ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020
சனி, 9 மே, 2020
ஒன்றரை மாதங்களில் சுமார் 12 ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையை இழந்த ஆங்கில மருந்து ஃபார்மா நிறுவனங்கள்.
Author: Infomas | மே 09, 2020 |
வெள்ளி, 26 அக்டோபர், 2018
இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது
Author: Infomas | அக்டோபர் 26, 2018 |
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,
இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது
சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!
சனி, 22 செப்டம்பர், 2018
இந்திய அரசால் இரயில்வே துறை வேலைவாய்ப்பில் தொடர்ந்து முட்டாள்ளாக்கபடும் தமிழர்கள்..
Author: Infomas | செப்டம்பர் 22, 2018 |
இந்திய அரசால் இரயில்வே துறை வேலைவாய்ப்பில் தொடர்ந்து முட்டாள்ளாக்கபடும் தமிழர்கள்
தற்பொழுது இந்தியா முழுவதும் இரயில்வே குரூப் டி தேர்வு தனியார் டாட்டா நிறுவனத்தால் 17-09-2018 முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெற்று வருகின்றது..
கடந்த இருமாதமாக ALP தேர்வு நடைபெற்றது..
வட இந்தியாவில் தேர்வுநடைபெறும் இடத்தில் மேற் பார்வையாளர்கள், அதிகாரி இருக்கும் பொழுதே தொலைபேசி மூலமாகவும், கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டே விடைகளை காப்பி அடுத்து தேர்வு எழுதுகின்றார்கள்..
ஆனால் தமிழ்நாட்டில் இந்த தேர்வின் பொது கல்லூரிக்குள் செல்லும் போதும் அடையாள அட்டை அனுமதி சீட்டு தவிர்த்து தொலைபேசி செருப்பு, மணி பர்சு, பேனா முதற்கொண்டு எதையும் கல்லூரிக்கு எடுத்துச் சொல்ல கூடாது என்று நீட் தேர்வு போன்று கடுமையான சோதனைகளை நடத்திய அனைத்தையும் வெளியேறிய பின்னரே அனுமதித்தனர்...
RRB .RRC தேர்வு மூலமாக வட இந்திகாரர்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஐ.சி.எஃப் தெற்கு இரயில்வேயில் 40% மேல் கிட்டத்தட்ட 50,000 பேர் ஊடுருவி உள்ளனர்..
1 இலட்சம் பேர் வேலைவாய்ப்புக்கு
2 கோடிக்கும் மேற்ப்பட்டவர்கள் வேலைகாக விண்ணப்பித்துள்ளனர்.. இது தான் இன்றைய இந்தியாவின் நிலை..( தமிழ்நாட்டில் மட்டும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1கோடி பேர் வேலை வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.)
தற்பொழுது நடை பெரும் குரூப் D தேர்வில் கூட தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலகளில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது
👆👆👆நீட் நுழைவு தேர்வு போன்று இந்தியா அரசால் நடத்தப்படும் இரயில்வே துறை தேர்வுகளில் பல ஆண்டுகளாக தொடர்ந்து தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியப்படுத்த வேண்டும்...உங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்புங்கள்.
ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018
காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு'- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.
Author: Best Buy Offers | ஆகஸ்ட் 19, 2018 |
இப்படிக்கு,
இயற்கையை நேசிப்பவன்.
வெள்ளி, 8 ஜூன், 2018
✍ *மரமும்* *மனிதனும்* 🌴🌴🌴🌴🌴🌴🌴“மரம் வளர்ப்போம்”,
Author: Best Buy Offers | ஜூன் 08, 2018 |
✍ *மரமும்* *மனிதனும்* 🌴🌴🌴🌴🌴🌴🌴“மரம் வளர்ப்போம்”, “இயற்கையைக் காப்போம்”, “இயற்கையை நேசி” “இயற்கையோடு வாழ்வோம்” இதுபோன்ற சொல்லடைகள் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன. காரணம் புவி வெப்பம் அடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது. இதனை தவிர்க்கவே மனித மனங்கள் இயற்கை பக்கம் வேகமாக திரும்பியிருக்கின்றது. எனவே புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க வேண்டும். இது இன்றைய இன்றியமையாத அவசியமாகயிருக்கின்றது. எனவே “வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்ற நிலைமாறி “ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்” என்று பேசும் நிலைக்கு வந்துள்ளோம். எனவே இன்று இயற்கை அழிவை காக்க, வெப்பம் தவிர்க்க முதற்காரணியாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்ற உணர்வை பெறுவோம்.
