புதன், 27 மே, 2020
*இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு*
Author: Infomas | மே 27, 2020 |
வெள்ளி, 22 மே, 2020
_அனைவரும் படித்து தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு இது._*
Author: Infomas | மே 22, 2020 |
வியாழன், 21 மே, 2020
மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது?
Author: Infomas | மே 21, 2020 |
செவ்வாய், 3 ஜூலை, 2018
தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள் இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்து கொண்டு உள்ளனர்...
Author: Best Buy Offers | ஜூலை 03, 2018 |
தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள் இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்து கொண்டு உள்ளனர்...
தினசரி காலண்டரில் " கெர்போட்ட நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு கண்டேன். அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா?.
சிலர் காலண்டரின் பின் பக்கம் என்றைக்கெல்லாம் தமிழகஅரசு விடுமுறைன்னு பாக்கும் போதெல்லாம் *கெர்போட்ட நிவர்த்தி* என்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள் .
இது எதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல.
உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழை கணிப்பு முறை.
அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப ஓட்டம் என்று மாறி கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது.
நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரிய வழி மாதங்கள் பின்பற்ற படுகிறது
இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்.
அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில் சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது.
இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டு கொள்ளலாம்.
இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும்.
அதாவது
மழை கரு கொள்ளும் நாள் அல்லது மேகம் சூல் ஆகும் நாள்.
இதனை பெண்ணின் பத்து மாத கர்ப்ப காலத்துடன் ஒப்பிடுங்கள்.மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள்்ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்.
அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால்
ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழை பொழிவு அளவும் முறையாக இருக்கும்.
இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது.
ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரம் எல்லாம் தெரியாது இல்லையா??.
எனவே மார்கழி மாதம் அமவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்து கொள்வார்கள்.
இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள்.
எனவே வரும் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
மாறாக கர்ப்போட்ட நாட்களில் கன மழை பெய்து சூறைக் காற்று வீசினாலோ கடும் வெயில் இருந்தாலோ மேகத்தின் கரு கலைந்து விட்டது என்று பொருள்.
எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவ மழை பொய்க்கும் என அர்த்தம்.
இன்றைய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவ நிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது.
இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி (வானம் பார்த்த பயிர் ) பயிர்களை விதைக்கிறார்கள் விவசாயிகள்.
சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு.முன்னால் பூமியின் அச்சு அசையாமல் இருக்கும். இதுதான் கர்ப்போட்டம் சங்க கால நூலில் உள்ளது..இந்த காலத்தில் எத்தனை மிமீ மழை எங்கே, எவ்வளவு பதிவு ஆகிறதோ.அதை ஆறு மாத நாள்களால் பெருக்க வேண்டும். உதாரணம் 5மிமீ × 180=900 மிமீ சராசரியாக பெய்யும்..அதற்கு தகுந்தால் போல் நீர் மேலாண்மை செய்வார்கள்.
பயிரை தேர்வு செய்வார்கள்.
நாம் இது பற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில் கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல நம் பாரம்பரியத்தை கிழிக்கிறோம்.
ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று மழை வரும் நாட்களை தெரிந்து கொள்ள வானிலை அறிக்கைக்கு டீவியை பார்த்து கொண்டு அமர்ந்து இருக்கிறோம்.
புதுமையின் மோகத்தில் எத்துணை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்!!.
ஆராய்ந்து உன் முன்னோரின் யுத்திகளை கையாழு என் தமிழா.
இது போன்ற நுணுக்கங்கங்களை விவசாயிகளுக்கு கற்றுத் தர வேண்டிய நம் தமிழக அரசுக்கு.
இங்கு மெத்த படித்த அறிவியலுக்குதானே அரசு வேலையே !!.
இனியாவது கர்ப ஓட்டத்தை காண்போம்.
