பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 30 டிசம்பர், 2014

HTML Tutorials 15-Body tag- ல் TEXT பண்பு..

body attribute text in html

வணக்கம் நண்பர்களே.. கடந்த இடுகையில்<BODY> 

குறிஒட்டின்(TAG)-ல் பயன்படுத்தக்கூடிய பண்புகளில் ஒன்றான 

BGCOLOR என்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். படிக்கத் 

தவறியவர்கள்  இந்த இணைப்பை கிளிக் செய்து 

பார்த்துக்கொள்ளுங்கள். 


இன்றையப் பாடத்தில் TEXT பண்பு என்பதைப் பற்றிப் பார்ப்போம். 

நீங்கள் உருவாக்கும் HTML ஆவணத்தில் சாதாரணமாக எழுத்துகள் 

கறுப்பு நிறத்தில் இருக்கும். இதை நாம் மாற்றலாம். அதற்கு இந்த TEXT 

என்ற பண்பு பயன்படுகிறது. 


உம். <BODY BGCOLOR="red" TEXT="White"> என்று கொடுத்துப் 
பாருங்கள். இதன் விளைவு பின்னணி நிறம் சிவப்பாகவும், அதில் 
நீங்கள் தட்டச்சிடும் உரையானது வெண்மை நிறத்திலும் இருக்கும். 


உ.ம். 

ஒரு HTML ஆவணத்தைப் பார்ப்போம்.

<HTML>

<HEAD>

<TITLE>BGCOLOR AND TEXT COLOR</TITLE>
</HEAD>
<BODY BGCOLOR="red" TEXT="White"> 
இந்த HTML ஆவணம் பிண்ணனி நிறத்தையும்,  அதில் இடம்பெறும் எழுத்துக்களின் நிறத்தையும் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது பின்னணி நிறம் சிவப்பாகவும், அதில் இடம்பெறும் எழுத்துகள் வெண்மையாகவும் இருக்குமாறு BODY குறி ஒட்டில் சிறப்புப் பண்புகளைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. 
</BODY>
</HTML>

இந்த நிரலை Notepad எழுதி .html என்ற விரிவுடன் சேமித்து உங்கள் 

உலவியில் திறந்துபாருங்கள்.


மேற்கண்ட HTML ஆவணத்தில் பின்னணி நிறம் மற்றும் எழுத்தின் 
நிறத்தையும் நிர்ணயிக்கும் சிறப்புப் பண்புகளான BGCOLOR, TEXT என்ற 
இரு பண்புகளைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

உலவியில் இதனுடைய வெளிப்பாடு(OUTPUT) இவ்வாறு இருக்கும்.
  

இந்த HTML ஆவணம் பிண்ணனி நிறத்தையும்,  அதில் இடம்பெறும் 

எழுத்துக்களின் நிறத்தையும் குறிக்கும் வகையில் 

அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது பின்னணி நிறம் சிவப்பாகவும், 

அதில் இடம்பெறும் எழுத்துகள் வெண்மையாகவும் இருக்குமாறு BODY 

குறி ஒட்டில் சிறப்புப் பண்புகளைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. 


  இதில் பின்னணி நிறம் சிவப்பாகவும், அதில் இடம்பெற்றுள்ள 
உரைக்கான எழுத்துகள் அனைத்தும் வெண்மை நிறத்திலும் 
இருப்பதைப் பாருங்கள். இவ்வாறு நமக்கு விருப்பமான வண்ணங்களில் 
எழுத்துகளை TEXT பண்பைப் <BODY> TAG-ல் பயன்படுத்துவதன் 
 மூலம் பெற்றுக்கொள்ளலாம்.



குறிப்பு: இந்த சிறப்புப் பண்புகள் அனைத்தும் Body என்னும் குறிஒட்டில்(Tag) பயன்படுத்தக்கூடியவை என்பதை நினைவில் வைத்திருங்கள். 

HTML Tutorials 14-Body tag-ல் சிறப்புப் பண்பு bgcolor


ஒரு HTML ஆவணத்தின் உரைப்பகுதியானது <BODY> மற்றும் </BODY> 
 
என்னும் குறி ஒட்டுகளுக்கு(Tags) இடையே இருக்கும்.


இது நமக்குத் தெரிந்ததே. இந்த BODY குறிஒட்டில்(TAG) லும் நிறைய சிறப்புப் 
 
பண்புகளைச் சேர்க்க முடியும். அந்த வகையில் ஒரு ஆவணத்தின் பின்னணி 
 
நிறத்தை கொடுக்கக்கூடிய சிறப்புப் பண்பான BGCOLOR என்பதைப் பற்றி 
 பார்ப்போம்.

 
<BODY>  குறி ஒட்டில் பண்புகளைச் சேர்ப்பதன் மூலம் பின்னணி 
 
நிறம்(BACKGROUND),பின்னணியில் படம்(Background Image), எழுத்தின் 
 
நிறம்(Font COLOR) இணைப்புக்  கோட்டின் நிறம்(LINK LINE COLOR) 
 
போன்றவற்றைக் கொடுக்க முடியும். 
 
<BODY> குறிஒட்டில் (Tag ) BGCOLOR, TEXT, BACKGROUND, LINK, VLING, ALINK, LEFTMARGIN மற்றும் TOPMARGIN போன்ற பண்புகளைக் கொடுக்க முடியும். இந்தப் பண்புகளைப் பற்றிக் இன்றையப் பாடத்தில் பார்ப்போம்.