“இன்றிருக்கும் நிலையே தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாகும் என்பதில் சந்தேகமில்லை” என்று ஓர் ஆய்வு கட்டுரையில் படித்தேன். எனவேதான் இத்தகைய அவல நிலையை போக்க அரசு, பல தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் மரம் வளர்க்கும் பல ஏற்பாடுகளை செய்கின்றன. அவ்வப்போது விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்தி வருகின்றன.
“மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்” இது ஒவ்வொருவர் மனதிலும் ரீங்காரமிட வேண்டிய சொல்லாகும். மரங்கள் இயற்கையின் கொடை, இவைகள் பூமித்தாய் என்ற முதல் குழந்தைகள். இதை நாம் அழிக்க கூடாது. மாறாக அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஏனெனில் இயற்கையன்னை அனைத்தையும் நமது நலனுக்குத்தானே தந்து கொண்டிருக்கிறாள்.
நலம் தரக்கூடிய நம்மை, வாழ வைக்கக்கூடிய மரங்களை இயற்கை செல்வங்களை நாம் அழிக்கலாமா ? அழிக்கக் கூடாது. இன்று நடப்பது என்ன ? இயற்கை அழிக்கப்படுகிறது, மரங்கள் கொலை செய்யப்படுகின்றன. மணல் அள்ளப்படுகின்றன.
விவசாய நிலம் வாழுமிடமாக (பிளாட்) மாறுகிறது. அதனால் தான் நாம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். (எ.கா.) சுனாமி, நிலநடுக்கம், அதிக வெப்பம், புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் நாம்தான் பாதிக்கப்படுகின்றோம். ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. “நாம் எந்தளவு இயற்கையை நேசிக்கிறோமோ, அதைவிட பன்மடங்கு இயற்கை நம்மை நேசிக்கும்.
“ஆற்றிலே போட்டாலும் அளந்துபோடு”
அதுபோலவே இயற்கையை நாம் அழிக்கும்போது அதன் சீற்றமும் பன்மடங்காகத்தான் இருக்கும். இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். மரம் நடுவதன் அவசியத்தை நாம் தெரிந்து கொள்வோம்.
மரங்களினால் கிடைக்கும் நன்மைகள் :
1. தொழில்நுட்பங்களால் ஏற்படும் மாசு நிறைந்த சூழலை மரங்கள் தூய்மைப்படுத்தும்.
2. மரங்கள் தூய்மையான காற்றை வழங்கும்.
3. மரங்கள் வெப்பம் தணிக்கும்.
4. மரங்கள் பறவைகளின் சரணாலயம்.
5. மரங்கள் மண் அரிப்பை தடுக்கும்.
6. நிலத்தடி நீரைக் காக்கும்.
7. முக்கியமாக மழை பெய்ய பெரிதும் உதவுகின்றன.
8. பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளை தருகின்றன.
9. மருந்தாக பயன்படுகின்றன.
10. அழகு தரும் மர வேலைபாடுகளுக்கு உதவுகின்றன.
11. இயற்கை உரம் தருகின்றன.
12. இயற்கை சீற்ற அழிவை தடுக்கின்றன.
13. வீடு, கட்டடங்கள் கட்ட பயன்படுகின்றன.
14. நோய் தடுப்புக்கு உதவுகின்றன.
எனவே அன்பர்களே !
மரங்களை வளர்ப்போம் !
காடுகளை உருவாக்குவோம் !
மழை பெறுவோம்.
“பசுமையான தமிழகம் உருவாக்குவோம்.
