் வேர்ட் டாகுமெண்ட்டை பிரிண்ட் செய்ய பயன்படுகிறது. (Ctrl+Shift+F12)

விண்டோஸ் 7 ல் போல்டர்களை மறைக்க, மீட்க வழிமுறைகள்…!

விண்டோஸ் 7 கம்பூட்டர்களில் போல்டர் அல்லது கோப்புகளை மறைக்கும் வழிமுறை: 
  • விண்டோஸ் 7 கம்ப்யூட்டிரில் மறைக்கப்பட வேண்டிய கோப்பு அல்லது போல்டரின் மீது ரைக் கிளிக் செய்து properties என்பதைக் கிளிக் செய்யவும்.
  • தோன்றும் விண்டோவில் Hidden என்பதற்கு நேராக உள்ள பெட்டியில் டிக் மார்க்கை ஏற்படுத்தவும்.
  • ஓ.கே கொடுத்து வெளியேறவும்.
  • நீங்கள் தேரந்தெடுத்த கோப்பு அல்லது கோப்புறை மறைந்திருக்கும் (hide).
அவ்வளவுதான் நீங்கள் மறைக்க விரும்பிய கோப்பு அல்லது கோப்புறை மறைக்கப்பட்டுவிடும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilgITXIekgmgcCnhsw0ek9ZO4xQ39PGPrbZzGsbj5ViCp-hej3GwDXiS4mHBRyFWsVb8gkWH_i10R-3iy8INQFraEm6zRYf66-_QHCrUrZ9OfdCmPTGW9UwaRfmVhEh1QtE4M0aMevfWnR/s1600/hide-files-easily+copy.jpg
 
சோதனை செய்முறை: 
  1. உங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு காலியான இடத்தில் சுட்டெலியை (Mouse) வைத்து வலச்சொடுக்கு செய்திடுக (Right click).
  2. தோன்றும் பெட்டியில் New==>Folder என்பதை கிளிக் செய்க.
  3. போல்டரின் பெயராக Hide folder என பெயரிடுக.அல்லது உங்களுக்கு விருப்பமான பெயரினை இடுக.
  4. இப்பொழுது புதிய போல்டர் உருவாகியிருக்கும்.
  5. இனி அந்த போல்டரின் மீது மௌஸ் வைத்து ரைட்கிளிக் செய்திடுக.
  6. தோன்றும் பெட்டியில் properties என்பதை கிளிக் செய்திடுக.
  7. அடுத்து தோன்றும் பெட்டியில் Attributes என்பதில் Hidden என்பதில் டிக்மார்க் ஏற்படுத்திடுக.
  8. இறுதியில் apply, OK கொடுத்து வெளியேறுக..
விண்டோஸ் 7 ல் மறைத்து வைக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் காட்சிக்கு கொண்டுவரும் வழிமுறைகள்:
விண்டோஸ் 7 கணனியில் hide செய்யப்பட்ட கோப்புகளை மீண்டும் காணுவதற்கான வழிமுறைகள் கீழே.
முதலில் உங்கள் கணினியில் போல்டர் ஆப்சனை திறக்க வேண்டும். Folder Options திறப்பதற்கு,
1. start button அழுத்துங்கள்.
2. கண்ட்ரோல் பேனல் கிளிக் செய்யுங்கள்.
3. Appearance and Personalization ஐ கிளிக் செய்யுங்கள்.
4. அங்கே  Folder Options என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. View என்ற டேபை கிளிக் செய்யுங்கள்.
6. settings என்பதற்கு கீழாக Show hidden files, folders, and drives என இருக்கும்.
7. அதில் டிக் மார்க்கை ஏற்படுத்துங்கள்…
முடிந்தது.. இனி நீங்கள் மறைத்து வைத்திருந்த (Hide) அனைத்து போல்டர்களும், கோப்புகளும் உங்களுக்கு தெரியும்.
நன்றி..

3D படங்களை உருவாக்க இலவச சுதந்திர மென்பொருள்..! (Blender)

3D படங்கள் இன்று நேற்றுத் தோன்றியதல்ல.. நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே 3D படங்களை உருவாக்கப்பட்டுள்ளன.
முப்பரிமாண படிமம் (3D) என்பது படிமத்தில் உயரம், அகலம் தவிர ஆழத்தின் தோற்றத்தை உருவாக்கவும் முடிகிற ஒரு ஒழுங்கமைந்த தொழில்நுட்பமாகும். அதாவது மூன்று பரிமாணங்களில் காட்சித் தகவல்களை பதிய முடியும்.
முப்பரிமாண தொழில்நுட்பத்தை 1840 ஆம் ஆண்டு சர் சார்லெஸ் வீட்ஸ்டோன் என்பவர் கண்டறிந்தார். இந்த 3D நுட்பமானது தற்காலத்தில் பட அளவையியல், பொழுது போக்கிற்காக எடுக்கப்படும் 3D படங்களில் பயன்படுத்தபடுகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் நவீன காலத்தில் கட்டிட வரைகலைக்குப் பயன்படும் ஆட்டோகேட், 3மேக்ஸ் மென்பொருட்களிலும் பயன்படும் நுட்பம் இதுதான்.
making-3d-photos-videos-in-blender-3d-making-software-for-free
 