BGCOLOR - (பின்னணி நிறம்) பண்பு

<BODY> என்ற குறி ஒட்டில் BGCOLOR என்னும் பண்பைச் சேர்ப்பதன் மூலம் பக்கத்தின் JSன்னணி நிறத்தைக் கொடுக்க முடியும். RGB நிறக் குறிமுறையைப்(Color names) பயன்படுத்துதல், ஆறு இலக்க பதினறும எண்ணைப் (Color Values)பயன்படுத்துதல் போன்ற இரு வழிகளில் நிறத்தைக் கொடுக்க முடியும். 

ஆறு இலக்க பதினறும எண்ணில் முதல் இரண்டு இலக்கம் சிவப்பு நிறத்தையும், அடுத்த இரண்டு இலக்கம் பச்சை நிறத்தையும், கடைசி இரண்டு இலக்கம் ஊதா நிறத்தையும் குறிக்கின்றன. இவை அனைத்தும் முதன்மை நிறங்களான (RGB - RED, GREEN, BLUE) ஆகியவை.

எடுத்துக்காட்டாக FFFFFF என்பது வெள்ளை நிறத்தையும், FF0000 என்பது சிவப்பு நிறத்தையும், FFFF00 என்பது மஞ்சள் நிறத்தையும் குறிக்கின்றன. நிறத்தை இவ்வாறு பதின்றும இலக்கங்களில் கொடுப்பது சிரமமானதாக இருக்கலாம். 

எனவே தற்போது உலவிகள் நிறத்தின் பெயர்களைப் புரிந்துகொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த எண்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் நேரடியாகவே நிறத்தின் பெயரை கொடுக்கலாம்.

black, silver, Grey, white, maroon, red, purple, fuchsia, green, lime, Olive, yellow, navy, blue, teal மற்றும் aqua என்பன போன்ற பதினாறு வகை நிறங்கள் வரை ஏற்றுக்கொள்கின்றன.

உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். 

<body bgcolor = "green">

என்று கொடுக்கும்போது உங்கள் வலைப்பக்கத்தின் பின்னணி நிறமானது பச்சை நிறத்தில் காணப்படும்.

பின்னணி நிறம் எதுவும் இல்லையெனில் எப்போதும்போல வெண்மையாகவே இருக்கும். 


<HTML>

<HEAD>
<TITLE>How to put background color in html page?</TITLE>
</HEAD>
<BODY bgcolor="green">
வணக்கம் நண்பர்களே,
இது அருண். நான் உங்களுக்குஎளிய தமிழில்<
HTML எனும் தலைப்பில் 
கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன்.
தொடர்ந்து இந்தத் தொடர்பதிவைப் 
படித்து பயன்பெற வேண்டுகிறேன்.
நன்றி
</BODY>
</HTML>


மேற்கண்டவற்றை .html என்ற விரிவுடன் சேமித்து உங்கள் வலைஉலவியில் திறந்து பார்க்கும்போது உங்கள் வலைப்பக்கத்தின் பின்னணி நிறம் பச்சை நிறத்தில் காணப்படும்.




அடுத்தப் பதிவில் இதே <body> குறிஒட்டில் இன்னும் சில சிறப்புப் பண்புகள் இருக்கிறது. அதில்TEXT பண்பு, BACKGROUND பண்பு(attributes)களைப்பற்றிப் படிப்போம்.

Source : http://www.thangampalani.com/

HTML Tutorials 13-BR (Break) tag


இது எதற்கென்றால் ஒரு வரியை முடித்து, அடுத்த வரிக்குச் செல்ல 
 
வேண்டும் என்பதை Browser-க்கு சொல்லப் பயன்படும் குறிஒட்டாகும். 

கீழக்காணும் எடுத்துக்காட்டைக் கவனியுங்கள்..


<HTML>
<HEAD>
<TITLE>THIS IS MY OWN PAGE</TITLE>
</HEAD>
<BODY>
<CENTER>வணக்கம் நண்பர்களே,<br>
இது அருண். நான் உங்களுக்குஎளிய தமிழில்<br>
HTML எனும் தலைப்பில் <br>
கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன்.<br>
தொடர்ந்து இந்தத் தொடர்பதிவைப் <br>
படித்து பயன்பெற வேண்டுகிறேன்.<br>
நன்றி</CENTER>
</BODY>
</HTML>
மேற்கண்ட நிரல் வரிகளை Notepad -ல் எழுதி அதை .html என்ற விரிவுடன் சேமித்துக்கொள்ளுங்கள். சேமித்த கோப்பை உலவியில் திறந்துப் பார்த்து சோதனை செய்துகொள்ளவும்.


மேற்கண்டவற்றின் வெளிபாடு(உலவியில்) இவ்வாறு இருக்கும்.

வணக்கம் நண்பர்களே,


இது அருண். நான் உங்களுக்குஎளிய தமிழில்



HTML எனும் தலைப்பில்



கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன்.



தொடர்ந்து இந்தத் தொடர்பதிவைப்



படித்து பயன்பெற வேண்டுகிறேன்.



நன்றி

என்ன காரணம்? 
ஒவ்வொரு வரி முடிவிலும் <BR> Tag சேர்த்திருப்பதால் இந்த மாற்றம் 
 
வந்திருக்கிறது. இதிலிருந்து <BR> Tag -ன் பயன்பாடு என்ன என்பது 
 
புரிந்திருக்கும். 



உங்களுக்கு தேவைப்படும் இடங்களில் இந்த <BR> Tag 
 
பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாக செய்யுள்கள், கவிதைகள் 
 
போன்றவைகளை அடுத்த வரிகளில் அவைகள் உள்ளது உள்ளபடியே 
 
காட்டினால்தான் பொருள்தரக்கூடிய வகையில் இருக்கும். இதற்கும் இந்த 
<BR> Tag பயன்படுகிறது.