இது நம்மால் முடியும்”
உங்களாலும் முடியும். செய்வீங்களா ? நம்புகிறேன். நீங்க நிச்சயம் ஒரு மரமாவது நடுவீங்க
🌱🌱🌱🌱🌱
வெள்ளி, 1 ஜூன், 2018
தமிழனின் பொருளாதாரத்தையும் நிலத்தையும் வடநாட்டுக்காரனிடம் இழக்காதீர்கள்.
Author: Best Buy Offers | ஜூன் 01, 2018 |
வடநாட்டுக்காரனுடன் அதிகம்
உறவாடும் ஒரு நண்பர் இன்று கொடுத்த
அதிர்ச்சி தகவல்.
பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம், தஞ்சை
சாஸ்த்ரா பல்கலைகழகம், கோவை ஈஸா
போன்ற பெரும் பணக்காரர்கள்,
கல்வியாளர்கள், மார்வாடி
வியாபாரிகள் போன்றோருக்கு RSS
உத்தரவிட்டுள்ளதாம். தமிழகத்தின்
நிலப்பரப்புகளை வடநாட்டவர்கள்
அதிகளவில் ஆக்கிரமித்து ஆதிக்கம்
செலுத்த வேண்டுமாம். இதன்
காரணமாகவே மார்வாடி ஜெயின்
செளராஷ்ட்ரா பீகாரி குஜராத்தி
அதிகமானோர் தமிழ்நாட்டில் படிக்க
வருவதும், வியாபாரம் செய்வதும்,
நிலம் வாங்கி வீடு கட்டுவதும்
தற்போது பரவலாக தமிழகத்தில்
சொத்துக்களையும் வாங்குகின்றனர்.
இன்னும் 40 - 50 வருடங்களில் தமிழகம்
வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தின் கீழ்
வந்துவிடும் பிறகு தானாகவே
தமிழன் அடிமை இனமாக
மாறிடுவான்.
தமிழர்களே பாசிசத்தின் கோர
பிடியிலிருந்து பாதுகாத்து
கொள்ள...
யாரும் உங்கள் சொத்துக்களை தமிழர்
அல்லாதோரிடம் விற்காதீர்கள். தமிழர்கள்
புதிதாக சொத்து வாங்குவதாக
இருந்தால் வடமாநிலத்தவனிடம் உள்ள
தமிழ் மண்ணை வாங்குங்கள். வட
நாட்டுக்காரன் வியாபாரத்தை
புறக்கணித்து நஷ்டம் ஏற்படுத்தி
தமிழகத்தை விட்டு துரத்துங்கள்.
தமிழனின் பொருளாதாரத்தையும்
நிலத்தையும் வடநாட்டுக்காரனிடம்
இழக்காதீர்கள்.
உஷார்
பரப்புங்கள்
தமிழக மருத்துவ கல்லூரிகளில்
வடநாட்டுக் காரன் சேருவதற்காக தான்
நீட் தேர்வே அறிமுகப்படுத்தப்பட்டது.
அறிவோம் சூழ்ச்சியை
வெல்வோம் மதியால்...
ஞாயிறு, 27 மே, 2018
கேள்வி கேட்கிறது தூத்துக்குடி!...பதில் சொல்லவேண்டும் முதல்வர் எடப்பாடி
Author: Best Buy Offers | மே 27, 2018 |
"கேள்வி கேட்கிறது தூத்துக்குடி!...பதில் சொல்லவேண்டும் முதல்வர் எடப்பாடி!"
தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் சத்தியம் தொலைக்காட்சி நடத்திய விசாரணையின்போது கீழ்கண்ட 8 கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்:-
1 . போராட்டக்காரர்கள் கலவரம் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் பேரணி நடத்தியிருந்தால், பெற்றோர், பெண்கள், பிள்ளைகள் என்று குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பார்களா?
2 . "சுடுவதற்கு உத்தரவிட்டது யார்?" என்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், பொது மக்களும், பத்திரிகைகளும், ஊடகங்களும் கேட்ட கேள்விக்கு இதுவரையிலும், முதல்வரிடமிருந்தோ, காவல்துறை DIG யிடமிருந்தோ, மாவட்ட ஆட்சியிடமிருந்தோ, காவல் கண்காணிப்பாளரிடமிருந்தோ பதில் இல்லை! என்ன காரணம்?
