குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்? குழந்தைகளுக்கான உணவு முறை:(Children’s food system)
ஆறுமாதம் ஆன குழந்தைகளுக்கு
- ராகி கூழ்(Ragi porridge) கொடுத்துப் பழக்கலாம்.. இது நல்ல சத்தானதும் கூட..
- ஊறவைத்த ராகியிலிருந்து பால் எடுத்து கூழ்காய்ச்சி கொடுக்கலாம். இதை குழந்தைகள் விரும்புவார்கள்.
- ஓட்ஸ் காய்ச்சி கொடுத்துப் பாருங்கள்..விரும்பி சாப்பிடுவார்கள்.
- அரிசி மாவில் கூழ் செய்து கொடுக்கலாம்.
- சத்து மாவில்(Nutrient flour) கூழ் காய்ச்சி கொடுக்கலாம்.
- நன்றாக வேகவைத்த சாதத்தில் தேங்காய்ப்பால், பழம் வெட்டியது, வெல்லம் சேர்த்து குழைத்துக் கொடுக்கலாம்.
- வெறும் பழமாக(வாழைப்பழம்-bananna) கொடுப்பதைவிட பழத்தில் பால் கலந்து மசித்து கொடுப்பது சிறந்தது.
- சப்பாத்தியை பொடியாக செய்து மிக்சியில்(Mixie) அடித்து அதனுடன் வெல்லத்துருவல், நெய், தேங்காய் விட்டு உருண்டைகளாக்கி சாப்பிடக்கொடுக்கலாம்.
- அரசி புட்டை மிக்சியில் அடித்து ரவைபோல பொடிந்ததும் அதில் சூடாக நெய்(Ghee), வெல்லம்(Jaggery) இரண்டையும் கலந்து கொடுக்க குழந்தைகள் விரும்பி உண்பர்.









நன்றி நண்பர்களே..!!
இறுதியாய் ஒரு கேள்வி..
இந்தப் பதிவில் உங்களுக்குப் பிடித்தது படங்களா? பதிவா?
கருத்துரையில் சொல்லுங்க…