HTML Tutorials 12-CENTER tag

 
எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள தொடர் மூலம் நிறைய புதிய 
 
நண்பர்களைப் பெற்றிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. விடுபட்ட கடந்த 
 
மூன்றுநாட்களுக்கான பதிவுகளையும் சீரான இடைவெளியில் இன்றைய 
 
வேலைநாளில் பதிவிட எண்ணியிருக்கிறேன். பதிவிற்கு வருவோம்.


கடந்த பதிவில் பத்திக் குறி ஒட்டில் (Paragraph Tag) இசைவுப்(Align) பண்புகளைப் (attributes) பற்றிப் பார்த்தோம்.

இப்பதிவில் <CENTER> மற்றும் </CENTER> ஆகிய குறி ஒட்டுகளைக் காண்போம். இந்தக் குறிஒட்டுகளுக்கு(Tags) இடையில் உள்ள உரை உலவித்திரையில் கிடைமட்டமாக(Horizontal) மையப்படுத்திக் காட்டப்பட பயன்படுத்தப்படுகிறது.அதாவது வலைப்பக்கத்தில் மையப்படுத்தி(Center) காண்பிக்கும்.

கீழ்க்கண்ட நிரல்வரிகளை notepade-ல் எழுதி வழக்கம்போலவே .html என்ற விரிவுடன் சேமித்து, உங்கள் கோப்பை Internet Explorer, Google Chrome, Firefox போன்ற உலவிகளில் திறந்துப் பாருங்கள். உரையானது மையப்படுத்திக்  காண்பிக்கப்பட்டிருக்கும்.

<HTML>
<HEAD>
<TITLE>THIS IS MY OWN PAGE</TITLE>
</HEAD>
<BODY>
<CENTER>HI Masinfom BLOG VIEWERS</CENTER>
</BODY>
</HTML>

இதன் வெளிப்பாடு இவ்வாறு இருக்கும்.


 HI Masinfom  BLOG VIEWERS


இவ்வாறு ஒரு உரையை நடுவில், மையப்படுத்தி காண்பிக்க இந்த <center></center>குறிஒட்டுகள் காண்பிக்கப் பயன்படுகிறது.அடுத்த பதிவில் <BR> (Break Tag)ஐப் பற்றிப் பார்ப்போம்

HTML Tutorials 11-Paragraph Tag-ல் அலைன்மெண்ட்


Paragraph Tag align 
கடந்த பதிவில் பத்திக் குறி ஒட்டைப்(Paragraph Tag) பற்றிப் பார்த்தோம். இது 
மிகவும் எளிதாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஒன்றுதான். இந்த Paragraph Tag 
 
பத்திக் குறி ஒட்டில் Align பண்பைச் சேர்ப்பதன் மூலம் பத்திகளை நமது 
 
விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைக்கலாம்.


அதாவது இடது(left), வலது(Right), நடுப்புறம்(Center) மற்றும் 
 
நேர்த்தி(Justify) என நான்கு வகைகளில் பத்திகளை அமைக்கலாம்.


ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

<P ALIGN = "left"> என்பது பத்தியை இடது இசைவிற்கும்,
 
 <P ALIGN = "right"> என்பது பத்தியை வலது இசைவிற்கும், 
 
<P ALIGN = "center">என்பது பத்தியை மைய இசைவிற்கும்
 
<P ALIGN = "justify"> என்பது நேர்த்தியான இசைவுக்கும் மாற்றுகிறது. 

      <HTML>
    <BODY>
    <P ALIGN="left">HTML மொழியை மீயுரை என அழைக்கலாம். இதன் பணி 
வலைஉலவிகளுக்கு Hypertext ஆனது எப்படி வெளிப்பட வேண்டும் என 
 
குறிக்கிறது.HTML மொழியை மீயுரை என அழைக்கலாம். இதன் பணி வலை 
 
உலவிகளுக்கு Hypertext ஆனது எப்படி வெளிப்பட வேண்டும் என 
 
குறிப்பதாகும்.</p>
 
 
    <P ALIGN="right">HTML மொழியை மீயுரை என அழைக்கலாம். இதன் 
 
பணி வலைஉலவிகளுக்கு Hypertext ஆனது எப்படி வெளிப்பட வேண்டும் 
 
என குறிக்கிறது.HTML மொழியை மீயுரை என அழைக்கலாம். இதன் பணி 
 
வலை உலவிகளுக்கு Hypertext ஆனது எப்படி வெளிப்பட வேண்டும் என 
 
குறிப்பதாகும்.</p>
 
 
    <P ALIGN="center">HTML மொழியை மீயுரை என அழைக்கலாம். இதன் 
 
பணி வலைஉலவிகளுக்கு Hypertext ஆனது எப்படி வெளிப்பட வேண்டும் 
 
என குறிக்கிறது.HTML மொழியை மீயுரை என அழைக்கலாம். இதன் பணி 
 
வலை உலவிகளுக்கு Hypertext ஆனது எப்படி வெளிப்பட வேண்டும் என 
 
குறிப்பதாகும்.</p>
 
 
    <P ALIGN="justify">HTML மொழியை மீயுரை என அழைக்கலாம். இதன் 
 
பணி வலைஉலவிகளுக்கு Hypertext ஆனது எப்படி வெளிப்பட வேண்டும் 
 
என குறிக்கிறது.HTML மொழியை மீயுரை என அழைக்கலாம். இதன் பணி 
 
வலை உலவிகளுக்கு Hypertext ஆனது எப்படி வெளிப்பட வேண்டும் என 
 
குறிப்பதாகும்.    </p> 
     </BODY>
   </HTML>

வெள்ளி, 19 டிசம்பர், 2014

இணையத்தில் சம்பாதிக்க மிகவும் எளிதான வழி..$$ லிபர்டேசியா (LIBERTAGIA)

வணக்கம் நண்பர்களே நீங்கள் இணையத்தில் சம்பாதிக்க மிகவும் எளிதான வழி....
லிபர்டேசியா (LIBERTAGIA)


லிபர்டேசியா (LIBERTAGIA)  எந்த ஒரு முதலிடும் இல்லாமல்  இணையத்தில்
வருமானம் பெறும் நிறுவனமாகும்.
http://libertagia.com/arunice

இங்கு நீங்கள் குறைந்தபட்சமாக மாதம் 60$ பெறலாம்.