3D படங்கள் இன்று நேற்று உருவானவை அல்ல….1861 ஆம் ஆண்டிலேயே 3D படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  அப்பொழுது ஏற்பட்ட உள்நாட்டு போரின் முடிவில் ஏற்பட்ட விளைவுகளை 3டி படங்களாக பதிவு செய்துள்ளனர்.
இப்படங்களை The library of congress கட்சி, மக்களின் பார்வைக்கு வெளியிட்டது. சிவப்பு -நீல வண்ணங்களில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ள இப்படங்களை பார்ப்பதற்கு கண்ணாடிகளும் தயார் செய்யப்பட்டிருந்தன என்பது ஆச்சரியம் கலந்த தகவல்.
அன்றைய காலத்தில் 3D படங்கள் உருவாக்க பல்வேறு பிரச்னைகள் இருந்தன. ஆனால் தற்பொழுது நவீனமயனமான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி சாதாரணமானவர்கள் கூட முப்பரிமாணப் படங்களை உருவாக்க முடியும்.
அதற்காக பயன்படும் ஒரு அடிப்படை மென்பொருள் பிளெண்டர். இது ஒரு இலவச சுதந்திர மென்பொருளாகும். அனைவரும் இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
 
இந்த மென்பொருள் Microsoft windows, Mac OS, Linux, Solaris, NetBSD, IRIX, OpenBSD, FreeBSD என்பன போன்ற அனைத்து வகையான இயங்குதளங்களிலும் பயன்படுத்தக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வகையான கணினி என்றாலும் இம்மென்பொருளை எளிதாக பயன்படுத்த முடியும்.
making-3d-photos-videos-in-blender-3d-making-software-for-free
இம்மென்பொருள் வடிவம்பெற்றதே ஒரு சுவையான கதை. டச்சு நாட்டு அனிமேஷன் நிறுவனமான NeoGeo மற்றும் Not a Number Technology (NaN) நிறுவனங்களுக்கு அனிமேஷன் உள் வேலைகள் செய்ய பயன்படும் மென்பொருளாக முதன் முதலில் உருப்பெற்றது.  பிறகு இதற்கு பேபி என்ற ஆல்பத்தில் உள்ள ஒரு பாடல் மூலம்  ப்ளண்டர் என்ற பெயர் வைக்கப்பட்டது.
கணினியில் கட்டிட வரைபடங்கள் வரையவும் , முப்பரிமான பொருட்களை  (3D) வரையவும் பல்வேறு மென் பொருட்கள் உள்ளது. அம்மென்பொருட்கள் அனைத்தும் கட்டண மென்பொருள்கள். விலையும் அதிகம். ஆனால் பிளெண்டர் மென்பொருள் முற்றிலும் இலவச சுதந்திர மென்பொருளாகும்.

பிளெண்டர் மென்பொருளின் பயன்கள்: Uses of Blender 3D making Software

  • Blender மென் பொருள் 3D படங்களை உருவாக்கப் பயன்படுகிறது.
  • Macromedia Flash, Adobe photoshop போன்ற கிராபிக்ஸ் மென்பொருட்களில் ஏற்படுத்தக்கூடிய Photo Effects மற்றும் Text Effects களை உருவாக்க பயன்படுகிறது.
  • கட்டிடக் கலைக்குப் பயன்படும் ஆட்டோகேட் (Auto cad), 3டி மேக்ஸ் (3d max)  ரைவட் (rivet) போன்ற மென்பொருளின் தோற்றத்தை பெற்றுள்ளது சிறப்பு. அதில் செய்யும் பணிமுறைகளைப் போன்ற இந்த மென்பொருளிலும் இருப்பதால் இம்மென்பொருள்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எளிதானதாக இருக்கும்.
  • இது விண்டோஸ் 32bit, 64bit , Ox , Linux  போன்ற அனைத்து இயங்கு தளத்திலும் இயங்குமாகையால் எந்த வகை கணினியை பயன்படுத்தினாலும் அதில் மென்பொருளை நிறுவிக்கொள்ளலாம்.
  • 40 MB கொள்ளவே கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவுவதும் எளிதானதுதான்.
மென்பொருளைத் தரவிறக்கம் (Software Download) செய்துகொள்ள சுட்டி:

லேப்டாப் வாங்கப் போறீங்களா? ஒரு நிமிஷம் கவனிங்க..!

