Battery saver உங்களது மொபைலுக்கு தேவைதானா ? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil Battery saver உங்களது மொபைலுக்கு தேவைதானா ? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

திங்கள், 20 அக்டோபர், 2014

Battery saver உங்களது மொபைலுக்கு தேவைதானா ?

நம் பகுதிக்கு வரும் அதிக பிரச்சினைகளில் இரண்டாவது இடம் வகிப்பது 
 
battery power lose 

 அதாவது பேட்டரி தனது மின் சக்தியை அதிவேகத்தில் இழப்பது

 
இதற்காக நமது போனில் battery doctor மற்றும் battery saver போன்ற 
 
applicationகளை நிறுவி வைத்திருப்போம் ஆனால் அவை 
 
இயங்குவதற்க்கு மட்டும் பேட்டரியின் பங்கு எவ்வளவு தெரியுமா ஒரு 
 
நாளைக்கு 20 சதவிகிதம் ஆம் அது ஒரு நாள் உங்களின் மொபைலில் 
 
இயங்க உங்களது போனின் முழு மின் சக்தியிலிருந்து 20 சதவிகிதத்தை 
 
அது இயங்குவதற்காக எடுத்து கொள்வது மட்டும் இல்லாமல் ram 
 
memoryஇல் தனக்காக ஒரு இடத்தை ஆக்கிரமித்து மொபைலின் 
 
வேகத்திற்கு முடுக்காகவும் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத 
 
ஒன்று

 battery saverகள் உங்களது போனில் என்னென்ன வேலைகளை 
 
செய்கிறது ?

 
brightnessஐ குறைக்கிறது media volume, ringtone volume, touch volume, 
 
keytone, vibration என அனைத்தையும் நிறுத்துகிறது அல்லது குறத்து 
 
விடுகிறது

 இந்த வேலைகள் அனைத்தையும் நாமே நமது மொபைல்களில் 
 
மேற்கொள்வதன் மூலம் இது போன்ற தேவை இல்லாத applicationகளை 
 
மொபைலில் இருந்து நீக்கி battery powerஐ சேமிப்பதன் மூலம் 
 
மொபைலின் வேகத்தையும் சிறிது அதிகப்படுத்தலாம்

 BATTERY POWER ஐ சேமிக்க என்னென்ன செய்ய வேண்டும் ?

1. உங்களது போனில் அதிக மின்சக்தியை எடுப்பதில் இரண்டாவது பங்கு 
 
வகிப்பது display அதற்காக displayஐ அணைத்தே வைக்கவா முடியும் 
 
என்று நீங்கள் கூறுவது புரிகிறது அதை அனைக்க வேண்டாம் உங்கள் 
 
சூழலுக்கு ஏற்ப DISPLAYன் BRIGHTNESSஐ குறைத்து கொள்ளுங்கள்

 
 2. அதிக மென்பொருட்கள் அதாவது Applicationகளை உங்களது போனில் 
 
வைப்பதை குறைத்து கொள்ளுங்கள் அதிக applicationகளை ஒரே 
 
நேரத்தில் உங்களது போனில் இயக்குவதையும் நிறுத்தி கொள்ளுங்கள் 
 
ஏனெனில் ஒரு application உங்களது மொபைலில் இயங்க ஆரம்பித்து 
 
விட்டது என்றால் battery என்கிற பலூனில் ஒரு ஓட்டை 
 
விழுந்துவிட்டது 
 
என்று அர்த்தம் அந்த ஓட்டையின் அளவு அந்த application அளவை 
 
பொறுத்தது

3. touch tone, keyboard tone,touch vibration, ஆகியவற்றை அடியோடு 
 
நிறுத்தி விடுங்கள்

4. தேவை இல்லாத நேரங்களில் இண்டெர்நெட்டை நிறுத்தி வையுங்கள்

 5. தேவைப்படும்போது மட்டும் WIFI, BLUETOOTH, GPS ஆகியவற்றை On 
 
செய்து உபயோகியுங்கள்

மேற்கண்ட அனைத்து முறைகளையும் உங்களது போனில் 
 
கடைபிடித்தாலே போதும் மின்சக்தி அதிகளவு சேமிக்கபடுவதை 
 
உங்களால் உணர முடியும்

இனி இது போன்ற Applicationகளிடம் இருந்து உங்களது மொபைலை 
 
காத்துக்கொள்வதும் கூடாததும் உங்களது கையில்

விருப்பப்பட்டால் SHARE செய்யுங்கள் நமது pageன் வளர்ச்சிக்காக

நன்றி

posted by

Aashy

Popular Posts

Facebook

Blog Archive