இங்கு நீங்கள் தினமும் ஒரு 15 விளம்பரங்களை மட்டும் பார்க்க வேண்டும்.
ஒருநாளைக்கு 3$ வருமானமாக கிடைக்கும். வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டும்
விளம்பரங்களை பார்த்தால் போதுமானது. நீங்கள் தொடர்ந்து 7 நாட்களுக்கு
பார்த்தாலும் 5 நாட்களின் வருமானம் மட்டுமே கிடைக்கும்...

குறைந்தபட்ச பணம் பெறும் தொகை 300$ ஆகும்.

வருமானம் பெற நீண்ட நாட்கள் ஆகுமோ என என்னுகிறிர்களா...!

அந்த கவலை தேவையில்லை.  லிபர்டேசியா  நிறுவனம் நமக்கு  6 நிலைகளில்
வருமானத்தை தருகிறது.


அதாவது 6 நிலை வருமானம்  என்பது நமக்கு கீழே நேரடியாக இணையும் அத்தனை
நபர்களும்  நம் முதல் நிலை ஆவார்.... அவருக்கு கீழ் இணையும் அனைவரும்
நமக்கு இரண்டாம் நிலை ஆவார். இப்படியே 6 நிலைகள் வரை நமக்கு வருமானம்
கிடைக்கும்.

நமக்கு கீழ் 6 நிலைகளிலும் உள்ள அனைவரும் பெறும் வருமானத்தில் இருந்து
நமக்கு 1% ரேபிரெல் கமிஷனாக மாத மாதம் கிடைக்கும்.

உதாரணமாக உங்கள் கீழ் நிலையில் ஒருவர் மாதம் 100$ வருமானம் பெறுகிறார்
என்றால் அதில் 1% அதாவது 1$ உங்களுக்கு ரேபிரெல் கமிஷனாக கிடைக்கும்

எத்தனை நபர்கள் உங்கள் குழுவில் இணைகிறார்களோ அதற்கு ஏற்றார்போல் உங்கள்
வருமானம் அதிகமாகும். அப்பொழுது உங்களுக்கு 300$ என்பது சாதரணமாக
பெறகூடிய வருமானமாக இருக்கும்.

உங்களுக்கு மேலும் வருமானம் பெற எண்ணம் இருந்தால் Free membership- ல்
இருந்து upgrade செய்து அதிக வருமானம் பெறலாம்.


இதில்  வருமானத்தை பெற LIBERTAGIA  நிறுவனம். தன் நிறுவனத்தின் பெயரிலே
நமக்கு மாஸ்டர் கார்டை  வழங்குகிறது. அதன் முலம் நம் வருமானத்தை
பெற்றுகொள்ளலாம்.

குறிப்பு -  இத்தளத்தில் ஒரு கணினியில் ஒருவர்  ஒரு கணக்கு மட்டுமே
வைத்திருக்க  வேண்டும் என்ற நிபந்தனை இல்லை...உங்கள் குடும்ப
உறுபினர்களுக்கு ID PROOF மற்றும் BANK AC இருந்தால் அனைவருக்கும் கணக்கை
துவங்கி நீங்கள் வருமானம் பெறலாம்.
இந்த தளத்தில் எப்படி உறுப்பினர் கணக்கு தொடங்குவது? எப்படி பணம்
சம்பாதிப்பது? என்பதை பற்றி பார்ப்போம்

Step1:பின்வரும் Register button கிளிக் செய்யவும்

http://libertagia.com/arunice

Step2: பிறகு confirm பட்டன் கிளிக் செய்யவும்


Step3: இப்பொது பின்வரும் திரை ஒன்று தோன்றும்.அதில் உங்கள் விவரங்களை
சரியாக கொடுங்கள்.

Step4:

Member  Info இங்கு உங்களுக்கு விருப்பமான யூசர்நேம்   கொடுங்கள்

Personal Info

First  name  and  Surname: இங்கு உங்கள் பெயரை கொடுங்கள்

 Document: உங்கள் ட்ரிவிங் லிசென்செஸ்(Driving licence), வோட்டர்
ஐடி(voter id), பான் கார்டு(pan card)  இதில் ஏதோனும் ஒன்று ID PROOF
நம்பர் கொடுங்கள்

 Date of birth: உங்களுடைய பிறந்த வருடம்,மாதம்,தேதி கொடுங்கள்

Email: இங்கு உங்கள் மின்னசல் முகவரியை கொடுங்கள்

Confirm email::திரும்பவும் மின்னசல் முகவரியை கொடுங்கள்

Password: இங்கு உங்களுக்கு தேவையான Password  enter
செய்யுங்கள்.password enter செய்யும்  போது  எண்கல்,குறியீடுகள்  சிறிய
abcd மற்றும் பெரிய ABCD  ஆகியவற்றை   கலந்து பயன்படுத்துங்கள்

Confirm password: திரும்பவும் உங்கள் Password  enter  செய்யுங்கள்

Pincode: உங்கள் பின்கோடு(pincode no )  எண்கல் கொடுங்கள்

Confirm pincode:மீண்டும் உங்கள் பின்கோடு(pincode no)  எண்கல் கொடுங்கள்

Captcha:ஆருகிலுல்ல எழுத்துகளை அப்படியா பார்த்து பிழையின்றி டைப் செய்யுங்கள்

இறுதியாக Register  என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.இப்போது உங்களுடைய
libertagia தளத்தில் இருந்து ஒரு confirmation மெயில் வரும்.உங்கள்
libertagia கணக்கு வெற்றிகரமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது.இனிமேல் உங்கள்
வேலையை தொடங்கலாம்.