லேப்டாப் வாங்கப் போறீங்களா?.. ஒரு நிமிஷம்..!
தீபாவளிப் பண்டிகையின் ஒரு பகுதியாக நமக்கு விருப்பமான எலக்ட்ரானிக் ஐட்டங்கள் வாங்குவதும் இருக்கும். குறிப்பாக மாணவர்கள், அலுவலக நண்பர்கள், கல்லூரி மாணவர்கள் போன்றவர்கள் லேப்டாப்,டேப்லட்,ஆண்ட்ராய்ட் போன் என அவரவர்களுக்கு ஒரு பெரிய பட்டியலையே போட்டு வைத்திருப்பார்கள். 
 
எப்படியும் இந்த தீபாவளிக்காவது இதை வாங்கிவிட வேண்டும் என்ற பேராவல் அவர்கள் மனதில் இருக்கும். அந்த லேப்டாப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. பல்வேறு நிறுவனங்களின் விதவிதமான லேப்டாப்கள் வெளிவந்துகொண்டே உள்ளது. 
அவற்றில் எதை வாங்குவது? எந்த மாதிரியான லேப்டாப் வாங்கினால் நல்லது? எதில் அதிக வசதிகள் உள்ளது? இப்படி உங்களுக்கு நிறைய குழப்பங்கள் உருவாகியிருக்கும்.

நண்பர்கள் பலரும் பலவிதமான பிராண்டுகளை பரிந்துரை செய்வார்கள். அவர்கள் பயன்படுத்திய கணினி, டேப்டாப் பிராண்டுகளையே பெரிதும் பரிந்துரைப்பார்கள். ஆனால் அவர் எப்பொழுது வாங்கினார்? அதில் என்னென்ன உள் பகுதிப்பொருட்கள் (inside parts), உட்கூறுகள், சிறப்புகள் இடம்பெற்றிருக்கின்றன (Laptop Features) என்பதைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு சொல்லத் தெரியாது.
 
சரி.. ஒரு நல்ல லேப்டாப் வாங்குவது என்றால் என்ன செய்ய வேண்டும்? எப்படி ஒரு நல்ல லேப்டாப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
இதோ அதற்கான அடிப்படை வழிமுறைகள்: 

Processor: 

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் என்றால் இந்த வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு கணினி இயங்குவதற்கு தேவையான அடிப்படைச் செயலி இது. இது இல்லை என்றால் கம்ப்யூட்டரே செயல்படாது. மனிதனுக்கு எப்படி மூளையோ, அதுபோல கணினிக்கு முக்கியமான ஒரு பகுதி உறுப்பு இந்த பிராசசர். தாய்ப்பலகை என்று சொல்லக்கூடிய Motherboard -ல் இடம்பெற்றிருக்கும் ஒரு முக்கியமான பகுதிக்கூறு இது. இதைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தில் முதன்மையான இன்டெல். (Intel processor). இதுதான் தற்பொழுது உள்ள நிலையில் சூப்பர் பிராச்சர். இதில் மூன்று தரங்களில் கிடைக்கிறது. 
1. Intel core i7
2. Intel core i5
3. Intel core i3
நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் இவற்றில் ஏதாவது ஒன்று இடம்பெற்றிருப்பதை உறுதி செய்யுங்கள். Intel core i7 processor இடம்பெற்றிருந்தால் மிகவும் சிறப்பு. லேப்டாப்பின் வேகம் சிறப்பாக இருக்கும். Graphics work செய்யும் நண்பர்கள், அதிக கொள்ளளவு கொண்ட மென்பொருள்களைப் பயன்படுத்துபவர்கள், தொழில்முறையில் பயன்படுத்துபவர்கள் இந்த வகை பிராச்சர்கள் உள்ளதை தேர்ந்தெடுக்கலாம். 
இதுமட்டும்தான் பிராச்சரா.. வேறு இல்லையா என்றால் குறைவான விலைகொண்ட பிராச்சர்களும் உண்டு. Intel Dual core, inter core 2 Duo போன்றவை. சாதாரணமான பயன்பாட்டிற்கு லேப்டாப் வாங்குபவர்கள் இந்த பிராச்சர்கள் இடம்பெற்ற லேப்டாப்பை தேர்வு செய்யலாம்.  
இதை விட தரம் குறைந்த விலை மலிவான பிராசசர்களும் உண்டு. ஆனால் அவை இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு சரிப்பட்டு வராது என்பதே என்னுடைய கருத்து. 