காவேரி புஷ்ர விழாவை அடுத்து இந்த மழை 144 ஆண்டுகளுக்கு பிறகு வரப் போகும் தாமிரபரணி புஷ்கர மழை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆற்றின் மகிமையை போற்றும் தாமிரபரணி புஷ்கர விழாவில் அவசியம் நாம் சந்திப்போம்...நீராடுவோம்.
"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்...
தமிழகம் சிறக்க தீரா தாகத்துடன் உங்கள்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்
பகிர்வது நம் கடமை.
செவ்வாய், 19 ஜூன், 2018
வெள்ளைகழிச்சல் வந்தகோழிகலுக்கு தண்னீரை கொதிக்கவைத்து அதில் meriqun இரண்டு சொட்டு ofm ஐந்துசொட்டு 1mlதண்ணீர் கலந்து கொடுத்துதேன் ஒருநாளைக்கு இரண்டு வேலை தொடர்த்து மூன்று கொடுத்தேன் வெள்ளைகழிச்சல் நின்றுவிட்டது
Author: Best Buy Offers | ஜூன் 19, 2018 |
BIGG BOSS வரவு செலவு : 👇
Author: Best Buy Offers | ஜூன் 19, 2018 |
BIGG BOSS வரவு செலவு : 👇
விஜய் டிவியில் Bigg Boss நிகழ்ச்சி...
விஜய் டிவியின் வியாபாரம்..
ஸ்டுடியோ செட்டிங் செலவு ₹20 கோடி.
நிகழ்ச்சி ஆங்கர் கமலுக்கு ₹ 20 கோடி.
மற்ற 14 பேருக்கு ₹ 42 கோடி
100 நாள் படப்பிடிப்பு செலவு ₹25 கோடி
முதல் நாள் மற்றும் கடைசி நாள் விழாச் செலவு ₹ 3 கோடி
மொத்த செலவு ₹110 கோடி
இனி வரவு!
விளம்பரம் மட்டும்.
30 வினாடிக்கு ₹ 25 லட்சம்
ஒரு நாளின் மொத்த வியாபார நிமிடங்கள் 25 (x 60 விநாடி = 1500/30 = 50x.25) = ₹12.5 கோடி
100 நாட்களுக்கு வரவு ₹ 1250 கோடி
மொத்த லாபம் =₹ 1140 கோடிகள்
நிறைய பேருக்கு இந்த நிகழ்ச்சிய பத்தி முழுசா தெரிந்திருக்க வாய்ப்பில்ல !!!
ஹிந்தில பல வருஷமா ஓடிட்டு இருக்குர நிகழ்ச்சி இப்போ தமிழ்நாட்டுக்கு வந்திருக்கு !!!
100 நாள்னு சொன்னாலும் அதோட சூட்டிங்க மிஞ்சி போனா பத்தே நாள்ல முடிச்சிடுவாங்க, அத அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர கணக்குல பிரிச்சு 100 நாளைக்கு ஒளிபரப்புவாங்க !!!
என்னன்ன நடக்கனும் பேசனும்னு எல்லாமே முன்னடியே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு தான் சூட்டிங் தொடங்குமே !!!
ஒவ்வொருத்தரா மக்கள் ஓட்டு போட்டு வெளியேத்திட்டு இருப்பாங்க , ஆனா உண்மையிலேயே யாரு வெளியேரனும்னு முடிவு பண்ணிதான் அதுக்கு ஏத்த மாதிரி காட்சிகள் அமைக்க பட்டிருக்கும் !!!
நிறைய சண்டைகள் , மோதல்கள், விவாதம், சச்சரவில் தொடங்கி காதல், கள்ளகாதல், பாலியல் தொல்லைகள் உட்பட நடப்பதுபோல் காட்சிகள் அரங்கேறும் !!!
மக்கள் அதை கண்டு கொதித்தெழுந்து தவறு செய்தவனுக்கு எதிராக ஓட்டு அளித்து வெளியேற்றும்படி நடைபெறும் !!!
