இன்டர்நெட் பில் (internet bill)அதிகரிக்காமல் அளவோடு பயன்படுத்த | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil இன்டர்நெட் பில் (internet bill)அதிகரிக்காமல் அளவோடு பயன்படுத்த ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 27 ஆகஸ்ட், 2014

இன்டர்நெட் பில் (internet bill)அதிகரிக்காமல் அளவோடு பயன்படுத்த

வணக்கம் நண்பர்களே..!
இணைய இணைப்பு பெற நாம் பல வழிகளை பயன்படுத்துகிறோம். அதாவது பிராட்பேண்ட்  டேட்டா கார்ட், செல்போன் போன்றவைகளிலிருந்து குறிப்பிட்ட   அளவு (1GB, 2GB, 500MB) போன்ற குறைந்த இணைய
பயன்பாடுள்ள வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டிருப்போம்.

இணையத்தைப் பயன்படுத்தும்பொழுது எவ்வளவு யூசேஜ் ஆகிறது.. என்பதை இன்னும் எவ்வளவு இருக்கும்?.. அதிகமாக பயன்படுத்தினால் இன்டர்நெட்பில் எகிறிடுமே.. என்றெல்லாம் சிந்தனையில் இருந்தவாறே பயன்படுத்திக்கொண்டிருப்போம்.
நம்மை அறியாமல் இணையத்தை கட்டுப்பாடில்லாமல் பயன்படுத்தும்பொழுது, பயன்படுத்ததக்க அளவை அடைந்து ஒன்று பயன்பாடு நின்றுவிடும். அல்லது அதிகபட்சம் பயன்படுத்தியதற்காக இன்டர்நெட்பில் இரட்டிப்பாகிவிடும்.
இவ்வாறான தொல்லைகளைத் தவிர்க்கவும், இணையத்தை இதுவரைக்கும் எத்தனை GB வரைக்கும் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதை நாம் ஒவ்வொரு முறையும் இணையத்தொடர்பை ஏற்படுத்தும்பொழுது குறிப்பிட்டுக் காட்டுவதற்காகவே ஒரு மென்பொருள் உள்ளது.
மென்பொருளின் பெயர் Net Speed Monitor. இந்த மென்பொருள் நாம் கணினியை உயிர்ப்பித்து, இணைய இணைப்பை ஏற்படுத்தும்பொழுது, இதுவரைக்கும் நாம் பயன்படுத்திய இணையத்தில் அளவை தேதி, மாத வாரியாக நமக்கு காட்டும்.
மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி:
http://netspeedmonitor.en.softonic.com/download
இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்து அதை விரித்து (Extract) செய்து நிறுவிக்கொள்ளுங்கள். மென்பொருளை நிறுவியவுடன் கணினியின் TaskBar-ல் வலதுபக்கம் நீல நிறத்தில் ஒரு சிறிய அளவீட்டு படம் தோன்றும்.
அதில் U எனக் குறிப்பிட்டிருப்பது Upload அளவினையும், D என்பது Download அளவினையும் குறிக்கும். இந்த அளவீடானது நீங்கள் இணையத்தை தொடர்புகொள்வதிலிருந்து ஆரம்பிக்கும்.
டாஸ்க்பாரில் உள்ள நீல நிற படத்தில் ரைட் கிளிக் செய்து நீங்கள் பயன்படுத்திய தரவுகளின் அளவுகள் முதல், சில மேலதிக வசதிகளையும் பெற முடியும்.
நன்றி நண்பர்களே..!


- தங்கம்பழனி
sdfasdfsdf sdf sdf sdfasdf

Popular Posts

Facebook

Blog Archive