3 . போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கியபோது, சுற்று சுவர் 'கேட்' பூட்டப்பட்டு, அதற்கு முன்னாள் சுமார் 2000 காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, உள்ளே இருந்த இரு சக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தலை கீழாக கவிழ்க்கப்பட்டு தீயில் எரிந்து கொண்டிருந்தது எப்படி? துப்பாக்கி சூடு நடைபெறும்போது மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள தலை தெறிக்க ஓடியிருப்பார்களே தவிர, மெதுவாக வாகனங்களை கவிழ்த்துப்போட்டு தீவைக்க மாட்டார்கள்! அப்படியென்றால் தீ வைத்தது யார்?
4 . 'ஸ்டெர்லைட்' ஆலையிலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும், பக்கத்து ஊர்களிலும் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகள் குறித்து கடந்த மார்ச் 28 ந் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை என்ன ஆனது? அது ஏன் தூத்துக்குடி மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை?
5 . இறந்தவர்களையும், காயம் பட்டவர்களையும் மருத்துவ மனையில் சந்திக்க உறவினர்களுக்கும், பொது மக்களுக்கும் அனுமதி மறுப்பதேன்? இறந்து போனவர்களின் எண்ணிக்கை அரசு அறிவித்த 14 பேர்களைவிட மிக அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறதே, உண்மையா?
6 தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த அனைத்து CCTV கேமராக்களும் சரியான கோணத்தில் இல்லாமல் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தது எப்படி?
போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைந்தவுடனேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால், அவர்கள் தலை தெறிக்க வெளியே ஓடி வந்தனர்! அப்படியானால், கேமராக்களை தலைகீழாக தொங்க விட்டது யார்?
7 . ஏறக்குறைய 30000 பேர் கலந்து கொண்ட பேரணிக்கு, பாதுகாப்புக்காக வெறும் 2000 காவலர்கள் போதும் என்று முடிவு செய்தது யார்? 144 தடை உத்தரவு இருக்கும்போது பேரணி ஆரம்பித்த இடத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டிருந்தால், துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதற்கு வாய்ப்பே இருந்திருக்காது! இதற்கு காரணம் யார்?
8 . துப்பாக்கி சூடு ஆரம்பித்த உடனேயே தெறித்து ஓடிய போராட்டக்காரர்களை இரு சக்கர மற்றும் வேன் முதலிய வாகனங்களில் துரத்திச் சென்று சுட்டது ஏன்?
பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்கள் எழுப்பும் இந்த 8 கேள்விகளும் மிக மிக நியாயமானவை, மனிதாபிமானம் மிக்கவை! இவற்றிற்கு கண்டிப்பாக தமிழக அரசும், முதல்வர் எடப்பாடியும் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும்!
நன்றி: 'சத்தியம் தொலைக்காட்சி' 26 . 05 . 2018 அனறு மதியம் 1 .30 மணிக்கு ஒளிபரப்பிய "தூத்துக்குடி கேட்கிறது" என்ற நிகழ்ச்சியிலிருந்து. ..
சனி, 29 ஜூலை, 2017
ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது ஏன் தெரியுமா ?
Author: Best Buy Offers | ஜூலை 29, 2017 |
இளைஞர்கள் வரை தங்களுக்கு ஏற்ற சீட் ஒரு முறை கூட ரயிலில் கிடைக்க வில்லை என புலம்புவதை கூட காதுப்படகேட்டிருப்போம்.
பொதுவாக_ரயில்களில் S1, S2 S3.... என பல கோச்கள் இருக்கும். ஒவ்வொரு கோச்சிலும் 72 இருக்கைகள் இருக்கும். மேலும், கீழ், மத்திய, மேல் படுக்கை அமைப்பும் கொண்டிருக்கும்.
பர்த் பதிவுகளும் இப்படி தான் பதிவு செய்வார்கள். முதலில் கீழ் பர்த், பிறகு மத்தியில், அடுத்த மேல் பர்த் பதிவுகள் செய்யப்படும்.

வியாழன், 29 டிசம்பர், 2016
தேனீக்கள் - Theenikal Don't hesitate please forward to all.
