கிளையன்ட் சர்வர் தொழில் நுட்பம்.-ஒரு அறிமுகம். | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil கிளையன்ட் சர்வர் தொழில் நுட்பம்.-ஒரு அறிமுகம். ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 27 மே, 2014

கிளையன்ட் சர்வர் தொழில் நுட்பம்.-ஒரு அறிமுகம்.

கிளையன்ட் சர்வர் தொழில் நுட்பம்.-ஒரு அறிமுகம்.

 

 


கிளையண்ட் சர்வர் தொழில் நுட்பத்தில் ஒரு கணினி கிளையண்ட் ஆகவும் ஒரு கணினி சர்வராகவும் செயல் படுகின்றது.

கிளையண்ட் ஆனது user interface மூலம் தனக்கு வேண்டிய தகவலை(data) பெற சர்வருக்கு கோரிக்கை அனுப்பும்.செர்வர் தன்னிடம் உள்ள data base  ல் இருந்து தகவலை கிளையண்ட்டுக்கு அனுப்பும்.

கிளையண்ட் சர்வர் மாடலானது local area network,internet இரண்டிலுமே பயன் படுகின்றது.இன்டெர்னெட் கிளையன்ட் சர்வர்க்கு உதாரணம் உலாவி மற்றும் வெப் சர்வர்
கிளையன்ட் என்பது சாதாரண pc தான். இதில் நெட்வொர்க் மென்பொருள் நிறுவப் பட்டிருக்கும்.இது சர்வருக்கு request ஐ அனுப்பவும் data வை பெறவும் பயன் படுகின்றது.

ஒரு சர்வரானது ஒன்றுக்கு மேற்பட்ட கிளையண்ட்டுக்கு டேட்டாவை சர்வ் பண்ணலாம்.. அதே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சர்வர்கள் ஒன்றாக இணைந்து கிளையண்ட்டுகளுக்கு சர்வ் பண்ணலாம்.

கிளயண்டில் display இருக்கலாம். சர்வரில் display அவசியமில்லை.

ஒரு சர்வரானது மற்ற  சர்வெர் கணினிக்கு கிளையண்ட் ஆக இருக்கலாம்.

கிளையன்ட் சர்வர் மாடலானது டேட்டா பேஸை பகிர பயன்படுகின்றது.

இது two tier model,three model எனப்பிரிவுகளாக உள்ளது.

டேட்டா பரிமாற்றத்துக்கு sql மிகவும் உதவுகின்றது.sql ஆனது
GUI(graphical user interface) ஐ உபயோகிக்கின்றது.

RPC protocol(set of rules) ஆனது ஒரு ஒரு கணினியிலிருந்து மற்ற கணினிக்கு எவ்வாறு ரெக்வெஸ்ட் அனுப்பி டேட்டாவை பெற வேண்டும் என்பதை நிர்ணயிக்கின்றது

Two tier architecture:


Two tier architecture ஆனது மூன்று காம்பணன்டுகளை கொண்டது.
1.       User system interface
2.       Process management
3.       Data base management.

User system interface ஆனது டெக்ஸ்ட் இன்புட்,டயலாக் பாக்ஸ்,session என பல வகையான பகுதிகளை கொண்டது.

 கிளையன்ட் ஆனது user interface மூலம் சர்வரை அணுகுகின்றது. சர்வரில் உள்ள data baseல் இருந்து தகவலை அனுப்புகின்றது. கிளையன்ட், சர்வர் இரண்டுமே process management க்கு பொறுப்பாகும்.

இவ்வகையான local networkல் நூறு  கிளையன்ட் வரை இணைக்கலாம்.

Three Tier Architecture:

 

Three Tier Architecturelல் middle tier ஒன்று இருக்கும். இது கிளையன்ட்டுக்கும்

Data base சர்வருக்கும் இடையே இருக்கும்.இது process managementக்கு உதவுகின்றது.

இதில் business logic and rules இருக்கும். Messaging serverம் middle tier ஆக பயன் படுகின்றது

Popular Posts

Facebook

Blog Archive