சிலர் தாங்கலாகவே உள்ளே இருக்க முடியாமல் கோபத்தில் வெளியேருவது போல் வைத்து TRP ஏற்றுவார்கள் !!!
இளைஞர்களை கவர வீட்டினுள் கவர்ச்சியான அரைகுறை ஆடைகளையே அணிந்து வருவார்கள் நடிகைகள் !!!
ஊரெங்கிலும் இதில் நடைபெறும் சம்பவங்களையே பேசுமாறு வைப்பார்கள் !!!
இறுதியில் அவர்கள் முடிவு செய்த படியே ஒருவரை மக்களே தேர்ந்தெடுத்தது போல் பரிசு வழங்கி அடுத்த சீசனுக்கான வேலைகள் தொடங்கி விடும் !!!
இது எல்லாம் தானாக நடப்பதாக நம்பி இதுவரை அக்கம் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என பார்த்து வந்த மக்கள் , இனி இந்த வீட்டில் என்ன நடக்கிறது என பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் , அடுத்த சீசனுக்காக ஏங்கவும் செய்வார்கள் !!!
அடுத்தவர் வீட்டில் நடப்பதை மிகுந்த அக்கறை கொண்டு எட்டி பார்க்கும் நம் மன ஓட்டமே இந்த நிகழ்ச்சியின் உயிர் நாடி !!!
அதை வைத்தே கலாச்சாரத்தை அழித்து காசு பார்க்கும் ஒரு கும்பல் !!!
அதை கிண்டல் செய்கிரேன் என மீம்ஸ் போட்டு மக்களிடையே இன்னும் அதிகமாக பகிர வைக்கும் சில இளைஞர்கள் !!!
முடிந்தால் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டு மக்களுக்கு புரிய வையுங்கள் !!!
இந்த முறையாவது மீடியா TRP பசிக்கு பலி ஆகாமல் சாமர்த்தியமாக விழித்து கொண்டு... 👍
வெள்ளி, 8 ஜூன், 2018
✍ *மரமும்* *மனிதனும்* 🌴🌴🌴🌴🌴🌴🌴பலா மரம்
Author: Best Buy Offers | ஜூன் 08, 2018 |
✍ *மரமும்* *மனிதனும்* 🌴🌴🌴🌴🌴🌴🌴பலா மரம்
பலா (Atrocarpus heterophyllus) பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் பலா இனத்தைச் சேர்ந்த மரம். மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. விந்தையாக, உலகின் சில இடங்களில் ‘பழங்களின் அரசன்’ என்று போற்றப்படும் பலா சில இடங்களில் பயன்படுத்தப்படாமல் குப்பையில் வீசப்படுகிறது. பலா எங்கு தோன்றியது என்பது பற்றி சரியான குறிப்புகள் ஏதுமில்லை. எனினும், அது இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது.
தென்னிந்தியாவில், மாம்பழம் மற்றும் வாழைப்பழத்துக்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது பலா ஆகும். இந்தியாவில், 2000ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, சுமார் 14,286 ஏக்கர் பரப்பளவில் (சுமார் 1,00,000 மரங்கள்) பலா வளர்க்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் வீட்டுத்தோட்டங்களிலும், வெற்றிலை, காப்பி, மிளகு, ஏலக்காய் தோட்டங்களில் நிழலுக்காகவும் பலா வளர்க்கப்படுகிறது. இலங்கையில், முக்கியமாக மரத்திற்காகவும், தாய்லாந்தில் பழத்திற்காகவும் வளர்க்கப்படுகிறது. பலா சாதாரணமாக விதை மூலமே வளர்க்கப்படுகிறது. நீரிலோ, 10% ஜிப்பரெலிக் அமில கரைசலிலோ ஊர வைப்பதன் மூலம் விதைகள் விரைவாக முளைக்கும். விதைகளை நிலத்தில் நேரடியாக நடாமல், நாற்றங்காலிலும் நடலாம். ஆனால், நாற்றுகளை விரைவில் நடாவிட்டால் அவை நாற்றங்காலிலேயே வேர் பிடித்து விடும். பலவிதமான ஒட்டு முறைகளில் பலாச்செடிகள் உருவாக்கப்பட்டாலும், அவை விதைசெடிகள் அளவு பிரபலமடையவில்லை. எனினும், காற்றில் வேர் பிடிக்கச்செய்தல், சிறு தண்டுகளை வேர் பிடிக்கச்செய்தல் ஆகிய முறைகள் மூலம் பலாச்செடிகள் உருவாக்கப்படுகின்றன. திசு வளர்ப்பு முறையிலும் பலாச்செடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மருத்துவப் பயன்கள் :
இதிலுள்ள பொட்டாசியம் சத்து, குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கிறது. இதன்மூலம் மாரடைப்பு நோய் வராமல் தவிர்க்கப்படுகிறது. கொழுப்புச்சத்து இல்லை என்பதால், இதய நோயாளிகளும் சாப்பிடலாம். இதிலுள்ள இரும்புச்சத்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தக்குறைபாடு வராமல் தடுக்கிறது.
வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளதால், பலா மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயலாற்றுகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று உண்டாகாமல் தடுக்கிறது. வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய்எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.
பலாவில் உள்ள லிக்னன்ஸ், ஆர்கானிக் கூட்டுத்தொகுப்பான ஐசோஃப்ளேவன்ஸ், சபானின் ஆகியவை புற்று நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. தவிர, உடல் முதிர்ச்சி ஏற்படாமல் இளமையாகத் தோன்றவும் உதவுகிறது.
செரிமானக்கோளாறு மற்றும் வயிற்றுப்புண்ணை குணப்படுத்துவதில் பலா நன்கு செயலாற்றுகிறது. இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, மலச்சிக்கல் உண்டாகாமல் தடுத்து, மலம் இலகுவாக வெளியேறவும் உதவுகிறது. பெருங்குடலையும் சுத்தமாக வைக்கிறது.
பலாப்பழத்திலுள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து, பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கிறது. மாலைக்கண் நோயையும் குணமாக்கும். தொடர்ச்சியாக பலா சாப்பிடுவோருக்கு கண் நோய்கள் வராது. எலும்புகள் பலமின்றி இருத்தல், எலும்புருக்கி நோய் உள்ளோர், பலா சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலப்படும்.
மக்னீசியம் மற்றம் கால்சியம் சத்துக்கள் இதற்கு உதவுகின்றன. பிள்ளைகளுக்குச் சாப்பிடக் கொடுத்தால் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கப்படும். மனித இயக்கத்திற்கு உதவும் தைராய்டு ஹார்மோன் உடலில் உற்பத்தியாகவும், அதை உட்கிரகிக்கவும் தாமிரச் சத்து அவசியம். பலாவிலுள்ள தாமிரச்சத்து இதற்கு உதவி செய்கிறது.
மருந்தாகும் ‘வேர்’ பலா மரத்தின் வேருக்கும் மருத்துவ குணங்கள் உண்டு. மூச்சுத்திணறல், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டோர், மரத்தின் வேரை நீரில் வேகவைத்து, அந்த சாற்றைப் பருகினால் நோய் விரைவில் குணமாகும். பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன.
கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன. அதிக அளவில் பலாப்பழம் உண்பது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. பழுக்காத பழச்சுளையை அப்படியே உண்பது நல்லதல்ல. அதே போல சமைக்காத கொட்டைகள் ட்ரிப்சின் என்ற புரதச்சிதைவு நொதியை பாதிப்பதால் செரிமாணத்தை பாதிக்ககூடும். பழுத்த பலாச்சுளைகள் மலமிளக்கியாக செயல்படுகின்றன.