பிராசசரின் வேகம்: 

இதுபோன்ற பிராச்சர்களை கேட்டு அறிந்துகொள்வதோடு அதனுடைய வேகத்தையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். Processor ன் வேகத்தை GHz என்ற அளவீடால் குறிக்கப்பட்டிருக்கும். 
உதாரணமாக Intel® CoreTM i7-640M Processor 2.80 GHz 
இதில் 2.80 GHz என்பது பிராசசரின் வேகத்தை குறிப்பது. பிராச்சரின் வேகத்தை குறைக்கும் எண் குறைய.. குறைய… கணினியின் வேகமும் குறைவாக இருக்கும் என்று பொருள். பிராசசரை கவனிச்சு வாங்குங்க….
அதேபோல பேட்டரி (Battery)…,பேட்டரி எப்படிப்பட்டது? எவ்வளவு நேரம் பேக்கப் (Battery backup) கொடுக்கும். அதை எப்படி பயன்படுத்துவது? லேப்டாப்பை பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது சார்ஜ் போடலாமா? இப்படி நிறைய விஷயங்கள் இருக்கிறது.. அதுமட்டுமல்லாமல்  Screen, Ram, Motherboard, Disk drive, DVD Drive என  லேப்டாப்பில் இடம்பெற்றிருக்கும் அனைத்துப் பகுதிகளைப் பற்றிய  சிறப்புகளையும் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.
அதனுடன் வேறென்னன்ன மேலதிக சிறப்பம்சங்கள் உள்ளது என்பதையும் நன்றாக விசாரித்து வாங்க வேண்டியது உங்களுடைய கடமை… கவர்ச்சியான விளம்பரத்தாலும், அதில் உள்கட்டமைப்பு வசதிகள் என்னென்ன உள்ளது என்பதை தெரியாமல் வாங்கிவிட்டு, பிறகு வருத்தப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.. 
உலகத்தரமிக்க லேப்டாப்புகளை Samsung, Asus, LG, Lenovo, Sony, HP, Dell, Acer போன்ற நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன.உங்களுடைய தொழிலுக்கேற்ற, பயன்படுத்தும் தன்மைகேற்ப, சூழலுக்கேற்ற லேப்டாப்பை,  நன்றாக விசாரித்து வாங்குவது புத்திசாலித்தனம்.

விசைப்பலகையின் தொழில்நுட்பம்: (Keyboard Technologies)

கணினியில் இன்று பல்வேறுவிதமான விசைப்பலகைகளைப் பயன்படுத்துகிறோம். சிறியது பெரியது, நீள்வட்ட வடிவம், நீள் சதுரம், செவ்வகம் என பல்வேறு வடிவங்களில் பல்வேறு அளவுகளில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
 
இப்படி வேறுபட்ட விசைப் பலகைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் பொதுவானவையே. இப்பொழுது நடைமுறையில் உள்ள தொழில்நுட்பம் அனைத்து விசைப்பலகைகளிலும் பயன்படுத்தபடுகின்றன. ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் ஒருசில வேறுபட்ட தொழில்நுட்பங்கள் விசைப் பலகையில் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு தொழில்நுட்ப முறைகளையும்  பார்ப்போம்.

விசைப்பலகையின் தொழில்நுட்பம்: (Keyboard Technologies)

இன்று விசைப்பலகை பல்வேறு சுவிட்ச் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த ஸ்விட்ச் தொழில்நுட்பங்களில் வெவ்வேறு வகைகளில் உள்ளன. 
1. Rubber dome mechanical
2. Capacitive non-mechanical
3. Metal contact mechanical
4. membrane mechanical
5. Foam element mechanical
Rubber Dome Mechanical Switch பயன்படுத்தும் விசைப் பலகை கீழ் உள்ள படத்தில் இருப்பது போல இருக்கும்.
Keyboard Technologies
இன்றைய காலத்தில் பெரும்பாலும் Rubber Dome தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விசைப் பலகையில் ஒவ்வொரு விசையும் சிறிய ரப்பர் மேல் கடின கார்பன் உடன் பொருத்தப்பட்டு இருக்கும். 
Membrane சுவிட்ச்சுக்கள் Rubber dome விசைப் பலகைகள் செயல்படுவதைப் போலவே செயல்படும்.  Membrane விசைப் பலகை தனியான விசைகள் இல்லை. ஒரு ரப்பர் காகிதத்தில் அனைத்தும் பயன்படுத்தப்படும். இவ்விசைப் பலகைகள் பொதுவாக நாம் பயன்படுத்தும் கணினிகளில் உபயோகத்தில் இல்லை. 
 
Capacitive சுவிட்சுகள் மற்ற விசைப் பலகை தொழில்நுட்பத்தைப் போன்று சுற்றுப் பலகையில் வடிவமைக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக மின்னணு தொடர்ச்சியாக செலுத்தி Key Matrix ஐ பணிபுரியச் செய்யும். ஒவ்வொரு விசைகளிலும் வில் (Spring) இருக்கும். இவ்விசைப் பலகைகள் பொதுவாக விலை அதிகமாக இருக்கும். 
 
