GOOGLE பற்றி இதெல்லாம் தெரியுமா ? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil GOOGLE பற்றி இதெல்லாம் தெரியுமா ? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 23 அக்டோபர், 2014

GOOGLE பற்றி இதெல்லாம் தெரியுமா ?



கூகிள் ஒரு உலகப்புகழ் பெற்ற  முதன்மை வாய்ந்த search engine என்பது அனைவருக்கும் தெரியும்
ஆனால் அது என்று பிறந்தது எங்கு வளர்ந்தது யாரால் வளர்க்கப்பட்டது  என்பதை பற்றிய கதையை நீங்கள்  அறிய  ஆவலுடன் இருந்தால் தொடருங்கள் (இது மிகவும் சுவாரசியம் )
  லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin)
Sergey Brin                  LARRY PAGE
என்ற இரு நபர்களாலும்  1996ம் வருடம்  ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த google இது ஆரம்பிக்கப்பட்டபோது அவர்களிடம் இருந்தது எந்த வகை  கணினி தெரியுமா ? மிகவும்  விசேசமான கணினி இல்லை
(காயிலாங்கடையில இருந்து கையில் இருந்த காசை எல்லாத்தையும்  போட்டு வாங்குனது ) ஆரம்பத்தில் எதை பற்றி தொழில் ஆரம்பிக்கலாம் என internetல்  தேடும்போது வழக்கம்போல் அவர்களின் முன்னால் result அனைத்தும் குப்பையாக குமிக்கப்பட்டது
குமிக்கப்பட்ட அனைத்தும் அவர்கள் தேடியதற்கு சம்மந்தப் பட்டதே இல்லை

நம்மை போல பல பேர் இதே பிரச்சினையை தினமும் சந்தித்து கொண்டிருப்பாரகள் நாம் ஏன் ஒரு நல்ல search engineஐ உருவாக்க கூடாது என இருவரும்  திட்டமிட்டனர் அதன்படி
அதை வெற்றிகரமாகவும் செயல் படுத்தினர் ஆனால் அதற்கான முதற்கட்ட  பெயர் வைக்கும் முயற்ச்சியில் அவர்களுக்கு பெரிய தோல்வி கிடைத்து


இவர்கள்  கூகோல்.கொம் (googol.com)என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூஜ்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும்  பெயராகும். (அடேங்கப்பா )

  •  ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு (Silicon Valley) பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "கூகிள்" என்ற புதிய சொல். 
  • கூகிள்.கொம் (google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது. 
  • 1998 செப்ரம்பர் 7இல் நண்பர் கார் கொட்டகையில் பணம் சம்பாதிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது ( கேட்டுகங்க கார் கொட்டகையில் )
  • புதிய நிறுவனத்திற்கு நிதி பற்றாக்குறை இருந்ததால்  முதலீடு செய்வதற்கு  பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர்.
  • இதை வைத்து தனது பயனத்தை ஆரம்பித்த கூகிளின் இன்றைய மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

$268.44 பில்லியன் டாலர்

  • அன்று வெரும் இரண்டே நபர்களால் ஆரம்பிக்க பட்ட இந்த நிறுவனத்தில் இன்று வேலை செய்யும் நபர்கள் எவ்வளவு தெறியுமா ?
53,861 நபர்கள்
  • அன்று கார் கொட்டகையில் ஆரம்பிக்க பட்ட இது இன்றைய இவர்களின் server roomன் அளவு மட்டும் ஒரு கிராமத்தின் அளவு அதனுடைய வெப்பத்தை தாங்க முடியாமல் இப்பொழுது கப்பலில் தன்னுடைய serverகளை அனுப்பி கடலின் நடுவில் நிறுத்திவைத்துளனர் (இது பெரிய சர்ச்சை ஏற்பட்டது அது வேற கதை  )

உலகத்தின் மதிப்பு மிக்க தேவை வாய்ந்ததில் கூகிள்  5வது இடத்தில் இருக்கிறது (5 World's Most Valuable Brands)
Country: United States
CEO: Larry Page
Website: www.google.com/corporate/index.htm

Popular Posts

Facebook

Blog Archive