புதன், 9 மார்ச், 2022
Palmyra Palm Tree - பனை மரம்
Author: Infomas | மார்ச் 09, 2022 |
"பனை"
மனிதனுக்கு இயற்கை அளித்த அற்புத வரம் பனைமரம் . இவற்றின் பயன்களும் மருத்துவ குணங்களும், எண்ணில் அடக்க முடியாது. பனை மரத்தை பெண் தெய்வமாம் பத்திரகாளியின் அம்சமாக மக்கள் வணங்கி வருகிறார்கள்.
தமிழக அரசின் சின்னமாகவும் பனை மரம் விளங்கி வருகிறது.
பனை (Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரம்.
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன.
பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது.
பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.
பெயரிடல்
****பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது.
புறக் காழனவே புல்லெனப் படுமே (பாடல் 630)
அகக் காழனவே மரமெனப் படுமே (பாடல் 631)
பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.
வகை
**பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை
1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை.
பனையின் பயன்கள்
********பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது.
பனையின் மருத்துவ குணங்கள்
************பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும், பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும், கொஞ்ச நாட்கள் போனால் கொட்டைக்குள் உருவாகும் சீப்பை கிடைக்கும், இந்த சீப்பை குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும்.
அதை இன்னும் கொஞ்சநாள் விட்டால் பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
நுங்கில் அதிகஅளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகமாக இருக்கிறது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.
நுங்கில் உள்ள நீர் சத்தானது, வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுபோக்கு இவ்விரண்டிற்கும் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.
பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும். உடல் பலமும் அதிகரிக்கும்.
தொடர்ந்து பதனீரை 40 நாட்கள் குடித்து வந்தால் மேக நோய் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துபோகும். உடல் வீக்கம், வயிற்றுக்கோளாறு, வெள்ளைப்படு, வெட்டை நோய்களை குணமாக்கவும், சிறுநீர் வெளியேற்றவும் பதனீர் நமக்கு உதவுகிறது.
பன கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டியும் சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும்.
நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிட்டால் நல்ல பயன்பெற முடியும்.
பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுவடையும். பனம் பழத்தின் சாறு தோல் நோய்களுக்கு மிகவும் சிறந்தது.
பனம் பூவை நெருப்பில் சுட்டு சாம்பலாக்கி மருந்தாக பயன்படுத்தலாம். இதன்மூலம் சிறுநீர் பெருக்கு, வாய்வு நோய்கள், பல் வலி, நாள்பட்ட காய்ச்சலுக்கும் மருந்தாகி உதவுகிறது.
உடல் வீக்கம், நெஞ்சு எரிச்சலும், பித்தக்கோளாறுகளுக்கும் கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் வீக்கத்தையும் குணப்படுத்தவும் பனை பூந்தண்டு சாம்பலை மருந்தாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
பனைமரம் பாலை விட்டு காய்க்க தொடங்கினால், அந்த பாலையிளிருந்து பதநீர் கிடைக்கும், அதே பதநீரில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால், கொஞ்சம் போதை தரும், இயற்கையான கள் என்ற பானம் கிடைக்கும்.
பனைத்தொழில்
******
விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக பேரளவு வேலை வாய்ப்பினைக்கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது. இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும்.
உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்தல், சந்தையிடல் ஆகியவற்றிலும் கூடச் சிக்கல்கள் உள்ளன. போதிய முதலீடின்மை, தொழிலாளர் எண்ணிக்கைக் குறைவு ஆகியன பெரும் சிக்கல்கள் எனக் கூறப்படுகின்றன. மிகக் குறைந்த வருமானத்தையே நல்கும்நிலையில் பனைத்தொழில் இருப்பதால் தொழிலாளர்களை பெருமளவில் ஈர்க்க முடியாமல் இத்தொழில் மெல்ல மெல்ல நலிந்து கொண்டிருக்கிறது.
எவ்வாறாயினும் பனைத்தொழில் பெருமளவு வேலைவாய்ப்பும்; உணவு மற்றும் உணவிலிப் பனைப் பொருள்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேவை அதிகம்.
பதநீரைக் கொண்டு வெல்லம் காய்ச்சுவதைக் காட்டிலும் பனங்கற்கண்டு தயாரித்தல் இலாபமுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வுற்பத்தியால் பனைத்தொழிலாளர் வாழ்வும் தொழிற்றுறையின் வளர்ச்சியும் மேம்படுவது ஐயத்திற்கு இடமின்றி நிரூபனமானது.
உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்யும் அலகுகளை தோற்றுவிக்கும் பணியில் கூட்டுறவுத்துறையும் தன்னார்வத் தொண்டகங்களும் தனியார்களும் ஈடுபட்டுள்ளனர். வடிவமைத்தல் பயிற்சி, உற்பத்திப் பொருள்களை பரவலாக்கல், சரியான முதலீடு, சந்தையிடல் வசதிகள் ஆகியன உணவிலிப் பொருள்களின் உற்பத்தியையும் சந்தையிடலையும் அதிகப்படுத்தியுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்களுக்கு பனைத் தொழில் கொண்டுள்ள வளவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு தந்து அவர்கள் வாழ்க்கையை சீர்படுத்துவதில் பொது மக்கள் நமக்கும் பொறுப்பு உள்ளது.
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
****
மௌனம் - Silence
Author: Infomas | மார்ச் 09, 2022 |
மௌனம்
மௌனம் பாதுகாப்பானது
என்று நினைத்து கொண்டு
பலரும் தங்களை தாங்களே
சிறை வைத்து கொள்கிறார்கள்
பேசும் சக்தியையும்
பேசும் மொழியையும்
இறைவன் தந்தது
மௌனமாய் இருப்பதற்கா
மௌனமாய் பக்தியையோ பாசத்தையோ
காட்ட முடியாது
அன்பு வெறுப்பது
மௌனத்தை மட்டும் தான்
ஒரு குழ்ந்தையை மௌனமாக
எப்படி கொஞ்சுவது
மௌனத்தால்
நீதியை எப்படி
நிலை நாட்டுவது
மௌனம் தனிமைக்கு உகந்தது
அந்த ஊமை நிலையை
உறவாடும் இடத்தில்
உட்கார வைக்காதீர்கள்
பாலைவனத்தில் தான்
மௌனம் பாய்விரித்து படுத்திருக்கும்
அழகிருக்கும் இடங்களில் எல்லாம்
ஓசை ஆலோலம் பாடி இருக்கும்
பேசுவதினால்
பிரச்சினைகள்
பெரிதாவதாக பிதற்றாதீர்கள்
அது பேசத் தெரியாமல்
பேசவதினால் ஏற்படும் பின்னடைவு
பேசா விட்டால்
பிரச்சினைகள்
புரையோடும் நிறைவேறாது
இதழ்களை பூட்டி வைத்து
இதயத்தை இருட்டாக்காதீர்
மௌனம் மனதில் எடை ஏறச் செய்யும்
பேச்சொன்றே சகலத்திற்கும்
விடைகானச் செய்யும்
உதடுகளை உடைத்து
உள்ளத்தில் இருப்பதை கொட்டுங்கள்
கொண்ட வேண்டிய இடத்தில்
உள்ளம் பஞ்சாகும்
இல்லை நஞ்சாகும்🎈🧸🎈
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body
Author: Infomas | மார்ச் 09, 2022 |
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body
மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்ச்சக்தி ஓட்டத்தின் உச்ச கட்ட இயக்கத்தில் இருக்கும். இது இயற்கை.
ஒருவர் இயற்கையின் விதிகளை மீறும் போது இயற்கை அவருக்கு அளிக்கும் தண்டனையே நோய்.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டு மென்றால் அவனுடைய உடல் மொழியைக் கேட்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
கீழ்க்கண்ட வழிகளை உடல் உறுப்புகள் உங்களைப் பின்பற்றக் கூறுகின்றன.
நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது.
Lungs – நுரையீரல் :
சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம் விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் அதிக சக்தி நேரம். இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள்அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
Large Intestine பெருங்குடல் :
சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம் விடியற்காலை 5.00 - 7.00 மணிவரை பெருங்குடலின் அதிக சக்தி நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.
உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே. குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அதனால் நரம்புத் தளர்ச்சி ஏற்படாது.
Stomach இரைப்பை :
சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம் காலை 7.00 - 9.00 மணிவரை வயிற்றின் அதிக சக்தி நேரம். இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும்.
காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகும்.
Spleen மண்ணீரல் :
சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம் காலை 9.00 - 11.00 மணி வரை. காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும், இரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது.மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும்.