Author: Infomas | டிசம்பர் 29, 2016 |
தேனீக்கள்மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
நுணுக்கமான உயிரினம்.
மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா.............?
சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.
போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு
தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச்
சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும்
தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித
உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும்
காரணம்.
வாட்ஸ்அப் முறைகளை விடத்
துல்லியமானது.
ஞாபகசக்தி அதிகம் என்போம்.
ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி
கொண்டவை தேனீக்கள்.
பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு
உடம்பில் இருக்கின்றன.
தரும் விஷயம்...
'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில்
இடம்பிடித்திருக்கின்றன.
நிச்சயம் இதுதான்.
தொகையாலும் பூமிக்கு விளையாத
நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.
சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப்
போர்வையைப் போத்துகிறது.
தெரிந்துகொண்டால்தான், அது
காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட
நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.
பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப்
பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச்
சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத்தேனீ.
கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.
தானாகவே காட்டில் வளரும்..
குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில
நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித்
தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.
தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித்
தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித்
தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.
மட்டும்தான் வேலை.
ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப்
பாதுகாப்பதும் கடமை.
வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.
தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்
சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா
வேலைகளையும் பணித் தேனீக்கள்தான்
கவனிக்கும்.
அபாரமானது.
வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு
சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
முழுசாப் பயன்படுத்த முடியும்.
தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய
அறுங்கோண செல் வடிவத்தில் கூடு
கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர்
வடிவில் செல் கட்டும்.
திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித்
தேனீ அதில் முட்டையிடும்.
தேனீக்களின் உணவு.
அப்போதே சாப்பிட்டுவிடும்.
தேன் சேகரிக்கிறது?
பூக்காத காலங்களில் உணவுத்
தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன்
சேகரிக்கிறது.
பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த
உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.
பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
இருக்கும் 'தேன் பை’யில்
சேகரித்துக்கொள்ளும்.
முழுவதும் செரிக்காமல், தேனீயின்
வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்
சேர்ந்து திரவமாக மாறிவிடும்.
கூட்டின் வாசலில் காத்திருக்கும்
தேனீக்களிடம் அந்தத் திரவத்தை
ஒப்படைக்கும்.
ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
திரவத்தை வெளியில் கொண்டுவந்து
எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.
தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர்
ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி,
அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்
சேர்க்கும்.
இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக
தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.
மெழுகைப் பூசிவைக்கும்.
நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம்
சுவைக்கும் தேன் உருவாகும்.
எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை
தேனிக்களுக்கு எனக் கூட்டில்
விட்டுத்தான் எடுப்பார்கள்.
சேகரிக்கும் தர்மம் !
அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.
அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில்
வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப்
பறக்கும்.
பிடிக்கிறதோ, அதோடுதான் இணை
சேரும் ராணி.
ஆண் இறந்துவிடும்.
தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து
வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான்
வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!
தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை
அட்டகாசமானது.
ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள்
முன்னே சென்று பூக்கள் இருக்கும்
இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்
கூட்டுக்குத் திரும்பும்.
தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது
சோலை எந்தத் திசையில் எவ்வளவு
தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித்
தெரிவிக்கும்.
நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.
நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள்
இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.
ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே
பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு
நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது
என்றும் அர்த்தம்.
ஆட்டினால், சோலை அருகில் உள்ளது
என்றும், மெதுவாக ஆட்டினால்,
தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.
கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும்
சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.
கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்
கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு
கொடுத்தார்கள்.
காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல்
உட்காரும்போது, விதவிதமான
கூட்டணியுடன் பரவும்.
காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்
காரணம்.
காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.
இயற்கையாகவே அடர்ந்த காடுகள்
உருவாகிவிடும்!''
பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன
ஆபத்து?''
நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும்
உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்
மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு
தேனீக்கள் அழிந்துவிட்டன.
அதாவது,
தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42
சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.
வரலாம்.
Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD.
