கேள்வி கேட்கிறது தூத்துக்குடி!...பதில் சொல்லவேண்டும் முதல்வர் எடப்பாடி | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil கேள்வி கேட்கிறது தூத்துக்குடி!...பதில் சொல்லவேண்டும் முதல்வர் எடப்பாடி ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 27 மே, 2018

கேள்வி கேட்கிறது தூத்துக்குடி!...பதில் சொல்லவேண்டும் முதல்வர் எடப்பாடி

"கேள்வி கேட்கிறது தூத்துக்குடி!...பதில் சொல்லவேண்டும் முதல்வர் எடப்பாடி!"

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் சத்தியம் தொலைக்காட்சி நடத்திய விசாரணையின்போது கீழ்கண்ட 8 கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்:-

1 . போராட்டக்காரர்கள் கலவரம் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் பேரணி நடத்தியிருந்தால், பெற்றோர், பெண்கள், பிள்ளைகள் என்று குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பார்களா?

2 . "சுடுவதற்கு உத்தரவிட்டது யார்?" என்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், பொது மக்களும், பத்திரிகைகளும், ஊடகங்களும் கேட்ட கேள்விக்கு இதுவரையிலும், முதல்வரிடமிருந்தோ, காவல்துறை DIG யிடமிருந்தோ, மாவட்ட ஆட்சியிடமிருந்தோ, காவல் கண்காணிப்பாளரிடமிருந்தோ பதில் இல்லை! என்ன காரணம்?

3 . போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கியபோது, சுற்று சுவர் 'கேட்' பூட்டப்பட்டு, அதற்கு முன்னாள் சுமார் 2000 காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, உள்ளே இருந்த இரு சக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தலை கீழாக கவிழ்க்கப்பட்டு தீயில் எரிந்து கொண்டிருந்தது எப்படி? துப்பாக்கி சூடு நடைபெறும்போது மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள தலை தெறிக்க ஓடியிருப்பார்களே தவிர, மெதுவாக வாகனங்களை கவிழ்த்துப்போட்டு தீவைக்க மாட்டார்கள்! அப்படியென்றால் தீ வைத்தது யார்?

4 . 'ஸ்டெர்லைட்' ஆலையிலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும், பக்கத்து ஊர்களிலும் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகள் குறித்து கடந்த மார்ச் 28 ந் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை என்ன ஆனது? அது ஏன் தூத்துக்குடி மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை?

5 . இறந்தவர்களையும், காயம் பட்டவர்களையும் மருத்துவ மனையில் சந்திக்க உறவினர்களுக்கும், பொது மக்களுக்கும் அனுமதி மறுப்பதேன்? இறந்து போனவர்களின் எண்ணிக்கை அரசு அறிவித்த 14 பேர்களைவிட மிக அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறதே, உண்மையா?

6 தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த அனைத்து CCTV கேமராக்களும் சரியான கோணத்தில் இல்லாமல் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தது எப்படி?
போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைந்தவுடனேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால், அவர்கள் தலை தெறிக்க வெளியே ஓடி வந்தனர்! அப்படியானால், கேமராக்களை தலைகீழாக தொங்க விட்டது யார்?

7 . ஏறக்குறைய 30000 பேர் கலந்து கொண்ட பேரணிக்கு, பாதுகாப்புக்காக வெறும் 2000 காவலர்கள் போதும் என்று முடிவு செய்தது யார்? 144 தடை உத்தரவு இருக்கும்போது பேரணி ஆரம்பித்த இடத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டிருந்தால், துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதற்கு வாய்ப்பே இருந்திருக்காது! இதற்கு காரணம் யார்?

8 . துப்பாக்கி சூடு ஆரம்பித்த உடனேயே தெறித்து ஓடிய போராட்டக்காரர்களை இரு சக்கர மற்றும் வேன் முதலிய வாகனங்களில் துரத்திச் சென்று சுட்டது ஏன்?

பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்கள் எழுப்பும் இந்த 8 கேள்விகளும் மிக மிக நியாயமானவை, மனிதாபிமானம் மிக்கவை! இவற்றிற்கு கண்டிப்பாக தமிழக அரசும், முதல்வர் எடப்பாடியும் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும்!

நன்றி: 'சத்தியம் தொலைக்காட்சி' 26 . 05 . 2018 அனறு மதியம் 1 .30 மணிக்கு ஒளிபரப்பிய "தூத்துக்குடி கேட்கிறது" என்ற நிகழ்ச்சியிலிருந்து. ..

Popular Posts

Facebook

Blog Archive