tami information | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: tami information

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

tami information லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tami information லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது 

 *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்

*திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

 *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

 தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
*இன்னும் கல்யாணம் ஆகலயா?*
*குழந்தைகள் இல்லையா?*
*இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?*
*ஏன் இன்னும் Car வாங்கவில்லை?*
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

 *தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது* அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

 நண்பருடன் Taxiயில் சென்றால. *இம்முறை இயலாவிட்டால் மறுமுறை* நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

*மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்*. மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

*அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள்*. அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

 *நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்*. அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

 யார் உதவினாலும் பாரபட்சமின்றி *நன்றி சொல்லுங்கள்*.

. பொதுவில் புகழுங்கள். *தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்*.

 *உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.*
"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

 *யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்*. அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

 *யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்*. அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். *விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்* என்று கூறலாம்.

 *நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்*.

 *கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்*.

 நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் *சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள்*. அவர்களாகவே சொன்னால் தவிர.

 தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், *Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள்*. கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

 யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக *வலிய போய் தலையிடாதீர்கள்.*

சனி, 26 செப்டம்பர், 2020

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான் ஒருவன்.....!!

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான் ஒருவன்.....!!

குடிக்க கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது....!!

அவன் போக வேண்டிய தூரமோ அதிகம்......!! 

குடிக்கத் தண்ணீர் இல்லாமல்......,

அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான்.....!!

தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.....!! 

மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.....!!

அங்கே ஆட்கள் யாரும் இல்லை.....!! 

ஒரு கையால் அடித்து இயக்கும்,

 "அடி பம்பும் ..... ,
அருகே ஒரு ஜக்கில், தண்ணீரும் இருந்தன.....!! 

ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள்....!!

"ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும்"....!!

"குடித்து விட்டு " 
     
மறுபடியும் ஜக்கில்,
         
" தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."...!!!!

அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது.....!!

அந்தத் தண்ணீர் ஊற்றினால்..... ,

அது இயங்குமா...,

தண்ணீர் வருமா....,,

என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது....!!

அது இயங்கா விட்டால்....,

அந்தத் கொஞ்சத் தண்ணீரும் வீணாகி விடும்.....!!

அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால்....... ,

தாகமும் தணியும்......!!

உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.....!!

அந்தப் பயணி யோசித்தான்....!!

தண்ணீரைக் குடித்து விடுவதே ....., 

புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது........!!

ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல்......,

 அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து,

அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் நான் குடித்து விட்டால் ,

அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது.......!!

இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு,

எந்த பயனும் இல்லாமல் போக....,

தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.....!! 

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை......!!

ஆனது ஆகட்டும் என்று......,

அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு,

அதை அடித்து இயக்க ஆரம்பித்தான்.....!! 

தண்ணீர் வர ஆரம்பித்தது....!!

தாகம் தீர,
வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு,

தான் பயணத்திற்காக கொண்டு வந்த குடுவையில் சேகரித்து கொண்டான்.....!!

அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில்....,

அவன் மனம் நிறைந்திருந்தது.....!!

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை....,

பிறருக்கும்,
அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும்......!!

எந்த ஒரு நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது....!!

  "அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன "....,

 என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது....!!

  "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" ....!!
       
என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால்...,

 "இந்த உலகம் என்றும் இன்பமயமாகி விடும்"....!!!
உண்மையில் இன்று நம் நிஜ வாழ்க்கையில் 99.99 சதவீத மக்கள் சுயநலத்திற்காக உள்ளார்கள்... ஆனால் வெறும் 00.01 சதவீத மக்கள் மட்டுமே பொதுநலத்துடன் இருப்பதால் இந்த உலகம் இன்னும் அழிந்து போகாமல் இயங்குகிறது...

🌷🌷

Popular Posts

Facebook

Blog Archive