C மொழி 3ம் பாடம்.
C மொழி 3ம் பாடம்.
Key words-
இவை reserved words என்றும் அழைக்கப்படுகின்றது.
இவற்றுக்கென்று ஏற்கெனவே நிர்ணயிக்ககப் பட்ட அர்த்தங்கள் உள்ளன.
பொதுவாக எல்லா நிரல் மொழிகளிலுமே key words ஐ அடிப்படையாக கொண்டு தான் நிரல்கள் எழுதப் படுகின்றன.
Key words அட்டவனை
C-tokens:
இவை c-மொழியின் அடிப்படை கூறுகளாகும்.
அவையாவன:
Key words
Constants
Strings
Operators
Identifiers
Reserved words.
Identifiers:
இவை மாறிகள்,வ்ழிமுறைகள்,அர்ரே போன்ற பயனர் உருவாகும் object களூக்கு இடப்படும் பெயர்களாகும்.
இவற்றுக்கென்று சில விதி முறைகள் உள்ளன.
1. இவற்றில் alphabets, digits, underscore(_) முதலியவை வரலாம்.
2. ஆனால் முதல் எழுத்து alphabet ஆகவோ அல்லது underscore ஆகவோ மட்டுமே இருக்க வேண்டும்.
3.Keywords ஐ பயன்படுத்தக் கூடாது.
4. எந்த ஒரு special character ம் வரக்கூடாது (underscore தவிர.).
குறிப்பு:
Identifiers are case sensitive.அதாவது name என்பதும் NAME என்பதும் வெவ்வேறு பெயராக C எடுத்துக் கொள்ளும்.
மாறிலிகள்(constants).
இவற்றின் மதிப்புகளானது ஒரு தடவை நிர்ணயிக்கப் பட்டால் மீண்டும் மாறாது.
The type of constants are:
i) Numeric constant
ii) Character constant
iii) String constant
தரவினங்கள்(data types)
இவை மாறிகளில் என்ன விதமான மதிப்புகளை சேமிக்கப் போகின்றோம் என்பதை குறிப்பதாகும்.
அடிப்படை தரவினங்கள்.
Int
Float
Double
Char
Type modifiers:
எல்லா அடிப்படை தரவினங்களும் அதன் முன்னால் Type modifiers ஐ ஏற்கின்றன.
அவையாவன:
Signed
Unsigned
Long
Short
Signed
இவை positive ஆகவோ அல்லது negative மதிப்புகளாகவோ இருக்கலாம்.
Unsigned; இவை positive மதிப்புகளை மட்டும் ஏற்கும்.