அதாவது கூட்டில் இருந்து உணவு
சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள்
கொத்துக் கொத்தாகக்
காணாமல் போய்விடும்.
கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள்
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு
கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால்,
ராணித் தேனீ என்ன செய்வதெனத்
தெரியாமல் குழம்பி, சீக்கிரமே
இறந்துவிடும்.
தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு.
முக்கியமானது... செயற்கை உரம்,
பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட
பயிர்கள்.
நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள்,
தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து
அவற்றின் நினைவுத்தினை
மழுங்கடித்துவிடும்.
கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய்
பறந்துபோய் அலைந்து திரிந்து
இறந்துவிடும்.
பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர்
சீட்ஸ்’ என்பார்கள்.
அதாவது, அந்தப் பயிர்கள்
'விதை தானியத்தை’ உருவாக்காது.
மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.
மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்
செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி,
ஒரு கட்டத்தில் தேனீக்களைக்
கொன்றேவிடும்.
இப்படி விவசாயத்தில் 'வணிக
லாபத்துக்காக’ மனிதன் செய்த பல
மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.
வருடங்களாக விவசாய உற்பத்தி
பெருமளவு குறைந்து வருவதற்குக்
காரணம் தேனீக்களின் இறப்பு எனத்
தெரியவந்தது.
உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள்
போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.
தங்கள் வயல்களில் பறக்கவிட்டு
மகரந்தச்சேர்க்கை உண்டாக்க
முயற்சிக்கிறார்கள்.
அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு
தேனீயைக்கூட உருவாக்க முடியாது.
வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார்
FARMING
வெள்ளி, 2 டிசம்பர், 2016
மருந்து மாத்திரைகள் விலை குறைந்தது தெரியுமா?
Author: Infomas | டிசம்பர் 02, 2016 |
********* ******** ******** **********
நேற்று மெடிக்கல் ஷாப்புக்குச் சென்று
Omez -20 Capsule. வாங்கினேன்.
வழக்கமாக ஒரு கேப்சூல் 4.50₹ வாங்குவார்கள். நேற்றும் அதே விலையைச் சொன்னார்கள்.10 கேப்சூல் வாங்கினேன். பிறகு எக்ஸ்பைரி டேட்டை பின்னால் பார்த்தேன். அப்போதுதான் 15 கேப்யூல் விலை 36 ₹ என போட்டிருந்ததை கவனித்தேன் அவ்வாறு எனில் விலை குறைந்துள்ளது என கண்டு கொண்டு " என்னங்க விலை குறைந்துள்ளதே! பழைய விலையே சொல்றீங்க? என்றேன்.
அதன் பின் ஒரு கேப்சூல் 2.50₹ தந்தார்.
ஆக, ஏமாற்றப் பார்த்துள்ளார்.
பின் வீடு வந்து இன்டர்நெட்டில் சர்ச் செய்து பார்த்ததில்.
886 வகை மெடிசின்ஸ் விலை குறைந்துள்ளது தெரிந்தது. 15% முதல் 60% வரையிலான விலை குறைந்துள்ளது.
இவை மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அணைத்து நோயுக்குமான மருந்து,மாத்திரைகள்.
மத்திய அரசின் இந்த விலைக் குறைப்பை ஏன் ஊடகங்கள் மறைத்தது.அல்லது நம் கவனத்திற்கு வராமல் போனது எப்படி?
Forwarded as Received!
செவ்வாய், 8 நவம்பர், 2016
Flash News : Indian Gov Rs 500/and Rs 1000 note s are invalid from tomorrow onwards
Author: Infomas | நவம்பர் 08, 2016 |
இன்று இரவு 12 மணி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது : பிரதமர் நரேந்திர மோடி
புதுடெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். நாட்டு மக்களுடன் பல முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மோடி தெரிவித்தார். உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக சர்வதேவ செலவாணி நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாக மோடி தெரிவித்தார். ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காகவே தமது அரசு அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாக தெரிவித்த மோடி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தமது அரசின் இலக்காகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வள...
-
Browser Cookies Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாம...
-
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்...