இனி உங்கள் அக்கௌன்ட் login  செய்யுங்கள்.


Step5:  libertagia தளத்தில் login  செய்த பிறகு.task  button கிளிக் செய்யவும்.

Step6  பிறகு.click here to do task  button கிளிக் செய்யவும்

Step7:  பிறகு.click here to  do   task  button கிளிக் செய்தவுடன் .do
task captacha code வரும் பிறகு go to task click செய்தவுடன் நியூ window
ஓபன் ஆகும்


Step8: அதில் 90 நிமிடங்கள் வரும்.பின்பு captacha  code டிபே  செய்து
submit பட்டன் கிளிக் செய்யவும்.இத போல் 15 task பண்ண வேண்டும்.15 task
ஒரோ நரத்தில் செய்து முடிக்க வேண்டும்
More info Commend....Plz

http://libertagia.com/arunice

z archiver



வணக்கம் நண்பர்களே !!
நீங்கள் internetல் இருந்து Download செய்யும் files .zip .rar .7z ஆகிய formatகளில் இருக்கிறதா ?? எப்படி open செய்வது என்று தெரியவில்லையா??
அத்தகைய fileகளை "Extract" "open" செய்வதற்காகவே ஒரு அப்ளிகேஷன் ..,
<<<<<< Zarchiver >>>>>>
(( இது ஒரு file manager தான் .., ))
இதை எப்படி பயன்படுத்துவது ??

இதை use செய்வது மிக easy,,
நீங்கள் extract செய்ய வேண்டிய fileஐ touch செய்தால் போதும் ..,
எங்கு extract செய்ய வேண்டும் என்பதை choose செய்யுங்கள் ..
அவ்வளவுதான் !!

*Decompress archive types: 7z (7zip),
zip, rar, bzip2, gzip, XZ, iso, tar, arj,
cab, lzh, lha, lzma, xar, tgz, tbz, Z,
deb, rpm, zipx, mtz;

Download Link:----->>>
www.datafilehost.com/d/566db0d9

பயனடையுங்கள்!!!

share செய்திடுங்கள்!!


புளூடூத்/வைஃபை; வித்தியாசம் என்ன?

----------------------------------
* புளூடூத் மற்றும் வைஃபை ஆகிய இரண்டு ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
இரண்டுமே 'வயர்' தொடர்புகளற்ற 'வயர்லஸ்' முறையிலான தொழிற்பாட்டைக் கொண்டவையாகும். இரண்டிலும் ஒத்த பண்புகள் இருப்பது போன்று முரண்பாடான சில பண்புகளும் இருக்கவும் செய்கின்றன.
இதில் புளூடூத் குறைந்த வலுவில் இயங்கக்கூடியதும், குறுகிய தூரத்திற்கு 'வயர்லஸ்' முறையில் தரவுகளைப் பரிமாற்றிக்கொள்ளக்கூடியதாகும். அதன்படி, இந்த முறையில் 30 அடி தூரத்தில் வைக்கப்பட்டுள்ள இரண்டு கருவிகளுக்கிடையே தரவுகளை வயர்லஸ் முறையில் பரிமாற்றக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அத்துடன், கணினியுடனான வயர்களின் எண்ணிக்கையை இயன்றவரை குறைப்பதற்கும் இந்த புளூடூத்தைப் பயன்படுத்த முடியும்.

உதாரணத்திற்கு, பிரிண்டர் ( PRINTER ) சற்றுத்தூரத்தில் இருந்தாலும் அதனைக் கணினியுடன் இணைப்பதற்கு புளூடூத் டொங்கல் மற்றும் எடப்டர்ஸ் ஆகியவற்றை பொருத்திக்கொள்ள முடியும்.
இதேவேளை, வைஃபை எனும் தொழில்நுட்பம், 300 அடி தூரத்தில் உள்ள இரண்டு கணினி க்கருவிகளுக்கிடையே வயர்லஸ் முறையில் தரவுகளை இதில் பரிமாறிக்கொள்ள முடியும். குறிப்பாக, அதிவிரைவு இணைய வசதிகளை இந்த முறை விசேடமாகப் பயன்படுகின்றது. இதன்போது, 'வைஃபை ஹொட்ஸ் பொட்ஸ்' அமைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.

உங்கள்
ஸ்ரீபரன்,
புளூடூத்/வைஃபை; வித்தியாசம் என்ன?
----------------------------------
       
        * புளூடூத் மற்றும் வைஃபை ஆகிய இரண்டு ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

        இரண்டுமே 'வயர்' தொடர்புகளற்ற 'வயர்லஸ்' முறையிலான தொழிற்பாட்டைக் கொண்டவையாகும். இரண்டிலும் ஒத்த பண்புகள் இருப்பது போன்று முரண்பாடான சில பண்புகளும் இருக்கவும் செய்கின்றன.