Metal contact மற்றும் Foam Element விசைப்பலகைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் மற்ற விசைப் பலகைகளைவிட மெதுவாகச் செயல்படும். மேலும் இதனைத் தயாரிப்பதற்கு தேவையான செலவு அதிகம் ஆகும். எனவேதான் இதுபோன்ற கீபோர்டுகளை நிறுவனங்கள் தயாரிப்பது இல்லை. 
 
தற்பொழுது கம்பி வழி இணைப்பு இல்லாமல் வயர்லஸ் தொழில்நுட்ப முறையில் செயல்படும் கீபோர்ட்களும் வந்துவிட்டன. திரையில் தோன்றும் விர்சுவல் கீபோர்ட் தொழில்நுட்பமும் வந்துவிட்டது. 
நன்றி.

புதன், 6 ஆகஸ்ட், 2014

உங்கள் லேப்டாப் பேட்டரிகள் பழுதடையாமல் தடுக்க எளிய வழிகள்!

remove-laptop-battery 
லேப்டாப்புகள் வந்த பிறகு மேசை கணினிகளின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. அந்த அளவிற்கு லேப்டாப்புகள் மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த லேப்டாப்புகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதன் பேட்டரி மிகுந்த சக்தியுடன் இருக்க வேண்டும். லேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது? என்பதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம்.

1. லேப்டாப்பின் திரைக்குதான் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே கரண்ட் இல்லாமல் பேட்டரியில் லேப்டாப்பை இயக்கும்போது அதன் திரையின் பிரகாசத்தை குறைத்து வைத்துக்கொள்வது அதிக மின்சாரத்தை சேமிக்க முடியும். அதுபோல் லேப்டாப் ஸ்டான்பை மோடில் வைத்திருக்கும்போது, ப்ளூடூத் மற்றும் வைபை போன்ற இணைப்புகள் மற்றும் யுஎஸ்பி ப்ளாஷ் ட்ரைவ்கள் போன்ற இணைப்புகளை துண்டித்துவிடுவது நல்லது. மின் சிக்கனம் மட்டுமின்றி பேட்டரியின் ஆயுள் காலமும் அதிகரிக்கும்.

2. எப்போது சார்ஜ் செய்ய வேண்டும் : நீண்ட நேரம் தொடர்ந்து லேப்டாப்பின் பேட்டரியை சார்ஜில் வைக்கக் கூடாது. குறிப்பாக பேட்டரி 15%க்கும் குறைவான சார்ஜ் இருக்கும் போது மட்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். குறிப்பாக பேட்டரி முழு சார்ஜில் இருக்கும் போது அதை மீண்டும் சார்ஜில் வைத்தால் பேட்டரி மிக விரைவாக பலவீனமாகிவிடும்.

3. லேப்டாப் மின் இணைப்பில் இருக்கும் போது அதன் பேட்டரியை அகற்ற வேண்டாம். அதுபோல் பேட்டரி இல்லாமல் நீண்ட நேரம் லேப்டாப்பை மின் இணைப்பில் வைத்து இயக்க வேண்டாம். பேட்டரியை ரிசார்ஜ் செய்வது நல்லது.

4. ஒரு வாரத்துக்கு மேல் லேப்டாப்பில் வேலை இல்லை என்று தெரிந்தால் அல்லது துணை பேட்டரி இருந்தால் பேட்டரியின் சார்ஜ் அளவை 50%க்கும் குறைவாக வைத்து அதை மிதமான தட்பவெப்ப நிலையில் வைத்திருப்பது நல்லது. அதுபோல் லேப்டாப்பை நீண்ட நேரம் காரில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் அதிக நேரம் லைப்டாப்பை காரில் வைத்திருந்தால் விரைவில் லேப்டாப் சூடாகிவிடும்.

5. பொதுவாக எல்லா லேப்டாப்புகளும் லித்தியம் பேட்டரிகளைக் கொண்டுள்ளன. எனவே பேட்டரியின் தன்மைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாளும் அதை முறையாக முழு சார்ஜில் வைத்திருப்பது, மற்றும் அதன் சார்ஜை 40 முதல் 50 சதவீதத்திற்கும் குறையாமல் வைத்திருப்பது நல்லது.

