ஆண்ட்ராய்ட் ஒன்' திட்டம் அடுத்த மாதம் இந்தியாவில் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil ஆண்ட்ராய்ட் ஒன்' திட்டம் அடுத்த மாதம் இந்தியாவில் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

திங்கள், 29 செப்டம்பர், 2014

ஆண்ட்ராய்ட் ஒன்' திட்டம் அடுத்த மாதம் இந்தியாவில்

Photo: ஆண்ட்ராய்ட் ஒன்' திட்டம் அடுத்த மாதம் இந்தியாவில்

பட்ஜெட்விலையில் வெளியாகும் ஸ்மார்ட் போன்களில், சீரிய வசதிகளைத் தந்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்க, கூகுள் ”ஆண்ட்ராய்ட் ஒன்” என்ற ஒரு திட்டத்தினை வடிவமைத்துள்ளது. இதனை அடுத்த மாதம் இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட் போன்களில் முதன் முதலாக, கூகுள் அறிமுகப்படுத்த இருக்கிறது. மைக்ரோமேக்ஸ், கார்பன் மற்றும் ஸ்பைஸ் நிறுவனங்கள் இந்த சிஸ்டத்துடன் கூடிய ஸ்மார்ட் போன்களை செப்டம்பரில் அறிமுகப்படுத்த இருக்கின்றன.
 
இந்த ஸ்மார்ட் போன்களின் விலை ரூ.7,000 முதல் ரூ.10,000 வரையில் இருக்கலாம். (பட்ஜெட் விலை என்பதால் இவை ரூ.6,000க்கும் கீழாக இருக்கும் என முன்பு எதிர்பார்க்கப்பட்டது) இங்கு வாடிக்கையாளர்கள் கொடுக்க இருக்கும் வரவேற்பிற்கு ஏற்றபடி, மற்ற நாடுகளிலும் இந்த திட்டத்தினை கூகுள் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் கொடுக்கும் வரவேற்பு, தன்னை நிலைப்படுத்திக் கொள்ள உதவும் என கூகுள் எதிர்பார்க்கிறது. 
 
இந்த திட்டத்தின்படி, கூகுள் தரும் சாப்ட்வேர் புரோகிராம்கள் இயங்க, மிகக் குறைவான அளவிலும், திறனுடனும் ஹார்ட்வேர் இருந்தால் போதும். இதனால், போன்களின் விலை நிர்ணயத்தை, அவற்றைத் தயாரிக்கும் நிறுவனத்திடமே கூகுள் தந்துவிட்டது. எந்த நிலையில் உள்ள வாடிக்கையாளர்கள் இவற்றை விரும்புவார்கள் என்பதனை அறிந்து, விலை நிர்ணயம் செய்யப்படும். இந்த நிறுவனங்கள் இதற்கெனத் தயாரிக்கும் மொபைல் போன்களில், இரண்டு சிம் இயக்கம், 5 மெகா பிக்ஸெல் கேமரா, மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், குவாட் கோர் ப்ராசசர், 1 ஜி.பி. ராம், 4.3 அல்லது 4.5 அங்குல திரை ஆகியன குறைந்த பட்சம் இருக்கும். இவற்றில் ஆண்ட்ராய்ட் கிட் கேட் 4.4. சிஸ்டம் இயங்கும்.

இது அக்டோபர் மாதத்தில், ஆண்ட்ராய்ட் எல் சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்யப்படும். அப்டேட் மூலம் கூகுள் தரும் புதிய வசதிகள், அகலத்திரை, பேட்டரி திறன் ஆகியவை, இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய சீரான அனுபவத்தினையும் வசதிகளையும் தரும் என கூகுள் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், குறைந்த விலை ஸ்மார்ட் போன்களில், வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. இந்த போன்களைத் தயாரிப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஸ்மார்ட் போன் பிரிவில், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் விஷயங்களைத் தன் கட்டுப்பாட்டில் கூகுள் கொண்டு வர முடியும். இந்த வகையில், மூன்று பிரிவினரும் திருப்தி அடைவதால், ஆண்ட்ராய்ட் ஒன் திட்டம் வெற்றி பெறும் என கூகுள் திட்டமிடுகிறது. 

இதை நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டியது நமது கடமை எனவே பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

Like our Page:
https://www.facebook.com/ComputerThagavelgal

Join our Group: 
https://www.facebook.com/groups/ComputerThagavelgal

பிடிச்சா லைக் பண்ணுங்கள்... 
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

Popular Posts

Facebook

Blog Archive