          இதில் புளூடூத் குறைந்த வலுவில் இயங்கக்கூடியதும், குறுகிய தூரத்திற்கு 'வயர்லஸ்' முறையில் தரவுகளைப் பரிமாற்றிக்கொள்ளக்கூடியதாகும். அதன்படி, இந்த முறையில் 30 அடி தூரத்தில் வைக்கப்பட்டுள்ள இரண்டு கருவிகளுக்கிடையே தரவுகளை வயர்லஸ் முறையில் பரிமாற்றக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அத்துடன், கணினியுடனான வயர்களின் எண்ணிக்கையை இயன்றவரை குறைப்பதற்கும் இந்த புளூடூத்தைப் பயன்படுத்த முடியும்.

      உதாரணத்திற்கு, பிரிண்டர் ( PRINTER ) சற்றுத்தூரத்தில் இருந்தாலும் அதனைக் கணினியுடன் இணைப்பதற்கு புளூடூத் டொங்கல் மற்றும் எடப்டர்ஸ் ஆகியவற்றை பொருத்திக்கொள்ள முடியும்.

        இதேவேளை, வைஃபை எனும் தொழில்நுட்பம், 300 அடி தூரத்தில் உள்ள இரண்டு கணினி க்கருவிகளுக்கிடையே வயர்லஸ் முறையில் தரவுகளை இதில் பரிமாறிக்கொள்ள முடியும். குறிப்பாக, அதிவிரைவு இணைய வசதிகளை இந்த முறை விசேடமாகப் பயன்படுகின்றது. இதன்போது, 'வைஃபை ஹொட்ஸ் பொட்ஸ்' அமைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.

    புதிய மொபைல் மற்றும் தொழில்நுட்ப செய்திகளை அறிய ThagavalGuru (https://mbasic.facebook.com/thagavalguru1?_e_pi_=7%2CPAGE_ID10%2C3493936615) பக்கம் ஒரு லைக் செய்யுங்கள்.இப்பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.

உங்கள்
்ஸ்ரீபரன்,
அட்மின்

புதன், 17 டிசம்பர், 2014

மெமரிக்கார்ட் சேதம்....

=====================
மெமரிக்கார்ட் சேதம்
=====================
கைத் தொலைபேசி மற்றும் டிஜிட்டல் கெமரராக்களில் உள்ள மெமரிக் கார்ட்களை ( MEMORY CARD ) பயன்படுத்தும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் எவை?
தரத்தில் சிறந்த 'மெமரி கார்ட்' பல லட்சம் தடவைகள் தரவுகளை உள்ளடக்குதல், வாசித்தல், அவற்றை அழித்தல் போன்றவற்றை செய்யக்கூடிய வலுவைக் கொண்டிருக்கும். அத்துடன், அதனை பல ஆயிரம் தடவைகள் கார்ட் ரீடரில் பொருத்தும்போதும் கழற்றும் போதுதான் அதற்கு சேதங்கள் ஏற்படுகின்றன.
'மெமரி கார்டை' அதற்கு பொருத்தமான ரூடரில் பொருத்தும் பொதுஅளவிற்கதிகமாக அதனை அழுத்திப் பொருத்தக்கூடாது. பொதுவாக, அது இலகுவாக ரீடரில் பொருத்தக்கூடியதாகவே இருப்பதுண்டு. பொருத்தமற்ற அல்லது ஓரளவே பொருத்தமான ரீடரில் 'மெமரி கார்ட்' உட்செலுத்து அழுத்தும்போதுதான் சேதமடைகிறது.
அத்துடன், தரவுகளை வாசிக்கும் போதோ, எழுதும்போதோ, தரவுகளை அழிக்கும்போதோ அல்லது அவற்றை மழுமையாக செய்துமுடிப்பதற்கிடையில் 'ரீடரில்' இருந்து 'கார்ட்டை' வெளியே எடுக்கும் போதோ மெமரி கார்ட்டில் சேதம் ஏற்படலாம்.
மேலும் மெமரிக் காட்டில் கீறல்கள், நெழிவுகள், மடிப்புக்கள் ஆகியன ஏற்படாத வகையில் அவற்றை பக்குவமாக பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்.
அதுமட்டுமின்றி கடும் வெய்யிலில் படுதல், காந்தத்திற்கு அருகே வைத்தல் , கார்ட் வெப்பமடையக்கூடிய இடங்களில் வைத்தல் ஆகிய இடங்களில் வைத்தல் ஆகிய காரணங்களினாலும் மெமரிக கார்ட் பாதிப்படையக்கூடும்.
மெமரிக்கார்ட் சேதம்
=====================

                   மெமரிக்கார்ட் சேதம்
=====================

                கைத் தொலைபேசி மற்றும் டிஜிட்டல் கெமரராக்களில் உள்ள மெமரிக் கார்ட்களை ( MEMORY CARD )  பயன்படுத்தும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் எவை?

           தரத்தில் சிறந்த 'மெமரி கார்ட்' பல லட்சம் தடவைகள் தரவுகளை உள்ளடக்குதல், வாசித்தல், அவற்றை அழித்தல் போன்றவற்றை செய்யக்கூடிய வலுவைக் கொண்டிருக்கும். அத்துடன், அதனை பல ஆயிரம் தடவைகள் கார்ட் ரீடரில் பொருத்தும்போதும் கழற்றும் போதுதான் அதற்கு சேதங்கள் ஏற்படுகின்றன.

          'மெமரி கார்டை' அதற்கு பொருத்தமான ரூடரில் பொருத்தும் பொதுஅளவிற்கதிகமாக அதனை அழுத்திப் பொருத்தக்கூடாது. பொதுவாக, அது இலகுவாக ரீடரில் பொருத்தக்கூடியதாகவே இருப்பதுண்டு. பொருத்தமற்ற அல்லது ஓரளவே பொருத்தமான ரீடரில் 'மெமரி கார்ட்' உட்செலுத்து அழுத்தும்போதுதான் சேதமடைகிறது.