6. பேட்டரியை தேவைக்கேற்ப சார்ஜில் வைத்திருப்பதால் காலப்போக்கில் பேட்டரியின் திறன் பலவீனமடையும். எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களிலும் இந்த யதார்த்தம் இருக்கிறது. பேட்டரி பலவீனமடையும் போது அது லேப்டாப்பின் ஆயுளையும் பலவீனப்படுத்தும். ஆக உண்மையிலேயே பேட்டரி பலவீனமடையும் போது புதிய பேட்டரியை மாற்றுவது நல்லது. அப்போது லேப்டாப்பின் ஆயுள் கெடாமல் இருக்கும்.
நன்றி:-newstig.com

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

விண்டோஸ் 8 – ஓர் அறிமுகம்

உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் புதிய பதிப்பு இயங்குதளம்தான் விண்டோஸ் 8. இப்புதிய பதிப்பில் மெட்ரோ டிசைன் (Metro design) எனும் நவீன வரைகலை சூழல் அதாவது GUI அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இதில் முக்கியமான சிறப்பு என்வெனில் டச் இன்புட் (touch input). இத்தொழில்நுட்பத்தின் மூலம் தொடுதல் வழியாக அதிவிரைவாக கணினியை கையாள முடியும்.
windows8-useful-information-tricks-and-tips
விண்டோஸ் 8 – பயனுள்ள தகவல்கள்

டேப்ளட் பிசியில் விண்டோஸ் 8


தற்பொழுது பெருகிவரும் டேப்ளட் பிசி க்களிலும் விண்டோஸ் 8 பயன்பாடு அதிகரித்துவருகிறது. அந்த வகையில் ஏசர் டேப்ளட்டில் விண்டோஸ் 8 நிறுவப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. 

ஏசர் டேப்ளட்டின் சிறப்பம்சங்கள்: 

இந்த டேப்ளட் பிசியில் ஏசர் Iconia W3 8.1 அங்குல திரை, 1.8GHz dual core இன்டல் ஆட்டர் 2760 செயலி, LED பின்னொளி காட்சி (1280x800pixels), 2 MP Mega Pixel முன்பக்க கேமரா, Micro SD கார்ட் பயன்பாடு, யூ.எஸ்.பி., HDMI , 3.5 ஆடியோ ஜேக் , 1 ஜோடி ஸ்பீக்கர் அமையப்பெற்றுள்ளன.  விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இயங்குகிறது. 

விண்டோஸ் 8 குறுக்குவிசைகள்: 

(ஆங்கிலத்தில்)
  • Press the Windows key to enter the tiled Start screen.
  • The Windows key + M minimizes everything that’s showing on the desktop.
  • The Windows key + E opens Explorer for quick access to folders.
  • On the Start screen, press the Windows key + D to instantly get to the desktop.
  • The Windows key + Tab opens a list of currently running programs.
  • The Windows key + Print Screen takes a screenshot and saves it in a Screenshots folder nested in your Pictures folder. 
  • To take a screenshot on a Windows 8 tablet, simultaneously press the Windows button and the volume-down button on the tablet chassis.
  • The Windows key + Q opens a global search menu. Type what you’re looking for and where you would like to look.
  • The Windows key + W opens a search in your system settings to quickly locate and change system properties.
  • The Windows key + F opens a file and folder search.
  • The Windows key + Pause opens the system properties page to show you a quick rundown of your specs.
  • The Windows key + “,” (that’s the comma sign!) makes all current windows transparent, giving you a peek at the desktop as long as you hold down the Windows key.
  • The Windows key + “.” (the period) snaps a window to the right or left side (toggling each time you press “.”).
  • The Windows key + R prompts the Run command—useful for quickly launching apps and other routines with a command prompt.
  • The Windows key + X opens the Quick Access Menu, exposing system functionality such as the Command Prompt, Disk Management, File Explorer, Run, and more. Alternatively, you can right-click on the bottom right corner of the screen to spawn the Quick Access Menu.
  • The Windows key + I opens the settings menu, giving you quick access to the Control Panel, Personalization, and your Power button, among other features.
  • The Windows key + O locks orientation on devices with an accelerometer.

விண்டோஸ் 8 ல் பழைய ஸ்டார்ட் மெனு: 

புதிய விண்டோஸ் ஸ்டார்ட் பட்டனை பயன்படுத்துவதில் சிக்கல் இருப்பின் , பழைய ஸ்டார்ட் மெனுவை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். பழைய ஸ்டார் மெனுவை கொண்டுவர Startmenu8, Pokki போன்ற அப்ளிகேஷன்கள் பயன்படுகின்றன. இவற்றை தரவிறக்கம் செய்ய 
1. StartMenu8 download – http://www.iobit.com/iobitstartmenu8.php
2. Pokki apps download – https://www.pokki.com/windows-8-start-menu

டெஸ்க்டாப் கணினிக்கும் டச் பேட்: 

விண்டோஸ் 8 நீங்கள் டெஸ்க்டாப்பில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக்கொண்டிருந்தால் அதற்கான டெஸ்க்டாப் டச் பேட் மார்க்கெடில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது லேப்டாப் கணினியில் உள்ளதைப் போன்ற டச்பேட் (touch pad) தனியாக டெஸ்க்டாப் கணினிக்கும் கிடைக்கின்றன. 