அப்படி எதுவும் சாப்பிட்டால் மண்ணீரல் பாதிப்பு ஏற்படும் உடலில் வெப்பம் அதிகரிக்கும். சாப்பிட்டதும் ஏற்பட வேண்டிய சுறுசுறுப் பிற்கும், புத்துணர்ச்சிக்கும் பதிலாக அசதியும், தூக்கமும் வரும்.
நாளடைவில் பசி குறையும். (நீரிழிவு நோயளிகளுக்கு படபடப்பு, மயக்கம், தூக்கக் கலக்கம் ஏற்படும்.) நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
Heart இருதயம் :
முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் அதிக சக்தி நேரம்.
இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல்,அதிகமாகப் படபடத்தல்கூடாது. கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடிக்கலாம், மருத்துவ மனைகள் எல்லாம் விழிப்புடன் இருக்கும் நேரமிது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.
காரணம் இந்த நேரத்திற்தான் இருதய நோயாளிகளுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க இவர்கள் இந்த நேரத்தில் தூங்காமல் இருக்க வேண்டும்.
தூங்கினால் அபான வாயு பிராண வாயுவுடன் கலந்து மாரடைப்பு, முகவாதம், பக்கவாதம் அல்லது மூட்டுவாதம் மற்றும் உடல் வலிகளை நிச்சயம் ஏற்படுத்தும்.
Small Intestine சிறுகுடல் :
சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம் பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் அதிக சக்தி நேரம் இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு மதிய உணவை முடித்து 3 – 5நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டும்.
Urinary Bladder சிறுநீர்ப்பை :
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் அதிக சக்தி நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
பானங்களோ, தண்ணீரோ குடிக்க உகந்த நேரம். முதுகு, இடுப்பு வலிகள் வரும் நேரம்.
Kidney சிறுநீரகம் :
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் அதிக சக்தி நேரம். வழக்கமான வேலையில் இருந்து விடு பட்டு இரவுக்கு முன்பாகவே வீடு வந்து சேரவேண்டும். ரீனல்பெயிலியர் முதல் நீர்க்கடுப்பு வரை ஏற்படும்.
பகல் நேர பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம் செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
Pericardium இருதயஉறை :
இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் அதிக சக்தி நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும். ஒரு ஜவ்வு. இதயத்தின் Shock absorber. இரவுஉணவுக்கு உகந்த நேரம்.மார்பு வலி, பாரம், படபடப்புத் தோன்றும்.
Riple Warmer மூவெப்பமண்டலம் :
இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை அதிக சக்தி நேரம்.
டிரிப்பிள் கீட்டர் ஒரு உறுப்பல்ல, உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.இந்த நேரத்திற்குப் பின்பு கண் விழித்திருப்பதோ படிப்பதோ கூடாது.
Gall Bladder பித்தப்பை :
இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் அதிக சக்தி நேரம்.
இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும், அடுத்த நாள் உங்கள் முழு சக்தியையும் இழக்க நேரிடும்.
Liver கல்லீரல் :
இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் அதிக சக்தி நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது.
இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள், கண்டிப்பாக கண்ணின் பார்வை சக்தி குறையும். உறக்கம் பாதிக்கும். உடலில் அரிப்பு, நமைச்சல் அதிகரிக்கும்.
🌷🌷
Tamil Health Tips
சனி, 20 நவம்பர், 2021
Atlantis Exchange - Biggest Airdrop - New login offer
Author: Infomas | நவம்பர் 20, 2021 |
Biggest Airdrop.
20000AC Coin worth $2000USD
Exchange link - https://atlantiscex.com/r/A0031294730
Refer Code - A0031294730
Atlantis Exchange is a blockchain-based, high-tech and high-speed platform that allows global users to easily buy, sell, store, and earn cryptocurrencies such as BTC, ETH, DOGE, USDT, USDC, BNB, TRX, and AC, etc., in addition to fiat money such as US dollars, based on its secured website and smartphone APPs,
As a US-based cryptocurrency exchange registered with the State Government and the U.S. Department of the Treasury, Atlantis Exchange supports both crypto-crypto trading and crypto-USD trading. It accepts fiat currencies via wire transfers, credit card payments, and other forms of payment in exchange for cryptocurrencies. In addition to US dollars, other fiat money services will be provided later.