           அத்துடன், தரவுகளை வாசிக்கும் போதோ, எழுதும்போதோ, தரவுகளை அழிக்கும்போதோ அல்லது அவற்றை மழுமையாக செய்துமுடிப்பதற்கிடையில் 'ரீடரில்' இருந்து 'கார்ட்டை' வெளியே எடுக்கும் போதோ மெமரி கார்ட்டில் சேதம் ஏற்படலாம்.

                மேலும் மெமரிக் காட்டில் கீறல்கள், நெழிவுகள், மடிப்புக்கள் ஆகியன ஏற்படாத வகையில் அவற்றை பக்குவமாக பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்.
  அதுமட்டுமின்றி கடும் வெய்யிலில் படுதல், காந்தத்திற்கு அருகே வைத்தல் , கார்ட் வெப்பமடையக்கூடிய இடங்களில் வைத்தல் ஆகிய இடங்களில் வைத்தல் ஆகிய காரணங்களினாலும் மெமரிக கார்ட் பாதிப்படையக்கூடும்.

புதிய மொபைல் மற்றும் தொழில்நுட்ப செய்திகளை அறிய ThagavalGuru பக்கம் ஒரு லைக் செய்யுங்கள்.இப் பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.

உங்கள
்ஸ்ரீபரன்,
அட்மின்்

செவ்வாய், 16 டிசம்பர், 2014

HTML Tutorial -10-பத்திக் குறி ஒட்டு( Paragraph Tag)

 
கடந்த பதிவில் முழுமுதன்மையான குறிஒட்டுக்களான <b></b>, <i></i> 
மற்றும் <u></u> என்பதைப் HTML Tags-(Part-I) பார்த்தோம்.
இந்தப் பதிவில் பத்திக் குறி ஒட்டு( Paragraph Tag) என்பதைப் பற்றிப் பார்ப்போம்.


பத்திக் குறி ஒட்டில் தொடக்கம் <P> இவ்வாறு இருக்கும். இது ஒரு புதிய பத்தி தொடங்குவதைக் குறிக்கிறது.

</p> என்னும் முடிவுக் குறி ஒட்டு பத்தி முடிவதைக் குறிக்கிறது.

இந்தக் குறி ஒட்டு எதற்கென்றால் ஒவ்வொரு பத்தியாக(Paragraph) பிரித்துக்காட்டப் பயன்படுகிறது. இதில் ஆரம்ப குறிஒட்டு ஒன்றை சேர்த்தால் கூட போதுமானது.


உதாரணத்தைக் கவனியுங்கள்..

<HTML>
<BODY>
<P>இந்த எளிய தமிழில் HTML தொடர் எளிமையாகவும், புதிய
வாசகர்களுக்கும், HTML கற்க விருப்பமுள்ளவர்களுக்கும்
பயனுள்ளதாக உள்ளது. </p><p>இந்த தளத்தைப் பற்றி உங்கள்
கருத்துகளையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். </P>
<P>தொடர்ந்து உங்களின் நல்லாதரவையும் ஒத்துழைப்பையும்
வழங்க கேட்டுக்கொள்கிறேன். <p> நன்றி. வணக்கம். 
<BODY>
</HTML>

 இதன் வெளிப்பாடு இவ்வாறு இருக்கும். 


எனவே ஒரு பத்திக்கும்(Paragraph) அடுத்த பத்திக்கும்(Paragraph) 
 
இடைவெளி காண்பிக்க இந்த Pragraph Tag பயன்படுகிறது என்பதை 
 
அறிந்துகொள்ளுங்கள். இதைச் செயல்படுத்தி பார்க்க நோட்பேடில்

மேற்கொண்ட நிரல்வரிகளை எழுதி Body Section -ல் ஒன்றிரண்டு பத்திகளை 
 
எழுதி அவற்றிற்கிடையில் Pragraph Tag-ஐப் பயன்படுத்திப் பாருங்கள்.

அதன் விளைவை உலவியில் திறந்து பார்த்தால் தெரியும். Pragraph Tag 
 
இடாத பத்திகள் அனைத்தும் இடைவெளியில்லாமலும் , Pragraph Tagஇட்ட 
 
பத்திகள் இடைவெளிவிட்டு அமைந்திருப்பதையும் காணலாம்.

HTML Tutorial 9-HTML ஆவணத்தை வடிவூட்ட(formation)

HTML Tutorial 9

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கடந்த இடுகையில் பார்த்த அடிப்படை HTML ஆவணம். இதை மேலும் நாம் வடிவூட்டலாம்(format)
அதாவது ஒரு ஓவியம் வரையும்போது முதலில் கோடுகளால் வரைந்துவிட்டுப் பிறகு அவ்வோவியத்திற்கு நிழல்(Shadow) ,மற்றும் விரும்பிய வண்ணங்கலவைக் கொண்டு மாற்றி அமைப்பதுபோலவே நமது HTML ஆவணத்தையும் வடிவூட்டலாம்.
ஹெச்.டி.எம்.எல் ஆவணத்தை கவர்ச்சிகரமாகக் காட்ட HTML-ல் பல குறிஒட்டுகள்(TAGS) உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி ஒரு ஆவணத்திலுள்ள உரையை அழகுப்படுத்துவதுடன், அதில் படங்களையும், வண்ணங்களையும், ஒலிகளையும், காணொளிகளையும் சேர்க்கலாம்.