ஆசியாவில் பலாப்பழங்கள் பலவாறாக உண்ணப்படுகின்றன. பெரும்பாலும், நன்கு பழுத்த பழத்தின் சுளைகள் அப்படியே உண்ணப்படுகின்றன. சிறு காய்,மற்றும் முற்றிய காய்களின் சுளைகள் கூட கறியாக சமைத்தோ அல்லது மெல்லிய வறுவல்களாகவோ உண்ணப்படுகின்றன.
ஆனால், மேலை நாடுகளில் பலாப்பழத்தின் மணம் விரும்பத்தகாததாக கருதப்படுகிறது. எனவே, அவர்கள் பெரும்பாலும் முற்றிய காய் சுளைகளையே உண்கின்றனர். மற்ற பழங்களைப் போலவே பலாப்பழத்திலிருந்தும் சாறு, ஐஸ் கிரீம், பழக்கூழ் மற்றும் பல விதமான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
பலாப்பழத்தின் விதைகள் கூட ஆசியாவில் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை வறுத்தும், வேக வைத்தும், சர்க்கரைப்பாகில் ஊற வைத்தும் உண்ணப்படுகின்றன. இவற்றை அரைத்து மாவும் தயாரிக்கப்படுகிறது. பலாப்பூக்கள் கூட சிலரால் சமைத்து உண்ணப்படுகின்றன. உணவாக மட்டுமின்றி, பலாப்பழத்தின் கடினமான தோல், பெக்டின் வகை கூழ்கள் தயாரிக்க உதவுகிறது. மேலும், இது புகையிலையை பதனிட பயன்படுகிறது.
முக்கனிகளில் ஒன்றாக முக்கியத்துவம் கொடுத்திருப்பதே, பலாவின் மகத்துவங்களை அறிந்துகொள்ள எளிய சான்று. வைட்டமின் ‘ஏ’, ‘சி’, தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின், ரிபோஃப்ளேவின் ஆகிய சத்துக்கள் உள்ள பலா, சிறந்த மருத்துவ குணங்கள் நிரம்பியது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இதன் உற்பத்தி துவங்கியிருக்கலாம் என்கிறார்கள்.
இந்தியா, இலங்கை, வங்காளம் மற்றும் தெற்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் விளைகிறது. தமிழகத்தில் கடலூர், பண்ருட்டி பகுதிகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பழத்தின் சுளை மற்றும் அதனுள் இருக்கும் விதையும் உணவாகச் சாப்பிடலாம். பலாக்காயை சமைத்து பயன்படுத்தலாம். மரத்தில் விளையும் பழங்களில் பெரியது என்ற பெருமை இதற்கு மட்டுமே உண்டு.
ஃப்ருக்டோஸ், சுக்ரோஸ் அதிகமாக இருப்பதே பலாப்பழத்தின் இனிப்புச் சுவைக்குக் காரணம். இது, சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் தரும். சோர்வாக இருக்கும்போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும். ரத்த அழுத்தம் உள்ளோர் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுப் பட்டியலில் தவிர்க்க முடியாதது பலா.
🌱🌱🌱🌱🌱
✍ *மரமும்* *மனிதனும்* 🌴🌴🌴🌴🌴🌴🌴“மரம் வளர்ப்போம்”,
Author: Best Buy Offers | ஜூன் 08, 2018 |
✍ *மரமும்* *மனிதனும்* 🌴🌴🌴🌴🌴🌴🌴“மரம் வளர்ப்போம்”, “இயற்கையைக் காப்போம்”, “இயற்கையை நேசி” “இயற்கையோடு வாழ்வோம்” இதுபோன்ற சொல்லடைகள் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன. காரணம் புவி வெப்பம் அடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது. இதனை தவிர்க்கவே மனித மனங்கள் இயற்கை பக்கம் வேகமாக திரும்பியிருக்கின்றது. எனவே புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க வேண்டும். இது இன்றைய இன்றியமையாத அவசியமாகயிருக்கின்றது. எனவே “வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்ற நிலைமாறி “ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்” என்று பேசும் நிலைக்கு வந்துள்ளோம். எனவே இன்று இயற்கை அழிவை காக்க, வெப்பம் தவிர்க்க முதற்காரணியாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்ற உணர்வை பெறுவோம்.
