சொல்லக் கூடாதவை - சொல்ல வேண்டியவை - Mention and Not mention to Others
சொல்லக் கூடாதவை :
1.படிக்கிலன்னா உருப்படாம போய்டுவ.
2.உழைக்கிலன்னா பிச்சைதான் எடுக்கனும்.
3.பணம் இல்லாட்டி ஒரு நாய் உன்னை மதிக்காது.
4.நீ எல்லாம் எச்சில் இலை எடுக்கவும் எச்சில் தட்டு கழுவதான் லாயக்கு.
5.இந்த வாட்டி பரிட்சைல பாஸாகலன்னா ஸ்டெய்ட்டா எருமை மாடு மேய்க்கதான் உன்னை அனுப்ப போறேன்.
( எருமை மாடு மேய்ப்பது அவ்வளவு எளிதான விஷயமா?)
6.காசு பணம் இல்லன்னா சொந்தக்காரங்க மதிக்க மாட்டாங்க.
(எல்லா உறவுகளுமே அப்படித்தான் இருக்கிறார்களா?)
7.அப்பா அம்மா செத்ததுக்கு அப்புறம் நீ பிச்சைதான் எடுக்கப் போற.
8.வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊர் அடக்கும்.
9.பணம் என்ன மரத்திலா காய்க்கிறது ?
10.உன்னோட திமிருக்கு நீ அழிஞ்சிதான் போகப் போற.
சொல்ல வேண்டியவை :
1.படிச்சா நல்லா வாழலாம்.படிச்சா வாழ்க்கையில முன்னுக்கு வரலாம்.
2.உழைத்தால் நிறைய சம்பாதிக்கலாம்.
3.நிறைய பணம் சம்பாதித்தால் மதிப்புடன் வாழலாம்.
4.படிச்சி முன்னுக்கு வந்து விட்டால் நாலு பேருக்கு வேலை கொடுக்கலாம்.
5.நீ இந்த பரிட்சைலயும் பாஸாய்டுவ.
எல்லா பரிட்சைலயும் பாஸாய்டுவ எனக்கு உன் மேல அந்த நம்பிக்கை இருக்கு.நீ நல்லபடியா மேல வரமுடியும்.
6.காசு பணம் வந்ததுக்கு பிறகும் எல்லா உறவுகளையும் ஒரே மாதிரி மதிப்பா நடத்தனும்.
7.அப்பா அம்மா நான் சாதிச்சிட்டேன்
என்று சொல்லனும்.
8.படித்து ஊர் மெச்ச வாழும் உறவுகள் மற்றும் நண்பர்கள் பட்டியலை பிள்ளைகளிடம் காட்டுங்கள்.
9.உழைப்பின் மூலமாக வரும் பணத்தின் மதிப்பை புரிய வைக்க வேண்டும்.
10.உன்னோட திறமைக்கு நீ ரொம்ப சீக்கிரமா முன்னுக்கு வர முடியும்.
சொல்ல கூடாதவை.சொல்ல வேண்டியவை வரிசை எண்படி ஒவ்வொன்றையும் பொருத்தி ஒரு முறை படிக்கவும்.
சொல்ல கூடாதவை பட்டியலில் உள்ள வாசகங்களை அன்றாடம் பெரும்பாலான வீடுகளில் உச்சரிக்கப்படுவதை நாம் கேட்கிறோம்.
ஏன் சார் இப்படி என்றால் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காகதான்
நான் இப்படி பேசுகிறேன் என்ற பதில் கிடைக்கிறது.
ஆனால் எப்படி ஆகக் கூடாது என்று நாம் நினைக்கிறோமோ அப்படி ஆகி நின்ற பிறகுதான் நாம் எங்கே என்ன தவறு செய்தோம் என்று யோசிக்க தொடங்குகிறோம்.
எப்படி ஆக வேண்டும் என்று நினைக்கும் நினைப்பை விட எப்படி ஆகக் கூடாது என்று அதிகமாக நினைப்பதால் மற்றவர்களை அவ்விதம் ஆகி விடக்கூடாது என்று அறிவுறுத்தும் விஷயம் மட்டுமே நடந்து முடிந்து விடுகிறது.
எந்த விஷயத்தை இது நடக்கக் கூடாது என்று பய உணர்வுடன் சிந்திக்கிறோமோ அந்த பய உணர்வு ஆழ்மனதில் நடக்க விரும்பாத விஷயத்தை ஆழமாக பதியும்படி செய்து விடுகிறது.
பெரும்பாலான பிள்ளைகள் தேர்வுகளில் தோற்பதற்கு படிக்கிலன்னா நீ உருப்பட மாட்ட என்ற பெற்றோரின் தொடர்ச்சியான மிரட்டல் நான் உருப்படாமல் போய் விடுவேனா என்ற அச்ச உணர்வை பிள்ளைகளின் ஆழ்மனதில் ஆழமான எண்ணமாக பதிந்து அப்படியே அவர்கள் உருப்படாமல் போய் விடுகிறார்கள்.
படிப்பு மட்டுமல்ல வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் எதிர்மறையான விளைவுகளை உதாரணம் காட்டாமல் எந்த விஷயத்தை செய்தாலும் அதில் இருந்து கிடைக்க இருக்கும் நற்பலன்களை திரும்ப திரும்ப வலியுறுத்தி கூறுவதன் மூலமாக பிள்ளைகள் நல்ல மன வலிமையையும் நம்பிக்கையும் அடைவார்கள்.
உன்னால் முடியும்.எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கிறது.நீ திறமைசாலி உனக்கு அது மிகவும் எளிதான விஷயம்.இதை செய்வதன் மூலமாக நீ வெற்றி பெற முடியும் உனக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.
சமூகத்தில் நீ பெரிய புகழுடன் வாழ அற்புதமான வாய்ப்பு உனக்காக காத்திருக்கிறது.
இது போன்ற வாக்கியங்கள் அறிவுரை கூறுபவர் பெறுபவர் இருவருக்கும் நல்ல நம்பிக்கையும் சாதனை செய்ய உத்வேகத்தையும் ஏற்படுத்தும் வாக்கியங்கள் ஆகும்.
நம்முள் நினைக்கும் எண்ணங்களையும் பிறரிடம் பேசும் வார்த்தைகளையும் நற் பலன்களை அளிக்கக் கூடிய நேர்மறை வார்த்தைகளை உச்சரிப்போம். வார்த்தைகளால் புது வாழ்வை துவக்குவோம்.