விண்டோஸ் 8 க்கான ஆண்டி வைரஸ்கள்: 

விண்டோஸ் 8 இயங்குதளத்தைப் பயன்படுத்தும் கணினிகளுக்கென பிரபல ஆண்டிவைரஸ் நிறுவனங்கள் ஆண்டிவைரஸ் தொகுப்பை சந்தையில் வெளியிட்டிருக்கின்றன. அவற்றில் முதன்மையானவை சில: 
1. Microsoft Security Essentials 
2. AVG
3. Panda Security
4. Avast
5. Bit Defender Anti Virus Plus
6. Avira
7. Kaspersky Antivirus
ஆகிய ஆண்ட்டி வைரஸ்கள் மிகச்சிறப்பாக செயப்படுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மையுடன் செயல்படுத்து புதிய வைரஸ் தாக்குதல்களிலிருந்து கணினியை காக்கின்றன. 

விண்டோஸ் 8 ல் இருக்க வேண்டிய முக்கியமான புரோகிராம்கள்: 

1. SKYDRIVE (ஸ்கைடிரைவ்): 
உங்களுடைய கோப்புகளை பதிந்து சேமித்து வைக்க நல்லதொரு இடம் இது. உங்களுடைய கோப்புகள் பேக்கப் செய்து செய்து இதில் சேமித்து வைக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு இங்கு செல்லுங்கள்: 
2. Windows 8 Cheat keys: விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்கும் விதம், இயக்கப்படும் வழிமுறைகளை கற்றுக்கொள்ள இது பயன்படுகிறது. இதில் விண்டோஸ் 8 பற்றிய அனைத்து பயன்பாடுகளையும் கற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக ஷார்ட் கட், தொடு இயக்கம், புரோகிராம் டைல்ஸ்கள் அனைத்தையும் காணும் வழிமுறைகள் போன்றவை. இம்முகவரிக்கு சென்று கற்றுக்கொள்ளுங்கள்.
3. App Counter – அப்ளிகேஷன் கவுண்ட்டர்: இதன் மூலம் விண்டோஸ் 8 அப்ளிகேஷன் பற்றிய உடனடித் தகவல்களை தெரிந்துகொள்ள முடியும். முகவரி 
மேலும் Skype, company store, Twitter, Tiles Reminder போன்ற பயனுள்ள அப்ளிகேஷன்கள் உள்ளன. உங்களின் தேவைக்கேற்ப நீங்கள் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அனைத்தும் மைக்ரோசாப்டின் Apps தளத்தில் உள்ளன. 
நன்றி. 
- தங்கம்பழனி

Useful websites for all college students..

கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் இணையதளங்கள்

 Useful websites for all college students
இணையத்தில் பள்ளி மாணவர்கள், சிறுவர்களுக்குப் பயன்படும் இணையதளங்கள் இருப்பதைப் போன்று கல்லூரி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கென தனிச் சிறப்பு இணையதளங்கள் நிறைய இருப்பதில்லை.ஒன்றிரண்டு தளங்கள் இருப்பினும் அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமான ஒன்றாகவே உள்ளது.
காரணம் அவர்கள் தேடும் குறிச்சொற்களுக்கேற்ற (Keywords) சரியான இணையதளங்கள் கிடைப்பதில்லை. தேடும் வார்த்தைகளுக்கு ஏற்ப சரியான இணையதளங்களை பட்டியலிடாத்தே அதற்கு காரணம்.  அதாவது கல்வித் தொடர்பான வார்த்தைகளை உள்ளிட்டு தேடும்பொழுது அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் கொண்டிருக்கும் வேறொரு  அதிக டிராபிக் கொண்ட தளங்களையே முதன்மைப் படுத்திக் காட்டும்.
அதனால் மாணவர்கள் தேடும் குறிச்சொற்களுக்கான சரியான கல்வி இணையதளங்கள் பட்டியலிடப்படுவதில்லை. இதற்கு காரணம் கல்வித்தொடர்புடைய இணையதளங்கள் மிகவும் குறைவாக இருப்பதே.

அப்படி குறைவான உள்ள இணையதளங்களிலும் மிக முக்கியமான இணையதளமாகவும், கல்லூரி மாணவர்களுக்கு அனைத்து வகையிலும் பயன்படக்கூடிய  ஒரு மிகச் சிறந்த முழுமையான இணையதளத்தை இப்பதிவில் அறிமுகம் செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
 
தளத்தின் பெயர்: ஸ்டண்ட் 3கே (Students 3k.com)
இத்தளத்தில் Engineering Students, Arts & Science Students, Polytechnic Students, MBA Students, B.Ed & M.Ed Students மற்றும் HSC (12th) Students ஆகியவர்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கும்.
 