“இன்றிருக்கும் நிலையே தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாகும் என்பதில் சந்தேகமில்லை” என்று ஓர் ஆய்வு கட்டுரையில் படித்தேன். எனவேதான் இத்தகைய அவல நிலையை போக்க அரசு, பல தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் மரம் வளர்க்கும் பல ஏற்பாடுகளை செய்கின்றன. அவ்வப்போது விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்தி வருகின்றன.
“மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்” இது ஒவ்வொருவர் மனதிலும் ரீங்காரமிட வேண்டிய சொல்லாகும். மரங்கள் இயற்கையின் கொடை, இவைகள் பூமித்தாய் என்ற முதல் குழந்தைகள். இதை நாம் அழிக்க கூடாது. மாறாக அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஏனெனில் இயற்கையன்னை அனைத்தையும் நமது நலனுக்குத்தானே தந்து கொண்டிருக்கிறாள்.
நலம் தரக்கூடிய நம்மை, வாழ வைக்கக்கூடிய மரங்களை இயற்கை செல்வங்களை நாம் அழிக்கலாமா ? அழிக்கக் கூடாது. இன்று நடப்பது என்ன ? இயற்கை அழிக்கப்படுகிறது, மரங்கள் கொலை செய்யப்படுகின்றன. மணல் அள்ளப்படுகின்றன.
விவசாய நிலம் வாழுமிடமாக (பிளாட்) மாறுகிறது. அதனால் தான் நாம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். (எ.கா.) சுனாமி, நிலநடுக்கம், அதிக வெப்பம், புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் நாம்தான் பாதிக்கப்படுகின்றோம். ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. “நாம் எந்தளவு இயற்கையை நேசிக்கிறோமோ, அதைவிட பன்மடங்கு இயற்கை நம்மை நேசிக்கும்.
“ஆற்றிலே போட்டாலும் அளந்துபோடு”
அதுபோலவே இயற்கையை நாம் அழிக்கும்போது அதன் சீற்றமும் பன்மடங்காகத்தான் இருக்கும். இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். மரம் நடுவதன் அவசியத்தை நாம் தெரிந்து கொள்வோம்.
மரங்களினால் கிடைக்கும் நன்மைகள் :
1. தொழில்நுட்பங்களால் ஏற்படும் மாசு நிறைந்த சூழலை மரங்கள் தூய்மைப்படுத்தும்.
2. மரங்கள் தூய்மையான காற்றை வழங்கும்.
3. மரங்கள் வெப்பம் தணிக்கும்.
4. மரங்கள் பறவைகளின் சரணாலயம்.
5. மரங்கள் மண் அரிப்பை தடுக்கும்.
6. நிலத்தடி நீரைக் காக்கும்.
7. முக்கியமாக மழை பெய்ய பெரிதும் உதவுகின்றன.
8. பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளை தருகின்றன.
9. மருந்தாக பயன்படுகின்றன.
10. அழகு தரும் மர வேலைபாடுகளுக்கு உதவுகின்றன.
11. இயற்கை உரம் தருகின்றன.
12. இயற்கை சீற்ற அழிவை தடுக்கின்றன.
13. வீடு, கட்டடங்கள் கட்ட பயன்படுகின்றன.
14. நோய் தடுப்புக்கு உதவுகின்றன.
எனவே அன்பர்களே !
மரங்களை வளர்ப்போம் !
காடுகளை உருவாக்குவோம் !
மழை பெறுவோம்.
“பசுமையான தமிழகம் உருவாக்குவோம்.
இது நம்மால் முடியும்”
உங்களாலும் முடியும். செய்வீங்களா ? நம்புகிறேன். நீங்க நிச்சயம் ஒரு மரமாவது நடுவீங்க
🌱🌱🌱🌱🌱
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வள...
-
Browser Cookies Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாம...
-
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்...