இத்தகைய வடிவூட்டல்களுக்குப் பயன்படும் குறிஒட்டுகளைப் பற்றிப் 
 
பார்க்கலாம்.

1.தலைப்புக் குறி ஒட்டு (Heading Tags)

எழுத்துகளை பெரிதாகவும், தடிமனாகவும் கொடுப்பதன் மூலம் 
 
காண்போரின் 
 
கவனத்தை ஈர்க்க முடியும். HTML ஆவணத்தில் ஆறு அளவுகளில் 
 
தலைப்புகளை அமைக்க முடியும். இந்த எழுத்து அளவுகள் ஏற்கனவே 
 
முன்வரையறுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த அளவுகளை <H1>...</H1> 
 
எனத் தொடங்கி <H6>...</H6> வரைக் குறிப்பிடலாம்..

<H1> என்பது இருப்பதிலேயே பெரிய அளவையும், <H6> என்பதை 
 
இருப்பதிலேயே சிறிய அளவையும் குறிக்கும்.

வேறுபட்ட அளவுள்ள தலைப்புகளை உருவாக்குவதற்காக எழுதப்பட்ட நிரல் 
 
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

<HTML>
<HEAD>
<TITLE> Heading Tags</TITLE>
</HEAD>
<BODY>
<H1>Heading Level 1 </H1>
<H2>Heading Level 2 </H2>
<H3>Heading Level 3 </H3>
<H4>Heading Level 4 </H4>
<H5>Heading Level 5 </H5>
<H6>Heading Level 6 </H6>
</BODY>
</HTML>

மேற்கண்ட கோடிங்கை ஒரு நோட்பேடில் எழுதி  உங்களுக்கு விருப்பமான 
 
பெயரில் .html என்ற விரிவுடன் சேமித்துக்கொள்ளுங்கள்.

சேமிக்கப்பட்ட கோப்பை உங்கள் இணைய உலவியில் (Internet 
 
Browser)பிரௌசரில் திறந்து பார்க்கும்போது இவ்வாறு இருக்கும். 

Heading Level 1

Heading Level 2

Heading Level 3

Heading Level 4

Heading Level 5
Heading Level 6
பல்வேறுபட்ட தலைப்புகளை HTML -ல் எழுதிப் பழகுங்கள்.

2. கிடைக்கோடுகள் (Horizontal Rules)

  • <HR> என்ற கிடைக்கோட்டுக் குறி ஒட்டு, ஒரு கிடைக்கோட்டினை உருவாக்குகிறது.
  •  
  • ஒரு ஆவணத்தின் முக்கியப் பகுதிகளைப் பிரித்துக்காட்ட கிடைக்கோட்டுக் 
  •  
  • குறி ஒட்டு(<HR> tag) பயன்படுகிறது.

  • <HR> குறி ஒட்டைப் பயன்படுத்தி வரையப்படும் கோட்டின் தடிமனைக் கூட 
  •  
  • தீர்மானிக்க முடியும்.
  •  
  •  
  • அவ்வாறு செய்வதற்கு <HR> குறி ஒட்டுடன் சில பண்புகளைச் சேர்க்க 
  •  
  • வேண்டும்.
  •  
  •  
  • SIZE மற்றும் NOSHADE என்பவை <HR> குறி ஒட்டுடன் அடிக்கடி 
  •  
  • பயன்படுத்தப்படும் பண்புகளாகும்.
  •  
  •  வரையப்படும் கோட்டின் தடிமனைக் குறிக்க SIZE பண்பு பயன்படுகிறது. 
  •  
  • NOSHADE பண்பு வரையப்படும் கோட்டை சாம்பல் நிறத்தில் (நிழலகற்றி) 
  • காட்டப் பயன்படுகிறது.

  • கவனிக்க: <HR> முடிவு குறி ஒட்டு இல்லை. 

உதாரணமாக இந்த ஆவணத்தைப் பாருங்கள்..

<HTML>
<HEAD>
<TITLE> Horizontal Rules</TITLE>
</HEAD>
<BODY>
 This is Horizontal rules  This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules
 <!--கிடைமட்ட கோட்டின் தடிமனைக் காட்ட-->
<HR size="5">
 This is Horizontal rules  This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules
 <!-- கிடைமட்டக்கோட்டில் உள்ள சாம்பல் நிறத்தை தவிர்க்க-->
This is Horizontal rules  This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules
  <HR size="5" noshade >
</BODY>
</HTML>

மேற்கண்ட HTML நிரல்வரிகளுக்கான வெளிப்பாடு...


This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules<HR>
<!--கிடைமட்டக் கோடு -->
This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules


This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules


This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules

This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules



மேற்கண்ட படத்தில்...

1. கிடைமட்டக்கோடு கோடு <HR>
 
2. கிடைமட்டக் கோட்டின் தடிமன் ஐந்து புள்ளிகள் 
 
அதிகரிக்கப்பட்டிருக்கிறது...மேற்கண்ட வரியில்size="5" என்பதற்கு பதில் 
 
உங்களுக்கு விருப்பமான எண்ணை உள்ளிடலாம். எண்ணின் மதிப்பு 
 
அதிகரிக்க கோட்டின் தடிமன் அதிகமாகும்.

3. கிடைமட்டக் கோட்டில் வரும்  சாம்பல் நிற நிழலை(shade)த் தவிர்க்க "no 
 
shade" என்ற சிறப்புப் பண்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.


 இதுபோல் நிறைய  வடிவூட்டல் குறிஒட்டுகள்  HTML ஆவணத்தில் 
 
பயன்படுத்தலாம்.
 

Popular Posts

Facebook

Blog Archive