Engineering Students
Engineering Students க்குத் தேவையான questions , Notes ஆகியவைகள் கிடைக்கும். இன்ஜினியர் மாணவர்கள் students3k.com/engineering என்ற தொடுப்பை சொடுக்கித் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
 
Arts & Science Students
Arts & Science Students களுக்கான தளம் இது. இதில் ஆர்ட்& சயின்ஸ் study meterials, question papers முதல் அனைத்து Questions Bankம் கிடைக்கும்.
இவ்வாறு அனைத்து துறை கல்லூரி மாணவர்களுக்கும் தேவையான தகவல்கள் அனைத்தையும் தொகுத்து கொடுத்திருக்கிறார்கள்.
குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும் aptitude பகுதியை சொல்லலாம். அது மட்டுமில்லாமல் placement papers, projects download, career guidance ஆகிய தலைப்புகளில் அடங்கியுள்ள தகவல்களும் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.
கல்விக் கடன் (Educational Loan) வாங்குவதற்கான வழிமுறைகளையும் இத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். கல்விக் கடன் வழங்கும் வங்கிகளையும் இத்தளத்தில் பட்டியலிட்டுள்ளனர். பட்டியலிலிருக்கும் ஒரு சில வங்கிகள்:
  1. Axis Bank Study Loan
  2. Citibank India
  3. Syndicate Bank
  4. Tamilnad Mercantile Bank
  5. UCO Bank Education Loan
  6. [CUB] City Union Bank
  7. Federal Bank
  8. State Bank of Mysore
  9. State Bank of Hyderabad [SBH]
  10. Indian Bank Loan
  11. Punjab National Bank [PNB]
  12. HDFC Bank Loan
  13. Dena Bank
  14. Central Bank of India
  15. Bank Of India
  16. Bank of Baroda [BOB]
  17. Allahabad bank
ஒவ்வொரு கல்லூரி மாணவருக்கும், அவர் எந்த துறையைச் சார்ந்தவராக இருப்பினும் அவர்கள் துறைச்சார்ந்த அனைத்து முக்கியமான தகவல்களையும் வழங்குகிறது இத்தளம். அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் விதத்தில் கல்விச்சார்ந்த தகவல்களையும், கல்விக்குப் பயன்படும் தகவல்களையும் தொகுத்து தந்திருப்பது பாராட்டத்தக்கதாகும். 
நீங்கள் ஒரு கல்லூரி மாணவர் எனில் கட்டாயம் பார்க்க வேண்டிய இணையதளம் இது.
இணையதளத்திற்கான முகவரி: http://students3k.com/
இப்பதிவினை உங்கள் நண்பர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். நிச்சயம் அவர்களுக்குப் பயனுள்ள தளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.. 
நன்றி நண்பர்களே..!
- தங்கம்பழனி

what is motherboard or main board? மதர்போர்டு என்றால் என்ன?

what is motherboard or main board?
கணிப்பொறிக்கு உள்ளே இருக்கும் மின் இணைப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனி சர்க்யூட் கார்டுகளாக நீண்ட சதுர பச்சைக் கார்டுகளாக இருக்கும். இவறுக்கு இடையே கனெக்ஷன் கொடுக்க முன்பெல்லாம் ஒயர்களின் மூலம் செய்து கொண்டிருந்தார்கள்.
motherboard and their parts
இப்போது இந்த இணைப்புகளையும் பிசிபி PCB என்று சொல்லப்படும் இணைப்பு அச்சிட்ட போர்டில் தயாரித்து அதில் கனெக்டர்களை சால்டர் செய்தி மற்ற கார்டுகளைச் செருகிறார்கள். இந்த அடித்தள கார்டுக்கு (computer basic card) மதபோர்டு என்று பெயர். இந்த மதர் போர்டு (mother) முறையில் அதிக வசதிகளைப் பெற முடியும்.

கணினிப்பொறியின் வசதிகளை  விரிவுபடுத்த(To extend the facilities of a computer) ஸ்லாட் என்று சொல்லப்படும் வெற்றிடங்கள் (Slot Vacuums) இருக்கும். அதில் நமக்கு விரிவாக்கத்துக்குத் தேவைப்பட்ட கார்டுகளை வாங்கிச் செருகிக் கொள்ளலாம்.
உதாரணமாக உங்களுக்குப் புதிதாக ஒரு பிரிண்ட்டரை வாங்கி இணைக்க வேண்டும் என்றாலோ அல்லது RAM போன்ற நினைவறைகளை விரிவாக்க வேண்டும் என்றாலோ மதர் போர்டில் காலியிடம் (Slot) இருக்கும். அதில் தேவைபடும் கார்டுகளை சொருகிக்கொண்டு மேலதிக வசிதிகளைப் பெற்று விரிவாக்கம் செய்துகொள்ள முடியும். (மேலுள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கு சரியான புரிதல் ஏற்படும்.)
நன்றி
- தங்கம்பழனி

Popular Posts

Facebook

Blog Archive