tamil poem | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: tamil poem

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

tamil poem லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil poem லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மார்ச், 2022

மௌனம் - Silence

 மௌனம்

மௌனம் பாதுகாப்பானது
என்று நினைத்து கொண்டு
பலரும் தங்களை தாங்களே
சிறை வைத்து கொள்கிறார்கள்

பேசும் சக்தியையும்
பேசும் மொழியையும்
இறைவன் தந்தது
மௌனமாய் இருப்பதற்கா

மௌனமாய் பக்தியையோ பாசத்தையோ
காட்ட முடியாது

அன்பு வெறுப்பது
மௌனத்தை மட்டும் தான்

ஒரு குழ்ந்தையை மௌனமாக
எப்படி கொஞ்சுவது

மௌனத்தால்
நீதியை எப்படி
நிலை நாட்டுவது

மௌனம் தனிமைக்கு உகந்தது

அந்த ஊமை நிலையை
உறவாடும் இடத்தில்
உட்கார வைக்காதீர்கள்

பாலைவனத்தில் தான்
மௌனம் பாய்விரித்து படுத்திருக்கும்

அழகிருக்கும் இடங்களில் எல்லாம்
ஓசை ஆலோலம் பாடி இருக்கும்

பேசுவதினால்
பிரச்சினைகள்
பெரிதாவதாக பிதற்றாதீர்கள்
அது பேசத் தெரியாமல்
பேசவதினால் ஏற்படும் பின்னடைவு

பேசா விட்டால்
பிரச்சினைகள்
புரையோடும் நிறைவேறாது

இதழ்களை பூட்டி வைத்து
இதயத்தை இருட்டாக்காதீர்

மௌனம் மனதில் எடை ஏறச் செய்யும்
பேச்சொன்றே சகலத்திற்கும்
விடைகானச் செய்யும்

உதடுகளை உடைத்து
உள்ளத்தில் இருப்பதை கொட்டுங்கள்
கொண்ட வேண்டிய இடத்தில்
உள்ளம் பஞ்சாகும்
இல்லை நஞ்சாகும்🎈🧸🎈


 

Popular Posts

Facebook

Blog Archive