Atlantis Exchange provides global users with an easy to use, fast, low-cost, reliable, and secure environment for digital asset trading based on the latest MIT's blockchain technology:
1) As a market matching platform, it charges VERY COMPETITIVELY LOW transaction fees to benefit its users.
2) Meanwhile, it offers BIG rewards, bonuses, and discounts to its users who have referred others to use Atlantis Exchange from time to time.
Exchange link - https://atlantiscex.com/r/A0031294730
#Airdrop #NewExchange
சனி, 6 நவம்பர், 2021
Cryptocurrency-யை பாதுகாப்பது எப்படி?
Author: Infomas | நவம்பர் 06, 2021 |
சனி, 3 ஏப்ரல், 2021
தா.பாண்|டியன் - கம்யூனிஸ்ட் கட்சி - D.Pandiyan life History - Communist party
Author: Infomas | ஏப்ரல் 03, 2021 |
உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் தாவீது (டேவிட்) - நவமணி தம்பதிக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் தா.பாண்|டியன் (18.5.1932). அந்தக் காலத்தில் கல்விச் சேவை செய்வதற்காக கிறிஸ்தவ மிஷனரி தொடங்கிய பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தனர் பாண்டியனின் பெற்றோர். காமக்காபட்டி கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளியில் ஆரம்பக்கல்வி. பின்னர், உசிலம்பட்டி போர்டு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் பாண்டியன்.
சனி, 13 பிப்ரவரி, 2021
ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு சமம்! - Top Facts about elephants
Author: Infomas | பிப்ரவரி 13, 2021 |
ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு சமம்!
சொல்லக் கூடாதவை - சொல்ல வேண்டியவை - Mention and Not mention to Others
Author: Infomas | பிப்ரவரி 13, 2021 |
சொல்லக் கூடாதவை :
சொல்ல வேண்டியவை :

world Important Days - *உலகின் முக்கிய தினங்கள் :-
Author: Infomas | பிப்ரவரி 13, 2021 |
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021
சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது
Author: Infomas | பிப்ரவரி 07, 2021 |
வியாழன், 21 ஜனவரி, 2021
முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை - old Generation - Tamil Generation
Author: Infomas | ஜனவரி 21, 2021 |
தவளை கத்தினால் மழை.
🌝 அந்தி ஈசல் பூத்தால்அடை மழைக்கு அச்சாராம்.
🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.
🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.
🌝 தை மழை நெய் மழை.
🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.
🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு.
🌝 வெள்ளமே ஆனாலும்
பள்ளத்தே பயிர் செய்.
🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு.
🌝 களர் கெட பிரண்டையைப் புதை.
🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.
🌝 நன்னிலம் கொழுஞ்சி
நடுநிலம் கரந்தை
கடை நிலம் எருக்கு.
🌝 நீரும் நிலமும் இருந்தாலும்
பருவம் பார்த்து பயிர் செய்.
🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்.
🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை.
🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.
🌝 உழவில்லாத நிலமும்
மிளகில்லாத கறியும் வழ வழ.
🌝 அகல உழவதை விட
ஆழ உழுவது மேல் .
🌝 புஞ்சைக்கு நாலு உழவு
நஞ்சைக்கு ஏழு உழவு.
🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.
🌝 ஆடு பயிர் காட்டும்
ஆவாரை கதிர் கட்டும்.
🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் .
🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.
🌝 நிலத்தில் எடுத்த பூண்டு
நிலத்தில் மடிய வேண்டும்.
🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.
🌝 தேங்கி கெட்டது நிலம்
தேங்காமல் கெட்டது குளம்.
🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.
🌝 சொத்தைப் போல்
விதையை பேண வேண்டும்.
🌝 விதை பாதி வேலை பாதி.
🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை.
🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.
🌝 கோப்பு தப்பினால்
குப்பையும் பயிராகாது.
🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்.
🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்.
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.
#உழவே_தலை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
நீர் இன்றி அமையாது உலகு.
"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.
கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும்.
இனி பணத்தைச் சாப்பிட
முடியாது என்பது!!
ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.
நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.
நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
மேழிச் செல்வம் கோழை படாது...
#முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..
அனைவரும் அறிந்துகொள்ளுங்கள்
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வள...
-
Browser Cookies Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாம...
-
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்...